பேர்டு ஹவுஸில் வாழும் மைனா


காற்றோடு உரையாடிக்கொண்டே
தீர்வதில்லை வாழ்வு
இன்னும் சில தத்தை மொழி
பேசவும் பழக்கியிருக்கிறார்கள்

மேகங்கள் பற்றிப் பேசும் போதெல்லாம் மட்டும்
பூக்களில் உட்காரும் ஈக்களைப் பார்க்கும்

எச்சங்கள் நிரம்பிய கூட்டைச் சுத்தம் செய்யும் போது கூட
இன்னொரு கூட்டுக்குத்தான் மாற முடிகிறது

சாதாரணமாக அக்கா-வென்றே கூவும்
பேர்டு ஹவுஸில் வாழும் மைனா
மௌனமாயிருக்கும் போது மட்டும்தான்
காம்போஜி ராகத்தில் "மரி மரி நின்னே"
பாடுவாள் அக்கா

3 comments:

பா.ராஜாராம் said...

superb sago!!

ராகவன் said...

அன்பு வித்யா,

அருமையான கவிதை... இது!

சாருமதியில் கூட நல்லாதான் இருக்கும் மரி மரி நின்னே... காம்போஜி என்று சொன்னது கவிதையின் முகம்.

அன்புடன்
ராகவன்

உயிரோடை said...

நல்ல கவிதை வித்யா

Post a Comment