வெயில் ஆரம்பித்தாச்சு. கோடை வந்தாலே பல்வேறு தோல் நோய்கள் மற்றும் உடற்சூட்டு நோய்கள் உண்டாகும். கண் கட்டி பற்றி நமக்கு தெரிந்திருக்கும். அதிக உடற்சூட்டினால் கழுத்து, அக்குள், தொடை இடுக்குகள், உட்காரும் பகுதி போன்ற இடங்களில் ரத்தக் கட்டிகள் தோன்றி அவஸ்த்தை பட்டதுண்டா?
முதலில் தோல் வெளிர்சிவப்பாக, மென்மையாக ஆகி, கட்டியாக உருவாகி அதை சுற்றியுள்ள பகுதி முழுதும் எரிச்சலும் வலியும் வேதனையுமாக இருக்கும். இந்த இன்பெக்ஷனை நீக்க இயற்கையாக நம் உடலே அந்தக் கட்டியின் மீது செயல்படும், கட்டியில் கருப்பாக ஒரு முளை உண்டாக்கி இருக்கும், அதைச் சுற்றி சீழும் இரத்தமும் கோர்த்துக் கொள்ளும். இது பெரிதாக பெரிதாக நெறி கட்டிக் கொண்டு வலி தாங்காது. கட்டி உடையாமல் அமுங்கி விட்டால், மீண்டும் மீண்டும் அங்கேயே தோன்றிக் கொண்டே இருக்கும்.
பெரும்பாலும் வீட்டிலேயே எலுமிச்சையில் ஒரு துண்டம் எடுத்து கட்டி மேல் வைத்து துணியால் கட்டுவது, வேப்பிலை மஞ்சள் அரைத்து பூசுவது, வெல்லம்-மஞ்சள் குழைத்து போடுவது, போன்ற பாட்டி வைத்தியத்திலேயே கட்டி உடைந்து விடும். ஐ.ஜி.பெயின்ட் (Ichthammol Glycerin B.P.C.) என்ற சொலூஷனும் கை கொடுக்கும். எதுவாக இருந்தாலும் கொஞ்சம் soframycin ointment பேண்டேஜ் / சர்ஜிகல் பிளாஸ்டர் மற்றும் பஞ்சு கைவசம் எப்போதும் இருக்கட்டும். கட்டி உடைந்தால் ரத்தக் களரிதான் :(
இதையும் தவிர, கட்டிகள் அடிக்கடி தோன்றுவதாக இருந்தால் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் நலம். மருத்துவ ஆலோசனைப்படி antibiotic மருந்துகள் உட்கொள்வதும், கட்டி நீக்க மருத்துவ உதவி பெறுதலும் நலம்.
உடற்கட்டிகள் தோன்றாமல் இருக்க நிறையா தண்ணீர் குடிப்பது நல்லது. வெந்தயம் (எண்ணெய் விடாமல்) வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், நிறையா நீர் விட்ட மோரில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கலாம்.
எதுவுமே முடியலைனா )---( இப்படி ஒரு ஊன்றுகோலை செய்து வைத்துக் கொள்ளலாம்..
ரெண்டு வருஷம் முன் அவஸ்தைப்பட்டதன் பேரில் இந்தக் கொசுவத்தி எனக்கே ஒரு எச்சரிக்கையாக..
12 comments:
நெறைய மோர் குடிப்பது நல்லது. உடல் அதிகம் உஷ்ணம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
அந்த ஆஸ்துமா தொல்லை இப்பக் குறைஞ்சுடுச்சா? பரவால்லியா?
தலையில் தினம் நல்லெண்ணெய் வச்சுகிட்டாலும் உஷ்ணம் கட்டுப்படும்.
//கட்டி வருமா//
இல்லங்க.. கட்டாது.
-நசரேயன்
//அந்த ஆஸ்துமா தொல்லை இப்பக் குறைஞ்சுடுச்சா? பரவால்லியா?//
பரவால்ல குறைஞ்சு, ஆஸ்துமா கூடியிருக்கு.
//தலையில் தினம் நல்லெண்ணெய் வச்சுகிட்டாலும் உஷ்ணம் கட்டுப்படும்//
உஷ்ணம் கட்டுப்படும். நல்லெண்ணெய் கட்டாது.
-நசரேயன்
எல்.கே. நன்றிங்க.
ஹுசைன்னம்மா..நன்றிங்க. இப்போ ஆஸ்துமா தொல்லை இல்லை. அதான் ஒவ்வொரு தொல்லைகள் பற்றியும் பகிர்கிறேன். ஏதோ ஒரு சினிமாவில் விவேக் வரிசையா வியாதி சொல்பவரிடம் கேட்பாரே... அது போல கேட்டுராதீங்க.. :))
:)) பா.ரா அண்ணே.. கவுஜைதான் எழுதணும் உங்களுக்கு.. :))))
நிறையா தண்ணீர் குடிப்பது நல்லது. //
நிறையா தண்ணின்னா ஓட்டை க்ளாஸ்ல குடிக்கணுமாங்க?
//நிறையா நீர் விட்ட மோரில் //
Give me MORE!!
==
வெயில் காலத்தில் இளநீர் குடிப்பது, வெள்ளரி சாப்பிடுவது, நீர்மோர் மிக நல்லது!
ஹமாம் சோப் போட்டால் நல்லதாமே!!!!
என் மகளுக்கு இந்தியா வந்தவுடன் கட்டியோ கட்டிதான். லாக்டோ காலமைன் பூசிக்கிட்டு ஏஸியில் உக்கார்ந்தே விடுமுறை போயிரும்:(
டேக் கேர்.
ரொம்ப கஷ்டமான ஒரு உபத்திரவம்
தண்ணீர் தண்ணீர் தான் மருந்து
ஜேகே
தினமும் குளிச்சா கூட கட்டி வரதாமே...:)))
தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்
http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html
நன்றி ஷங்கர். :)
ஆமா துளசி அம்மா.. :(
ஆமா ஜே.கே.
நன்றி நாஞ்சில் பிரதாப் :))
எழுதிட்டே இருக்கேன் கோபி. :)
இளநீர், மோர் நிறைய குடிங்க :-)
Post a Comment