நிற்பனவும் நடப்பனவும் போல
வெறும் காட்சிப் பொருளுக்கு
ஆகிப் போகும் உறுப்புக்கள்
கடந்து போகும் பெண்களின்
மேல் சட்டை தாண்டி
ஊடுருவாத கண்கள் கொண்ட
கல் எறிவோர் வீடுகளில்
மரணமில்லை போலும்
எல்லைகள் நிறுவும் சிறுநீர்
கழிப்பறை தாண்டிய நிர்வாணம்
உயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை; ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்; பயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்; வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம், மேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்; எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் ---பாரதி----
1 comments:
நல்ல கவிதை.
Post a Comment