பேர்ட் ஹவுசில் வாழும் மைனா - கொஞ்சம் பேசிக்கிறேன்


நன்றி ராஜா-ண்ணே, லாவண்யா.

நன்றி ராகவன். ஐயோ, அந்தக் காம்போஜியை ரசிக்காம போயிடுவாங்களோன்னு நினைச்சுகிட்டேதான் இந்தக் கவிதையை டிராஃப்டில் பதுக்கி இருந்தேன்.

இன்னிக்கு காலங்கார்த்தால மூணு மணிக்கு முகிலன் பஸ்சுல @விதூஷ் இப்பிடி புரியிற மாதிரி கவிதையெல்லாம் எப்போ எழுதுவீங்க? அப்டீன்னு கேட்டிருந்தார். உடனே இந்தக் கவிதைதான் ஏனோ ஞாபகம் வந்தது.

மரி மரி நின்னே தெரியாமல் இந்தக் கவிதை சுகிக்காது. :)) ராகவன் கரெக்ட்டா காம்போஜிய குறிப்பிட்டது wow, someone read என்ற மகிழ்ச்சி.

ராகவன் சொன்னா மாதிரி சாரமதி (சாருமதி இல்லை..) ராகத்தில் பாடும்போது கண்ணீரோடு கெஞ்சும் த்வனியில் இசைக்கும். (youtube லிங்கில் இசையரசர் கே.ஜே.யேசுதாஸ் பாடினது)

காம்போஜியில் மரி மரி நின்னே... பாடகர் திரு பாலமுரளிகிருஷ்ணா-வின் தெய்வக் குரலில்


காம்போஜியின் கம்பீரம் பாரதப்பெண்மையின் கம்பீரத்தை ஒத்தது. மென்மையும் அதட்டலுமாய், ராமனை நோக்கி தியாகராஜர் demand செய்யும் பாடல், மரி மரி நின்னே, யப்பா... பாடக் கேட்டுதான் அனுபவிக்கணும். இப்படிப் பாடினால், இறைவனா இருந்தாலும், வந்துதானே ஆகணும்.

மரி மரி நின்னே - பாடல் வரிகளும் அர்த்தமும்....

பல்லவி
மரி மரி நின்னே மொரலிட3 நீ மனஸுன த3ய ராது3

அனுபல்லவி
கரி மொர வினி ஸரகு3ன சன நீகு
காரணமேமி ஸர்வாந்தர்யாமி (மரி)

சரணம்
கருணதோ த்4ருவுனிகெது3ட நில்சின கத2 வின்னானய்ய
ஸுர ரிபு தனயுனிகை நர ம்ரு2க3மௌ ஸூசனலேமய்ய
1மரசியுன்ன வன சருனி ப்3ரோசின மஹிம தெலுபவய்ய
த4ரனு வெலயு த்யாக3ராஜ ஸன்னுத தரமு காதி3க 2நே வினனய்ய (மரி)

அர்த்தம்:

மீண்டும் மீண்டும் உன்னிடமே முறையிடுகிறேன். உனது மனதினில் இரக்கம் வராதா?

எல்லார் மனதிலும் இருப்பவனே! (கஜேந்திரன்) யானையின் முறையீட்டினைக் கேட்டு விரைந்து சென்றாயே. காரணமென்ன?

கருணையுடன் நீ துருவனின் முன் நின்ற கதை கேட்டுள்ளேனய்யா!
தேவர்களின் பகைவனின் மகனுக்கென நரசிங்கமாகிய ரகசியம் என்னய்யா?
(வாக்கு) மறந்திருந்த வானரத்தைக் காத்தது ஏன் என்று கூறுமைய்யா;
இனியும் தியாகராஜனுக்கு இரங்காது நீ இருப்பது நல்லதர்கில்லை ஐயா.

நன்றி: http://translationsofsomesongsofcarnticmusic.blogspot.com/2010/03/mari-mari-ninne-moralida-nee.html

6 comments:

R. Gopi said...

அப்பாடி, ரொம்ப நாளைக்கப்புறம் உருப்படியா ஒரு பதிவு:-)

ராகவன் said...

அன்பு வித்யா,

சாருமதின்னு சொன்னது, என்னோட பழைய தமிழ் மிஸ்??!! ஞாபகமாத்தான்... சந்தோஷமா இருக்கு... ஒரு பின்னூட்டங்கள் பதிவா வளருவது அழகு...

அதும் உங்களப்போல ஒரு வெர்ஸடாலிட்டி எழுத்து... எனக்கு வாய்க்க... முள்படுக்கையிலே கோவிந்தான்னு கிடக்கணும்...

நான் தியாகராஜ் கிருதிய ஒரு காலத்துல தமிழ்”படுத்தி” கிட்டு இருந்தேன்... ரொம்ப சந்தோஷம்... ஒத்த இசை செரிவு தானே எப்போதும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

ஸூசனலேமய்யா.... பார்த்ததில்லைய்யான்னு தானே அர்த்தம்...
ரகசியம் என்னய்யாவா? என் தெலுங்கு அவ்வளவு தான்... வித்யா...

அன்புடன்
ராகவன்

நேசமித்ரன் said...

பறவைகளின் மொழி அறிகிலேன்
இதத்தின் ருசி மஜ்ஜைகளில் சிவப்பூற
வைத்துலவும் ரோமாஞ்சனமும்
நான் சொற்களின் யாசகன் :)

Vijay said...

அப்டியே பேசிக்கிட்டே இருங்க.... ஒரு எட்டு தான் எங்க வீடு போய்ட்டு வந்துடறேன்.... (புரியலன்னா இப்பிடிதான் சமாளிச்சிக்கிறது....)

Unknown said...

விருப்பமிருந்தால் யூடுப்-இல் மதுரை சோமு பாடிய 'என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் ..' கேட்டுப் பாருங்க. பாதியிலேயே அழுவது தெரியும். அந்த சமயத்தில் லால்குடி அழகா அதை வயலினில் சமாளிப்பார் பாருங்க. உருக வேண்டியது தான். அருணா சாய்ராம் கூட இதே பாட்டப் பாடியிருக்காங்க.
Sethu(S)

Post a Comment