கர்ணன் என் காதலன் - 3

கர்ணன் என் காதலன் - 1, 2
இந்தத் தொகுப்புக்களில் உள்ளவை பல்வேறு புத்தகங்களிலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும் கர்ணனைப் பற்றிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


இராதேயனும் இராதையும்

இராதேயன் நதிக்கரையில் நின்றிருந்தான். விடியற்காலையில் செய்யவேண்டிய தர்ப்பணங்கள் மற்றும் சூரியனுக்கும் அர்க்கியம் விடுவதற்கான பொழுது.

அவன் பெயர் இன்றும் வசுஷேணன் என்றே அறியப்பட்டிருந்தது (வசதிகளுடன் பிறந்தவன்). கர்ணன் (அறுத்துத் தந்தவன் அதாவது கவச குண்டலங்களை அறுத்தவன் என்ற பொருள்படும்) என்று பின்னாளில் அழைக்கப்பட்டான்.

அவன் உயரமாகவும், தேஜஸ்வீயாகவும், தலை நிமிர்ந்தும், சூரியனுக்கு ஒப்பான ஒளி படைத்த பரந்த கண்களையும், பலம் பொருந்தியவனாகவும், புஜங்களும் தோளும் திரண்டு, விரிந்த மார்போடும் நின்றிருந்தான். அவனை சுற்றியிருந்த காற்றில் கூட அவன் வாசமே வீசியது. அவன் விழியின் ஒளியினால் சூரியனின் ஒளி குறைந்து தெரிந்தது. அவன் நடந்த வழிகளில் இருந்த சோலைகளின் பூக்கள் இவன் வருகை கண்டே மலர்ந்தன. இவன் ஸ்பரிசித்த நீர்ச் சுனைகளின் தன்மை இன்னும் குழைந்து குளிர்ந்தது. காலையின் இறைபூஜைக்கு அவன் பூக்களை பறித்த போது குழந்தையின் கைகளைப் போன்ற மிருதுவான தொடுதலும், அதன் பின்பு வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவன் கரங்கள் வாளைப் பற்றும் போது உறுதியாகவும், இறுக்கமாகவும் இருந்தன. பூமியில் அவன் உறுதியான பாதங்கள் அழுந்தியதில் மண்துகள்கள் மேலும் பொடிந்தன. அவன் வியர்வையை தொட்ட தென்றல் இன்னும் மணம் கொண்டு பூக்களை தோற்கடித்தன. வாள் போகும் திசையிலெல்லாம் அவன் விழிகள் திரும்பியதைக் காணும் போது, ஒரு தாய் தன் குழந்தை போகுமிடமெல்லாம் கவனித்துக் கொண்டே இருப்பது போன்ற அதீத கவனம் இருந்தது.  அவன் நிமிர்ந்த பார்வையும், சதுர முகமும், கூர்மையான் முகவாயும், விரிந்த தோள்களும், குறுகிய வயிறும், பலம் பொருந்திய கரங்களும், தொடைகளும், உறுதியான பாதங்களும் அவன் வீரத்தையும், கூரான மூக்கும், காதுகளும்,  நிமிர்ந்த புருவங்களும் அவன் அறிவையும், அவன் கருமையான கண்களின் வசீகரமும், உதடுகளின் ஈர்ப்பான புன்னகையும் அவன் ஈர குணத்தையும் பறைசாற்றிக் கொண்டிருந்தன. அவன் திசைக்கு எதிரான திசையில் அவனது வாள் பயிற்சியின் வேகத்தில் விரிந்த கூந்தல் அவனது வசீகரத்தைக் கூட்டியது. அவன் அசைவுகளின் கம்பீரத்தை சிம்மத்திற்கு ஈடாக்கினால் கூட கம்பீரத்தில் குறைத்தே கூறியதாகும்.

இப்படி அற்புதமான தோற்றத்தோடு கம்பீரமாக வாள் பயிற்சியில் இருந்த தன் மகனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இராதை.

"மகனே" என்ற அழைப்புக்கு திரும்பினான் இராதேயன். அவன் விழிகளில் தாயன்பின் மகிழ்வும் அவள் அரவணைப்பின் கர்வமும் தெரிந்தன.

அவனுக்கு ஏதோ உண்ணக் கொடுத்தவாறே, "என்ன இவ்வளவு மகிழ்ந்திருக்கிறாய் கண்ணே" என்று கேட்கிறாள் தாய். "நான் வெல்லப்போகிறேன் தாயே" என்றான் இராதேயன். "குரு வம்ச இளவரசர்கள் தம் வீரத்தையும் திறனையும் காட்டும் போட்டியொன்று நடக்கப் போகிறது. அங்கு நானும் என் திறனை வெளிப்படுத்தப் போகிறேன்" என்றவன் மார்பு கர்வத்தால் விரிந்திருந்தது.

இராதையின் முகம் சுருங்கிவிட்டது. "அதிரதன் என் கரங்களில் ஆற்றிலிருந்தும் கொண்டு வந்த சின்னஞ்சிறு குழந்தையாகவே அவனை கருதியிருந்தேனே. இவ்வளவு வளர்ந்து விட்டானா? துரோணர் இவனை க்ஷத்திரியன் இல்லை என்றும் பரசுராமர் இவனை பிராமணன் இல்லையென சபித்ததும் இன்றும் என்னைத் துன்புறுத்துகிறதே. இவனுக்கு வில்-வாள் பயிற்சியில் ஆர்வம் ஏன் ஏற்பட்டது? அவனைத் தானே சிறந்தவனாக நிரூபிக்க எது தூண்டுகிறது? அவன் ஒருவேளை க்ஷத்திரியனோ? அல்ல தேவனாகவும் இருப்பானோ? அதிரதனைப் போன்றே தேரோட்டுவதில் இவனுக்கு ஏன் விருப்பமில்லை? சூதர்களும் பாதி க்ஷத்திரியர்கள்தானே. அவர்கள் தேரோட்டுவதில் திருப்தியடையவில்லையா? இவன் க்ஷத்திரிய குலத்தவனாக இருந்திருந்தால் இவன் தாய் இவனை ஏன் ஒதுக்கினாள்? ஒருவேளை தவறான தொடர்பில் பிறந்தவனோ? நான் வளர்த்த என் மகன், க்ஷத்திரிய குலத்தவன் என்றால் அவனுக்கான வழிதான் என்ன? அவன் சூதனாகவும் தன்னை ஏற்க மறுக்கிறான். க்ஷத்திரியர்கள் இவனை ஏற்க மாட்டார்கள். எனக்கே பிறந்திருந்தால் இவனுக்கு இத்தனை துன்பங்கள் வந்திருக்காதே. இந்த எண்ணங்கள் என் மனதை இப்படித் துன்புறுத்துகிறதே"

இப்படி மனதிற்குள் எண்ணியவாறே இராதை பெருமூச்செறிந்தாள். தன் மடியில் ஒரு குழந்தை போல சாய்ந்திருந்தவனின் தலையை பாசத்துடன் கோதினாள்.

===================================

போட்டியரங்கில், துரியோதனன் தன்னை பீமனுக்கு இணையாகவே கருதிய போதும், அர்ஜுனனுக்கு இணை யாருமில்லையே என்ற கவலை அவனுள் இருந்தது. அரங்கில் வசுஷேணனின் திறமைகளைக் கண்டதும் "நீ என் நண்பன். அர்ஜுனனுக்கும் மேலானவன்" என்றறிவித்தான்.

மேலும் வசுஷேணன் அவமதிக்கப்பட்டபோது மதங்கொண்ட யானையை போல துரியோதனன் "வீரமே க்ஷத்திரியனின் திறமை. பிறப்பு இல்லை. வீரர்களின் பிறப்பும் நதிகளின் பிறப்பைப் போலவே யாராலும் அறியமுடியாது. உலகையே எரிக்கும் நெருப்பு தண்ணீரிலிருந்துதான் பிறக்கிறது. தானவர்களை அழித்த இடி டடித்சி என்ற தேவனின் எலும்பாகும். நாம் வணங்கும் தெய்வங்களின் பிறப்பு இரகசியம் யாருமறியாதது. சிலர் அக்னி வம்சமென்றும், ருத்ர வம்சமென்றும், கங்கை வம்சமென்றும் கூறிக்கொள்கிறார்கள். விச்வாமித்திரர் போன்ற க்ஷத்திரியர்கள் சிலர் வீர வாழ்வைத் துறந்து பிராமணர்கள் ஆகி கல்வி-ஞான போதனைகள் செய்து கொண்டிருப்பதை நாமெல்லாம் அறிவோம். இன்று நம் குலகுருக்களான துரோணர் தண்ணீர் குடத்தில் பிறந்தவர், கௌதம வம்ஸியான கிருபாச்சாரியர் பூக்களின் கூடையிலிருந்து பிறந்தவர். பண்டவர்களே! உங்கள் பிறப்பின் இரகசியத்தையும் நான் நன்றாக அறிவேன். பெண்மான் என்றேனும் சிங்கத்தை பெற முடியுமா? அது போலவே வசுஷேணன் போன்ற வீரனின் தாயும் சாதாரணமானவராக இருக்க முடியாது. அவனது தேஜசும், வாளை பிடிக்கும் கரங்களின் அசைவும் அவன் கவச குண்டலங்களும் நமக்கு அறிவிக்கவில்லையா? இவன் அங்க அரசன் மட்டும் இல்லை, இந்த உலகத்தையே ஆளப் பிறந்தவன். இந்த வீரனை அவன் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன். இங்கு யாருக்கேனும் நான் வசுஷேனனுக்கு அளித்த பெருமைகள், பொறுத்துக்கொள்ள முடியாதவாறு இருந்தால், அவன் வசுஷேணனின் வில்லை தன் காலால் முறித்து காட்டட்டும்" என்று அறைகூவல் விடுத்தான்.

==============================

இராதேயன் தன் தாயிடம் விரைந்து "தாயே. நான் இன்றொரு மன்னன்" என்று அணைத்துக் கொண்டான். இராதையின் மௌனத்தைக் கண்டு "தாயே. உன் விழிகளில் அந்த மகிழ்ச்சி இல்லையே. உங்களுக்கு என்னால் பெருமை இல்லையா?" என்று கேட்டான்.

இராதை "என் அன்பு மகனே. நாம் க்ஷத்திரியர்கள் இல்லை. நம்மிலும் உயர்ந்தவர்களின் நட்பு நமக்கு நன்மையோ பெருமையோ தராது. துரியோதனன் தன் சொந்த சகோதரன்  பீமனுக்கே விஷம் வைத்தவன். அவனைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் மக்களிடையே இல்லை. அவன் சபையில் உன்னை புகழ தன்னிலும் மூத்தவர்களையே இகழ்ந்தான். அவனுக்கு தன் குடும்பத்து பெரியவர்களையே மதிக்கத் தெரியாது. அவன் மாமன் சகுனி அவனை தவறான வழிக்குத் தூண்டுகிறான். அவன் தந்தையோ பிள்ளைப் பாசத்தில் குருடானவர். அவன் அளித்த மகுடம் சூடினால், அவனுக்கு நன்றிகடன் பட்டவனாவாய். உன் நன்றிக்கு அவன் தகுதியானவனா? அப்படிப்பட்டவனின் இராஜ்ஜியத்தில் ஒரு பகுதியில் நீ அரசனாவது அவசியம்தானா? உனக்கு உன்னைப் பெற்றவர்களோ, குருமார்களோ அளிக்காத பெருமையை ஏன் ஒரு கபடும் வஞ்சகமும் நிரந்தவனிடம் தேடுகிறாய்?" இராதையின் கண்களின் கண்ணீர் வசுஷேணனை அசைக்கவில்லை.

"தாயே. நான் க்ஷத்திரியன் என்ற உணர்வு என் பிறப்பின் இரகசியம். என்னை என் குலத்தாய் ஏன் நீக்கினார்கள் என்பது தெரியவில்லை. என்னைப் பெற்ற தாயின் தவறுக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? நான் க்ஷத்திரியன். வீரன். திறமிக்கவன். இன்று என் வீரத்திற்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது" என்று மகிழ்ந்தான் இராதேயன்.

"மகனே. உன் தகுதிகளை அங்கீகரித்தவன் உன் வீரத்தை தன் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துவான். தன் சகோதரர்களை அழித்து அவர்கள் இராஜ்ஜியத்தை வெல்ல உன்னைப் பகடைக் காயாகவே பயன்படுத்துவான். உன் நண்பன் சமூகத்திற்கும் தன் அரசாங்கத்துக்கும் நன்மை விளைவிக்க உன்னை நண்பனாக்கவில்லை." என்கிறாள் இராதை.

அந்த நேரம் அதிரதன் வருகிறான். இராதேயன் "தந்தையாரே. ஒரு தேரோட்டியாக உங்களை மகிழ்வித்தது எது?" என்று கேட்கிறான்.

புன்னகைத்த அதிரதன் "என் மகனே. பெருமைமிக்க அரசனே. எனக்கு குதிரைகள் பிடிக்கும். அதன் வேகம் சரியான செயல்பாடுகள், என் தேரைக் கட்டுப் படுத்தும் போது அவை அதை புரிந்து கொண்டு எனக்கு பணியும் குணங்கள் எல்லாம் பிடிக்கும். தேரோட்டும் வித்தையில் என்னைவிட நள மகாராஜாவே சிறந்தவராக இருக்க முடியும்" என்கிறார்.

இப்போது தாயை நோக்கி இராதேயன் "அதே போலத்தான் தாயே. இதே ஈர்ப்பு தான் எனக்கும் வில் வாள் மற்றும் ஆளுமை மீது. என் பிறப்போடு இரத்தத்தோடு வந்தவை இவை. என்னால் ஒதுக்கவே முடியாத குணங்களாக இருக்கிறது. என்னால் மற்றவனுக்கு பணிய முடியவில்லை.துரியோதனன் மட்டுமே எனக்கு அரசனாகும் வாய்ப்பளித்தான். அவனே என்னை ஒரு வீரனாகவும், வில்லாலனாகவும் அங்கீகரித்தான். நான் இதை ஏற்கப் போகிறேன்"

"ஆனால் மகனே. நீ பரந்தாமன் கிருஷ்ணனிடம் போயிருந்தால் இதை விட அதிகமாகவே பெற்றிருப்பாய். அவன் ஆதரவில்லாதவரின் ஆதாரம். அவன் எதிரிகளின் பயம். அவன் இதயத்தால் நியாயஸ்தன். புத்தியால் வியாபாரி. அவன் உன் உற்ற தோழனாகவும், போர்க்களத்தில் துணையாகவும், உன் ஆசானாகவும், உன் வழிகாட்டியாகவும், அவன் உனக்கு தேரோட்டியாகக் கூட இருந்திருப்பான். அவன் உன் சகோதரன். என் சகோதரனின் மகனே அவன். அவனிடம் போ வசுஷேணா, உலகம் உன்னை பெருமையுடன் பார்க்கும் அளவுக்கு நீ வளருவாய். நீ விரும்பியது கிடைக்கும். துரியோதனர்கள் உன்னை நாடுவது தன் விருப்பத்திற்காவே அன்றி உன் நலத்திற்காக அல்ல என் மகனே. புரிந்துகொள். ஆனால் கிருஷ்ணனோ நீ நம்பி பாதம் பற்றினால் கைவிடவே மாட்டான். உன் இதயத்தில் வசிப்பான். உன்னைப்போலவே அவன் தர்மவான். வேறு யாரிடமும் கேட்காதே. கிருஷ்ணனிடம் கேள்." என்று கெஞ்சினாள் இராதை.

"தாயே. நீ கண்ணனின் நண்பனாகச் சொல்கிறாய். நானோ அவனை விட மேலானவனாக விரும்புகிறேன். அவனைப் போலவே மற்றவர் கேட்பதையெல்லாம் மறுக்காமல் கொடுக்கிறேன். சூரியன் பாவிகள் மீது, முனிவர்கள் மீதும் ஒரே போலத்தான் ஒளிர்கிறது. இன்று நான் கண்ணனிடம் போய் இராஜ்ஜியம் கேட்டால், துரியோதனனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அவன் சுயநலத்திற்கு என்னை நண்பனாக்கினான் என்கிறாய், நான் என் சுயநலத்திற்கு கண்ணனை நண்பனாக்கினால் அது தகுமா? நான் கிருஷ்ணனை மதிக்கிறேன். நான் கேட்காமலேயே துரியோதனன் எனக்கு இராஜ்ஜியம் அளித்தான். கைமாறாக நான் என்ன வேண்டும் என்று கேட்ட பிறகுதான் என் நட்பையே கேட்டான் அவன். என் நட்பை ஏற்கனவே அவனுக்காக வாக்கு கொடுத்துவிட்டேன். கிருஷ்ணன் நல்லோர் நட்பை மட்டுமே பேண வேண்டுமென்றால், இந்த உலகில் யார்தான் நல்லவர்? கண்ணனின் கொடுக்கும் முன் நல்லது கேட்டதை பார்த்தா கொடுக்கிறார்? நானும் அதேபோல நல்லவன் கேட்டவன் என்றெல்லாம் யோசித்து வாக்கு கொடுக்கவில்லை. ஈகை என் தர்மம். என் நோக்கம் வீரம். இவையே என் வாழ்கையின் குறிக்கோள்கள். ஒருநாள் கிருஷ்ணனே என்னிடம் வந்து தனக்கு ஏதும் அளிக்கும்படி கேட்பான். இதுவே என் நெஞ்சின் ஆவல். அன்று நான் அவனைவிட ஈகையில் சிறந்தவன் என்றறியப்படுவேன்" என்று பெருமையுடன் கூறிய அங்க அரசன் தன் தாயின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவள் விழிகள் கண்ணீரில் நனைந்தன.

"என்னுயிரே. என் உடலின் ஒவ்வொரு அணுவும் உன்னைக் காக்கட்டும்." என்று வாழ்த்தினாள் அன்னை.

========================

அப்படியே கர்ணனைக் குறித்த இன்னொரு பதிவு இங்கே பாருங்கள்.

.

கர்ணன் என் காதலன் - 2

வசுஷேணன் என்று பெயரிடப்பட்டாலும் அவன் கர்ணன் என்றே உலகறியப்பட்டான்.

ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமரைப் பற்றியறிந்த பிறகு, கர்ணனுக்கு, முனிவராக இருந்தாலும், தலைசிறந்த போர்வீரராகத் திகழும் அவரைப் பற்றிய விபரங்களை அறிவதில் ஆர்வமேற்பட்டது. பரசுராமர் இந்திய நாட்டை இருபத்தியொரு முறை முழுமையாக விஜயம் செய்திருக்கிறார். அவரை எந்த க்ஷத்திரியனாலும் வெல்ல முடியாது. அவர் தன் வில்லில் நாணேற்றினால் எதிரிகள் நடுங்குவார்கள். க்ஷத்திரியர்களின் மேல் உள்ள வெறுப்பால், பிராமணர்களுக்கு மட்டும் வில் வித்தை பயிற்றுவித்து வந்தார். வில் வித்தையில் உள்ள நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்தவராக இருந்த அவரை தன் குருவாகவே பாவித்து வளர்ந்தவன் கர்ணன்.அவரிடமே மாணவனாகி விற்பயிற்சி பெற விரும்பிய கர்ணன் மனதிற்குள் சூதவம்ஸியான தன்னை மாணவனாக அவர் ஏற்பாரா என்ற கவலையும் இருந்தது. இதனால், கர்ணன் தான் ஒரு பிராமணன் என்று பொய்யுரைத்து அவரிடம் வில்வித்தை பயில்கிறான். குருவை மிஞ்சும் சிஷ்யனாகிறான். ஒருநாள், பரசுராமர் இவன் மடியில் சாய்ந்து உறங்குகையில், கர்ணனின் தொடையை இந்திரன் தேள் ரூபத்தில்  துளைக்கிறான். இதனால் உண்மையறிந்த பரசுராமர் அவனுக்கு சாபமிடுகிறார்.


ராம்தாரி சிங் தினகர் என்பவர் எழுதிய "ரஷ்மிரதி" என்ற தொகுப்பில் இருந்து ஒரு பாடல். இந்த முழுத் தொகுப்பும் இங்கே ஹிந்தியில் இருக்கிறது.

தேஜஸ்வி சம்மான் கோஜ்தே நஹி கோத்ரா பத்லா கே
(உயரிய பெரியோர்கள் பெருமையை கோத்திரம் சொல்லித் தேடமாட்டார்கள்)
பாதே ஹை ஜக் மே பிரஷஸ்தி அப்னா கர்தப் திக்லா கே
(உலகின் முன் தன் திறமையைக் காட்டி பிரபலம் ஆகிறார்கள்)
ஹீன் மூல் கீ ஓர் தேக் ஜக் கலத் கஹெ யா டீக்
(உலகம் தவறென்றும் சரியென்றும் சொல்லால் கூட, ஒரு செயலால் விளையும் பலனை மட்டும் நோக்க வேண்டும்)
வீர் கீன்ச் கர் ஹீ ரஹதே ஹை இதிகாஸோமே மே லீக்
(வீரர்கள் இதிகாசங்களில் தன் பெயரை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்)
சூத்-வன்ஷ் மே பல, சகா பீ நஹி ஜனனி கா க்ஷீர் 
(சூத வம்சத்தில் வளர்ந்த இவன் தன்னைப் பெற்றவளின் தாய் பாலை கூட அருந்தவில்லை)
நிக்லா கர்ண ஸபி யுவகோ மே தப் பீ அத்புத் வீர்
(இப்படி இருந்தும் கூட அனைத்து இளைஞர்களிலும் கர்ணனே அற்புதமான வீரனாக இருந்தான்)
தன் ஸெ சமர்ஷூர், மன் ஸெ பாவுக், ஸ்வபாவ் ஸெ தானி
(உடலால் பரம வீரன், மனத்தால் உணர்வுமயமானவன், குணத்தால் தானியும் ஆவான்)
ஜாதி-கோத்ர கா நஹி, ஷீல் கா, பௌருஷ் கா அபிமானி
(ஜாதி, கோத்திரத்தால் உயர்ந்தவன் இல்லை என்றாலும், ஆண்களில் விரும்பத்தகுந்தவன் அவனே)

என் பதின்பருவத்தில், கர்ணனை முதலில் ராம்தாரி சிங் தினகர் அவர்கள் எழுதிய ரஷ்மிரதியில்தான் பார்த்தேன். கண்டதும் காதல் என்பார்களே, அது இவர் எழுத்தில் கண்ட கர்ணன் மீது ஏற்பட்டு விட்டது. :))

கர்ணனின் வீழ்ச்சிக்கு காரணமானவை:
  1. குந்திக்கு துர்வாசரின் வரம், கர்ணனுக்கு கிடைத்த முதல் சாபம். பிறப்பெனும் சாபம். பிறப்பால் அவனே ஹஸ்தினாபுர அரியணைக்கு உரிமை கொண்டவன். பாண்டவர்களில் அவனே மூத்தவன். பிறப்பின் இரகசியம் தெரியாததால், அவன் பிறப்பே அவனுக்கு சாபமானது.
  2. தக்க சமயத்தில் திறமைகள் உதவாமல் போக வேண்டும் என்ற பரசுராமரின் சாபம்
  3. அறியாமல் விலங்கென நினைத்து, பசுவைக் கொன்றதால், பரம எதிரியுடன் போரில் இருக்கும் போது எல்லாம் இருந்தும் பலனின்றி உதவியின்றிப் போவான் என்ற பிராமண சாபம்.
  4. ஒரு பெண்குழந்தை கேட்டதால், பூமியைப் பிழிந்து நெய்யெடுத்ததால், "எதிரிகளிடம் சிக்கி அழியும் வண்ணம் தேர் பூமியில் புதைய வேண்டும்" என்ற பூமாதேவியின் சாபம் 
  5. யாசகனுக்கு தன் கவச குண்டலங்களை தானமிட்டது 
  6. துரோணரின் சதியால், சக்தியாயுதத்தை கடோத்கஜன் மீது எய்து வீணடித்தது
  7. குந்திக்கு செய்த இரு சத்தியங்கள், அதில் ஒன்றான நாகாஸ்திரப் பிரயோகம்
  8. கூடவே இருந்து வஞ்சித்த தேரோட்டி சல்லியன், இவன் வார்த்தைகள் கர்ணனை சோர்வுறச் செய்தன.
  9. அபிமன்யுவின் மரணம் கொடுத்த வேதனை
  10. பதினேழாம் நாள் காந்தாரி, கர்ணனை ஆசிர்வதிக்க மறுத்தல்
கர்ணனுக்கும் குந்திக்கும் இடையேயான சம்பாஷணைகள் 
(மொழி பெயர்க்கப்பட்டது)
கர்ணன் : புனிதமான ஜானவி நதிக்கரையில், அந்தி சாயும் பொழுதில், தேரோட்டி அதிரதன் மற்றும் இராதையின் மகனான கர்ணன் உங்களை வணங்குகிறேன். மாதரசியே. நீங்கள் யார்?

குந்தி(மனதிற்குள்): இளைஞனே. முதன்முதலில் இந்த உலகிற்கு உன் அறிமுகம் என்னாலே ஏற்பட்டது. உன் தாயானவள் நான்தான், ஆனால் அதை உன்னிடம் கூறவே வெட்கப்படுகிறேன்.

கர்ணன் : மரியாதைக்கு உரியவரே, சூரியனைக் கண்ட பனி போல, உங்கள் குனிந்த இமைகளின் ஒளியினால் என் இதயம் உருகுகிறது. உங்கள் குரல் என் இதயத்தில் பூர்வ ஜன்ம நினைவுகளைக் கிளறி துன்புறுத்துகிறது. உங்களை யாரெனத் தெரியவில்லையே? பெண்மணியே. உங்களுக்கும் எனக்குமான அந்த பந்தம்தான் என்ன? மர்மமாக உள்ளதே?

குந்தி: பொறுமையாக இருக்க. சூரியன் அஸ்தமிக்கட்டும். இருள் சூழட்டும். வீரனே. நான் குந்திதேவி.

கர்ணன்: அர்ஜுனனின் தாயான குந்திதேவி நீங்களோ?

குந்தி: அர்ஜுனனின் தாய்தான். ஆனால் அதற்காக என்னை வெறுத்துவிடாதே. நீ சிறுவயதில் ஹஸ்தினாபுர போட்டி அரங்கிற்குள் தயங்கித் தயங்கி மெல்ல வந்தாயே, அது இன்றும் என் நெஞ்சில் இருக்கிறது. நட்சத்திரங்களுக்கிடையே சூரியன் கிழக்கில் மெல்ல உதிப்பதைப் போன்றே இருந்த அந்தக் காட்சி என் மார்பில் சொல்லவொண்ணாத் துயரத்தை விளைவித்தது. அர்ஜுனன் தாயாக நானே திரை மறைவிலிருந்து உன்னை கண்டு கொண்டிருந்தேன். உன் கரங்களை என் பார்வை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. கிருபாச்சாரியார் உன் தந்தையின் பெயரை அறிவிக்கச்சொல்லி, "க்ஷத்திரியன் அல்லாதவன் அர்ஜுனனுடன் போட்டியிடத் தகுதியில்லாதவன் என்றறிவித்த போது, நீ வாயடைத்து, வெட்கத்தால் முகஞ்சிவந்து, தலை குனிந்து நின்றாயே கர்ணா. நான் அன்றிலிருந்து அவமானத்தின் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன், அர்ஜுனனின் தாயான நான்தான் அவள். துரியோதனனை ஆசிர்வதிக்கிறேன். அவன் புண்ணியன், உன்னை அங்க அரசனாக்கினான். அவனை வாழ்த்துகிறேன். உனக்கு முடி சூட்டப்பட்ட பொழுது, என் கண்களில் கண்ணீர் பெருகி, உன்னை அணைக்கத் தோன்றியது. அதிரதன் அதிருஷ்டசாலி, அவனால் உன்னை பெருமையுடன் அணைத்துக்கொள்ள முடிந்தது. நீயும் அரசனான பெருமிதத்தில் தலை நிமிர்ந்திருந்தாய்.இலட்சக்கணக்கான பிரஜைகளின் ஆரவாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தாய். உன்னை வணங்கிய உன் சாரதியை தந்தையே என்று அழைத்து அவரை வணங்கினாய். குரூரத்தோடு புன்னகைத்துக் கொண்டிருந்த பாண்டவர்களின் இடையே அமர்ந்து, வீரனே, உன்னை வாழ்த்திக் கொண்டிருந்த பெண், அர்ஜுனனின் தாயான நான்தான்.

கர்ணன்: அப்படியா. மகிழ்கிறேன் மாதரசியே. உங்களை வணங்குகிறேன். நீங்கள் இந்தப் போர்க்களத்தில் ஏன் தனியாக இருக்கிறீர்கள். நான் கௌரவர்களின் சேனாதிபதி.

குந்தி: உன்னிடம் ஒரு வேண்டுகோளோடு வந்துள்ளேன். என்னை வெறும் கையேடு அனுப்பிவிடாதே.

கர்ணன்: வேண்டுகோளா? அதுவும் என்னிடமா? அப்படி நீங்கள் வேண்டினால் தர்மத்திற்கு உட்பட்ட எதையுமே தங்கள் காலடியில் சமர்பிப்பேன்.

குந்தி: உன்னை நான் திருப்பி அழைத்துப் போக வந்துள்ளேன்.

கர்ணன்: அப்படி நீங்கள் என்னை எங்கு அழைத்துப் போவீர்கள்?

குந்தி: உனக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் என் இதயத்திற்கு. என் தாய்மடிக்கு உன்னை அழைக்கிறேன்.

கர்ணன்:
பெண்மணியே. ஏற்கனவே நீங்கள் ஐந்து மகன்களால் வரம் பெற்றுள்ளீர்கள். நானோ சாதாரண அரசன், எந்தப் புகழும் இல்லாதவன். உங்கள் இராஜ்ஜியத்தில் எனக்கேது இடம்? எனக்கென்ன இடமளிப்பீர்கள்?

குந்தி: எல்லோரையும் விட மேன்மையான இடம். உன்னை என் மகன்களுக்கெல்லாம் மூத்தவனாக்குகிறேன்.

கர்ணன்: எந்த உரிமையில் அப்படிப்பட்ட தலை சிறந்த இடத்தை அளிக்கிறீர்கள்? எப்படி என்று கூறுங்கள்? ஏற்கனவே ஏமாற்றப்பட்ட அந்த இராஜ்ஜியத்தின் சொத்துக்களில் எந்தப் பகுதியை நான் எனதாக்க முடியும், அவை பாண்டவர்களுடையது. மேலும் அவர்களுக்கே உரிமையான தாயன்பை நான் எப்படிப் பெற முடியும்? அதிகாரத்தால் பெற ஒரு தாயின் இதயம் சூதாட்ட களமில்லை, அந்த உரிமை இறைவனின் நற்கொடை.

குந்தி: ஐயோ என் மகனே. அந்த இறைவனின் நற்கொடையால் உரிமையாக அன்றொரு நாள் நீ என் மடிக்கு வந்தாய். இன்று அதே உரிமையில் மீண்டும் வந்து விடு. கவலைப் படாதே. நீ உனக்கான இடத்தை உன் சகோதரர்களிடம் எடுத்துக்கொள், உன் தாய் மடியை மீட்டுக்கொள்.

கர்ணன்: மரியாதைக்குரிய பெண்மணியே. நான் கனவில் காணுவது போல் கேட்கிறது உங்கள் குரல். இருள் நாலாபுறமும் சூழ்ந்து விட்டது. நான்கு ஜாமம் கழிந்து விட்டது. நதிகளும் ஓடைகளும் அமைதியாகிவிட்டன. நீங்கள் என்னை ஏதோ மறந்து விட்டக் கனவுலகிற்கு அழைக்கிறீர்கள். ஏதோ கடந்தகால உண்மை போல உங்கள் வார்த்தைகள் என் இதயத்தை மயக்குகிறது. நானே இழந்துவிட்ட என் குழந்தைப் பருவம் போல, எனக்கு மறந்துவிட்ட கருவறையின் இருள் இன்றெனைச் சுற்றி வளருகிறதே? ராஜ மாதா. உங்கள் அன்புக்கு நன்றி. இது கனவோ, நனவோ, உங்கள் கரங்களை என் நெற்றியில், கன்னத்தில் ஒரு நிமிடம் வையுங்கள். என்னைப் பெற்ற தாயார் என்னை விட்டுச் சென்றதாக நான் அறிவேன். மெல்ல மெல்ல நடந்து, அன்புடன் என் தாய் என்னிடம் வருவதாக, எத்தனை இரவுகளில் இப்படிப்பட்டக் கனவுகளை நான் கண்டிருப்பேன்.  அவளை என் கண்ணீருக்கூடே  பார்த்திருக்கிறேன். அவளிடம் கெஞ்சியிருக்கிறேன் "தாயே. உங்கள் முகத்திலிருக்கும் திரையை விலக்குங்கள்" என்று என் குரல் ஒலித்ததும், அவள் மறைந்து விடுவாள். என்னை கண்ணீரில் நனைத்துவிட்டு, பேராசையின் தீராத தாகத்தோடு அந்தக் கனவும் மறையும். பாகீரதி கரையில், போர்க்களத்தில், இன்றைய இரவில், அந்தக் கனவேதான் நினைவாகி இன்றும் பாண்டவர்களின் தாயாக வந்திருக்கிறதோ, ஐயோ! பெண்மணியே, அந்தக் கரையில் பாண்டவர்களை பாசறை உள்ளது. அந்த வெளிச்சம் இக்கரைக்கு வருகிறது. என் கூடாரம் வெகு தொலைவில் இல்லை. கௌரவர்களின் பல்லாயிரக்கணக்கான குதிரைகளின் குளம்பொலிகல் ஓய்ந்து கொண்டிருக்கிறது. நாளை காலை பெரும் போர் மூளும் இந்தச் சூழலில், அர்ஜுனனின் தாயான உங்கள் வாயால், என் தாயின் குரலை நான் ஏன் இன்றிரவு கேட்க வேண்டும். அர்ஜுனனின் தாய் வாக்கில் என் பெயர் ஏன் ஒரு அற்புதமான இசை போல ஒலிக்க வேண்டும்? என் இதயம் பாண்டவர்களை சகோதரர்களே என்றழைத்து அணைக்கவும் ஓடுகிறதே?

குந்தி: அப்படியென்றால் இப்போதே என்னுடன் வந்துவிடு.

கர்ணன்: சரி தாயே. நான் உங்களுடன் வருகிறேன். எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன். பெண்மணியே. நீங்கள் என் தாயாவீர்கள். உங்கள் அழைப்பு என் ஆன்மாவை எழுப்புகிறது. என்னால் போர் முரசுகளை கேட்க முடியவில்லை. சங்கு முழக்கங்கள் என் காதில் விழவில்லை. போரின் வன்மம், வீரனுக்கான புகழ், வெற்றி தோல்விகள், எல்லாமே பொய்யெனத் தோன்றுகிறது. என்னை அழைத்துக் கொள்ளுங்கள். நான் எங்கு வரவேண்டும்?

குந்தி: அங்கே, அக்கரைக்கு, வெளிறிய மணல் மீது கூடாரங்களின் விளக்கொளி ஜொலிக்கிறதே, அங்கு.

கர்ணன்: அங்கு, தாயில்லாத ஒரு மகன், தன் தாயை எப்போதைக்குமாக நிரந்தரமாகப் பெறுவான் இல்லையா? அங்கு ஒரு துருவ நட்சத்திரம் உங்களின் அன்பு நிறைந்த விழிகளை இரவெல்லாம் விழித்திருக்க வைக்கும். பெண்மணியே! இன்னொரு முறை நான்தான் உங்கள் மகன் என்று கூறுங்கள்.

குந்தி: மகனே.

கர்ணன்: அப்படியென்றால், என்னை அவமானமாகக் கருதி ஏன் விட்டெரிந்தீர்கள்? என் குடும்பத்தின் புகழ் எனக்கில்லாமல் செய்தீர்கள். என் தாயின் அன்புப் பார்வை என் மேல் படாமல் செய்தீர்கள். இந்த இரக்கமற்ற குருட்டு உலகின் முன் என்னை ஏன் தனியாக்கினீர்கள்? என்னை ஏன் நதியின் ஓட்டத்தில் திரும்பி வரவே முடியாதளவு தூரத்திற்கு அனுப்பினீர்கள்? என் சகோதரர்களிடமிருந்து விலக்கி வைத்தீர்கள்? அர்ஜுனனுக்கும் எனக்குமான இடைவெளிக்கு நீங்களே காரணம். சிறு வயதிலிருந்து வளர்ந்திருக்க வேண்டிய சகோதர பாசம், தவிர்க்க முடியாத பகைமையாக மாறியது. இந்த வஞ்சம் விஷமாகக் கசக்கிறது எனக்கு. தாயே! இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இல்லையா? உங்களின் அவமானத்தை நான் உணர்கிறேன். அந்த அவமானம்  இந்த இருளிலும் வார்த்தைகளே இல்லாமல் என் நரம்புகளைச் சுடுகிறது. என் கண்கள் இருட்டுகிறது. அப்படியே இருக்கட்டும். என்னை விட்டெறிந்த காரணத்தைக் கூறவே வேண்டாம். தாயன்பு ஒன்றேதான் இறைவனின் முதல் அன்பளிப்பு. அந்த புனிதமான ஒன்றை உங்கள் குழந்தையான என்னிடமிருந்து ஏன் பறித்தீர்கள்? இதற்கும் நீங்கள் பதில் சொல்ல விரும்ப மாட்டீர்கள். ஆனால் இப்போது மட்டும் என்னை ஏன் திரும்பப் பெற வந்துள்ளீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள்.

குந்தி: மகனே. உன் வார்த்தைகள் என்னை ஆயிரம் இடிகள் போல துளைக்கின்றன. என் இதயத்தை தூள் தூளாக்குகின்றன. உன்னை விலக்கிய சாபம் இன்றும் என்னை துன்புறுத்துகிறது, அதனாலோ ஏன் இதயம் ஐந்து குழந்தைகள் இருந்தும் குழந்தைக்காக ஏங்குகிறது. மகனே. உன்னை ஏந்திக் கொள்ள என் மனம் தவிக்கிறது. இந்த உலகில் உன்னையே துழாவி தேடியது என் கரங்கள். தனித்து விடப்பட்ட அந்த குழந்தைக்காகவே என் இதயமெனும் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதன் ஜோதி என்னையே எரிக்கிறது. நான் மிகவும் துரதிருஷ்மானவள். உன் வாய் மழலை பேசும்முன்னே உனக்கு கொடுமையானதொரு துரோகம் செய்தேன். அதே வாயால் இந்த கொடூரமான தாயை மன்னித்துவிடு மகனே. உன் மன்னிப்பின் ஜ்வாலை என் இதயத்தில் இன்னும் ஏதும் கெட்ட எண்ணங்கள் இருந்தால் அவற்றை எரிக்கட்டும். என் பாவங்களை சாம்பலாக்கி என்னை புனிதமாக்கட்டும்.

கர்ணன்: தாயே. சிறிது உங்கள் பாததூளியைக் கொடுங்கள். என் கண்ணீரால் அவற்றைத் துடைக்கிறேன்.


குந்தி: மகனே. உன்னை என் மார்போடு அணைத்துக்கொள்ள மட்டும் இன்று வரவில்லை. உன்னை உன் உரிமையான இடத்திற்கு கூட்டிச் செல்லவே வந்துள்ளேன். நீ சூதபுத்திரன் இல்லை. நீ ஒரு க்ஷத்திரியன். உன் அவமானங்களைத் துடைத்து எறிந்துவிட்டு, உன் ஐந்து சகோதரர்களுக்கு மூத்தவனாக திரும்பி வா.

கர்ணன்: ஆனால் தாயே. நிதர்சனத்தில் நான் சூதபுத்திரன்தானே. இராதையே என் தாய் என்ற அந்தப் பெருமை  எனக்கு எல்லாவற்றையும் விட மேலானது. பாண்டவர்கள் பாண்டவர்களாகவே இருக்கட்டும். கௌரவர்களும் அப்படியே இருக்கட்டும். எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை. வஞ்சமில்லை.

குந்தி: உன் புஜபலத்தால் உன் இராஜ்ஜியத்தை மீட்டெடு என் மகனே. யுதிஷ்டிரன் உனக்கு சாமரம் வீசுவான். பீமன் உனக்கு குடை பிடிப்பான். அர்ஜுனன் உனக்கு சாரதியாவான். தௌமிய மகரிஷி வேத மந்திரங்களை உச்சரித்து புரோதிதம் செய்யட்டும். எதிரிகளை வெல்பவனே, நீ உன் உறவுகளுடன் மகிழ்ந்திருப்பாய். யாருடனும் பங்கு கொள்ளாத பேரரசனாக அலங்கரிக்கப்பட்ட அரியணையில் அமர்ந்து நீயே இந்த இராஜ்ஜியம் முழுதும் ஆள்வாய்.

கர்ணன்: அரியணை? தாயே. அன்று தாய்மையின் அன்பை மறுத்த நீங்கள், இன்று எனக்கு அரியணையின் உத்திரவாதங்களை அளிக்கிறீர்களா? இதே உரிமைகளையும், இராஜ்ஜியங்களையும் என்னிடம் இருந்து நீக்கியது நீங்கள்தானே. என்னிடமிருந்து பறிக்கப்பட்ட எதையும் நீங்கள் திருப்பியளிக்கவே முடியாது. நான் இழந்தவை இழந்தவைதான். அவை உங்கள் கட்டுப்பாட்டினின்றும் மீறிவிட்டன. நான் பிறந்தபோது, தாயே, என் தாயிடமிருந்து, சகோதரர்களிடமிருந்து, இராஜ குடும்பத்திலிருந்து ஒரே நிமிடத்தில் என்னைப் பிரித்துத் தூக்கி எறிந்தீர்கள். ஆனால் இன்றோ, நான் என்னை வளர்த்த அன்பே உருவான அன்னை, தேரோட்டி குலத்தை சேர்ந்த இராதையை ஏமாற்றி, பெருமைக்காக இராஜகுலத்தோடு இணைவேனென்றும், அரியணையின் ஆசையில் உங்களோடு வந்து விடுவேன் என்றும் நீங்கள் நினைத்தால், அவற்றை நான் மறுக்கிறேன்.

குந்தி: நீ சுத்த வீரன்தான். மகனே. தர்மவானே. உன் நியாயம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது? அன்று உதவியற்ற ஒரு பச்சிளங்குழந்தையை விட்டுச் சென்றபோது, அவன் இப்படிப்பட்ட பேராற்றல்களைப் பெற்று வீரனாவான் என்று யாருக்குத் தெரியும்? அவனே மீண்டும் திரும்பி இருள் சூழ்ந்த பாதை வழியாக, தன் கையில் குரூரமான ஆயுதங்களை ஏந்தி, தன் தாய்க்குப் பிறந்த தன் சகோதரர்களையே நோக்கி வருவான் என்று யாருக்குத் தெரியும்? இதென்ன சாபம்?

கர்ணன்: தாயே. கலங்க வேண்டாம். நான் இன்றே சொல்கிறேன். பாண்டவர்கள்தான் வெல்வார்கள். இந்த இரவின் சாயலில் இந்தப் போரின் முடிவில் பாண்டவர்களின் வெற்றி எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.  இந்த அமைதியான, சலனமற்ற பொழுதில், எல்லையே இல்லாத ஆகாசத்தின் ஊடே வெற்றியடையப் போகாத ஒரு முயற்சி, நம்பிக்கையில்லாத உழைப்பின் வேர்வைத்துளிகள் போலவே நான் இருக்கும் இந்தப் போர்களத்தின் கடைசி நாளன்று வெறும் அமைதியும் வெறுமையும் மட்டுமே எனக்குத் தெரிகிறது. இந்தப் பக்கம் தளர்ந்து கொண்டே வருகிறது. பாண்டு புத்திரர்கள் வெல்லட்டும். அவர்களே அரசர்களாகட்டும். இந்தக் கூடாரத்தை விட்டு என்னை வரச் சொல்லாதீர்கள். நான் நம்பிக்கைகள் தூளாகித்  தோற்பவர்களின் பக்கமே இருந்துவிட்டுப் போகிறேன். நான் பிறந்த அன்றைய இரவில் என்னைத் தனியாக, பெயரின்றி, வீடின்றி இவ்வுலகில் விட்டுச் சென்றீர்கள். அதே போல இன்றைய இரவும், இரக்கமே இல்லாமல், உங்கள் இதயத்தைக் கொன்றுவிட்டு, என்னை விட்டுச் சென்று விடுங்கள் தாயே. என்னை தோற்கவிடுங்கள், புகழே இல்லாமல், பெருமையில்லாதவனாக தனியனாக்கிச் செல்லுங்கள் தாயே. நீங்கள் போவதற்கு முன், ஒரே ஒரு வரமளித்துச் செல்லுங்கள், நான் சுத்த வீரனாக, மார்பில் காயம் கொண்டு இறக்கும் வரை வெற்றியின் நம்பிக்கை என் இதயத்தைவிட்டு நீங்கக் கூடாது என்ற ஒரே வரமளியுங்கள்.



(தொடரும்)
.

நானழிந்த நான்

ஜில்லுனு ஒரு காதல் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

முப்பரிமாண கேமரா மற்றும் பைனல் டெஸ்டிநேஷன்

உலகின் புகைப்படக் கேமராக்கள் தயாரிப்பில் பிரபலமான ஃபியூஜி முதல் முறையாக முப்பரிமாண (3டி) கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.முப்பரிமாண டிஜிடல் கேமரா மூலம் படமெடுப்பதோடு, அதற்கான கண்ணாடி இன்றி படங்களை 3 கோணங்களில் பார்க்கலாம். தேவையென்றால் இருபரிமாணத்திலும் (2-டி) இதில் படமெடுக்கும் வசதி உள்ளது. முப்பரிமாண கேமராவின் விலை ரூ. 39,999.



3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் வசதி கொண்டது. ஒன் டச் 2  டி / 3 டி மாற்றும் வசதி மற்றும் 2.8 இன்ச் எல்.சி.டி. மானிடர் கொண்டது.


3D லென்ஸ் சிஸ்டம் மூலம் புகைப்படம் எடுக்க இரண்டு ஃபியூஜியான் லென்சுகள் மற்றும் இரண்டு சி.சி.டிக்கள் (CCDs) கொண்டது. இதற்காகவே புதியதாகத் தயாரிக்கப்பட்ட  ரியல் போட்டோ ப்ராசெசார் (RP-3D) மூலம் focus, brightness, முதல் tone வரை அனைத்தையும் தானே தீர்மானித்தும், இடது (first shot) மற்றும் வலது (second shot) படங்களை ஒன்றாக இணைத்து முப்பரிமாண படமாகத் தருகிறது. ஒரே படத்தை (subject/object) இரு வேறு போட்டோ செட்டிங்களுடன் படமெடுக்கவும் இந்தப் ப்ராசெசர் உதவுகிறது.

நம் கண்களுக்கு முப்பரிமாணம் தெரிவதற்கு ஒரு பொருளை விழிகள்  இருவேறு கோணங்களில் (different lines of sight) பார்ப்பதே காரணமாகும். இதை parallax என்கிறார்கள். இந்த டிஜிட்டல் கேமராவில் உள்ள மானிடர் Light Direction Control System அடிப்படையில் புகைபடமெடுப்பதால், சிறப்புக் கண்ணாடிகளோ அல்லது வேறெந்த மீடியம்களும் இல்லாமலேயே வெறும் கண்களுக்கு இந்த கேமராவால் எடுகப்பட்டப் புகைப்படம் முப்பரிமாணத்தோடு தெரிகிறது.



CIPA-வால் அங்கீகரிக்கப்பட்ட MP format (“multi-picture format”), 3D-AVI அல்லது JPEG-ஆகவும் இப்புகைப்படங்களை பெறமுடிகிறது.

Individual Shutter 3D Shooting மூலம் ஒரே பொருளை (subject/object) இருவேறு திசைகளிலிருந்து படம் எடுத்தால் கேமரா தானாகவே இரண்டு படங்களையும் ஒன்றாக இணைந்து save செய்து 3D படமாகத் தருகிறது. முதல் படம் எடுத்ததும் அப்படம் transparent overlay போல மானிடரில் தெரிகிறது. இதனால் இரண்டாவது படத்தை (shot) நீங்கள் தகுந்தமாதிரி align செய்ய உதவுகிறது.

புகைப்படத் தொழில்நுட்பத்தில் இது ஒரு பெரும் புரட்சிதான். 


==========================


அப்படியே, Final Destination  3-D RDX-சில் Satyam Theatre-ரில் பார்க்க. ஒரு அருமையான தேநீர் போல, இரசிப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது. திகிலும் கூடத்தான்.

 வர வர எல்லாக் கதைகளும் எனக்கு புராணங்களையே நினைவூட்டுகின்றன. அல்லது இணைத்தாவது பார்த்துக் கொள்கிறேன். 

பரிக்ஷித் மகாராஜா யுதிஷ்டிரனுக்கு பிறகு ஹஸ்தினாபுர அரியணைக்கு வந்தவன். அபிமன்யு மற்றும் உத்திரைக்கு பிறந்தவன். மகாபாரதப் போரில், அபிமன்யுவை கௌரவர்கள் கருணையின்றிக் கொல்லும்போது உத்திரையின் கருவில் இருந்தவன். பின்பு அசுவத்தாமன் கருவில் இருந்த வாரிசையும், தாயையும் பிரம்மாஸ்திரத்தால் கொல்ல முற்படும்போது, பகவான் கிருஷ்ணரால் காப்பற்றப்படுகிறான். இதனால் பரிக்ஷித் என்ற இவன் பெயரை சமஸ்கிருதத்தில் பலவிதமாக பதம் பிரித்து அர்த்தம் கொள்கின்றனர்.

பரி+க்ஷி - அனைத்தையும் தனதாக்குபவன்
பரி + க்ஷித் - அனைத்தையும் அழிப்பவன்
பரிக்ஷா + இத் - கடும் சோதனைகளுக்கு (பரிக்ஷை) ஆளானவன் 
பரிக்ஷா + த - இறைவனைத் தேடுபவன் / நாடுபவன்


பரிக்ஷித் ஆளத் துவங்கியபோது கலியுகம் துவங்கியதாகக் குறிக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை, இவன் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, பூதகி கலி என்பவள் அவன் தேசத்துக்குள் தஞ்சம்  வர அனுமதி கேட்கிறாள். அரசன் மறுக்கிறான். அவள் கெஞ்சிக் கேட்கவே, அரசன் சூதாட்டம், மது, விபச்சாரம் மற்றும் பொன் (தங்கம்) இருக்கும் இடங்களில் எல்லாம் அந்த பூதகியை வசிக்கச் சொல்கிறான். சூதும் வஞ்சமும் கொண்ட பூதகி, வஞ்சத்தோடு அரசனின் பொன்னாலான கிரீடத்தில் சென்று அமர்கிறாள். அவன் எண்ணங்களைச் சிதைக்கிறாள். 

வேட்டையின் போது ஒரு முறை சமிக்க மஹரிஷியின் குடிலுக்குச் சென்று பரிக்ஷித் தாகம் தீர்க்கத் தண்ணீர் கேட்கிறான். ரிஷி ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். அதையறியாமல், இவன் பலமுறை அவரை வணங்குகிறான். ரிஷி எந்த பதிலும் கொடுக்காத காரணத்தால் ரிஷியின் கழுத்தில் ஒரு இறந்த பாம்பை மாறிவிட்டு செல்கிறான். இந்த அவமானகரமான செயலை அறிந்ததும் ரிஷியின் மகனான சிறிஞ்சின், "அன்றிலிருந்து ஏழாம் நாள் மன்னன் பாம்பு கடித்து இறப்பான்" என்று சபிக்கிறான்.  இதையறிந்த மன்னன், தன் மகனான ஜனமேஜயனிடம் அரியணையை ஒப்படைத்துவிட்டு , சுகர் மற்றும் பாகவதங்களைக் கேட்டு கழித்தான் என்று கூறுகிறது.

இன்னொரு கதையில், பரிக்ஷித் தன் தலையெழுத்தை மாற்றியமைக்க, உயரமான கோபுரம் ஒன்றை எழுப்பி அதில் பாதுகாப்பான இடத்தில் ஆறு நாட்கள் ஆறு இரவுகளைக் கழித்ததாகவும், ஏழாம் நாள் இரவில், ஒரு பழத்திலிருந்த  பூநாகம் ஒன்று அவனை கடித்து விஷம் பரவி இறந்ததாகவும் கூறுகிறார்கள்.

அடுத்து நிகழப் போவது தெரிந்தாலும் தடுக்க முடியாமல் விழிப்பது விதியா? என்னவது? என்னவோ நம் நம்பிக்கைகளை மூடத்தனம் என்று கிண்டலடித்துக் கொண்டே dinosar, hulk, sixth sense, final destination போன்ற படங்களையும் பார்த்து producer-களுக்கு சர்வ தேச வசூலை அள்ளித் தெளிப்போம்.





-விதூஷ்




..

ஒலிம்பிக் நகரம் 2016



Rio De Janeiro (South America) நகரம் ஒலிம்பிக் நடத்த சிகாகோ, டோக்கியோ மற்றும் மாட்ரிட் நகரங்களுடன் போட்டி போட்டு வென்றது. (Games of the XXXI Olympiad)

BCMF Arquietetos என்ற architectural firm கட்டுமானத்துறையில் மிக பிரபலாமான ஒரு ஸ்தாபனம். ரியோ-வின் ஒலிம்பிக் கனவுகளை முழுமையாக்க பெரும் உழைப்பு இவர்களைச் சேரும். Maracanã Stadium பற்றியறிய லிங்கை சொடுக்க.




 


 இம்முறை golf மற்றும் rugby இரண்டும் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
அடுத்தவன் குழந்தை பரிசுகள் வென்றது பற்றிய மகிழ்ச்சி என்றாலும், என் பிள்ளைகள் பள்ளிக்காவது செல்வார்களா என்ற ஏக்கம் ஏனோ தோன்றுவது வெட்கம் கெட்டத்தனமா? பொறாமையா?
==================================================================================

டோக்கியோவின் ஒலிம்பிக் அரங்கம்:



 


==================================================================================

சிகாகோ



==================================================================================
மாட்ரிட் :




--விதூஷ்

தீபாவளி

துரோகம்

சக்தியா சகதியா

சக்தியா சகதியா

அவனுக்கு அவள் மனைவியென்ற
தகுதி மட்டும் போதுமாய்
அவளைத் தூக்கி எறியுங்கள்
தனிமைத் தீயில் எரியட்டும்
தனியாகத்தானே வந்தாள்
அங்கிருந்தென்று இவர்களும்,
தனியானாய்-விதவை நீயென
என் தாயே உன்கையால்
அழித்தழித்து இரத்தம்
தோய்ந்தவென் நெற்றியில்
நீங்கள் அறைந்து சாத்திய கதவுகள்
மீது மஞ்சளும் குங்குமமும் இட்டு
பொங்கட்டும் மங்கலம்
வழிபடுங்கள் சக்தியை
நான்தான்
பொட்டிழந்து
சகதியானேன் அம்மா
இன்னும் எத்தனை பெண்களுக்கு
துகிலுரிகிறதடா கண்ணா!
எப்போது வருவாய் நீ
விருந்தாவனத்துக்கு மீண்டும்? இங்கு
நாங்கள் மட்டும் தனிமையில்.

--விதூஷ்


================================
பொட்டில்லை
விதவை என்ற
வார்த்தைக்குக் கூட
என்றோ படித்த ஒரு ஹைக்கூ. எழுதியவர் யாரென நினைவில்லை. ஹைக்கூ வரிகள் தவறாக இருக்கலாம். ஆனால் சொன்னக் கருத்து இதுதான். சக்திகளாகப் பெண்களைக் கொண்டாடும் நம் இந்தியாவின் சாபக் கேடுகள் சில புரையோடிப் போனப் பழக்கங்களில் ஒன்றான விதவைச் சம்பிரதாயங்கள்.

ஹிந்து என்றால் என்ன?

சிந்தோ: சிந்துபர்யந்தம் யஸ்ய
பாரத பூமிகா மாத்ரு பூ:
பித்ரு பூ புண்ய (ஸ்)சைவ
வை ஹிந்து இதி ஸ்ம்ருதா:

சப்த சிந்து (இண்டஸ் நதி) முதல் இந்தியப் பெருங்கடல் வரையான நிலப்பரப்பை தாய்நாடு/தந்தைநாடாகவும் புண்ணிய பூமியாகவும் யார் கருதியிருக்கிரானோ அவன் ஹிந்து ஆவான்.

ஹிமாலயம் ஸமாரப்ஹ்ய
யாவத் ஹிந்து சரோவரம் தம்
தேவ நிர்மிதம் தேசம்
ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே

ஸ்வயம் கடவுளால் படைக்கப்பட்ட இந்நிலப்பரப்பு ஹிமாலயம் முதல் இந்தியப் பெருங்கடல் வரை பரந்து விரிந்து ஹிந்துஸ்தானம் என்றழைக்கப்படுகிறது.

சனாதன தர்மம் அல்லது இந்து தர்மத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், உண்மையில் இந்து தர்மத்தை உருவாகியவர்கள் இதை ஒரு மதமாகக் கருதாமல் தர்மமாகவே (way of life) கருதினார்கள். தர்மம் என்றால் வாழும் கலை, அதாவது நிம்மதியான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள் (ஆச்சார விதிமுறைகள்).

பெண்களால் பின்பற்றப்படவேண்டிய ஆச்சாரங்களை மாத்ரு தர்மம் என்றும், ஆண்களால் பின்பற்றப்பட வேண்டிய ஆச்சாரங்களை பித்ரு தர்மம் என்றும், மகன் செய்யவேண்டியதை புத்திர தர்மம் என்றும், ஆசிரியர் செய்ய வேண்டியதை ஆச்சார்யா தர்மம், சகோதரனுக்கு பிராத்ரு தர்மம், சகோதரிக்கு பாகினி (பாகம் உடையவள் என்ற பொருள் வரும்) தர்மம் என்றும், பௌர (குடிமக்கள்) தர்மம், ராஜ தர்மம் என்றும் வகை படுத்தி வைத்துள்ளனர். இதைத்தான் ஸ்ம்ரிதிக்களும் தர்ம சாஸ்திரங்களும் கடமைகளாகவும், பொறுப்புக்களாகவும், சட்டங்களாகவும் இயற்றி வைத்துள்ளன.

சனாதன தர்மம் என்றால் இவை அனைத்தையும் ஒன்றாகப் பின்பற்றும் நோக்கம் உடைய ஒரு குழுவாகும். இந்து தர்மத்தின் ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகம் பின்னிப் பிணைந்துள்ளது. ஆன்மீகம் இல்லாமல் இந்து தர்மம் இல்லை.

==============================

சிறிது நாட்கள் முன் ஒரு தோழி ஹிந்து சமூகத்தில் விதவைகள் மற்றும் மணமான பெண்களின் நிலைப் பற்றியும், ஹிந்து சாஸ்திரங்களில் விதவைகளை எப்படி நடத்த வேண்டும் என்றும் எழுதியிருப்பதாகக் கூறினார்.

எனக்கு அப்படியெல்லாம் வேதங்களில் இல்லை என்று தெரிந்திருந்தாலும், நான் இம்மாதிரி விவாதங்களில் அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால் பாதி மட்டும் படித்தறிந்து அல்லது விவாதிக்க வேண்டும் என்று மேம்போக்கான விவாதங்களில் ஈடுபடுவதை விரும்பாததே காரணம். ஆனால் அவரது கூற்று எனக்கு இன்னொரு தேடலைக் கொடுத்தது. நான் ஹிந்து தர்மங்களின் (வேதங்கள்) மேல் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

உண்மையில் "சதி" என்றால் சமஸ்கிருதத்தில் என்ன அர்த்தம்? அறிவாற்றல்/தகுதி பெற்றக் கன்னிப்பெண் (virtuous woman) என்பதாகும். கணவன் விவகாரத்து அறிவித்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, அந்த பெண் மீண்டும் கன்னித்தன்மை உடையவர்களாகி திருமண பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள தகுதி பெறுகிறார்கள் என்றே அர்த்தமாகிறது.

ஹிந்து தர்மங்களில் அல்லது வேதங்களில் எந்த இடத்திலும் விதவைகளை உயிருடன் எரிப்பதை அங்கீகரிக்கவில்லை, ஏன் அதைப் பற்றி எங்குமே பேசக் கூடப் படவில்லை. அப்படி யாரேனும் வேதங்களை தவறாக அர்த்தம் செய்து கொண்டு எடுத்துக்காட்டினால், இப்படிக் கேளுங்கள் - மகாபாரதம் இராமாயணம் போன்ற காவியங்களில் எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் நம்பப்படும் குந்தி, வாகம்ப்ருனி, கார்கி, மைத்திரேயி, தேவயானி, தசரதனின் மனைவிகள், எல்லோருமே வேதங்களில் சிறந்தவர்களான விதவைப் பெண்கள்தான். அவர்கள் சதியானார்களா?

ஹிந்து தர்மப்படி, திருமணத்திற்கான உடற்தகுதி உள்ள பெண், தன் கணவன் தகனம் செய்யப்பட்டு அவன் சாம்பல் நீரில் கரைக்கப் பட்டதுமே, மீண்டும் அவள் திருமணத்திற்குத் தகுதியான கன்னியாகிறாள் என்றே கூறுகிறது. அவன் சாம்பல் நீரில் கரைக்கப் படாதவரையில் அவனுக்கு மட்டும்தான் அந்தப் பெண் சொந்தமாகிறாள். அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொருளில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு கன்னி என்றால் திருமணமாகாத பெண் என்ற பொருள்படும்.

மைத்ரயனிய யஜுர்வேதத்தின் ஹரித தர்மசூத்திரத்தில் இரண்டு வகையான பெண்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கிறது. சத்யவது - அதாவது திருமண வாழ்வில் ஈடுபடுபவள், மற்றவள் பிரம்மவாதினீ - அதாவது தர்மத்தை வளர்ப்பவள், இவளுக்கு பூணூல் அணிந்து அக்னிஹோத்திரம் செய்யும் தகுதியும் உண்டு என்று குறித்துள்ளனர். பவபூதி உத்தம சரித்திரத்தில் அத்ரேயி (ஆத்திரேய மகாமுனிவரின் மகள்) என்ற பெண் அக்னி வளர்த்து ஆகம வேதங்கள் உரைத்ததாக குறிப்புக்கள் உள்ளன.

ஆதி சங்கரர், உபாயபாரதி என்ற பெண் பண்டிதருடன் நடத்திய ஆன்மீக வாக்குவாதங்கள் பற்றிய பெருங்குறிப்பு சங்கர திக்விஜயம் என்ற நூலில் இருக்கிறது. மேலும் அப்பெண் வேதங்கள் மற்றும் தர்க்க சாஸ்திரங்களில் கரை கண்டிருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். நம்மாழ்வாரின் திருவாய்மொழியை பற்றி 15-ஆம் நூற்றாண்டுகளில் எழுதியவர் தஸ்யை என்ற பெண். ஸ்ரீவில்லிப்புத்தூரின் ஆண்டாள் பற்றி அறியாதவர்கள் இருக்கவில்லை.

நெருப்பைத் தொடாதே என்று சொல்லும் தாய் இல்லை வேதங்கள். நெருப்பு சுடும் என்று சொல்லும் ஆசிரியராக மட்டும் வேதங்கள் இருக்கின்றன. மனிதர்கள் தவறுகிறார்கள். சட்டங்கள் /தர்மங்கள் தவறுவதே இல்லை. மனிதர்களின் தவறுகளுக்கு தர்மங்களை குறை கூறுவது, அல்லது நம் சௌகரியத்துக்கு ஹிந்து தர்மத்தை மதிப்பு குறைத்து கூறி வருவதால் எந்த மாற்றமும் பாதிப்பும் வேதங்களுக்கோ ஹிந்து தர்மத்துக்கோ ஏற்படப்போவதில்லை.

நான் படித்து அறிந்த வரை, வேதங்கள் அல்லது ஹிந்து தர்மம் என்றும் யாரையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. இப்படி வாழ்தல் நன்மை என்று கூறியுள்ளதே தவிர இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்வதில்லை. தினசரி கோவிலுக்குப் போனால்தான் அவன் ஹிந்து என்று கட்டாயம் செய்வதில்லை. இந்தக் கட்டற்ற சுதந்திரம் மட்டுமே ஹிந்து தர்மத்தின் பலமாகும். காலங்காலமாய் வேதங்களையும் ஹிந்து தர்மத்தையும் அவதூறுகள் செய்து வந்தாலும், கட்டாயத்தாலோ பிறப்பாலோ அல்லாமல் உண்மையாகவே ஹிந்து தர்மத்தை வேதங்கள் மூலம் அறிபவர்கள், ஹிந்து தர்மத்தை மட்டும் இல்லை, எல்லா தர்மங்களையும் மதங்களையும் ஒன்றாகவே பாவித்து மதிப்புக் கொடுப்பார்கள்.

நம் முன்னோர்களில் யாரோ மனம் பிழன்ற ஒரு சிலர், ஆங்கிலேயரை மகிழ்விக்கச் செய்த தவறுகளுக்கு வேதங்களைப் பழிப்பது தவறு.
========================================
விதவைச் சம்பிரதாயங்கள் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன் இருந்ததாக சான்றுகள் இல்லை. மேலும் தர்மங்களில் மறுமணம் மற்றும் விவகாரத்து, தாலி/மங்கலசூத்திரம்/திருமாங்கல்யம் போன்றவைகள் பற்றிய விவரமான குறிப்புக்கள் இல்லை. இவையெல்லாமே முகலாயப் படையெடுப்புக்கு பிறகுதான் அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன என்பது போன்ற குறிப்புக்கள் உள்ளன.

மாலை மாற்றுதல் மற்றும் சப்தபதி என்ற அக்னி வலம் மட்டுமே இன்றும் ஹிந்து சமூகத்தில் தர்மப்படியான திருமணங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தாலி, மஞ்சள் கயிறு எல்லாம் .டி. கார்டு போன்ற ஒரு அடையாளங்கள்தான்.

குங்குமத்தை பெண்டிரும் ஆடவர்களும் நெற்றிப் பொட்டில் வைத்துக் கொள்வது என்பது மாந்த்ரீக சக்தி மற்றும் மஞ்சளின் மருத்துவ குணத்திற்காக என்ற காரணங்களுக்காகத்தான். வழக்கம் போல நாளடைவில் இவை பெண்களுக்கே மட்டுமான கட்டாயம் ஆனது.

வகிட்டுப் பொட்டு, குங்குமம், மெட்டி, தோடு, மூக்குத்தி போன்றவைக்கு மாந்த்ரீக மற்றும் அக்குபங்ச்சர் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. இவைகளெல்லாம் கூட VAS (value added sasthirangal) போன்றவைதான். தேவையென்றால் அல்லது விருப்பமிருந்தால் பின்பற்றலாம்.

புருஷனுக்கும், அவனுடைய ஆயுளுக்கும், பெண்கள் அணியும் பொட்டுக்கும், தாலி என்ற நகைக்கும், திருமணத்தின் போது இவைகளை அவனே தன் கையால் முதல் முறை, அணிவிக்கிறான் என்பதைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை. இவைகளை அணியாமல் இருப்பதால் கணவனுக்கு எதுவும் கேடுகள் நிகழ்ந்து விடாது. அதனால் இவற்றைத் துறப்பதை ஒரு துக்ககரமான நிகழ்வாக்கி, அலங்கோலத்தைக் காட்டி பயமுறுத்தி, நகைகள் அணிவதை சுமங்கலித்தன்மையோடு இணைத்து, இதற்கு அதீத முக்கியத்துவம் அளித்துவிட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.

தாலி பொட்டு என்ற விஷயங்களை வைத்து பெண்களை ஒரு மாதிரி blackmailing செய்து வைத்திருக்கும் நடப்புக்கள் எல்லாம் 18-ஆம் நூற்றாண்டுக்கு மேல்தான் நடந்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டுகளில் என்னவோ, முன்னேறிவிட்டதாக அறிவித்துக் கொண்டிருக்கும் போதே, விதவைகள் நிலைகள் இன்னமும் மோசமானது. மிகவும் கீழ்த்தரமாக நடத்தப் படுவது விதவைகள்தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.

திருமணம் முடிந்தன்றே என்னவோ அன்பளிப்பு போல சகல உரிமையோடும் கணவன் வீட்டார் கையோடே கூட்டிச் செல்லும் "புக்ககம்" ஏனோ, கணவன் இறந்தவுடன் உரிமைகளும் மாறிவிடுகிறது. மூட்டை முடிச்சுக்களுடன், அப்பா இருந்தால் அப்பாவுடன், அல்லது சகோதரன்/தாய்மாமன் வீட்டுக்கோ அனுப்பப்படுகிறாள்.

ஆக கணவனை மட்டுமே உறவாக அறிவிக்கிறதா இந்த முறைகள். பின் ஏன் அந்தப் பெண், கணவனை சார்ந்த பெற்றோரையும் பேண வேண்டும்?

சரி, அப்படி அனுப்பப்படுபவள் பிறந்த வீட்டு உறவுகளால் மதிக்கப்படுகிறாளா? அதுவும் கிடையாது. ஏதோ வேண்டாதவர் வந்து விட்டாற்போல் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள். இன்னும் குழந்தைகள் வேறு இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். விதவையாக இருப்பவளிடம் பணம் வேறு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தால் அவள் படும்பாடுகள் வார்த்தைகளால் சொல்லவே முடியாதது. பணம் இல்லாவிட்டால் அவளையோ அல்லது அவள் குழந்தைகளையோ விரும்பி ஏற்பார் யாருமில்லை. இருந்து விட்டாலோ, வல்லூறுகள் போல அவளைக் கொத்தும் உறவுகள்.

விதவையான ஒரு பெண்ணின் தலையை கணவன் இறந்த பதிமூன்று நாட்களுக்குள் மொட்டையடித்து, உடலில் உள்ள ரோமங்கள் எல்லாம் மழிக்கப்படும். புருவம் உட்பட (இப்போது இதெல்லாம் இல்லை). கண்ணாடி வளையல்கள் உடைக்கப்படும். ஒரே வண்ணத்தில் (வெள்ளை அல்லது காவி) புடவையணிந்து கொள்ளவும், நகை, பொட்டு, பூ போன்றவற்றை அணியக்கூடாதென்றும் விதிக்கப்பட்டனர். விதவைகளுக்கு புதிய துணிகள் எடுத்தாலும் அவற்றை நனைத்துத்தான் தருவார்கள், அதுவும் கையால் அவளிடம் கொடுக்க மாட்டார்கள், அவள் பக்கத்தில் வைக்கப்படும். சிலர் அவள் முகம் பார்க்காமல், இடது கையால் அவளுக்கு முதுகுகாட்டி நின்றுகொண்டு மேலிருந்து தரையில் போடுவார்கள் - இதை என் கண்ணால் பார்த்திருக்கிறேன். அதை எடுத்து அவள் உடுத்த வேண்டும்.

1950-க்களுக்கு முன் வரை எந்த உள்ளாடைகளும் அணியக்கூடாதென்றும் இருந்தது. அவள் அழகு ஆண்களுக்குத் தொந்தரவாக இருக்குமாம். இதென்ன நியாயம். பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம். இப்போதெல்லாம் அதிகம் நிகழ்வதில்லையென்றாலும், ஆண்களுக்கு அவள் மீது ஆசை வந்துவிடக் கூடாதென்று அவளை அலங்கோலமாக்கியது, கணவன் இறந்து முதன் முதலாக பிறந்தகம் அல்லது தம் குழந்தைகள் வீட்டுக்குப் போகும்போது வாவென்று வரவேற்று அழைக்க யாரும் அவள் முன் செல்லக் கூடாது என்பது போன்றவைகளை எப்படித்தான் செய்ய முடிகிறதோ? தன்னுடனே இத்தனை நாள் இருந்த ஒரு ஜீவனை இப்படியெல்லாம் நடத்த முடிகிறதோ?

அவளுக்கு காரமான, சுவைமிகுந்த உணவுகள், உப்பு போட்ட அல்லது இனிப்பான பண்டங்கள் சாப்பிடக் கொடுக்கமாட்டார்கள். புதியதாக சமைத்த உணவை சாப்பிடக்கூடாது. இவையனைத்திலும் உள்ள உணவுகளை நீக்கி விட்டால், என்னதான் சாப்பிடுவார்கள்? வீட்டில் உள்ள அனைவரும் உண்ட பிறகுதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு கையலம்பி கொண்டு விட்டால் மீதும் அன்று சாப்பிடக் கூடாது. ஒருவேளை சாப்பாடுதான். அவள் திருமணம், குழந்தைபிறப்பு போன்ற சுப காரியங்களுக்கு வரக்கூடாது. அது அவள் பிள்ளையாக இருந்தாலும் கூட.

ரோமானியர்களைப் போன்றே, 1950-க்கள் வரை, இந்திய ஆண்களின் சராசரி வாழ்நாள் 36-40க்குள்ளேயே இருந்தது. அதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு பெண்ணாவது புருஷன் இறப்பதால் விதவையாகி வாழ்ந்திருக்கிறாள்.

விதவையாவதை, அவளை அலங்கோலமாக்குவதன் மூலம் பெண்களுக்கான சாபம் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருந்தினர். பெண்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளில் பெருந்துன்பமயமானது, விதவைக் கோலம். ஏற்கனவே காதல் கணவனை இழந்து, உடலாலும் மனதாலும் தனிமையின் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்ணுக்கு, அவள் வாழுவதே ஒரு சுமையாக்கி பார்ப்பதில் என்ன ஒரு குரூர சுகம் என்று தெரியவில்லை.

சதியாக்கி எரிக்கத்தானே கூடாது என்ற சட்டம் விதித்தீர்கள்? இப்போது உயிருடன் நடைபிணமாக்கி விட்டோம், என்ன செய்வீர்கள் என்ற குரூர திருப்தி -இல்லையா?

இந்நிலை ஓரளவு பெண்கள் கல்வியறிவு பெற்று, சம்பாதிக்கத் துவங்கிய பின் சிறிது மாறியது. இருந்தாலும், வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியாத, கல்வியறிவு குறைந்த சில விதவைகள் இன்றும் பிறர் வீட்டில் சமையல் செய்வது, ஊறுகாய், அப்பளம், பட்சணம் செய்து விற்று சம்பாதிப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

இன்றும் பிறந்தகமோ, புகுந்தகமோ அவளுக்கு ஆதரவு கொடுப்பதில்லை. அப்படிப்பட்ட சில இளம்விதவைகளின் உடல் தேவைகளை, மறுமண ஆசைக் காட்டி, தன் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் ஏமாற்றுக்கார இளைஞர்கள் எத்தனோ இன்றும் உள்ளனர். ஒரு நொடியில் மனம் சிதறி, அப்படி உடலால் தவறிப் போன விதவைகளில் சிலர் விபச்சாரம் போன்ற தொழிலுக்குள்ளும் தள்ளப்படுகின்றனர்.

அப்படி ஒருவேளை பிறந்தகத்தாரால் ஆதரவு கொடுக்கப்படுபவள் அவர்கள் வீட்டில், தனியொருத்தியாக சமைப்பது, அவர்கள் வீட்டு குழந்தைகளைப் பேணுவது, பத்துப் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற அனைத்து வேலைகளையும் செய்யும்படி நெருக்கப்படுகிறாள். மீண்டும் இவள் இளம் விதவையாக இருந்தால், மனசாட்சியே இல்லாமல் அவ்வீட்டின் ஆண்களின் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகிறாள்.

யமுனை நதிக்கரையில், விதவைகளின் நகரம் என்று அழைக்கப்படும் வ்ருந்தாவன், நம் தலைநகரான தில்லிக்கு 135 கி.மீ. தூரத்திலேயேதான் உள்ளது.

விதவைகள் மீதான வன்கொடுமைகள் இந்தியா மட்டுமில்லை, உலகின் பல்வேறு பாகங்களிலும் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆப்பிரிக்காவின் கானா-வில் விதவையான அந்தப் பெண் சாலையில் அன்று முதல் முதல் எதிரில் வரும் ஆணுடன் உறவு கொள்ளவேண்டும் என்ற சட்டம் இருந்திருக்கிறது. மேலும், அவள் தனியாக ஊருக்கு வெளியே உள்ள வீட்டில் தனித்து விடப்படுவாள். இந்நிலையில், தனித்திருக்கும் பெண்ணின் மன உளைச்சல், பாலியல் தொந்தரவுகள், கணவனை இழந்த துக்கம் இவையெல்லாம் அவளை தற்கொலைக்குத் தூண்டுகின்றன. கானாவில் 1990-யில்தான் விதவைகளுக்கு எதிரான மனித உரிமைப்பறிப்புகள் பற்றிய விழிப்புணர்வு தோன்றி மாற்றுச் சட்டங்கள் உருவாகின.

இன்னும் சில வளர்ந்த நாடுகளில் விதவைகளின் நிலை பற்றி திரட்டிக் கொண்டிருக்கிறேன். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தது வெளியிடுகிறேன்.

===================


.

மாற்றியெழுதப்பட்ட நியாயங்கள்

ஒரு நாட்குறிப்பு

திருக்காட்டுப்பள்ளி

பால்யம் - கள்ளமறியவில்லை, அப்போதுதான் கற்க ஆரம்பித்திருந்தோம் - கல்வியும், கள்ளமும். திருக்காட்டுப்"பள்ளி" நாட்கள், எல்லோருக்கும் போல எனக்கும் செல்ல நாட்கள்தான்.

கூகிள் உதவியில், மைக்கேல்பட்டி வில்சன் லூர்து சேவியர், ஒ.வேலி நித்யா நாராயணன் இரண்டு பேரும் தெரிந்தார்கள். கிடைக்கவில்லை :( இருவரும் 1989 batchmates. நண்பர்களே! எங்கிருந்தாலும் வருக...

செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி ...என்ற ஒலி கேட்டு காலை எழுந்து, எட்டரை மணிக்கு திரையிசை ஒலிக்க "வாஷிங் பவுடர் நிர்மா" என்று பாடஆரம்பித்தால் ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டும்.

பால வித்யாலயா (இப்போது மெட்ரிகுலேஷன் பள்ளியாகி விட்டது) மற்றும் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் பள்ளி (கேர்ல்ஸ் ஸ்கூல்) மற்றும் சர் பி.எஸ். சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி (Sir P.S.Sivasamy Iyer HSS). இந்தப் பள்ளிதான் சுத்தியிருக்கும் 'பதினெட்டு' பட்டிக்கும் நிஜமாவே ஒரே ஸ்கூல். திருவையாறு, மைகேல்பட்டி, விஷ்ணம்பேட்டை, பழமார்நேரி, வரகூர், பூதலூர், பவனமங்கலம், நேமம், இன்னும் நிறையவென்று சுற்றுவட்டாரத்து எல்லா ஊரிலிருந்தும் நண்பர்கள் சங்கமிக்கும் இடமாக இந்தப் பள்ளி.

இதையும் தவிர அங்கன்வாடி பாலவாடிகளைக் கொண்ட அரசாங்கப் பள்ளி ஒன்றும் முருகன் கோவிலுக்கு எதிரில் ஒன்றும், பக்கத்தில் ஒன்றும் இருக்கும். அங்கு கூரை வழியாக வெளிச்சம் வரும். மூங்கில் தட்டுக்கள் வழியாக காற்று வரும். ஆசிரிய-ஆசிரியர்கள் மொத்தமே மூன்று பேர்தான் இருப்பார்கள். அந்தப் பள்ளிக்குள் போகவே பயமாக இருக்கும். சுகாதாரம் என்ற பேச்சுக்குக் கூட வழியில்லாதப் பழையக் கட்டிடம். ரொம்ப கேள்வி கேட்டால் ஆசிரியர் அடிப்பார்என்பார்கள் அங்கு படித்த சிறுவர்கள்.

ஆசிரியர்கள் நண்பர்களா இல்லை, குடும்பத்தின் அங்கத்தினரா என்றே தெரியாமல், ஸார் / டீச்சர் என்று மட்டும் அழைத்தாலும், அவரது மகனோ மகளோ எங்கள் நண்பர் குழாமில் ஒருவராக இருப்பார்கள்.

"செவென்த் பிப்ரவரி" -- இப்போதெல்லாம் கல்லூரிகளில் கல்சுரல்ஸ் என்றழைக்கப்படும் வருடாந்திரக் கொண்டாட்டம் போன்றது. பள்ளியின் நிர்வகித்த சர்.சிவசாமி ஐயர் (1864-1946) பிறந்த நாளான 7th February-க்கும் ஒரு மாதம் முன்பே பாட்டு, நடனம், பேச்சு, கட்டுரை, கவிதை, விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் துவங்கி விடும். கோலாகலமான திருவிழா போல அன்றைய தினம்.

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. (5.84.2)

`செல்வத்தைத் தேடி உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டில் உள்ள பொய்கள் எல்லாம் பேசிடும் நாணம் இல்லாதவர்களே! உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே திருக்காட்டுப்பள்ளி உள்ளான் திருவடி சேர்வீர்களாக!’

என்று எனக்குச் சொல்லும் தட்டாம் பூச்சி வாலில் கட்டப்பட்ட மனம்.

தட்டாம் பூச்சியின் வாலில் கட்டிய நூல் போல மனம் மட்டும் அங்கேயேச் சுற்றிச்சுற்றி வருகிறது. நாங்கள் புழுதியில் புரண்டு விளையாடிய மண்.

==========================

திருக்காட்டுப்பள்ளி. ஒன்பது தேவார ஸ்தலங்களில் ஒன்றானது. சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தலம். காவிரி, குடமுருட்டி ஆறுகள், கல்லணை என்று நீர் நிலைகளுக்குப்பஞ்சமில்லாத கிராமம்.

வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தம் நீர்மையே.

நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனா ரழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.

பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
அருமறை யவைவல்ல வணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
பரவிய தமிழ்சொலப் பறையுமெய்ப் பாவமே.

பொன்னியின் செல்வனில் கல்கியும், உடையாரில் பாலகுமாரனும் குறிப்பிட்டவாறே திருக்காட்டுப்பள்ளி, சோழர்களின் வர்த்தக மையமாக விளங்கியதும் குறிப்பிடத்தகுந்தது.

உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாகப் பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர அவற்றைப் பெற்றுத் தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளைய மனைவி தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப்படுகின்றது.

ஐந்து நிலைகளுடன் கூடிப் பொலிவுடன் ராஜகோபுரம் உள்ளது. செப்புக்கவசமிட்ட கொடிமரம் உள்ளது. வலமாகச் சென்றால் விநாயகர் சந்நிதி உள்ளது. உட்சென்றதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது - நின்ற திருக்கோலம். சந்நிதி வாயிலில் சுதையாலான துவாரபாலகிகள் உளர். உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் உள்ளது. உட்சென்றால் வலப்பால் நடராச சபை உள்ளது. உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.

மூலவர் - சிவலிங்கத் திருமேனி. நான்கு படிகள் பூமியில் தாழ உள்ளார். வௌளிக் கவச அலங்காரம், உள்ளத்திற்கு ஓர் அலாதியான மனநிறைவு. படிகள் இறங்கிச் சுற்றி வலம் வரலாம். சோழ மன்னன் பிரதிஷ்டை, மூலவரைச் சுற்றி வரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோற்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் சந்நிதியாகவுள்ளது. இலிங்கோற்பவரிடத்தில் அர்த்த நாரீஸ்வரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமானுள்ளார். பக்கத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள்.

முன் மண்டபத்தில் வலப்பால் பைரவர், நால்வர் திருமேனிகள் உள்ளன. நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன. மாசிமகமும் பங்குனி உத்திரப் பெருவிழாவும் இங்குச் சிறப்புடையன. முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில். ‘பள்ளி’ என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-வது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளதாம்.

“வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன்
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
காதினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப் பள்ளி
நாதனார் திருவடி நாளும் நின்றேத்துமே.” (சம்பந்தர்)

“மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
நாட்டுப் பொய் யெலாம் பேசிடும் நாணிலர்
கூட்டை விட் டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளி யுளான் கழல் சேர்மினே.” (அப்பர்)

"- எண்ணார்
தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டார் சூழுந்
திருக்காட்டுப் பள்ளியில் வாழ் தேவே. (அருட்பா)

==========================
சிவப்பிரகாசரின் ரசனை
(நன்றி - கடாரத் தமிழ் பேரறிஞர் டாக்டர். எஸ். ஜெயபாரதி)

சிவப்பிரகாச முனிவர் என்று ஒரு புலவர்/சாமியார். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தார். நல்ல புலவர். அவர் சிறுவயதிலேயே கவி பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். பல நூல்களை இயற்றியுள்ளார்.

அவருடைய சொந்த ஊர் திருக்காட்டுப்பள்ளி. அவருக்குப் பதினைந்து வயதாகும்போது நடந்த சம்பவம். அப்போது இன்னும் அவர் சன்னியாசம் வாங்கவில்லை. ஒருநாள், அவர்கள் இருந்த வீதியில் ஒரு பெண் உப்பு விற்றுக்கொண்டு போனாள். சுவாமிகளின் தாயார் அப்போது கைவேலையாக இருந்தார். ஆகவே உப்புக்காரியை அழைக்குமாறு சுவாமிகளை ஏவிவிட்டார். அவர் சும்மா போய் அழைக்காமல், வெண்பாவாக அமைத்து அவளை அழைத்தார்.

நிறைய உளதோ வெளிதோ கொளுவோம்
பிறையை முடிக்கணியும் பெம்மான் - உறையும்
திருக்காட்டுப்பள்ளி திரிபாவாய் நீயுங்
கிருக்காட்டுப்பள்ளி யெமக்கு

பிறையணிந்த சீமானாகிய இறைவன் இருக்கும் இடமாகிய திருக்காட்டுப்பள்ளியில் உப்பு விற்பதற்காக வீதி தோறும் திரியும் பெண்ணே! உன்னிடம் உப்பு நிறைய உள்ளதோ? நல்ல தரமான வெண்மையான உப்பாக இருக்கிறதோ? அப்படியானால் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். ஆகவே நீ இங்கு இரு! எங்களுக்கு உப்பு அள்ளிக் காட்டு.

நீயிங் கிருக்காட்டுப்பள்ளியெமக்கு =
நீ + இங்கு + இரு + காட்டு + உப்பு + அள்ளி + எமக்கு

கொஞ்சம் குறும்புடன் பாடிய பாடல். அப்போதெல்லாம் பதினைந்து பதினாறு வயதிலேயே திருமணம் ஆகிவிடும். இளவட்ட வயது.

அதன்பின்னர் சிவப்பிரகாசர் ஒரு மடத்தில் சேர்ந்துவிட்டார். தமிழ்நாட்டு சைவ ஆதீனங்களுக்கென பல சம்பிரதாயங்கள் இருந்தன. அவர்களுக்கென Hierarchy எனப்படும் அதிகார/அந்தஸ்துத் தட்டுக்கள் இருந்தன.அப்போதெல்லாம் ஆதீனங்களில் hierarchy நிறைய உண்டு. சாமியார்களிலேயே பண்டார சன்னிதி எனப்படும் ஆதீனகர்த்தர். அவருக்கு அடுத்தபடியாக தலைமைத்துவத்துக்கு வரவேண்டிய அடுத்த பட்டம் அல்லது இளையபட்டம் அல்லது இளவரசு; பின்னர் தகுதி, பதவி, அதிகாரம் முதலியவற்றின் அடிப்படையில் உள்ள ஸீனியர் சுவாமிகள், ஜூனியர் சுவாமிகள், ஸப்ஜூனியர் சுவாமிகள் என்றெல்லாம் ஏணிப்படிகள் இருந்தன. ஸீனியர்கள் முதலியோரைத் தம்பிரான் என்று சொல்வார்கள்.

பெரிய ஆதீனங்களுக்கு வெவ்வேறு இடங்களில் சொத்துக்கள் இருந்தன. கோயில்களும் இருந்தன. அவற்றை நிர்வகிப்பதற்கு ஆங்காங்கு கிளை மடங்கள் இருந்தன. அவற்றை நிர்வகிப்பதற்கு தனித்தம்பிரான்கள் இருந்தனர். அவர்களைக் 'கட்டளைத் தம்பிரான்கள்' என்பர். ஸப்ஜூனியர் சுவாமிகளை 'குட்டி'கள் என்று அழைப்பார்கள். அவர்களில் சிலர் மடத்திலேயே ஸீனியர் தம்பிரான்களிடமோ அல்லதுஆதீனப் புலவர்களிடமோ அல்லது அவ்வப்போது அங்கு அழைப்பின்பேரில் வரக்கூடிய பெரும்புலவர்களிடமோ படித்தனர். அவ்வாறு படிப்பவர்களைக் 'கற்றுக்குட்டி'கள் என்று குறிப்பிடுவார்கள்.

சாமியார்கள் தவிர மேல்காட்டு உத்தியோகம், ராயசம், காறுபாறு, கற்றுச்சொல்லி, கணக்கர், தவசிப்பிள்ளை, ஓடும்பிள்ளை, எடுபிடி என்று பலவகையான வேலைகளில் இருப்பவர்களும் இருந்தார்கள். இவர்களையும் அங்கு வந்து செல்லும் சன்னியாசம் வாங்காதவர்களையும் 'வெள்ளைவேட்டிக்காரர்கள்' என்று அழைத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் மரியாதை, அதிகாரம். அதற்கேற்ப சாப்பாட்டுப்பந்தியிலும் வரிசை; வரிசையில் இடம்; இப்படியிருக்கும்.

பெரிய சன்னிதானம் சாப்பிட ஆரம்பித்த பின்னரே மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அவர் சாப்பிட்டுவிட்டு எழும்போது அனைவரும் இலையைவிட்டு எழுந்துவிடவேண்டும்.

சாப்பிட்டுமுடிக்கவில்லையானால் அது அவனவன் தலையெழுத்து. சிவப்பிரகாசர் ஒரு ஜூனியர் சுவாமிகளாக இருந்தபோது அவர் இருந்த மடத்திற்கு கோயம்புத்தூர்ப் பக்கத்திலிருந்து ஒரு சமையற்காரன் வந்திருந்தான்.

பெரிய சுவாமிகள் அனைவருக்கும் நல்ல அரிசியையும் மற்றவர்களுக்குக் குறுணை அரிசியையும் போட்டு சோறாக்கி வைத்திருந்தான். பந்தி ஆரம்பமாகியது. இலை போட்டாயிற்று. சோறு பரிமாறப்பட்டது. குறுணை அரிசிச்சோறு; குழைந்தும் போயிருந்தது. நெல்லும் கல்லும் இடையிடையே. பார்த்தார் சிவப்பிரகாசர்; திகைத்தார்; தயங்கினார். பின்னர் சொன்னார்.....

"கொங்கன் வந்து பொங்கினான் கொழியரிசிச் சோற்றினை"

அருகில் அமர்ந்திருந்த ஒரு ஜூனியர்சுவாமிகள், அவரைப் பார்த்து ஜாடையாக எச்சரித்தார்,

"சங்கமங்கள் கூடியே சாப்பிடத்தொடங்கின"

அருகில் அமர்ந்திருந்த மற்றொரு ஜூனியர் சுவாமிகள்,

"இங்கும் அங்கும் பார்க்கிறீர்; இலையிலே கண்ணில்லையே!" என்று அங்கலாய்த்தார்.

பயந்துபோனார், சிவப்பிரகாசர். மற்றவர்கள் உண்டு முடித்து எழுந்துவிடுவார்கள்; தயங்கி நின்ற சிவப்பிரகாசர் பட்டினியாக எழவேண்டியிருக்குமே! எப்படியும் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும். சாப்பிடாமல் இருந்தால் இரவில்தான் மறு உணவு. நடுவில் எதுவும் கிடைக்காது. அதுவும் ஏதாவது இரவு விரதமாக இருந்தால் அதுவும் கிடையாது. முழுப்பட்டினிதான்.ஆகவே,

"எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள் பாவம், ஈசனே!"

என்று சொல்லிமுடித்து சிவனேயென்று சோற்றை விழுங்கிவைத்தார்.

இது பிற்காலத்தில் தர்மபுர ஆதீனத்தில் வழங்கப்படும் ஒரு பாடலாகிவிட்டது. முழுப்பாடல் இதோ:

"கொங்கன் வந்து பொங்கினான், கொழியரிசிச் சோற்றினை:
சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கின!
இங்கும் அங்கும் பார்க்கிறீர்! இலையிலே கண்ணில்லையே!
எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள் பாவம், ஈசனே!"

ஒரு காலகட்டத்தில் சிவப்பிரகாச முனிவர் ஒரு மடத்துக்குத் தலைவரானார். அப்போது அவரிடம் மடத்துச் சமையற்காரனான தவசிப் பிள்ளை வந்து என்ன சமையல் செய்வது என்று பணிவுடன் கேட்டான். அன்று அவர் சாப்பிடவேண்டிய மெனுவை அப்படியே ஒரு வெண்பாவாகச் சொன்னார்.

"சற்றே துவையல் அரை; தம்பி ஒரு பச்சடி வை,
வற்றல்ஏ தேனும் வறுத்துவை - குற்றம்இலை
காயமிட்டுக் கீரைகடை; கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி."

மிளகுக்காய் என்பது மிளகாயின் பழைய பெயர். மிளகுக்கு பதிலாக நம் சமையலில் இடம் பெற்றது; போர்த்துகீசியரின் உபயம்.

'பெருங்காயம் சேர்த்துக் கடைந்த கீரை; மிளகாய் அரைத்து வைத்த கறி; வற்றல்; ஒரு பச்சடி; ஒரு துவையல்'

நல்ல ருசியான உணவு. 'கொங்கன் வந்து பொங்கியுண்டு’ச் செத்த நாக்கைச் சரிக்கட்டி விட்டிருக்கும்.


==========================




.




மேஜை

அணைத்தல்