அம்மா... ரயிலுக்கு எத்தனை சக்கரம்?


வெறும் இயந்திரம் போல அலுவலகம் செல்வதும், வீடு திரும்புவதும், உண்பதும் உறங்குவதும் என எந்த வண்ணமும் இல்லாத த்ராபையாக இருந்த வாழ்க்கையைத் தன் கேள்விகள் மூலம் எழுப்பியவள், என் சகோதரியின் மகள், வைஷ்ணவி. அவள் கேட்கும் கேள்விகளின் பதில்களுக்காக என் தேடல்கள் துவங்கின. அவளோடு என் மகளும் சேர்ந்து கொண்டால்.... கேள்விகள் இன்னும் தீராமல் தொடர்கின்றன.

ஆப்பிள் ஏன் ரெட் கலரா இருக்கு-வில் ஆரம்பித்து, மண் எப்படி பொடியானது, அலை எங்கேர்ந்து வரும், கடல் தண்ணி ஏன் அங்கேயே நிற்குது ஏன் மத்த (ஆறு போன்ற) தண்ணி மாதிரி ஓடுவதில்லை என்று சராமாரியாய் திகைக்க வைக்க அவர்களுக்கு மட்டும்தான் முடியுமோ என்னவோ.

சனிக்கிழமை சாயந்திரம், ஆற அமர அவளோடு பேசிக் கொண்டிருந்து விட்டு, வாகனங்களும் செயல்பாடுகளும், அவற்றின் பயன்களும் என்று ஒரு ஆங்கிலக் கட்டுரை எளிமையான புல்லட் பாயிண்டுகளாக படங்களோடு தயார் செய்து பிரிண்ட் எடுத்து அவளுக்கு விவரித்துக் கொண்டிருந்தேன்.

எல்லாவற்றிக்கும் நான்கு, மூன்று, இரண்டு, என்று சக்கரங்கள் இருப்பதை விவரித்திருந்தேன். ரயிலுக்கு அவ்வாறு சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.

மேடம் கரெக்ட்டா "அம்மா... ரயிலுக்கு எத்தனை சக்கரம் இருக்கும்" என்ற ஒரு கேள்விக்கான பதிலை அவள் ஆறு வயதுக்குப் புரியும்படி கொஞ்சம் விளக்கமாய்த் தர முயற்சித்தேன்.

அதற்கான படங்கள் இவை. இந்தப் படங்களை பிரிண்ட் வைத்துக் கொண்டு அவளோடு மூன்று மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் ஒரு வழியாய், என்ஜின்-னுக்கு மொத்தம் 12 சக்கரங்கள் மற்றும் bogie / coach ஒன்றுக்கு நான்கு சக்கரங்கள் என்று இருக்கிறது என்று எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தாள். :))







9 comments:

pudugaithendral said...

parents club லையும் இந்தப் பதிவை போடுங்களேன்.

Vidhoosh said...

பகிர்ந்து விட்டேன் கலா. :)

ஹுஸைனம்மா said...

மாணவியாயிருந்தபோது கற்றதைவிட, நம் பிள்ளைகளுக்காய்க் கற்பதே ரசனையாயிருக்கிறது. சில கேள்விகள், நாம சின்னப்பிள்ளையாயிருந்தப்போ நமக்கு ஏன் தோணலைன்னு தோணும்.

உயிரோடை said...

ர‌யிலுக்கு எத்த‌னை ச‌க்க‌ர‌ம் ச‌கோ இப்போ சொல்லுங்க‌ பார்க்க‌லாம்.(பொண்ணு சொல்லி குடுத்த‌ ப‌திலை த‌விர‌ வேறு ப‌திலை சொல்லுங்க‌)

பா.ராஜாராம் said...

//அவள் ஆறு வயதுக்குப் புரியும்படி கொஞ்சம் விளக்கமாய்த் தர முயற்சித்தேன். அதற்கான படங்கள் இவை. இந்தப் படங்களை பிரிண்ட் வைத்துக் கொண்டு அவளோடு மூன்று மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம்//

ஆறு வயதுக் குழந்தையை இந்தப் படுத்தலா? ஒரு பத்து நிமிஷத்துல ரயில்வே ஸ்டேசன் கூட்டிப் போயிருக்கலாம். நசரு இன்னும் வரலயா? :-)

பா.ராஜாராம் said...

//ர‌யிலுக்கு எத்த‌னை ச‌க்க‌ர‌ம் ச‌கோ இப்போ சொல்லுங்க‌ பார்க்க‌லாம்.(பொண்ணு சொல்லி குடுத்த‌ ப‌திலை த‌விர‌ வேறு ப‌திலை சொல்லுங்க‌)//

ஒரு பத்து நிமிஷம் சகோ. ரயில்வே ஸ்டேசன் போய்ட்டு வந்துர்றேன். :-)

//சில கேள்விகள், நாம சின்னப்பிள்ளையாயிருந்தப்போ நமக்கு ஏன் தோணலைன்னு தோணும்//

நல்லவேளை தோணலைன்னு எடுங்க ஹுசைனம்மா. 'மூணு மணிநேரம்'ன்னா சும்மாவா இருக்கு? :-)

Vidhoosh said...

ஆவ்வ்வ்... ராஜாராம் அண்ணே.. சௌக்கியமா.. :))) மூணு மணி நேரம் "விளக்க"உரை மட்டும் இல்லீங்க்ணா... அப்டியெல்லாம் பண்ணினா, தர்ஷிணி அம்மாவும் வேணாம் கும்மாவும் வேணாம்னு சொல்லிட்டு ஓடிப் போயிடுவா. :)))

அப்புறம், எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்-னுக்கு கூட்டிட்டு போயி எஸ்கலேட்டரில் மேலயும் கீழையும் போயிட்டு வந்து போயிட்டு வந்து விளையாட்டு பண்ணி என்னை அங்க இருக்கும் செக்யூரிட்டி கிட்ட திட்டு வாங்க வச்சதோட சரி.. அப்பறம் சக்கரத்த எங்க எண்ணுறது?

ஹுஸைனம்மா said...

//நல்லவேளை தோணலைன்னு எடுங்க ஹுசைனம்மா. 'மூணு மணிநேரம்'ன்னா //

பா.ரா.ண்ணே, நம்ம சின்னப்புள்ளையா இருந்தப்ப இந்தமாதிரி கேள்வியெல்லாம் கேட்டாலும் பதில் என்ன வரும்? “ம்... வயக்காட்டு வழியாப் போற எட்டுமணி வண்டியைப் போய்ப்பாரு தெரியும். ந்தா, அப்படியே இந்த துணிமூட்டையையும் எடுத்துட்டுப் போயி பக்கத்து காவாயில துவைச்சிட்டு வந்துடு”ன்னுதான். அதுக்குப் பயந்தே கேள்வியெல்லாம் பள்ளிக்கோடத்துல மட்டுந்தேன் அப்பல்லாம்!! :-))))

அநேகமா, தர்ஷிணிக்கும் இதே பாடம் இந்த மூன்றுமணிநேரத்தில் கிடைத்திருக்கும்!! ;-))))

பா.ராஜாராம் said...

வித்யா, ஹுசைனம்மா, :-))

Post a Comment