தீபாவளி






நடைபாதைகள் பாயான
வீடிலா மக்களுக்கு வேண்டும்
ஒரு கூரையும் ஒரு தலையணையும்
அங்கு தீபங்கள் எரியட்டும் அன்று
என்று வருமோ தீபாவளி

பசியால் எரியும் வயிறுகளுக்கு
இருவேளை சோறு மட்டும்
பட்சணங்கள் வேண்டாம்
அங்கு தீபங்கள் எரியட்டும் அன்று
என்று வருமோ தீபாவளி

எங்கோ எனதொரு சின்னஞ்சிறு சகோதரன்
தன் வீடிருக்கும் தெருவிலேயே வீடுகளைத் தேடாமல்
திடும் டமால் என்று சிரித்துக்கொண்டே
வெடிப்பட்டாசுகள் மட்டும் வெடிக்கும் நாள்
அங்கு தீபங்கள் எரியட்டும் அன்று
என்று வருமோ தீபாவளி


இருளெல்லாம் நீங்கட்டும்
ஒவ்வொரு வீட்டிலும் புன்னகைகள்
எட்டுத்திக்கிலும் ஒளிவெள்ளம்
எங்கெங்கும் தீபங்கள் எரியட்டும் இன்று
இன்றே வரட்டும் தீபாவளி



.

9 comments:

R.Gopi said...

நல்ல சிந்தனைகளை உள்ளடக்கிய மிக பிரமாதமான வாழ்த்து விதூஷ்...

நீங்க நல்லா எழுதறீங்கன்னு நிறைய தடவை சொல்லி விட்டேன்... அது மீனை பார்த்து நன்றாக நீந்துகிறாய் என்று சொல்வதை போல தான்...

இருப்பினும், ரசித்து, படித்தபின் சொல்லாமல் இருக்க முடியவில்லை...

விதூஷ்...உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், உற்றார் உறவினர் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

என் தீபாவளி வாழ்த்து படிக்க இங்கே செல்லுங்கள்... பதிவின் முடிவில் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் இருக்கு... மறக்காம, மறுக்காம வாங்கிக்கோங்க...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவ‌ருக்கு இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

pudugaithendral said...

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

மிகவும் அருமையான கவிதை. நல்லதொரு எண்ணத்தை பரிமாறிக்கொள்கிறது. மிக்க நன்றி வித்யா.

இருப்பினும், வருமோ ஒளி? தருமோ அந்நாள். கவிதைகள் நம்பிக்கைகளை மட்டுமே விதைக்கின்றன. அந்த நம்பிக்கைகளை வளர்த்து, அறுவடை செய்ய எவருமே முயற்சிப்பதாய் தெரியவில்லை. முயற்சித்துக் கொண்டே இருப்பது போல் தோற்றமளித்தாலும், முயற்சி முழுமையானதாக இல்லை.

கல்யாணி சுரேஷ் said...

எனது விருப்பமும் கூட அதுதான் வித்யா. விரைவில் நிறைவேற இறைவனை வேண்டுவோம். அருமையான கவிதை. வாழ்த்துகள். தீப ஒளித் திருநாளுக்கும். :)

நேசமித்ரன் said...

முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்
கவிதை கருத்தாழம் மிக்கதாய் இருக்கிறது .. ( நான் இன்னும் உங்களின் சென்ற கவிதையிலிருந்து மீளவில்லை-யப்பா...!!! )

பா.ராஜாராம் said...

அருமையான தீபாவளி வாழ்த்துங்க வித்யா!

நசரேயன் said...

//எங்கெங்கும் தீபங்கள் எரியட்டும் இன்று
இன்றே வரட்டும் தீபாவளி//
பலகாரங்களை பக்கோடா பேப்பர்ல பார்சல் பண்ணி அனுப்பவும்

இன்றைய கவிதை said...

//பசியால் எரியும் வயிறுகளுக்கு
இருவேளை சோறு மட்டும்
பட்சணங்கள் வேண்டாம்
அங்கு தீபங்கள் எரியட்டும் அன்று
என்று வருமோ தீபாவளி//

அழுதுவிட்டேன் விதூஷ்!
உண்மைதான்...
கவிதைகளை மட்டும் நெய்துவிட்டு
ஓய்ந்து போகும் நாம்
அவர்களுக்கு என்னதான் செய்யப்போகிறோம்?

-கேயார்

"உழவன்" "Uzhavan" said...

உங்கள் நல்லெண்ணம் நடைமுறையாகட்டும்.
தீபாவளி வாழ்த்துக்கள்!

Post a Comment