சிவ தாண்டவ ஸ்தோத்திரம்


ஸ்ரீ கணேசாய நமஹ

ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே
க3லேவலம்ப்ய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம் |
டமட்டமட்டமட்டமன்னிநாதவட்டமர்வயம்
சகார சண்டதாண்டவம் தனோது ந: ஸிவ: ஸிவம் || 1 ||

சிவபெருமானின் கழுத்திலிருந்து தோன்றிய புனிதமாக கங்கை நதியின் நீரானது, அடர்ந்த வனங்களைப் போன்றிருக்கும் உச்சந்தலை ஜடாமுடியில் இருந்து பிரவாகித்து வழிந்தோடுகிறது. கழுத்தின் மீது நீண்டு வளர்ந்திருக்கும் பெரிய பெரிய ஸர்ப்பங்கள் மாலை போன்று ஊர்ந்து கொண்டிருக்கின்றன. டமடமவென்று ஒலிக்கும் டமரூகத்தின் நாதத்திற்கேற்ப சண்ட-பிரசண்ட சிவ தாண்டவம், பூவுலகங்களின் சுழற்சிகள் நின்று போகாமல் இருக்கும் வண்ணம் நிகழ்கிறது. இந்த உலகத்தின் சுழற்சிக்குக் காரணமாக இருக்கும் பரமேசன் ஜீவராசிகள் அனைத்திற்கும் நன்மை புரியட்டும்.

ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ
விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி |
தகத்தகத்தகஜ்வலல்லலாடபட்டபாவகே
கிஷோரசந்த்ரசேகரே ரதி: ப்ரதிக்ஷணம் மம || 2 ||

அவரது ஜடாமுடியினூடே தெய்வீக நதி கங்கை (நிலிம்பநிர்ஜரி) பெருகி பிரவகித்து ஓடுகின்றது. நெற்றியில் அக்கினி தகதகவென்று ஜொலிக்கின்றது. சிவனாரின் தலையில் ஆபரணமாக பிறைநிலவு ஒளிர்கிறது. சிவனாரை பிரதக்ஷிணம் செய்கிறேன்.

தராதரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர
ஸ்புரத்திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே |
க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்தராபதி
க்வசித் திகம்பரே மனோ வினோத மேது வஸ்துனி || 3 ||

பர்வத ராஜனின் மகளான பார்வதியின் நாயகன்தன் உள்ளத்தில் பிரபஞ்ச ஜீவராசிகள் இருக்கின்றன, ஜீவன் அனைத்திற்கும் சிவனாரின் கருணை தாரையாகப் பொழிகிறது, தன் கருணைப் பார்வையால் உலகை ஆளுகின்றார், திசைகளை ஆடையாக அணிந்தவரே, திகம்பரரே, உங்களுக்கு நமஸ்காரம்.

ஜடாபுஜங்க பிங்கலஸ்புரத்பணாமணிப்ரபா
கதம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூமுகே |
மதாந்த ஸிந்துர ஸ்புரத்வகுத்த ரீயமேதுரே
மநோ விநோதமத்புதம் பிபர்து பூதபர்தரி || 4 ||

அடர்ந்த மஞ்சள் வண்ணத்தில் பளபளப்பாய் இருக்கும் சர்ப்பத்தின் படத்தில் இருக்கும் ரத்தினமணி ஜ்வலிக்கிறது. அதன் ஒளி சகல திசைகளிலும் பரவி இருக்கிறது. கதம்ப மலரின் தேன் குங்கும வண்ணத்தில் திக்குகள் தேஜசுடன் ஒளிருகிறது. சிவனாரது மேலாடை மதயானையின் தோலால் ஆனதால் கருமையாகத் தெரிகிறார். பூதநாதனை நமஸ்கரிக்கிறேன்.

ஸஹஸ்ரலோசன ப்ரப்ருத்ய சேஷலேக சேகர
ப்ரஸூன தூலி தோரணி விதூஸராங்ரி க்ரபீடபூ: |
புஜங்கராஜ மாலயா நிபத்தஜாட ஜூடக
ஸ்ரீயை சிராய ஜாயதாம் சகோர பந்துசேகர: || 5 ||

இந்திரன் நமஸ்கரித்தபோது இந்திரனின் தலையில் இருந்த பூக்களின் மகரந்தத் துகள்கள் சிவனாரின் பாதங்களை சாம்பல் நிறமாக்கியுள்ளன. ஏனைய லோகத்து தேவ-கணங்களும் நமஸ்கரித்திருக்கின்றனர். ராஜ நாகம் மாலை போல அவரது ஜடாமுடியை சுற்றி இருக்கிறது. சகோரபட்சி அருந்தும் அமிழ்தம் வருஷிக்கும் சந்திரனை அணிந்தவரே, எனக்கு வெற்றியையும் சகல ஐஸ்வர்யங்களையும் புகழையும் அளிப்பவரே, நமஸ்காரம்.

லலாட சத்வ ரஜ்வலத் தனஞ்சயஸ் புலிங்கபா
நீபீத பஞ்சஸாயகம் நமன்னிலிம்ப நாயகம் |
ஸுதாமயூக லேகயா விராஜமான சேகரம்
மஹாகபாலி ஸம்பதேசி ரோஜ டாலமஸ்து ந: || 6 ||

காமதேவனின் அம்புகளைச் தடுதாண்ட ஜடாமுடியின் அமைப்பில் சகல சித்தாந்தங்களும் அறிந்து கொள்வோமாக. சிவனாரின் நெற்றியில் இருந்து காமனை எரித்த அக்கினி ஜ்வாலைகள் தெறிக்கின்றன. தேவர்கள் அனைவரும் அவரை வணங்கி நிற்கின்றனர். பிறையணிந்த மஹாகபாலியே உங்களை நமஸ்கரிக்கிறேன்.

கரால பால பட்டிகா தகத் தகத் தகஜ்வலத்
தனஞ்சயாஹுதி க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே |
தராதரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக-
ப்ரகல்பனைக சில்பினி த்ரிலோசனே ரதிர்மம || 7 ||

திரிலோச்சனனின் (முக்கண்ணன்) நெற்றியில் தக தக தகவென ஒளிரும் பேராற்றல் மிக்க ஜ்வாலை காமனின் ஐந்து பாணங்களையும் எரித்தது. கலைநயத்துடன் இவ்வுலகை ஹிமாலய அரசனின் மகளுடன் இணைந்து உருவாக்கினீர்கள். உங்களை வணங்குகிறேன்.

நவீன மேக மண்டலீ நிருத்த துர்தர ஸ்புரத்-
குஹூனி ஷீதினீதம: ப்ரபந்த பத்த கந்தர: |
நிலிம்ப நிர்ஜரீ தரஸ் தனோது க்ருத்தி ஸிந்துர:
கலாநிதான பந்துர: ஸ்ரீயம் ஜகத் துரந்தர: || 8 ||

பிறைநிலவணிந்தவரின் கழுத்தானது நள்ளிரவின் கரு நிறத்தில் இருக்கும். அவரது கழுத்தில் அணிகலனாய் இருக்கும் பாம்புகள் அடர்ந்த மேகங்கள் போன்று மறைக்கின்றன. கங்கையை தலையில் சூடியவரும், பிறைநிலவு அணிந்தவரும், யானையின் தோல் உடை அணிந்தவரும், பிரபஞ்சங்களைத் தாங்குபவருமான சிவனார் ஐஸ்வரியங்களை பெருக்கட்டும்.

ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்சகாலி மப்ரபா -
விலம்பிகண்ட கந்தலீ ருசிப்ரபத்த கந்தரம் |
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாந்த கச்சிதம் தமந்தகச் சிதம் பஜே || 9 ||

நீல தாமரையின் வண்ணத்தில் கழுத்துடைய நீலகண்ட, காம தகன, புரமெரித்த சிவனார், லோக மாயையில் இருந்து முக்தி அளிப்பவர். கஜன் அந்தகன் ஆகிய ராக்ஷஷர்களை அழித்தவர். தக்ஷ யக்ஞம் அழித்தவர். யம பய பந்தங்களில் இருந்து விடுப்பவர். அவரை நான் வணங்குகிறேன்.

அகர்வ ஸர்வ மங்கலா கலா கதம்ப மஞ்சரி
ரஸப்ரவாஹமாதுரீ விஜ்ரும்பணாம தூவ்ரதம் |
ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந்த காந்த காந்தகம் தமந்தகாந்தகம் பஜே || 10 ||

கதம்ப மலர்களின் தேனை அருந்துபவரும், புனிதமான குணங்கள் கொண்டவரும், ஸ்மார (காமன்) தகனர். கஜன் அந்தகன் ஆகிய ராக்ஷஷர்களை அழித்தவர். தக்ஷ யக்ஞம் அழித்தவர். யம பய பந்தங்களில் இருந்து விடுப்பவர். அவரை நான் வணங்குகிறேன்.

ஜயத்வதப்ரவிப்ரமப்ர மத்புஜங்கதுங்க மச்வஸ-
த்விநிர்கமத்கம ஸ்புரத்கரால பாலஹவ்யவாட் |
திமித் திமித் திமித்வனன் ம்ருதங்க துங்க மங்கல
த்வனிக்ரம ப்ரவர்தித ப்ரசண்ட தாண்டவ: சிவ: || 11 ||

நெற்றியில் இருந்து ஜ்வாலைகள் தெறித்த வண்ணம் இருக்கின்றன. அவர் மேல் ஊரும் சர்ப்பங்களின் உஸ்-என்ற மூச்சுக் காற்றில் படபடவென்று ஜ்வாலைகள் தெறிக்கின்றன. டமடமவென்ற உடுக்கையொலிக்கு ஏற்றவாறு திமிதிமியென்ற ஆக்ரோஷமான அவரது தாண்டவத்தினால் ஜகமெங்கும் சுபிட்சமடைந்து ஜெய கோஷம் ஒலிக்கிறது.

ஸ்ப்ருஷத்வி சித்ரதல்பயோர் புஜங்கமௌக்திகஸ்ரஜோர்
கரிஷ்டரத்னலோஷ்டயோ: ஸுஹ்ருத்விபக்ஷபக்ஷயோ: |
த்ருணாரவிந்தசக்ஷுஷோ: ப்ரஜாமஹீமஹேந்த்ரயோ:
ஸமப்ரவ்ருத்திக: கதா ஸதாசிவம் பஜே || 12 ||

உலகத்தின் நன்மை தீமைகள் எதுவாயினும், சர்ப்பங்களோ மலர்மாலையோ எதுவாயினும், அரியதற்கரிய ரத்தினங்களோ தூசியோ எதுவாயினும், புல்லை போன்ற நெகிழ்ந்த கீழ் நோக்கு உடையவராயினும், தாமரை மலரைப் போன்ற உயர்ந்த பார்வைகள் உடையவராயினும், சாதாரணனாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும்,  அவர்களை ஒரேபோன்று சமமாகப் பார்க்கும்... சதாசிவா எனக்கு அருளுங்கள். உங்கள் அருள் எனக்கு என்று கிடைக்குமோ?

கதா நி்லிம்ப நிர்ஜரி நிகுஞ்சகோடரே வஸன்
விமுக்ததுர்மதி: ஸதா சிர: ஸ்தமஞ்ஜலிம் வஹன் |
விலோல லோல லோசனோ லலாம பால லக்னக:
சிவேதி மந்த்ர முச்சரன் கதாஸுகீ பவாம்யஹம் || 13 ||

கங்கையின் நீருக்கு அடியில் இருக்கும் குகையொன்றில் என்று எனக்கு மகிழ்ச்சியுடன் தவம் இருக்கவும், துர் எண்ணங்களில் இருந்து விடுபட்டு, பணிந்து தலை வணங்கி அஞ்சலிகள் செலுத்தவும், பேராசையற்ற கண்கள் இருக்கப் பெறவும், இவையெல்லாம் பெற்ற பின் ஜ்வாலையுடைய நெற்றி கொண்ட சிவனாரின் மந்திரத்தை ஜபித்து வணங்க வாய்க்குமோ?

இதம் ஹி நித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்
படன்ஸ்மரம்ப்ருவன்னரோ விஸுத்தி மேதி ஸந்ததம் |
ஹரே குரௌ ஸுபக்திமாசு யாதி நான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸுசங்கரஸ்ய சிந்தமம் || 14 ||

யாரொருவன் இந்த சுலோகத்தை ஜபித்து நினைவில் வைத்து, நல்வழி கொண்டால் புனிதத்துவம் பெறுவான். சிவபக்தி பெறுவான். சிவனாரை தியானிப்பவன் மோகமாயையில் இருந்து விடுபடுவான்.

ஃபலஸ்துதி
பூஜா வஸான ஸமயே தசவக்த்ரகீதம் ய:
சம்பு பூஜனபரம் படதி ப்ரதோஷே |
தஸ்யஸ்திராம் ரதகஜேந்த்ர துரங்கயுக்தாம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி சம்பு: || 15 ||

சம்பு பூஜைகளுக்கு பிறகு இராவணனால் இயற்றப்பட்ட இந்த சுலோகத்த படித்தால் சகல நலன்களும் கிடைக்கும்.
|| இதி ஸ்ரீ ராவண க்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

श्रीगणेशाय नमः
जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले गलेऽवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाम् |
डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्ड्ताण्डवं तनोतु नः शिवः शिवम् || १||

जटाकटाहसंभ्रमभ्रमन्निलिम्पनिर्झरी- विलोलवीचिवल्लरीविराजमानमूर्धनि |
धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम || २||

धराधरेन्द्रनंदिनीविलासबन्धुबन्धुर स्फुरद्दिगन्तसन्ततिप्रमोदमानमानसे |
कृपाकटाक्षधोरणीनिरुद्धदुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि || ३||

लताभुजङ्गपिङ्गलस्फुरत्फणामणिप्रभा कदम्बकुङ्कुमद्रवप्रलिप्तदिग्वधूमुखे |
मदान्धसिन्धुरस्फुरत्त्वगुत्तरीयमेदुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि || ४||

सहस्रलोचनप्रभृत्यशेषलेखशेखर प्रसूनधूलिधोरणी विधूसराङ्घ्रिपीठभूः |
भुजङ्गराजमालया निबद्धजाटजूटक श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखरः || ५||

ललाटचत्वरज्वलद्धनञ्जयस्फुलिङ्गभा- निपीतपञ्चसायकं नमन्निलिम्पनायकम् |
सुधामयूखलेखया विराजमानशेखरं महाकपालिसम्पदेशिरोजटालमस्तु नः || ६||

करालभालपट्टिकाधगद्धगद्धगज्ज्वल - द्धनञ्जयाहुतीकृतप्रचण्डपञ्चसायके |
धराधरेन्द्रनन्दिनीकुचाग्रचित्रपत्रक- प्रकल्पनैकशिल्पिनि त्रिलोचने रतिर्मम ||| ७||

नवीनमेघमण्डली निरुद्धदुर्धरस्फुरत् - कुहूनिशीथिनीतमः प्रबन्धबद्धकन्धरः |
निलिम्पनिर्झरीधरस्तनोतु कृत्तिसिन्धुरः कलानिधानबन्धुरः श्रियं जगद्धुरंधरः || ८||

प्रफुल्लनीलपङ्कजप्रपञ्चकालिमप्रभा - वलम्बिकण्ठकन्दलीरुचिप्रबद्धकन्धरम् |
स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदांधकछिदं तमंतकच्छिदं भजे || ९||

अखर्व( अगर्व) सर्वमङ्गलाकलाकदंबमञ्जरी रसप्रवाहमाधुरी विजृंभणामधुव्रतम् |
स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे || १०||

जयत्वदभ्रविभ्रमभ्रमद्भुजङ्गमश्वस - - द्विनिर्गमत्क्रमस्फुरत्करालभालहव्यवाट् |
धिमिद्धिमिद्धिमिध्वनन्मृदङ्गतुङ्गमङ्गल ध्वनिक्रमप्रवर्तित प्रचण्डताण्डवः शिवः || ११||

स्पृषद्विचित्रतल्पयोर्भुजङ्गमौक्तिकस्रजोर् - गरिष्ठरत्नलोष्ठयोः सुहृद्विपक्षपक्षयोः |
तृष्णारविन्दचक्षुषोः प्रजामहीमहेन्द्रयोः समप्रवृत्तिकः कदा सदाशिवं भजे || १२||

कदा निलिम्पनिर्झरीनिकुञ्जकोटरे वसन् विमुक्तदुर्मतिः सदा शिरः स्थमञ्जलिं वहन् |
विमुक्तलोललोचनो ललामभाललग्नकः शिवेति मंत्रमुच्चरन् कदा सुखी भवाम्यहम् || १३||

इदम् हि नित्यमेवमुक्तमुत्तमोत्तमं स्तवं पठन्स्मरन्ब्रुवन्नरो विशुद्धिमेतिसंततम् |
हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिंतनम् || १४||

फलस्तुति
पूजावसानसमये दशवक्त्रगीतं यः शंभुपूजनपरं पठति प्रदोषे |
तस्य स्थिरां रथगजेन्द्रतुरङ्गयुक्तां लक्ष्मीं सदैव सुमुखिं प्रददाति शंभुः || १५||

इति श्रीरावण- कृतम् शिव- ताण्डव- स्तोत्रम् सम्पूर्णम्

http://www.youtube.com/watch?v=H3JSSuxQ1AI

mp3 இங்கே கிடைக்கும் Shiva Tandava Stotram.mp3

6 comments:

எல் கே said...

பகிர்வுக்கு நன்றி

நசரேயன் said...

நீங்க டமில் பதிவர்ன்னு கேள்விபட்டேன்

Unknown said...

Please translate and post "Swarnamala Stotam". Adi Shankara has used all letters of Sanskrit in that stotra.

வால்பையன் said...

// சிவனாரை தியானிப்பவன் மோகமாயையில் இருந்து விடுபடுவான். //

மொதல்ல சிவனை மோகமாயையிலிருந்து வெளியே வரச்சொல்லுங்க!

இந்த பதிவை படிச்சு எனக்கு உடம்புல இருக்குற எல்லாம் சுழுக்கிச்சிக்கு!

Santhappanசாந்தப்பன் said...

Good Post!

Unknown said...

ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்

Post a Comment