சொல்லுதல் யார்க்கும் எளிய


சரியாய் ஒரு வருடம் முன்பு, ஒரு சக பதிவர் ஒருவர் ரொம்ப வீரமான பெண்ணியக் கவிதைகள் எழுதி வந்தார். ஒரு நிலையில் என்னை "நடுநிலைவாத கள்ளத்தனத்தை"யும் விமர்சித்து ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார். அவர் அன்றைய நிலையில் திருமணப் பொறுப்புகளுக்குள்ளாகாத இளைஞர் என்பதாலும், கவிதைகள் எழுதுவதைத் தாண்டியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவரால் செய்ய இயலும் என்று கூறியதாலும், அவரிடம் வார இறுதிகளில் underprivileged but deserving குழந்தைகளுக்கு நகம் வெட்டுதல் முதற்கொண்டு பாடம் பயிற்றுவித்தல் வரையான சேவைகளைச் செய்ய ஒரு மணிநேரம் ஒதுக்க முடியுமா என்று என்று கோரிக்கை விடுத்தேன். அதுகுறித்து இன்று வரையும் எந்தவொரு பதிலும் இல்லை.

அதேபோல ஒருவர் பிற்படுத்தப் பட்டவர் என்பதால் என்றோ நிராகரிக்கப்படுவதும், அதே போல பிராமணர் / இன்ன ஜாதிக்காரர் என்பதற்காக நிராகரிக்கப்படுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. அப்படியெனில், நம் பேச்சுக்களும் செயல்களும் சமூக சமன்பாடு குறித்ததாக இல்லையா? தானும் முன்னேறாமல் பிறரையும் முன்னேற விடாமல் இன்னும் பெண்ணியமும் சாதியமும் பேசிப் பேசி காலவிரயம் செய்து நேரம் தீர்ப்பதை விட, முடிந்தால் ஒரேயொருவர் வாழ்வில் அத்தகைய மாற்றம் கொண்டு வர முடியும் என்றால் மட்டுமே நாம் ஏதோ ஒரு நல்ல காரியம் செய்ததாக ஆகும் என்பதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறேன்.

யாரும் யாரையும் அல்லது எதையும் முற்றிலும் மாற்றிவிட முடிவதில்லை. ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் இருக்க வேண்டியதாகிறது. அப்படி மாறுபவர் ஒன்றை விடுத்து மற்றொன்றைப் பற்றிக் கொள்கிறார்களே தவிர, "அடையாளம்" ஏதுமின்றி இருப்பதை விரும்புவதில்லை என்பது என் புரிதல்.

எல்லாவற்றையும் ஏன் ஜாதி/மத ரீதியிலேயே அணுகி, விவாதித்து, பிரித்துப் பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை?

வர்ணாஸ்ரமம் என்பது செய்யுந் தொழில் ரீதியாக அமைக்கப் பட்டது. தற்போது "தமிழன்" என்று அடையாளப் படுத்தப்படும் முயற்சியும் கூட மொழி ரீதியான அடையாளம்தானே, தொழில்ரீதியும் மொழிரீதியும் எந்த விதத்தில் வேறுபடுகின்றன? எப்படியோ ஒரு விதமாக பிரித்து ஆள நினைப்பவர்களுக்கு வேலையை இலகுவாக்குகிறோம் இல்லையோ? பின்னாளில் ஏதோ ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் இதே போன்றதொரு குற்றச்சாட்டுக்கு வழிவகுக்காதா?

பார்ப்பனியம் / வர்ணாஸ்ரமம் என்பது நான் புரிந்து கொண்ட வரையில், பண பலம் பெற்றவன், பேராசை பெற்றவர்களைக் கொண்டு, இல்லாதவனை ஒடுக்குதல் என்பதே.

தேவதாசி முறை ஒழிந்தே விட்டது என்றே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, ரஞ்சிதாக்கள் அம்பலப்படுகிறார்கள். ஈறு தெரிய சிரித்துக் கொண்டு நடமாட, பின்னணியில் சிலரின் பேராசையும், பணபலத்தையும் தவிர என்ன இருக்க முடியும்?

10 comments:

உயிரோடை said...

விதூஷ் நல்ல பகிர்வு. இதுக்கும் எதிர்வினை இருக்கும் பார்த்துக்கோங்க.

//யாரும் யாரையும் அல்லது எதையும் முற்றிலும் மாற்றிவிட முடிவதில்லை.//

முற்றிலும் என்னங்க கொஞ்சம் கூட மாற்ற முடியாது இது தான் இனிக்கும் உண்மை.

கட்டி குடுத்த சோறும் சொல்லி குடுத்த சொல்லும் எத்தனை நாளைக்கு என்பார் என் அன்னை.

Vidhoosh said...

நன்றி லாவண்யா.

:) எதிர்வினைகளைப் பற்றிய கவலை இல்லை. நேர்மையான விவாதமாய் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் கட்டாயம் பதில் சொல்லும் பொறுமை உண்டு. விதண்டாவாதம் என்றால் இருக்கவே இருக்கு மௌனம் எனும் ஆயுதம். வினை விதைத்தவரே வினையறுப்பார்.

ஹுஸைனம்மா said...

பதிவு எதைக் குறித்து என்று தெரியவில்லை. என்றாலும்,

//தற்போது "தமிழன்" என்று அடையாளப் படுத்தப்படும் முயற்சியும் கூட மொழி ரீதியான அடையாளம்தானே ..... எப்படியோ ஒரு விதமாக பிரித்து ஆள நினைப்பவர்களுக்கு வேலையை இலகுவாக்குகிறோம் இல்லையோ? //

நல்ல கேள்வி. எங்கே சென்றாலும், ஏதாவது ஒருவிதத்தில் குழுவாகவே இருக்கிறோம் எல்லாரும். வெளிநாடு வந்தால் இந்தியர்கள், இந்தியர்கள் விழாக்களில் தமிழர்கள், தமிழர்களின் விழாக்களில் பெண்கள்... இப்படி...

//வினை விதைத்தவரே வினையறுப்பார்// நிச்சயமாய்.

ராஜ நடராஜன் said...

விவாதித்து பயனடையும் எழுத்தின் சாரம்!வரவேற்கிறேன்.

சொல்லுதலும் எவர்க்கும் எளிய அல்ல!

வல்லிசிம்ஹன் said...

நல்ல பகிர்வு வித்யா. என்ன காரணத்துக்காக என்று தான் புரியவில்லை. உங்கள் பேச்சின் உண்மை யாருக்கு விளங்கும்.

Thenammai Lakshmanan said...

எதன் தொடர்ச்சி இந்த இடுகை என புரியாவி்ட்டாலும் சொல்ல நினைத்தது சரிதான்..

சாதி இரண்டொழிய வேறில்லை..
பணம் படைத்தோர்., பணம் இல்லாதோர்.

நசரேயன் said...

//ஏன் ஜாதி/மத ரீதியிலேயே அணுகி, விவாதித்து, பிரித்துப் பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை//

ரெம்ப நல்லது.. எனக்கும் புரியலை

Vijay said...
This comment has been removed by the author.
Vidhoosh said...

நன்றி ஹுசைனம்மா.. எதைக் குறித்தும் இல்லை. பகிரவேண்டும் என்று தோன்றியதைப் பகிர்ந்தேன். :)

நன்றி ராஜ நடராஜன். மிகவும் சரி. :)

நன்றி வல்லியம்மா. அப்படியேதும் குறிப்பிடும்படி இல்லை. தற்போது இருக்கும் பொதுக்கருத்துக்கள் மீதான என் கருத்து. தோன்றியதைப் பகிர்ந்தேன் அவ்வளவே. :)

தேன்ஸ். :) நன்றி. ரொம்ப ரொம்ப ரொம்ப சரி. :)

நசரேயன்: நன்றிங்க. புரியாததைப் புரியும் முயற்சி :))

Vijay said...

உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். பதில் இல்லை. :(

Post a Comment