போஸ்ட் இட் வரிகள்


மூன்று பேரும்
ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள்
நாலேமுக்கால் விதிகளைப்
பற்றிக் கொண்டு
தென்மேற்கு தெற்கு மேற்கு
திசைகளைப் பார்த்தபடி
=============================
பிரயாகத்திலொரு துகள் நான்
நீ அலைகளையருந்தும் கடல்
=============================
இவ்வளவு பெரிய நிலப்பரப்பில்
மட்டுமே புலப்படுகிறது
எல்லைக் கற்கள்
=============================
பிச்சைக்கு இறைஞ்சி நிற்கும் சிறுமிக்கும் கூட
கட்டாயம் வேண்டும் இனப்பெருக்கத்தடை
குழந்தைகளைப் பணிக்கு அமர்த்தாதீர்கள்
என்ற விளம்பர வாசகம் இருக்கும் ரயிலில்
சிதைந்து போன நிறங்கள் கசியும் இரவில்
இனி பயணிக்கக் கூடாது
=============================

12 comments:

Vidhya Chandrasekaran said...

இதுக்கு பேனியே பரவால்ல:((((((

எறும்பு said...

//இதுக்கு பேனியே பரவால்ல///

முதல் முறையாக வித்யா சொன்னதை மனப்பூர்வமாக repetukiren.

அனுபவிச்சு சொன்னது என்னைக்கும் தப்பாகாது.

ஒரு *கப்* *பேனியால்* டரியலானோர் சங்கம்


:))

Vidhoosh said...

அடுத்த சந்திப்பில் ஆப்பிரிக்கன் அல்வா கிண்டித் தரேன். அப்புறம் பேசுவீங்க.

எறும்பு said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

எறும்பு said...

அண்ணன் நேசமித்திரன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..

Vidhya Chandrasekaran said...

\\அடுத்த சந்திப்பில் ஆப்பிரிக்கன் அல்வா கிண்டித் தரேன். அப்புறம் பேசுவீங்க.\\

பேனியாச்சும் தேவலாம்.ஸ்லோ பாய்சன். மேற்படி ஐட்டம் ஸ்பாட் அவுட்:))

(ஆட்காட்டி விரலை மூக்கின் முன் வைத்துக்கொண்டு) போவியா? போவியா? அப்படியே போனாலும் கப்ப நீட்டினவுடனே வாங்கிடறதா? உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கறதுகூடவா மறந்துபோச்சு?

:)))))))

எறும்பு said...

நான் சாபிட்டது பத்தாதுன்னு என் பொண்ணுக்கும் ஒரு ஸ்பூன் பேனி குடுத்தேன். அன்னைக்கு பூரா அவ தூங்கவே இல்லை. ஒரே அழுகை. இன்னைக்கு காய்ச்சல். பேணி சாப்பிட்டா குழந்தைங்களுக்கு அஞ்சு நாளைக்கு பிறகு காய்ச்சல் வரும்னு இன்னைக்குதான் தெரிஞ்சுகிட்டேன்.

:(

எறும்பு said...

பேனி சாப்பிடும் முறை : சொல்வனத்தில் இருந்து

///பந்தியில் கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் ஒரு காகிதக் கோப்பையில் சோன்பப்டி போன்ற ஒரு வஸ்துவை வைத்து விட்டுச் சென்றார்கள். அது என்னவாயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அருகில் உட்கார்ந்திருந்த நாஞ்சில் நாடன் சித்தப்பா, ‘மகனே, அது பேரு பேனி. வெளிமாநில சமாச்சாரம். சாப்பிடுங்க. யோசிக்கெண்டாம்’ என்று உற்சாகப்படுத்தினார். சித்தப்பா சொன்ன பெயர் ஒரு கலக்கத்தைக் கொடுத்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேனியை எடுத்து வாயில் போடப் போனேன். எனக்கு இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான பாரதி மணி பாட்டையா தடுத்தார்.

‘ஏ, இருடே. அதுல பால் ஊத்திதான் சாப்பிடணும். இப்பொ வரும். அவசரப்படாதெ’.

உண்மைதான். பால் ஊற்றிச் சாப்பிட சுவையாகவே இருந்தது பேனி. /////

இதிலிருந்து பேனியில் பால் ஊற்றி சாப்பிட வேண்டும் என்று தெரிகிறது. சில சமயம் பேனி சாப்பிட்ட பிறகு பால் ஊத்த வேண்டி வரும்.

எங்கு என்பது சாப்பிட்ட பேனியை பொருத்தது.

:))))))

Radhakrishnan said...

அருமையாக இருந்தது.

அது என பேனி. உடல் நலத்தை பேணிக்கொள்ள வேண்டிய உணவோ?

நசரேயன் said...

அது என்ன பேனி?

நசரேயன் said...

//இவ்வளவு பெரிய நிலப்பரப்பில்
மட்டுமே புலப்படுகிறது
எல்லைக் கற்கள்//

பக்கோடாக்களாக ?

நசரேயன் said...

//ரயிலில்
சிதைந்து போன நிறங்கள் கசியும் இரவில்
இனி பயணிக்கக் கூடாது//

பகலிலே பயணிக்கலாமா ?

Post a Comment