அஸ்வத்தாமனின் நெற்றி வடு

இரவில்தான் தயாராகின்றன
இன்றையத் தலைப்புச் செய்திகள்

இரவில் நிகழ்பவை
செய்தியாளனுடன் உறங்குகின்றன
எதிர்சாலையில் உயிருடன் கொளுத்தப்படுகிறது
நாளைய செய்திக்கான மரணம்

நாளையத் தலைப்புச் செய்திகளில்
பீஷ்மனின் மரணம் -
திருதராஷ்டிரனுக்கு வாரிசு நூறு

யுகயுகமாய் நெற்றிவடு சுமந்து திரியும்
அஸ்வத்தாமன் நர்மதையாற்றங்கரையில்
அர்கியம் செலுத்தும் போது
உரைத்தது:
"நாளை இவ்வுலகம் நிச்சயம் அமைதி பெறும்"

7 comments:

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நாளை இவ்வுலகம் நிச்சயம் அமைதி பெறும்"

Nice...!

ராகவன் said...

அன்பு வித்யா,

இந்த பின்புலச் சேர்க்கையும், தலைப்பும் தான் கவிதையின் இயங்குதளம்.

அற்புதம் வித்யா. பாண்டித்யம்...!!

அன்புடன்
ராகவன்

சமுத்ரா said...

வித்தியாசமான சிந்தனை..நன்றி

Vidhoosh said...

நன்றி ப்ரணவம் ரவி

நன்றி ராகவன். :) மிகச் சரி. மகிழ்ச்சியாக இருக்கு.

நன்றி சமுத்ரா

ராஜ ராஜ ராஜன் said...

சிறப்பாயிருக்கிறது...

இன்றைய கவிதை said...

என்னத்தை சொல்ல?
கவிதை அருமை, மேடம்!

-கேயார்

இராஜராஜேஸ்வரி said...

"நாளை இவ்வுலகம் நிச்சயம் அமைதி பெறும்//
அமைதி பெற வாழ்த்துக்கள்.

Post a Comment