(அறி)முகமற்றது

இரைச்சலிடும் ஈக்களுக்கும்
ஊர்ந்து வரும் புழுக்களுக்கும்
முகரும் நாய்களுக்கும்
உணவாகக் கூடாதது
இது அறிமுகமற்றது
தூர எறிந்து விடாதீர்கள்
பல வருடங்களாய் இருக்கிறது
கர்ப்பநீரின் துர்மணத்தில்
அரூபமாய் ஊறியபடி இருக்கிறது
இது அறிமுகமற்றது
எல்லாவற்றையும் அறிந்து
கொள்ளும் இயல்பில்லை நமக்கு
இது அறிமுகமற்றது
ஒதுக்கிவிடாதீர்கள்
இன்னும் அறியப்படாதும்
தள்ளி விடாதீர்கள்
உணர்வற்றதென்று நம்பிவிட வேண்டாம்
காற்றின் சுழற்சியைக்
ஒருநாள் இது கட்டுப் படுத்தலாம்
துளிர் விட்டு வரும்போது
தன் சின்னக் கரங்கள் கொண்டு
பூமியையே பிளந்து
எங்கிருந்து வந்ததோவென்று
வியக்கும்படி ஆகலாம்
பழத்திலிருந்து பிரிந்துவிட்ட விதை

[Save a Girl Child, one of the most beautiful miracles in life]

11 comments:

யாதவன் said...

நெஞ்சை தொட்டுடிங்க உங்க அழகிய கவிதையால்

கமலேஷ் said...

அருமையான கவிதை.

இது நெஞ்சை விட்டுப் போக இன்னும் வெகு காலம் பிடிக்கும்.

மகமற்றது ...
அறிமுகமற்றது... எத்தனை பிடிப்பான தலைப்பு...

எறும்பு said...

Nice one..

அமைதிச்சாரல் said...

அருமையான அழகிய கவிதை..

sakthi said...

பூமியையே பிளந்து
எங்கிருந்து வந்ததோவென்று
வியக்கும்படி ஆகலாம்
பழத்திலிருந்து பிரிந்துவிட்ட விதை

அபாரம் விதூஷ்

Nundhaa said...

nice

Gopi Ramamoorthy said...

super

நாய்க்குட்டி மனசு said...

superb vidhoosh

நட்புடன் ஜமால் said...

Nice ...

save every child :)

Vijay said...

//உயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;//

நீங்க் சொன்னதுதான்.

(வரப்போ சும்மா கலாய்க்கலாம்ன்னுதான் வந்தேன். ஆனா இந்த கவிதைய கலாய்க்க மனசு வரல்.. )

உயிரோடை said...

உருக்கும் வரிகள் விதுஷ். வாழ்த்துகள்.

Post a Comment