ழ - ஃபுல்


வெள்ளி மதியம்:

பீட்டர்ஸ் ரோடு சரவணா வேணாம்பா சீக்கிரம் கிளம்பச் சொல்வான். போறத்துக்கு சாப்பிட்டுட்டு இருக்கும் போதே பக்கத்தில் யாராவது வந்து அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்ங்கரா மாதிரியே ஒரு லுக் விட்டுட்டு நாம் சாப்பிடும் ஒவ்வொரு ஸ்பூன் ஃபலூடாவுக்கும் "ம்ச்" கொட்டிக் கொண்டே சுவாரசியத்தைக் கெடுத்து விடுவார்கள். அதுவும் தவிர, எங்க ஊர்ல கோரோஜனை வயல் இருந்துதோ என்னவோ, எங்க எல்லாருக்குமே குரல் கொஞ்சம் பெரிசுதான், சிரிப்பும் கொஞ்சம் அதிரடியாகத்தான் இருக்கும். இதெல்லாம் பப்ளிக் ஹோட்டல் மாடல்களில் ஒத்து வராதேன்னு ஒரே குழப்பம்.

வெங்கி வரமாட்டான் போலருக்கு, பாலாஜிக்கு அடையார் திருவான்மியூர் மட்டும்தான் சென்னையில் தெரியுமாம், அபர்ணாவுக்கு எங்கியா இருந்தாலும் பரவால்லை, பவானி அங்கியேதானே இருக்கா.. எனக்கு வீடு ஷிஃப்டிங், குழந்தைக்கு வேற ஜுரமாயிருக்கு அதுனால ஏழு மணிக்கு மேலே கண்டின்யூ பண்ண மாட்டேன்..

"வத்ஸா.. கொஞ்சம் மூச்சு விடுப்பா..."

"என்னால முடியாது, நீயே எல்லாரோடும் கோஆர்டிநேட் பண்ணு"

"ஒகே"

வெள்ளி மாலை:

"" வா...

"அடையாரு எல்.பி ரோடு தெரியும்ல"

"இந்த மெயின் ரோடு எங்க இருக்கு பாஸ்"

"அந்த முருகன் ஸ்டோர் பாத்ர கடை இருக்கோல்யோ, அதுக்கு நேர் ரோடு"

'இந்திரா நகர் ஜாவா க்ரீன் பக்கமா"

"இல்ல, அதுக்கும் பாரலல் ரோடு... பாரத் சீனியர் செகண்டரி ஸ்கூல்னு கேட்டால் தெரியும். வாசல்ல ஒரு ஐயனார் சிலை இருக்கும்... டெர்ரகோட்டா. பவண்டோ, கோலி சோடா டீக்கடை அயிட்டம் எல்லாம் கிடைக்கும்.."

தாங்க்ஸ் வித்யா (scribblings blogger)
===================================
சனிக்கிழமை காலை:
நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு எங்க ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கெட்-டு-கெதர். ழ கஃபேல மீட் பண்ணறோம்.. மேட்ச் ரெகார்ட் பண்ணிக்கலாம். வரீங்களா..

இல்லை. எனக்கு அவ்வளவா கலகலன்னு பேசிப் பழக்கமில்லை.

பரவால்லைங்க.. நீங்க பேசாம இருந்தாலே போதும்..

விட்றேன்..

என் ஃப்ரெண்ட்ஸ்ல பொண்ணுங்க மட்டும் கொஞ்சம் அழகா இருப்பாங்க..

உலகத்திலேயே நான் பார்த்த ஒரே அழகான பொண்ணு நம்ம பொண்ணுதான்... #அவ்வ்வ்... # பொண்ணைப் பெத்தவன் தொல்லை

அம்மா. ஹோலிக்கு பாட்டி வீட்டுக்கே போறேன்..

ஆகா.. ரைட்டு...
===============
ஞாயிறு காலை:

"சாப்பிட ஒரு மணிக்கு வந்துடறேன். பை... ஏழு மணிக்குள் வந்துடுவேன். வேணும்னா டின்னர் அங்கேயே ஜாயின் பண்ணிக்கலாம். சரியா "

பாஸ்கர் தலையாட்டல்.

ஒரு மணிக்கு கரெக்டா நாலைஞ்சு என்கொயரிக்கு பேரென்ட்ஸ் வருதல். சரி ஒகே.. என வழக்கமான விவரணைகள் எல்லாம் பண்ணி அனுப்பி விட்டு பார்த்தால், மணி மூணேகால். அவ்வ்.. லஞ்ச் அவ்ளோதான் என்று முடிவு கட்டி விட்டு, ஜில்லுனு ஒரு லஸ்ஸி குடிச்சுட்டு கிளம்பியாச்சு. தர்ஷிணி மேலெல்லாம் கலர்மயமாய் வந்து நிற்கிறாள். சரி அவளையும் விட்டுவிட்டுதான் போகணும் போலருக்கு

கரெக்டா மூணு அம்பத்தஞ்சு. ழ வாசலில் தனியாய்.

அபர்ணா எங்கிருக்க

இதோ பஸ்ஸில் டெபோ வந்தாச்சு..

எப்படி வரணும்

முருகன் பாத்ரக் கடைக்கு நேர் ரோடு..

யாரும் வந்திருக்காங்க?

நான்தான் # அவ்வ்...

=========
நாலே கால்:
ஏய் ஃபோட்டோகிராபர்.. எங்கே இருக்க...

இதோ பாதி வழில வண்டிய நிறுத்திட்டு பேசிண்டு இருக்கேன்

வெங்கி.. எதுக்கு இந்த பொய்யி.. பாத்ரூம்ல அப்படி ஒரு எக்கோ கேக்குது..

இல்ல ஹெல்மெட்டு.. இதோ வந்துட்டேன்.. ஹி ஹி ஹெ ஹெ
======================
டீக்கடை மெனுவில் - கும்பகோணம் காஃபி, ரஸ்க், கமர்கட், பொரி உருண்டை, நிலக்கடலை இன்னொரு அயிட்டம் ஏதோ இருந்தது, நான் சாப்பிடாததால் யாரோ சாப்ட்டிடாங்க. என்னன்னு மறந்து போச்சு. ஆர்டர் செய்து கொண்டு பிங்க் ரூம் தேர்ந்தெடுத்தேன். அப்படி கொஞ்சம் தரையில் உக்காந்து பேசலாமேன்னு நினைச்சா, யாராவது வந்தாத்தானே. எங்க வீட்டில் நான் குடிப்பது போலவே மக் தளும்ப காஃப்பியை ருசித்து விட்டு கையில் கொஞ்சம் கடலையை அள்ளிக் கொண்டு ஃப்ளோர் மேனேஜர் எட்வர்ட் கூட ழ உள்ளே போய் சுற்றி பார்த்தல். எட்வர்ட்-டுடன் பேசிக் கொண்டிருத்தல்.

முக்கால் மணி நேரம். பாவம் எட்வர்ட். மண்பானையில் குட்டிக் குட்டியாய் துளைகள் போட்டு ஸ்பீக்கர் செட் பண்ணி வைத்திருக்காங்க. ஃபர்னிச்சர் எல்லாம் ராயப்பேட்டை ரைட்டு சைட் "ஆண்டிக்" திறந்தவெளிக் கடைகளில் வாங்கி ரெனவேட் பண்ணி இருக்காங்க.

ஒரு பரமபத ரூம். அடுத்தது கேரளா போட் ஹவுஸ் மாடலில் ஒரு ரூம். அதாவது ஃபர்னிசர்கள் மற்றும் செட்டிங் அமைப்பு. அப்புறம் சினிமா கதை டிஸ்கஷன் ரூம் ஒன்று இருந்தது. நான் அடம் பண்ணி ஹீரோயினி சேரில்தான் உக்காந்தேன். :))

பழைய வீ.ஸி.ஆர் டேப்புக்களைப் பார்க்கவும் ஒரு ரூம் இருக்கு. உங்க அம்மா அப்பா கல்யாண வீடியோவெல்லாம் பூஞ்சகாளான் வராம இருந்தால் கொண்டு போயி பார்க்கலாம்.

அடுத்ததும் ஒரு மூவி ரூம்தான். உங்கள் நண்பர்களோடு சினிமா பார்க்கலாம் நிம்மதியாக. ஆக்சுவலி எனக்கு ஏற்ற இடம் இது. :)

பின்னால் மூங்கில்களை அடுக்கி, அந்த பச்சை கலர் வலைத்துணியை விரித்து ஒரு சிட் அவுட் போல பண்ணிருக்காங்க. ரொம்ப அழகான இடம் அது. அங்க மட்டும் ஏ.சி. இல்லை.

இடத்துக்கு வாடகை இல்லை. ஆனால் ஸ்நாக்ஸ், தண்ணீர் மற்றும் பானங்களுக்கு மட்டும் டாரிஃப் கார்டு. அதுவும் கூட நாமினலாகத்தான் இருக்கு. கும்பகோணம் காஃபி, ரஸ்க், கமர்கட், பொரி உருண்டை, நிலக்கடலை இன்னொரு அயிட்டம் ஏதோ இருந்தது, இந்த டீக்கடை மெனு ரூ.100.

அவ்ளோதான் ழ - ஃபுல்தான் இல்லையா?

அபர்ணா பையனுடன் வந்து என்னை தேடுகிறாள். :)) யப்பா ஒரு வழியாய்..

வத்ஸன் வந்தாச்சு. வெங்கியிம் ஒரு வழியாய் வந்தாச்சு. பாவம் கிண்டிலேர்ந்து அடையார், அதுவும் வோர்ல்ட் கப் நடக்கும் மதியான நேரத்தில், சொந்த யமஹாவில் வர முக்கால் மணி நேரம் ஆயிருக்கு... நித்யாவை அவள் கணவர் பார்த்தா "தோ இங்கதான் இருக்கு ழ சட்டுன்னு இறங்கி போ" சொல்லிட்டு அவள் உள்ள வந்தாளா இல்லியான்னு கூட பார்க்காம டெண்டுல்கர் அவுட் ஆரத்தை பார்க்க போயாச்சு.. இப்படியே வந்தாச்சு எல்லாரும்.

அதுவரைக்கும் கம்ம்னு ஹான்டட் ஹவுஸ் மாதிரி இருந்தது ழ. நாங்கள் பிங்க் ரூம்-முக்குள் போயி திண்டில் சாய்ஞ்சு கொண்டும் லேசா படுத்துக் கொண்டும் என்று, பஜ்ஜி, சமோசா, பவண்டோ, பதநீர், காரட் வடை, மசால் வடை என்று ஏதேதோ ஆர்டர் செய்து பேசிக் கொண்டே இருந்தோம். பேச்சு சுவாரசியத்தில் ரூம் மேனேஜரை அனுப்பாமலேயே பேசிக் கொண்டிருப்பது கால் மணி நேரம் கழித்துதான் உரைத்தது. பாவம், எச்சூச் மீ கேட்டுக் கொண்டே நின்று கொண்டிருந்திருக்கிறார்.

நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டே இருக்கிறோம்.

உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு, உனக்கு? உனக்கு என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம். அதன்பின் முதல் காதல் பற்றி பேச்சு வந்த போது ஏறத்தாழ எல்லா ரங்க்ஸுமே "நல்லவேளை அவளைக் கூட்டிக் கொண்டு வரலை" என்றனர்.

பாலாஜியும் குடும்ப சமேதமாய் "பண்ட்றி"னான். எல்லா ரகத்திலும் ஒன்று என்று "பாரத விலாஸ்" மிக்ஸட் தேஸீஸ்-களாக ழவை நொறுக்கிக் கொண்டிருந்தோம்.
ஆர்.சி. சார் வந்தாலே பாலாஜி கிளாசை விட்டு எழுந்து போகச்சொல்லிடுவராம். ஏன்? பாலாஜியால் சிரிப்பை அடக்கவே முடியாதது மட்டும் காரணம் என்று சொல்லணுமா என்ன?

பயாலாஜி க்ரூப்பில் மைக்ராஸ்கோப்பில் ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டே இருந்ததற்கு மைக்ரோஸ்கோப்புக்கு  சிலுக்கு டான்ஸ் ஆடினதை எல்லாமும் உளறிட்டாங்க பாவம்.

வத்ஸனுக்கு ஹேப்பி பர்த்டே. மிஸஸஸ் வெங்கிக்கு சீமந்தமாம். கல்யாணத்துக்கே இப்போத்தான் பனீர் ஜிலேபி அடையார் கிராண்ட் ஸ்வீட்ஸ்-லேர்ந்து வாங்கித் தரான்.

வில்சனோடும் பேசினோம். வில்சனும் இருந்திருந்தால் இன்னும் குதூகலமாக இருந்திருக்கும். நான் ஸ்கூலை விட்டு வந்தப்புறம் ராமச்சந்திரன்-ன்னு ஓயாமல் பேசும் ஒரு பையன் ஸ்கூலில் சேர்ந்த கதையெல்லாம் சொன்னாங்க. அவனையும் வரச் சொல்லி இருக்கலாமே? வில்சா.. ஸ்பீக்கர் ராமச்சந்திரன் நம்ம க்ரூப்பில் இல்லையா?

அப்படி இப்படியாக அமைதியாக இருந்த ழ எங்கள் சிரிப்பாலும் அதகளத்தாலும் இன்னும் ஹான்டட் போலானதும் சொல்ல முடியாதது.

அரசி : லயோலால படிச்சிட்டு இருந்த காலத்துல டீக்கடையில் பெண்களும் டீ குடிக்க முடியலயேன்னு ஒரு ஆதங்கத்துல இதை ஆரம்பிச்சாங்களாம். முதல்ல அந்த டீ கிளாஸ்லதான் டீ தந்து கிட்டு இருந்தாங்களாம். நிறையா பேர் அதை விரும்பாததால், மக் வாங்கிட்டாங்க. தமிழ் புத்தகங்கள், ஆங்கில இசக்கியங்கள் எல்லாம் யாபாரத்துக்கு அடுக்கி வச்சுருக்காங்க. விதவிதமா வால் டான்க்ளர்ஸ் மற்றும் குட்டிக் குட்டி முகமூடிகள் எல்லாம் வாங்கிடலாம் போலே அழகா இருந்தது.. அதுனாலே பயமாவும் இருந்தது. அரசியின் விருந்தோம்பல் அற்புதம்.

அரசியிடம் விடை பெறும்போது, நாங்கள் எல்லாரும் சேர்ந்து we will meet, will meet, meet, eat என்று சொன்னதும் பார்த்த பார்வை பயந்து வந்தாப்ப்லேயே இருந்தது :)

பார்த்தாவுக்கு அங்கே வ-கட்டிங் கிடைக்குமான்னு கேட்கச் சொன்னார். பகவானே பகவானே...

"பிடிச்சுக் கொடுத்தால்" க்ரூப் ஃபோட்டோ

பேசிக்கொண்டே, தாயம் அல்லது பல்லாங்குழி விளையாடலாம். சுக்குக்காப்பி, கருப்பட்டி காப்பி, அதிரசம், இன்னும் என்னென்னவோ. அடை அவியல் இத்தியாதிகளும் கொண்டு வரப் போறாங்களாம். வாங்க நாமெல்லாம் இன்னொரு தரம் டீ குடிப்போம்... அதுக்கும் முன்னாடி ஒருதரம் திருத்தமா நாக்கை சுழட்டி "ழ"ன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

காரொழுகும் குழலாளைக் கருணைவிழிந்
தொழுகும் இரு கடைக் கண்ணாளை
மூரலிள நிலவொழுகப் புழுகொழுக
அழகொழுகும் முகத்தி னாளை
வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்
தெரியாத மருங்குழ லாளைச்
சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா
முலையாளைச் சிந்தை செய்வாம் (அருணாச்சல புராணம்)

இதை மனப்பாடமா நாக்கு சுளுக்காம குளறாம ஒப்பிச்சா, ஒரு டீக்கடை மெனு உங்களுக்கு பக்கோடா சார்பா ஸ்பான்சர் செய்யப் படும். :)

5 comments:

Peppin said...

wow! Very nice narration Vidhya!

Raz said...

vanakam vanakam vanakam...

Thirumba blog pannanumnu aasai vanthuduchu Vidhya. :)

Friends meet pannale jolly le. :) good good. inime adikadi meet panna ennoda vazthukkal.


oree oru correction...

nan BE :) ( 4 varusham kasta pattu padichi, 85% yeduthu iruken...) posukunu Viscom nu sollitingalee? :)

-Arasi ( Zha )

Balaji said...

Nice one. Thanks for the complete coverage Vidhya.

CS. Mohan Kumar said...

கலக்கிடீங்கன்னு சொல்லுங்க

உங்க போட்டோ முதன் முறையா உங்க ப்ளாகில் பார்ப்பதாக எண்ணம். Right or wrong?

Unknown said...

Vidhya,
Manasu irupathellam Bloga than varuthu. Good Keep it up.
Please come to my home and speak in the phone then u will realise what u said is right or not.

Post a Comment