ரேடியோ என்றறியப்படும் வானொலி



பிபிஎல் சான்யோ என்ற சிவப்பு டேப் ரிகார்டர் கம் ரேடியோ வாங்குவதையே வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருந்தேன்.... :))

கல்யாணம் ஆன புதிதில் பாஸ்கர், "உனக்கு என்ன வேணும்" என்று முதன்முதலில் கேட்ட போது நான் கேட்டது ரேடியோ. இப்போதும் அந்த ரேடியோ சமையலறையில் ஒலிக்கும்.

ஆகாசவாணி. செய்திகள் வாசிப்பது.... சரோஜ் நாராயணசாமி, எல்.ஆர்.சாமி, முதல்
"ஆயுபோவன்" என்ற இலங்கை வானொலியின் வாழ்த்துரையைக் கேட்டுச் சிரித்த காலங்களும், இது இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனம்.... கே.எஸ். ராஜா, நேயர்கள் கேட்டு கொண்டிருப்பது இலங்கை வானொலி' என்று எஸ்.பி.மயில்வாகனன்-னின் குரலில் ஆரம்பித்து, குறில் நெடில் பயிற்றுவித்த பி.ஹெச்.அப்துல் ஹமீத், எஸ்.ராஜேஸ்வரி மற்றும் யாழ் சுதாகரின் அந்த சிங்களத் தமிழுக்காகவே ரேடியோ கேட்டதும்... பாட்டே இல்லாம சினிமா வசனங்கள் மட்டும் என ரேடியோ தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறோம். இரவின் மடியில், நினைவு கொடுக்கிறோம் (??), போன்ற நிகழ்ச்சிகளும் hand-picked பாடல்களோடு ரொம்பவும் அற்புதமாகத் தொகுக்கப்பட்டிருக்கும். அதே போல "ஆம் - இல்லை" நிகழ்ச்சி...

சென்னையில் இலங்கை வானொலி அலைவரிசை கிட்டுவதில்லை.

ஆத்தோரம் மணலெடுத்து,
அழகழகா வீடு கட்டி,
தோட்டமிட்டுச் செடிவளர்த்து
ஜோராகக் குடியிருப்போம்.
பத்துவிரல் மோதிரமாம்
பவழமணி மாலைகளாம்,
எத்தனையோ கனவுகளாம்
எவ்வளவோ ஆசைகளாம்.”

இங்கிட்டு வந்தா இங்கிட்டு வந்தா
பக்கத்து வீடு பொம்மி
அவ கொண்டு வந்தா கொண்டு வந்தா
லாலா கடை பர்பி
அவளைப் பெத்த அப்பா பாரு
சிலுக்கு சட்டையிலே
என்னைப் பெத்த அப்பா நீயோ
கிழிஞ்ச சட்டையிலே...

"சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ
வாடா மருமகா என் அ-ள-கு மன்மதா
பள்ளிக்குத் தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை அங்கே படிக்கவிட்டுக் கெடாதே
ஊர் சுத்தும் பொடியரெல்லாம்
கன்னியரைக் கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ?
ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
ஒழுக்கமில்லாக் கன்னியென்றா நினைத்துவிட்டாய் என் மகளை
இடுப்பொடியத் தந்திடுவேனே நான்
ஏனோ மாமி மேலே மேலே துள்ளுறியளே
பாரெனை மாமி படுகுழியில் தள்ளுறியளே
தேனெணை மாமி அவளெனக்கு தெவிட்டாத சுகமெனக்கு
பாரெனை மாமி கட்டுகிறேன் தாலியே. (சின்ன மாமியே) "

"பில்லல்லாரா... ம் ம் ம்ம் ம்ம் ... பாப்பல்லாரா... ரேபதி பாரதி பௌவுல்லாரா.. "

இந்தப் பாட்டை எத்தனை தரம் நாமெல்லாம் ரேடியோவில் கேட்டிருப்போம். ரேடியோ அண்ணா-வின் குழந்தைக் கதைகளைக் கேட்டுக் கேட்டே எனக்கும் கதையை வாசித்துக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

சமீபத்தில் அதேபோல மிகவும் தெளிவான உச்சரிப்புடன் போன வருடம் "அஜய்" என்ற வசீகர-மாயக்குரலான் ஏதோ ஒரு ரேடியோவில் வாசிப்பதைக் கேட்டேன்.

கிராமத்தில் வசிக்கும் இரண்டு குழந்தைகள் பற்றிய கதை. ஒரே பள்ளியில் பயிலும் இரு நண்பர்கள். ஒருவன் ஹோம்வொர்க் நோட்டுப் புத்தகத்தை நண்பன் வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விடுவான். அந்த நண்பன் பக்கத்து ஊரில் இருக்கும் அந்த சிறுவனின் வீட்டைத் தேடிச் சென்று புத்தகத்தைக் கொடுப்பதுதான் கதை.

என்ன அற்புதமான குரல்வளம். இன்றும் அதே நேரத்தில் ரேடியோவைத் திருப்பித் திருப்பி வைத்துப் பார்க்கிறேன். ம்ம்ஹூம்... யாருக்கேனும் தெரிந்தால் பகிரவும்.

நம்ம நாற்றாங்கால் இணையப் பக்கத்தில் பனைமரமே... குழந்தைப் பாடலுக்கு Col.திவாகர் என்பவர் "ஜகம் புகழும்" பாட்டை பற்றிக் கேட்டிருந்தார். அதனால் கிளம்பிய நினைவலைகள்.

5 comments:

Paleo God said...

பத்தாவது படிக்கும்போது சென்னை வானொலில இஸ்கோல்லேர்ந்து போய் பேசினது ஞாபகத்துக்கு வந்திடுச்சி!


இப்பல்லாம் ரேடியோன்னாலே அலர்ஜி!:))

Unknown said...

நானும் ஒரு ரேடியோ வாங்கனும்...
எங்க கிடைக்கும் சொல்லுங்க.

வல்லிசிம்ஹன் said...

எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள் வித்யா. எனக்கும் திருச்சி வானொலி நாடகம் ஒன்றுக்காக ரயில் போனதும், மதியம்பாப்பா மலரில் அந்த நாடகம் ஒலி பரப்பானதைக் கேட்டதும் மன நிறைந்த நினைவு. தொலைக்காட்ட்சி வரும் வரையில் நானும் வானொலியும் பிரிந்ததில்லை.
சமையல்றையில் கூட இருக்கும்.
இரவு தூங்கும் வரை கேட்கப்படும். இனிய நாட்கள். மிக இசையுடன் கூடிய கொசுவத்தி.

Vijay said...

ரொம்ப கெளறி விட்டுட்டீங்க. போங்க. வாலிபத்தின் விளிம்பின் ஆரம்ப நாட்களின் இனம் புரியாத மனம் பிசையும் மாலை/பின் இரவு நேரங்களின் இனிய் துணைவனல்லவா வானொலி. இன்றும் பழைய பாடல்கள், புதிய பாடல்களை விட மனத்தில் நிற்க வானொலியின் பயன்பாடே காரணம் அல்லவா? தொலைக்காட்சி பெட்டி வ்ந்த பிறகு வரிகளை விட காட்சிகள் தானே முன் நிற்க்கின்றன. ஆனாலும் ரோம்ம்ப தமிழ்ல எழுதிட்டேனோ? சரி லூசுல விடுங்க. எப்பனா இப்புடித் தான் ஆகி போகுது....ம்ம்ம். ம்..ஆமா.. நான் மெயில் போட்டதுக்கு பதிலே இல்லியே... ஏன்?

நந்தாகுமாரன் said...

hmmm ... பிபிஎல் சான்யோ என்ற ”கருப்பு” டேப் ரிகார்டர் கம் ரேடியோ ...

Post a Comment