அம்பி, ராஜு, சேஷு மற்றும் சாப்பாட்டு ராமன்கள் - வி.கங்காதர்

By Columnist V.Gangadhar
பெரியம்மை பாட்டி படிக்க சொடுக்கவும்.

==========================
தமிழில்: விதூஷ்

அம்பி, ராஜு, சேஷு மற்றும் சாப்பாட்டு ராமன்கள்

அந்தக்காலத்தில் பாலக்காட்டு கிரிக்கெட் விளையாட்டெல்லாம் பிராமண அதிகாரத்தில்தான் இருந்தது. ஒவ்வோர் கிராமத்திலேயும் ஒரு டென்னிஸ் பால் கிரிக்கெட் டீம் ஒன்று இருந்தது. கோவிலுக்கு அருகில் இருக்கும் மைதானம் அல்லது வயல்கள் போன்ற திறந்தவெளிகளில்தான் கிரிக்கெட் ஆடுவோம். அவர்கள் பங்குக்கு ஒவ்வொரு டீமிலும் ஒவ்வொரு அம்பி, ராஜு, சேஷுக்கள் இருந்தார்கள். இன்னிங் மேட்ச்களை ரொம்பவே ஆர்வமாய் விளையாடுவோம்.

எங்கள் சொக்கநாதபுரம் கிராமத்தில் இந்த விளையாட்டை ரொம்பவே சுவாரசியமாய் விளையாடுவோம். ஆல்ரவுண்டராக இருந்ததால் நான் மீடியம் பேஸ் பௌலிங் செய்வேன். சில நேரத்தில் லெக் ஸ்பின் கூட போடுவேன். அதிக எதிர்ப்பார்ப்போடு பேட்டிங் செய்யவும் சொல்வார்கள். ஜூன் மாதம் கவர்ன்மன்ட் விக்டோரியா காலேஜில் சேர்ந்தேன். என் கிராமத்தில் இருந்த கிரிக்கெட் தோழர்கள் 'டீமில் இணைந்து விளையாடும் திறமை இருக்கிறது. அங்கிருக்கும் கிரிக்கெட் டீம்மோடு சேர்ந்து பயிற்சி செய்' என்று அறிவுறுத்தினார்கள்.

கல்லூரி வகுப்புகள் முடிந்ததும் மாலை நான்கு மணிக்கு கிரிக்கெட் பயிற்சி ஆரம்பிக்கும். முதல் மூன்று நாட்களுக்கு நான் சும்மா சுற்றிச் சுற்றி வந்தேன். யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை. நான்காம் நாள் டீமில் விளையாடிக் கொண்டிருந்த ஒருவர் என்னிடம் பந்தை தூக்கிப் போட்டு பௌல் செய்யச் சொன்னார். ஆனால் நானோ அதை ஃபீல்டிங் செய்வதாக நினைத்துப் பிடித்ததில், டீம் உறுப்பினர்களின் கவனம் என் மீது பதிந்தது. அவுட்ஃபீல்டில் அருமையான முறையில் மூன்று காட்ச்சுகள் பிடித்ததில் அங்கிருந்தவர்கள் 'பிரமாதமான காட்ச்' என்று குதூகலித்தார்கள். எனக்கான சரியான வாய்ப்பு கிடைத்துவிட்டதாகவேக் கருதினேன்.

நான் தொடர்ந்து நெட் ப்ராக்டிஸ் செய்து வந்தேன். எனக்கு பாட்டிங் மற்றும் பௌலிங் செய்வதற்கான வாய்ப்பு தரப்பட்டது. இருந்தாலும் எனக்கு பயிற்சி போதுமானதாக இல்லை. குறைந்த பயிற்சியே இருந்தாலும் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேட்சுக்களில் அவரவர் சாமர்த்தியத்தைக் காட்டியாக வேண்டி இருந்தது. இந்த மேட்சுகளில் முக்கால்வாசி முன்னாள் காலேஜ் பிளேயர்கள் மற்றும் சில சீனியர் கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் இணைந்து இருக்கும் ட்டவுன் டீம்முக்கு எதிராகத்தான் இருக்கும்.

என் முதல் மேட்சில் டீப் தேர்ட் மேன் (பெரும்பாலும் பேஸ் பௌலர்கள் ஃபீல்டிங் செய்யும் போது ஃபைன் லெக் அல்லது பாக்வார்ட் ஸ்கொயர் பொசிஷன்களில் ஃபீல்டிங் செய்வார்கள்) பொசிஷனில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தேன். பேட்ஸ்மேன் சுழற்றி பந்தை அடித்தார். பந்தும் மேலே எழும்பி எனக்கு நேராக சுழன்று வந்தது. தெரிந்த சுலோங்கங்களை முணுமுணுத்தபடி பந்தை நோக்கி ஓடி, என் வலது கையை நீட்டி பந்தைப் பிடித்தேன். அது ஒரு அருமையான காட்ச் ஆக அமைந்தது. மீண்டும் ஒரு முறை காட்ச் பிடித்தேன், ஆனால் இந்த முறை மிக எளிதான காட்ச் ஆகவே அமைந்தது. நாலைந்து ஓவர்கள் பௌல் செய்து, இருபது சொச்சம் ரன்களும் எடுத்து ஒருவாறாக விளையாடினேன். இதனால் டீமில் எனக்கான இடம் நிலைப்பெற்றது.

விக்டோரியா காலேஜ் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதன் ஸ்தத்தம் பெவிலியன் அருமையானதாகவே இருந்தது. பெவிலியன் படிகள் வழியாக இறங்கி பேட்டிங் செய்யப் போகும் போது இங்கிலீஷ் கவுன்ட்டிகளில் விளையாடப் போவது போலவே இருக்கும். அவுட்ஃபீல்டு பச்சை பசேலென்று பரந்திருக்கும். மைதானத்தைச் சுற்றியும் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்து இருந்தன. வாழ்க்கையில் முதன்முதலாக, லென் ஹுட்டன், டெனிஸ் காம்ப்டன், நீல் ஹார்வே, டான் பிராட்மன், போன்ற பெருமை மிக்க கிரிக்கெட் வீரர்கள் பெயர் பொறித்த பேட்டுக்களை பயன்படுத்த ஆரம்பித்தேன். சிறிய கைப்பிடியுடன் இருக்கும் லென் ஹுட்டன் பேட்தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பேட்டால் பந்தை அடிக்கும் போதெல்லாம் இனிமையான சத்தம் கொடுக்கும்.

ட்டவுன் டீமுடன் விளையாடிய ஃபிரன்ட்லி மேட்சுகளுக்கு அவ்வளவாகப் பார்வையாளர்கள் வந்ததில்லை. ஆனால் ஒரேயொரு பார்வையாளர் மட்டும் எப்போதும் வருவார் - குறிப்பாக லஞ்ச் இன்டர்வெல்லின் போது. அவரை லஞ்ச் ராமு என்று அழைப்போம். அந்நகரில் இருந்த ஒரு ஸ்போர்ட்ஸ் கடையின் உரிமையாளர் அவர். காலேஜுக்காக விளையாட்டுப் பொருட்களை அவர் கடையிலிருந்து வாங்கியிருக்க வேண்டும், அதனால் உணவு நேரத்தில் அவருக்கும் சாப்பாடு போட வேண்டியிருக்கிறது போலும்!

ரீஜனல் இன்டர் காலேஜ் மாட்சுகள் அக்டோபர் மாதத்திலிருந்து ஆரம்பிக்கும். நாங்கள் முதன்முதலில் திருச்சூருக்குப் போய் கிராம டீம்களில் ஒன்றிற்கு எதிராக விளையாடினோம்.

எங்கள் விக்டோரியா காலேஜ்-ஜின் ஸ்டார் ஒபெனர் ஆக இருந்த ராமகிருஷ்ணன், கட்-அண்ட்-டிரைவ் செய்வதற்கு திறமையான ஆஃப்-சைடு பிளேயராக இருந்தார். ஆனால் அவரால் லெக்-சைடில் எதையும் கையாள முடியாமல் இருந்தார். மாட்ச் நடக்கும் நாளுக்கு முதல் நாள் மாலை, எதிரணி டீமுக்கு ராமகிருஷ்ணனுக்கு ஆஃப்-சைடில் விளையாடவே தெரியாது என்ற வதந்தியைப் பரப்பினோம். மறுநாள், நாங்கள் பாட் செய்ய ஆரம்பித்ததும், பவுலர்கள் ராமகிருஷ்ணனுக்கு ஆஃப்-ஸ்டாம்பில் பந்து போட, அவருக்கு ஒரே கொண்டாட்டம்தான், சீக்கிரமாகவே 45 ரன்கள் எடுத்து விட்டார். அதற்குள் எதிரணி எங்கள் விஷமத்தைப் புரிந்து கொண்டு விட்டனர். லெக்-ஸ்டாம்பில் போட்டு தாக்கி, ராமகிருஷ்ணனை கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே அவுட் ஆக்கி விட்டனர்.

திருச்சூரில் விளையாடியது அவ்வளவு இனிமையாக இல்லை. அங்கிருந்த பையன்கள் ரவுடிகளாக இருந்தனர். அதுவும் இல்லாமல், தங்கள் டீம் ஜெயிக்க வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகவும் இருந்தனர். அவர்களில் சிலர் எங்கள் ஸ்கோரருக்கு பின்னால் நின்றுகொண்டு தலையில் தட்டிக் கொண்டே இருந்தனர். அவர் ஸ்கோரில் கவனம் செலுத்த முடியாமல் எப்போதும் தன தலையைத் தடவிக் கொண்டிருக்கும்படி ஆனது. மேலும் அவர்கள் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் முறை பற்றியும் மோசமாக விமர்சித்தனர். மேட்ச் முடிவடைந்தது எங்களுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. நாங்கள் தோற்றுப் போனாலும், எங்கள் இடத்திற்குத் திரும்புவது பெரிய மகிழ்ச்சியாகவே இருந்தது.

பின்பொரு சமயம், மங்களூரில் இருக்கும் ஒரு நல்ல டீமுடன் விளையாட நேர்ந்தது. அவர்கள் டீமில் சென்னையில் ரஞ்சி ட்ராஃபியில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் சிலரும் இருந்தனர். 58 ரன்களோடு எங்களை மூட்டை கட்டி அனுப்பி விட்டனர். மாறாக அவர்கள் சர்வ சாதரணமாக 500-க்கும் அதிகமான ரன்கள் ஸ்கோர் செய்தனர். அதில் ஒரு பேட்ஸ்மேன் டபிள் செஞ்சுரி அடித்தார். எங்கள் இன்னிங்க்ஸ் முடிந்தது, எங்களை ஃபாலோ-ஆன் விளையாடும்படி சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். எதிரணியின் ஓபனர்கள் மறுபடியும் பேட் கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து நாங்களெல்லாம் எப்படி மிரண்டு போயிருப்போம் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்! எங்களை வைத்து கூடுதல் பேட்டிங் ப்ராக்டிஸ் செய்யும் உத்தேசத்தில் இருந்தனர். எங்கள் மேனேஜர் மற்றும் கேப்டன் இருவரும் சேர்ந்து அவர்களோடு பேசி ஒருவழியாக சீக்கிரம் மேட்சை முடிவடையச் செய்தனர். அப்புறம் மிகவும் சோர்ந்து போன டீமாக பாலக்காட்டுக்குத் திரும்பினோம்.

மறுவருடமே எர்ணாகுளத்தில் விளையாடிய இன்டர் காலேஜ் கிரிக்கெட்டை என்னால் மறக்கவே முடியாது. எதிரணியை 100 ரன்களுக்குள்ளாகவே சுருட்டி விட்டோம். ஆனால் நாங்கள் 65 ரன்களுக்குள்ளாகவே 6 விக்கெட்டை இழந்தோம். நான் பேட்டிங் செய்ய ஆரம்பித்தேன். சீக்கிரமாகவே எங்கள் அணியை சிதறச் செய்த ஸ்டார் பௌவுலர்களை அடித்துத் தள்ளினோம். மடமடவென்று ரன்கள் குவிந்து ஸ்கோர்கள் சமமாகின.

ஒன்பது விக்கெட்டுக்களை இழந்தோம். கடைசியில் ஜெயிப்பதற்காக ஒரு ப்புல்-ஷாட் அடித்தேன், ஆனால் அதை ஒரு ஃபீல்டர் காட்ச் பிடித்து விட்டான். மாட்ச் டையில் முடிந்தது. விதிமுறைகளின் பிரகாரம், ட்டாஸ் போட வைக்கப் பட்டது, காப்டன் செய்த பிழையால், டார்னமென்ட்டை விட்டு வெளியேறும்படி ஆனது. நாங்கள் ஹோட்டலை நோக்கி திரும்பும் போது நான் அழுது கொண்டிருந்தேன்.

டூரிங் போவது ரொம்ப ஜாலியாக இருக்கும். தினசரி சாப்பாட்டுக்கான அலவன்சாக ரூ.3 தரப்பட்டது என்றே நினைக்கிறேன். மற்ற பிராமண பையன்களோடு சேர்ந்து நானும் திருட்டுத்தனமாக ஆம்லெட் மற்றும் முட்டைக் கறியை ருசித்தேன். மசாலா தோசைகள் மற்றும் பொறித்த வாழைக்காய் போன்றவையும் நாங்கள் சுவைத்த உணவுகளில் சில. வீட்டில் இருக்கும்போது ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடும் அனுமதி கிடைக்கவே கிடைக்காது. அதனால் கிரிக்கெட் டூர்களில் இதுவரை சுவைத்தேயிராத அனுமதியில்லாத உணவுகளையும் வழி செய்தது. இரவுகளில் நாங்கள் திரைப்படங்களுக்குச் செல்வோம். எங்களுக்கானாலும் சீனியர் மற்றும் அனுபவமிக்க விளையாட்டாளர்கள், ரூ.3 இரவுச் சாப்பாட்டுக்குப் போதவில்லை என்று புகார் சொல்லிக் கொண்டே இருந்தனர். இரவு மிகவும் நேரம் கழித்து ஹோட்டல் அறைக்குத் திரும்புவார்கள். அவர்கள் வாயிலிருந்து வித்தியாசமான மணம் வீசும். என் டீம்மேட்டுகள் "பீர் குடிச்சுருக்காங்க!" என்று அதிர்ச்சியுடன் கிசுகிசுப்பார்கள்.

கோயம்புத்தூருக்கும் சேலத்துக்கும் காலேஜ் டீமோடு போனதும் கூட மிகவும் அற்புதமானது. டீமாக நாங்கள், சேலத்தில், அந்நகரவாசியான புகழ்பெற்ற கிரிக்கெட் ஸ்டார் ஆர்.ட்டி.பார்த்தசாரதியைச் சந்தித்தோம். இவர் ஸ்டேட்டுக்காக விளையாடியுள்ளார். மற்றுமொரு திறமையான விளையாட்டு வீரர் எம்.கே.இக்பால், சர்வ சாதரணமாக 50-க்கும் அதிகமான ஸ்கோர் பெற்றுவிடுவார். நாங்க பெரியதாக எந்த டோர்னமென்டிலும் ஜெயிக்கவில்லை என்றாலும், ரொம்பக் கொண்டாப்பட்டுக்கொண்டிருந்த காலேஜ் புஜபராக்கிரமர்களைக் கொண்டிருந்த தேர்ட் இயர் அணியைத் தோற்கடித்து எங்கள் கிளாஸ் இன்டெர் காலேஜ் டோர்னமென்ட் ஜெயித்தது பற்றி ஒரு ஆறுதலாவது இருந்தது. அந்த நாள், பந்து எனக்கு மிகவும் சாதகமாக இருந்தது, நான் இருபதுக்கும் சமீபமான ரன்களுக்கு ஆறு விக்கெட் எடுத்தேன்.

காலேஜ் டெர்ம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாரம்பரிய வழக்கம் போலவே பிரின்சிபாலை நடுவில் உட்கார வைத்து காலேஜ் கிரிக்கெட் டீம் போட்டோ எடுத்துக் கொண்டோம். இன்றும், அந்தப் போட்டோ நினைவுகளைக் கிளறிவிடும். ஏறத்தாள 25 வருடங்கள் கழித்து, சில டீம் மேட்டுக்களை சந்தித்தேன். பரமேஸ்வரன் குஜராத் அரசாங்கப் பணியில் காந்திநகரில் இருக்கிறான். ஸ்டார் பாட்ஸ்மேன் கே.என்.ராதாகிருஷ்ணன் பாம்பே டாப்லாய்ட், மிட்-டே பத்திரிகையில் நியூஸ் எடிட்டராக இருக்கிறான். அவன் வாரம் ஒரு காலம்ன் எழுதும்படி என்னை அழைத்தான். ஆனால் நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விட்டிருந்தேன். என் பணிக்காலத்தின் இறுதி நாட்கள் அஹமதாபாதில் கழிந்தன.

==================

original

Ambis, Rasus, Seshus and 'Lunch Ramus'

In those days, Cricket in Palakadu was dominated by the brahmins. Each village had its own tennis ball cricket team and the matches were played either in the open spaces near the temples or on the fields. Every team had its own share of Ambis, Rasus, Seshus and the matches played over one innings were keenly fought out.

We in Chokkanthapuram village did well in these matches. As an all-rounder, I bowled medium pace, then leg spin and was expected to bat with responsibility. In June, I was enrolled in the Government Victoria College. "Go and practise with the cricket team," my village teammates advised. "You are good enough to be in the team."

Cricket practice began around 4 pm, after the lectures were over. For the first three days, I just hung around. No one took any note of me. On the fourth day, one of the players threw me the ball and asked me to bowl. But I think it was my fielding which caught the attention of the other team members. I caught two or three catches in the outfield, getting under the ball and positioning myself nicely. "Well caught," exclaimed those present. I knew I had a chance.

I became a regular at net practice and was given chance to bat and bowl. But practice was not enough. One had to show one's mettle in the few practice matches which were organised. This was mostly against the 'Town Team', consisting of former college players and a few senior cricketers.

In my first match, while fielding at deep third man, the batsman slashed at the ball. It went up and started to curve towards me. I muttered a prayer, ran towards the ball and caught it in my outstretched right hand. It was a pretty good catch. Soon, I was in the act again but, this time, the catch was a fairly simple one. I bowled four or five overs, but managed to score some 20 odd runs. This cemented my place in the team.

The Victoria College cricket ground and its Statham pavilion were quite impressive. As one walked down the pavilion steps to go to bat, one felt like playing for an English county. The outfield was lush green and there were huge trees around the ground. For the first time in my life, I used good cricket bats named after great batsmen like Len Hutton, Denis Compton, Neil Harvey and Don Bradman. My favourite was a short handled 'Len Hutton' bat, which emitted a sweet sound every time it struck the ball.

The friendly matches against the 'Town Team' did not attract many spectators. But there one permanent visitor - particularly during the lunch interval. Known as 'Lunch" Ramu, he was the owner of a sports shop in town. The college must have bought sports goods from him and hence had to feed him during lunch time!

The regional inter-collegiate matches began from October. Our first visit was to Trichur where we played against one of the local villages.

The Victoria college star opener, Ramakrishnan, was a strong off-side player who could cut and drive well. But he could not handle anything on the legside. On the evening before the match, we passed the word among the opposition that Ramakrishnan could not play anything on the offside. The next day, as we batted, the bowlers fed Ramakrishnan on his offstump and he made merry, scoring around 45 runs within no time. By this time, the opposition had guessed our game. They attacked his leg stump and Ramakrishnan was out in no time.

It was not pleasant playing in Trichur. The local boys were a rowdy bunch and would do anything to enable their team to win. Some of them stood behind our scorer and went on tapping him on his head. He gave up scoring and was rubbing his head all the time. The local boys passed uncomplimentary remarks on how we played cricket and it was a big relief when the match ended. We lost but were happy to return to our home town.

Another time, playing against a strong college team in Mangalore which included some batsmen who played for Madras in the Ranji trophy, we were bundled out for 58 runs. The hosts had piled up 500 plus with one of their batsmen scoring a double century. As our innings ended, we expected that we would asked to follow on and bat again. Imagine our consternation, when we found the opposition's openers padding up again! They wanted additional batting practice at our expense. Our manager and captain had a hurried consultation and we conceded the match. It was one weary cricket team which returned to Palakadu.

My most memorable moment in inter-collegiate cricket came the next year when we played at Ernakulam. We bundled our opponents for less than 100 runs but lost nearly six wickets for only around 65 runs. I began to hit out. Very soon, their star bowlers who had engineered a collapse in our innings were being hit out of the ground. The runs came rapidly and the scores were equal.

We had lost nine wickets. I was also set to make the winning hit, but my pull shot was caught by a fielder and the match was tied. Under the rules, a toss was ordered, our captain called wrongly and we were out of the tournament. I had tears in my eyes as we walked back to our hotel.

Touring was fun. I think we were paid Rs 3 daily as our meal allowance. Along with other brahmin boys, I stealthily tasted omelet and egg curry. Masala dosas and fried bananas were other delicacies we enjoyed. At home, we were seldom allowed to eat at restaurants and the cricketing tours enabled us to taste forbidden dishes. At night, we went to the movies. The senior and more experienced players, who often complained that Rs 3 was not enough for a night out, came back late to the hotel rooms with their mouths smelling. "It is beer," muttered one of my teammates in a shocked whisper.

There were others tours to Coimbatore and Salem where the college team distinguished itself. At Salem, the team met local cricket star R T Parthasarthy who played for the state. Another wellknown player was batsman M K Iqbal who scored 50 plus in no time. We did not win any major tournaments, but I had some consolation when my class won the inter-class tournament, beating the much fancied third year class which had most of the college stalwarts. That day, the ball did everything for me and I took six wickets for 20 odd runs.

As the term drew to a close, we had the usual college cricket team photograph with the principal sitting at the centre. Today, that picture evokes memories. Nearly 25 years later, I ran into some of my team mates. Parameswaran was employed with the Gujarat government at Gandhinagar while star batsman K N Radhakrishnan was the news editor of the Bombay tabloid, Mid-Day.. He invited me to do a regular column. But I was not through playing cricket. The final days of my career were spent in Ahmedabad.

6 comments:

Cable Sankar said...

nice

எறும்பு said...

யாரோ மௌன விரதம்னு சொன்னங்க, போஸ்ட் பண்றது பஸ்ல கமெண்ட் போடறது நல்ல மௌன விரதம் போங்க..

நசரேயன் said...

என்னோட கதையும் தெலுங்கிலே மொழி மாற்றம் செய்வீங்களா ?

Vidhoosh said...

நன்றி கேபிள்.

நன்றி எறும்பு - நேர்ல கும்மி ஓடிட்டு இருக்கு. அதிலேர்ந்து தப்பிக்க இங்க திரும்பிகறது. பேசாம இருக்கிறதும் ரொம்ப கஷ்டம்தான். :(

நன்றி நசர் - நொம்ப சார்ஜ் ஆவும் பரவால்லையா

ambi said...

ஆவ்வ்வ், இது தனிமனித தாக்குதல். :))

பாதி கதை என்னோடுது மாதிரியே இருக்கு.

எல்லாம் ரைட்டு, சாப்பாட்டு ராமன்கள்னு பெயர் வைத்தமைக்கு ஜஸ்டிபிகேஷனே இல்லையே. மூனு ரூவாய்க்கு அப்படி என்னத்த சாப்ட முடியும்..? :P

ட்டவுன் இத பத்தி நான் ஒன்னும் சொல்ல போறதில்லை.

என்னவோ போடா கேசவா..
(நாராயணாவுக்கு லீவு)

ராகவன் said...

அன்பு வித்யா,

நல்ல கதை...ஓரு மொழியாக்கம் செய்யப்பட்ட கதையாய் படிக்க முடியவில்லை. நிறைய இடங்களில் வேறு அர்த்தங்கள் கொடுப்பது போல் இருக்கிறது.

தனியாக படித்தால் நல்லாயி ருக்கு... இன்னும் சுவாரசியம் சேர்த்திருக்கலாம்.

அன்புடன்
ராகவன்

Post a Comment