இதுக்கும் ஸ்தலபுராணம் படிச்சாத்தான் புண்ணியம். இருந்தாலும் சாகித்ய அகாடமிக்காக கவிதை / கதை மட்டுமே எழுதுவது என்றாகி விட்ட பின், ஸ்தல புராணங்கள் எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன். என்ன நாஞ்சொல்லறது? சரிதானே...
காசிக்கு ஒப்பாகக் கருதப்படும் ஆறு ஸ்தலங்களில், நவக்ரஹ ஸ்தலமான புத ஸ்தலம், ஆதிசிதம்பரமான திருவெண்காட்டில் ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் (ஸ்வேத+ஆரண்ய+ஈஸ்வரர்) உடனுறை நாயகி ஸ்ரீ ப்ரம்மவித்யாம்பிகை-யின் பெயரே என் பெயர்க்காரணம். விதூஷ் என்று அறியப்பட, இங்கே இருக்கு ஏற்கனவே எழுதியது.
பாஸ்போர்ட் முதற்கொண்டு, "என் தங்கச்சி படிச்சவ" என்பதற்கென்று இருக்கும் அத்தாட்சிகளான சர்டிபிகேட் வரை எல்லாவற்றிலும் அதே பேர் இருப்பதால், அதே பேரில் ஜிமெயில் ஆரம்பித்தேன். கல்யாணம் ஆனதும் பெயர்மாற்ற போர்க்கொடிகள் பெரியோரால் தூக்கப்பட்டது, அப்போது அவர்களிடம் கேட்டது ... What's in Name? அதற்கான ப்ராசசஸ் எல்லாமே நீங்களே பண்ணித்தருவதா இருந்தால் ஓகே என்றேன். பேச்சு அதோடு முடிஞ்சு போனது. ;)
What's in Name? இன்றும் அதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கேன். ந்யூமராலஜிப்படி என் பேரை ssshhhrreevvvdddiiyyaaaa என்று மாற்றச் சொன்னால் ரொம்ப நேரம் கையெழுத்துப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டயிருக்கும் என்பதால், சோம்பேறித்தனத்தின் பேரில் இந்தப் பெயரையே தொடர்ந்து வைத்துக் கொண்டு சந்தோஷமாய் இருக்கிறேன்.
இந்த தொடர் பதிவை எழுதக் கூப்பிட்ட கோபிக்கு நன்றி. :)
இதைத் தொடர யாரையாவது அழைக்க வேண்டுமோ? யாரையெல்லாம் அழைக்கலாம்?
6 comments:
ஒரே நாள்ல ரெண்டு பதிவா?
/ ஸ்ரீ ப்ரம்மவித்யாம்பிகை//
ப்ரம்ம் ஒக்கடே
பரப் ப்ரம்மம் ஒக்கடே
//இதைத் தொடர யாரையாவது அழைக்க வேண்டுமோ? யாரையெல்லாம் அழைக்கலாம்?//
எறும்பு, இட்லி வடை, கூகிள்!
:))
What's in Name? அதற்கான ப்ராசசஸ் எல்லாமே நீங்களே பண்ணித்தருவதா இருந்தால் ஓகே என்றேன். பேச்சு அதோடு முடிஞ்சு போனது. ;)
i like it :))
\\இந்த தொடர் பதிவை எழுதக் கூப்பிட்ட கோபிக்கு நன்றி. :)\\
பிரபல பதிவர் கோபி என்பது விட்டுப் போய்விட்டது:-)
//ஸ்ரீப்ரம்மவித்யாம்பிகை//
இப்படியே கூட பேரு வெச்சிருந்துருக்கலாம் :-)))
//What's in Name?//
ரொம்ப கரெக்டு.. பேரை மாத்திட்டா நாம உடனே இன்னொருவர் ஆகிடுவோமா? :-)))
பொலிட்டிகல் கரெக்ட்னஸ்ன்னு ஒண்ணு இருக்குல்ல :))))
Post a Comment