நிஷப்த் (2007) - ஹிந்தி திரைப்படம்


ராம்கோபால் வர்மாவின் சர்கார் திரைப்படத்துக்கு அப்புறம் நான் ரசித்த மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று நிஷப்த். ரொம்ப ரொம்ப சென்சிடிவ் நாட் கொண்ட காதல் கதை, அறுபது வயதுக் கிழவனுக்கும் பதினெட்டு வயதுப் பெண்ணுக்கும். அஹ்...?!

விடுமுறைக்கு வந்திருக்கும் மகளும் அவளது தோழியும் என... அமிதாப், ரேவதி என்ற ஜாமபவான் நடிகர்களுடன் ஜியாகான். தன் தோழியுடன் தன் தந்தைக்கு தொடர்பு இருக்கிறது என்று தெரியவந்ததும், ஷ்ரத்தா-வின் ரியாக்ஷன்ஸ் ... சூபெர்ப். முழு க்ரூ-வுமே அற்புதமான கலைஞர்களுடன் ஆபத்தான கதையை மிகக் கவனமாக கையாண்டு, இட்ஸ் எ ட்ரீட் டு வாச்.

கணவனும்-மகளையொத்த பெண்ணும் என்று ரேவதியும், தந்தையும் தோழியும் என்று மகளும், முரணான காதலில் அமிதாபும் என இருதலைஎறும்பாகத் தவிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அனாவசிய வசனங்கள் கூச்சல்கள், காட்டுக் கத்தல்கள் என்று எதுவும் இல்லாமலேயே கதையை கனமாக்கிக் கொண்டே போயிருக்கிறார்கள்.

(28/4/2009)

3 comments:

இராமசாமி said...

That's a good movie.. Cinematography is awesome in that movie ....

நசரேயன் said...

ரெண்டு கோடி கொடுத்தாலும் படம் பார்க்கமாட்டேன்

இன்றைய கவிதை said...

நல்ல விமர்சனம் , இது சீனிகம் படத்தை போல உள்ளது அதிலும் அமிதாப் தான் , இந்த படத்தையும் பார்த்து விட்டு மீண்டும் பதில் பதிகிறேன்

நன்றி
ஜேகே

Post a Comment