ஜில்லுனு ஒரு காதல் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

ஜில்லுனு ஒரு காதல்

"நீங்க ஒம்பதாவது மாடிலேந்து கீழ விழுந்துட்டீங்க". என்ற குரலால் உறக்கம் கலைந்து கைகடிகாரத்தைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்தாள்.  “இதென்ன வேறு இடம் போல?” என்றவள் குழம்பிக் கொண்டிருக்கும்போதே சினிமாவில் வருவது போல சுடிதாரில் வந்த பெண்மணியைப் பார்க்க மருத்துவர் போலத் தெரிந்தார். "இல்ல. நான் தூங்கி அல்லவா கொண்டிருந்தேன்" என்று குழப்பமாய்ப் பார்த்தாள் மருத்துவரை. "உங்களுக்கு ஒய்வு தேவை" என்று அவளை சாய்த்து படுக்க வைத்து விட்டு அறையின் கதவருகே நின்றிருந்த நர்சை அழைத்தார் மருத்துவர். அவளைத் தூக்கி ஸ்டெச்சரில் போட்டார்கள். ஸ்டெச்சர் ஸ்டீலில் பட்ட பாதம் சிலீரென்றது. அவள் முகத்தில் வலியின் சாயல் கூட இல்லை. அவள் முகத்தருகே குனிந்து "அறுவை சிகிச்சைக்கு நேரமாகி விட்டது. போகலாம்." என்று சொன்னார். "நான் எங்கிருக்கிறேன்?" என்று அலறினாள் அவள்.

மெல்லிய வயலின் இசையோடு அறையில் காற்று நடனமாடிக் கொண்டிருந்தது. இடக்கையில் இருந்த சிகரட் புகை சுழல் சுழலாக மேல் நோக்கி எழும்பிக் கொண்டிருக்க, வலக்கையில் சிகப்பு வைன் நிரப்பிய கிண்ணம் அவள் உதடுகளைத் தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டிருந்தது. அவள் விழிகளோ கண்ணாடி ஜன்னல் வழியே வெளியில் முகப்பு விளக்கு வெளிச்சம் தெளித்து சாலையில் ஊர்ந்து கொண்டிருந்த வாகனங்களை வெறித்துக் கொண்டிருந்தது. நினைவுச் சிலந்தி மெல்ல மெல்ல அவளைத் தின்று கொண்டிருந்தது. நாளைக் காலை மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் வந்து விடும். அவன் அடுத்தென்ன செய்யப் போகிறான், அவன் தொடர்புகள் என்னென்ன என்று எல்லாம் தெரிந்துவிடும். அவள் எந்த நாளுக்காகக் காத்திருந்தாளோ அந்த நாள் இதுதான். சிகரட்டை ஆஷ் டிரேவில் முக்கி விட்டு எழுந்தாள். இருள் கவியத் துவங்கியது. ஜன்னலருகில் நின்று மீதி வைனையும் உறிஞ்சியபடியே 'இது என்ன வகையான துரோகம்?' என்று யோசித்தாள்.

குகையினின்றும் வெளிப்பட்ட வவ்வால்கள் மெல்ல பறக்கத் துவங்கின, சில கனவுகள் போன்றே. கனவுகள் அவனுக்கு மூன்று வகையாக வரும்; ஆரம்பத்திலேயே கலைந்து விடும் ஒன்று, பாதி தூரத்தில் முடியும் இன்னொன்று, முடிவில்லாமல் பயணிக்கும் மற்றொன்று.  இரவின் இருள் நிலவின் வெளிச்சத்தைத் தின்று கொண்டிருந்தது. இரவின் நிழல் கூட இருட்டாகவே இருந்தது.  அறியப்படாத கனவுகள் கண்டுகொண்டே இரவு நதியில் சில ஓடங்கள் மிதந்தபடி இருந்தது. நீலமா கருப்பா இரவின் நிறம்?

தியின் அடிக்குச் சென்று தங்கிவிடும் கூழாங்கல் போலவே அவள் நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். நதியின் மேற்பரப்பில் காணப்படும் சலனம் போலவே அவள் முகமும் அமைதியின்றி இருந்தது. உருமிக்கொண்டிருந்த ஏசி, ரியல் பிளேயர் மீண்டும் மீண்டும் ரிபீட் செய்துகொண்டே இருந்த வயலின் இசை என்றாலும் அமைதியின் உறக்கம். இழப்பின் துயரம் மூடியிருந்த இமைகளையும் தாண்டித் தெரிந்தது. அவள் பற்கள் இலேசாகக் கடித்துக்கொண்டு இறுக்கமாக இருந்தது. அழகான புன்னகைக்கத் தெரியாத பற்கள். இருட்டறையில் பூட்டப்பட்ட குழந்தையின் பயம் அவள் முகத்தில் இருந்தது.அவளை அவன் இருப்பு போலவே இழப்பும் துன்புறுத்தக்கூடுமா?

வன் அவளருகில் வந்தான். பச்சை நிறப் போர்வையைத் தவிர அவள் உடலில் வேறு உடை ஏதும் இல்லை. குனிந்து உதடுகள் மீது ஒரு முத்தமிட்டான்.  அவன் கழுத்தை இவள் கரங்கள் அணைத்தன. அவள் பற்கள் இறுகி இருந்தன. "இல்லை இல்லை நீ இறந்து விட்டாய். போய் விடு போ..." என்றலறினாள்  அவள். "என்னை அணைத்துக்கொள். உன்னை மிகவும் மிஸ் செய்தேன் "என்னைப் பார்த்ததில் உனக்கு மகிழ்ச்சியா" என்றபடி அவளை இறுக்கினான் அவன். அவன் உதடுகளைக் கவ்வி இன்னொரு முத்தமிட்டாள்.  அலறியபடியே பாத்ரூமுக்குள் ஓடி கண்ணாடியில் பார்த்தான். அவன் உதடுகளிலிருந்து இரத்தம் கசியத் துவங்கியது.

வெளியே மின்னல் பளிச்சிட்டது. அந்த அறையில் பல குரல்கள் விளம்பரங்களையும், இந்திய தொலைக்காட்சியிலேயே முதல் முறையாக என்று ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்து. அவன் ஒரு கப் காபியை உறிஞ்சியபடி அமர்ந்திருந்தான். சிப்சின் காரமும் காபியின் கசப்பு சுவையும் நாக்கில் ஏதோ ஒரு சுவை தந்தது தன்மையாய் இருந்தது. மூளை வெடிக்குமளவு அவன் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. தொலைக்காட்சியில் கமல் தன் கையை தானே வெட்டிக் கொண்டு வில்லனை கீழே தள்ளி விட்டார். துரோகம் இப்படியா செய்யத் தூண்டும்?  நெஞ்சில் என் காதல் போலவே ஜில்லென்ற அந்த ஸ்டீல் பாயும் போது பரவசமாய் இல்லையே! அப்போது வலித்தது துரோகம் மட்டும் தான். அவள் இந்நேரம் தூங்கியிருப்பாள், இல்லையா?

ந்தத் துரோகத்தை ஜீரணித்து எப்படித் தூங்க முடிகிறது அவளால்? அவன் வந்துவிட்டான். ஒன்பதாவது மாடிக்கு எலிவேட்டர் எழும்பி வருகிறது. காலின் ஷூக்களை கழற்றி எலிவேட்டரிலேயே வைத்தான். படுக்கையறைக்குள் சகஜமாக நுழைந்தான். கிளிக் ஓசையோடு அணைந்தது ஏசி. ஜன்னலைத் திறந்து வைத்தான். பால்கனியின் கதவுகளைத் திறந்தான். ஜன்னல் வழியாகக் கீழே பார்க்கிறான். அவன் அவளைப் பூவைப் போல சுமந்து வந்து ஜன்னல் வழியாகக் கீழே வீசினான். அறைக்குள் இன்னும் ஜில்லிப்பு அடங்கவில்லை. அறையை விட்டு அவசரமாய் வெளியேறினான். மரணம் என்பது நான் கற்பனை செய்து வைத்திருந்த மாதிரி இல்லையே?

"நீங்க ஒம்பதாவது மாடிலேந்து கீழ விழுந்துட்டீங்க". என்ற குரலால் உறக்கம் கலைந்து கைகடிகாரத்தைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்தாள்.

===========================================

(சிறுகதைப் பட்டறைக்குப் பிறகு நான் வெளியிடும் முதல் கதை இதுதான். இன்னும் ஆறு கதைகள் எடிட்டிங்கில் இருக்கிறது. இந்தக் கதை சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி-க்காக எழுதப்பட்டது)


.

18 comments:

சிவாஜி சங்கர் said...

நிறைய பேர் கவிதை எழுதுறாங்க..,
கவிதை இலகுவாய் எழுதமுடியும் என்பது என் கருத்து;
ஏன்னா ஆரம்பத்திலிருந்தே செய்யுள், மனப்பாட பகுதி..
எல்லாமே கவிதை வடிவத்துல தான் இருக்கு.,
கதை எழுதுவது சற்றே சிரமம்.ஒவ்வொரு இடத்திலையும்
சரியான வார்த்தைகள்,வட்டார பாஸைகள், கதாபாத்திரங்கள்..
சரியாக எடுத்து சொல்வது சிரமம்..
அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது...
வாழ்த்துக்கள்.,

சிவ சங்கர்.

Vidhoosh said...

ஊருக்குப் போவதால் கடைக்கு புதன் வரை லீவு. உங்கள் விமர்சனங்களை அள்ளித் தெளித்துவிட்டுச் செல்லவும். நன்றி.

--வித்யா

"உழவன்" "Uzhavan" said...

படிப்பதற்கு மிகவும் ரசனையாக உள்ளது புரியாவிட்டாலும் :-)

க.பாலாசி said...

//எல்லாமே கவிதை வடிவத்துல தான் இருக்கு.,
கதை எழுதுவது சற்றே சிரமம்.ஒவ்வொரு இடத்திலையும்
சரியான வார்த்தைகள்,வட்டார பாஸைகள், கதாபாத்திரங்கள்..
சரியாக எடுத்து சொல்வது சிரமம்..
அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது...//

எனது கருத்தும் இதுதான்....

நேசமித்ரன் said...

ம்ம் சரவெடி வெடிக்கட்டும் இப்போதானே திரி பற்றிக் கொண்டிருக்கிறது
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ...கதை நல்லா இருக்கு .. மீதி எப்போ போஸ்ட் பண்ணப் போறீங்க ?

Admin said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள். படித்தேன், ரசித்தேன்.

R.Gopi said...

விதூஷ்...

போட்டியில‌ குதிச்சாச்சா... வாழ்த்துக்க‌ள்...

//Vidhoosh said...
ஊருக்குப் போவதால் கடைக்கு புதன் வரை லீவு. உங்கள் விமர்சனங்களை அள்ளித் தெளித்துவிட்டுச் செல்லவும். நன்றி.

--வித்யா//

சுருக்கால‌ வந்து க‌டைய‌ தெற‌‌ங்க‌...

இன்றைய கவிதை said...

//அறியப்படாத கனவுகள் கண்டுகொண்டே இரவு நதியில் சில ஓடங்கள் மிதந்தபடி இருந்தது. நீலமா கருப்பா இரவின் நிறம்? //

//இருட்டறையில் பூட்டப்பட்ட குழந்தையின் பயம் அவள் முகத்தில் இருந்தது.அவளை அவன் இருப்பு போலவே இழப்பும் துன்புறுத்தக்கூடுமா?//

//சிப்சின் காரமும் காபியின் கசப்பு சுவையும் நாக்கில் ஏதோ ஒரு சுவை தந்தது தன்மையாய் இருந்தது.//

"உழவன்" கருத்தை வழி மொழிகிறேன்!
வளர வாழ்த்துக்கள்!!

நந்தாகுமாரன் said...

நானும் ஒரு கதை எழுதிவிட்டேன் ... அறிவிப்புத் தகவலுக்கு நன்றி ... உங்களின் இந்தக் கதையைப் பற்றி பிறகு சொல்கிறேன் :)

நசரேயன் said...

கதையும் கவுஜையும் ஒன்னும்தான் ரெண்டுமே எனக்கு மட்டும் புரியாது

நந்தாகுமாரன் said...

கதை ok

நர்சிம் said...

சிறுகதை பட்டறையின் இன்புட்ஸ் நிறைய இடங்களில் தெரிகிறது.ஆரம்ப வரிகள் உட்பட.

இன்னமும் செப்பனிட்டிருக்கலாம்.நன்றாக இருந்தது.

விக்னேஷ்வரி said...

எனக்குப் புரியல. :(

Vidhoosh said...

அன்பின் எல்லோருக்கும்:

நன்றிகள் பல. புரியலைனு சொன்ன காரணத்துனால, இதோ கதைக்கான விளக்கம்.

காதலித்து திருமண வாழ்கையில் ஈடுபட்ட இருவருக்கு ஒருத்தருக்கொருத்தர் மேல சந்தேகம். மீதியெல்லாம் உங்கள் யூகங்களுக்கே விடுகிறேன். :)

--வித்யா

Shakthiprabha (Prabha Sridhar) said...

கதை ரொம்ப ஆழமா இருக்கு. இரண்டாம் முறையாய் சில பத்திகளைப் படித்து புரிந்து கொண்டேன் (!) என்று சொல்லலாம்.

//நதியின் அடிக்குச் சென்று தங்கிவிடும் கூழாங்கல் போலவே அவள் நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். நதியின் மேற்பரப்பில் காணப்படும் சலனம் போலவே அவள் முகமும் அமைதியின்றி இருந்தது. //

கவிதை!

கதையை விட கதையை சொன்ன விதம் மனதில் பதிகிறது.

Shakthiprabha (Prabha Sridhar) said...

நச்-ன்னு ஒரு ஆங்கில /தமிழ் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஒளிஞ்சுட்டு இருக்கு. திரைப்படமா எடுக்கலாம் :)

சதங்கா (Sathanga) said...

//கதையை விட கதையை சொன்ன விதம் மனதில் பதிகிறது.
//

டிட்டோ :))

ராமலக்ஷ்மி said...

அருமையான நடை. வாழ்த்துக்கள்!

Post a Comment