ஏகலைவன் பேசுகிறேன்


ஒருவேளை என்னுயிர் பெற்றிருந்தால்
கட்டைவிரல்களற்ற என் வம்சங்கள் வளர்ந்திருக்காது
என் கடமைகளைப் பயிற்றுவித்த
குருதட்சிணைக்கான உங்கள் தர்மங்கள் குறித்த கவலையுண்டெனக்கு என
காலங்காலமாய் பணிவுடன்
என் ஆச்சாரியர் துரோணருக்கு ஒரு கடிதம் எழுதும் ஆவலோடு
கட்டை விரலற்ற ஏகலைவன் பேசுகிறேன்.

0 comments:

Post a Comment