வலைச்சரத்தில் இருந்து விடைபெறுகிறேன் நன்றி.

வாரம் முழுதும் எழுதியவற்றை படித்த எல்லாருக்கும் நன்றீஸ்.

சென்ற வாரம் முழுதும் நட்பும் உறவும் புடை சூழ நவராத்திரிக்கு கொலுவும் வலைச்சரத்தில் இடுகைகளின் சரமும் தொடுத்தாச்சு. வருடம் முழுதும் தொலைபேசியில் கூட பேசிக்கொள்ள முடியாமல் அவரவர் நியாங்களுக்குப் பின் ஓடிக் கொண்டிருக்கும் உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினர்கள், நண்பர்கள் என்று எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பாக நவராத்திரி வாரம் கோலாகலமாக அமைந்தது. தினசரி அலுவல்களோடு, இந்த கூடுதல் பொறுப்புக்கள், அன்றாட வேலைப் பளுக்கள், அலைச்சலும் பயணங்களும், அவதியும் களைப்பும், தூக்கமின்மை என்று எல்லாமே இருந்தாலும், என் அழைப்பை ஏற்று வந்த நல்லுள்ளங்களின் அன்பும் புன்னகையும் இன்னும் ஒரு வருடம் முழுதுக்குமான புத்துணர்வையும், அடுத்த நவராத்திரிக்கான எதிர்ப்பார்ப்பையும் மிச்சம் வைத்து சென்றுள்ளன.

இங்கு வலைச்சரத்தில் முகமறியாத உங்கள் ஒவ்வொருவரோடும் சிறிது நேரம் சிலாகிக்கும் வாய்ப்பை சந்தித்தும், மனதாரப் பேசியும் சிரித்து கழித்தும் என்று ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றாக ஒரு சவாலாக புத்துணர்வு அளித்துக் கொண்டே இருந்தது. இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய திரு. சீனா அவர்களுக்கு நன்றிகள் பல.

வர வர நம்ம தமிழ் வலையுலகத்தில் இருக்கும் முந்நூற்றுச் சொச்சம் உலகத்தினர்கள் எல்லோரும் ஹிஸ்டரிக்களைப் படிப்பதில் ஆர்வமாய் இருக்கிறது போல தெரிகிறது.

வரலாறுகள் வெற்றி பெரும் வழிகளையும், இப்படித்தான் வாழவேண்டும் என்றும் சொல்பவை மட்டும் இல்லை, எப்படி வாழக்கூடாது என்றும், ஸ்மிருதிக்கள் மீதான மாற்று சிந்தனைகளைத் தூண்டும் அனுபவங்களாகவும் இருக்கின்றன. மக்களை வாழவைக்க ஏற்பட்ட பல அரண்மனைகள் வவ்வால்களின் வாழ்விடமாக மாறிப்போன சரித்திரங்களைப் படிக்கும் போது எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்களுக்குக் கூட அடி எங்கே சறுக்கி இருக்கிறது என்றும், அல்ப சபலங்களின் பலனாக ஆன கதைகளும் பண்பாட்டு வளர்ச்சியை காட்டுகிறது. இன்னும் நாம் பயணிக்கும் வழிகளில் நாம் செல்லும் பாதையின் முட்களை கவனமாக நீக்கவும் guide செய்கிறது.

ஆங்கிலம் மொழியின் வரலாறு

மர்மங்கள் நிறைந்த ப்ரோசல்யான்ந் காடு

தசரா யானைகளின் அவஸ்தைகள்

வரலாறு என்ற மலைப்பாதைப் பயணம்

தேடுபவருக்கு இல்லையென்று நம்பப் படும் தெய்வமே கிடைப்பார் என்று என் தந்தை எப்போதும் சொல்லுவார், அப்படி நிஜமாவே தெய்வம் கிடைப்பாரோ என்னவோ தெரியவில்லை, ஆனால் தேடுதல் இருந்தால் பல நல்ல வாய்ப்புக்களும், அற்புதமான கருத்துக்களும், மனதையும் எண்ணங்களையும் விரிவாக்கும் பகிர்வுகளும், யோசிக்கத் தூண்டும் கட்டுரைகளும், கதைகளும், கவிதைகளும், நகைச்சுவைப் பகிர்வுகளும், அனுபவப் பகிர்வுகளும், என இணையம் இன்னும் பல சான்றோர்களின் இருப்பைக் காட்டிக் கொண்டே இருக்கிறது. கலாச்சார பண்பாடுகளைப் பெற ஆரம்பித்து விட்டோம் என்ற நம்பிக்கை வந்து விட்டது, ஆனால் மனதால் பண்படுதல்.. இன்னும் போக வேண்டிய தொலைவுக்குள் மனதாலும் பண்பட்டு, நாம் அனைவரும் பெற்றவை அனைத்தையும் பகிர்ந்து இதயத்தாலும் இணைந்திருப்போம் இனி வரும் நாட்களில்.

இணையம் நமக்கெல்லாம் ஒரு அற்புதமான வாய்ப்பு, இன்னும் கற்கவும், அறியவும், வாய்ப்புக்களை explore செய்து இன்னும் நம் வாழ்வை / எண்ணங்களை வளமைப் படுத்திக்கொள்ளவும் என்று எல்லாமே abundant ஆகவே கிடக்கிறது. கையிலிருக்கும் வாய்ப்பு என்பதை விட விரல் நுனியில் இருக்கும் வாய்ப்பு ... இவ்வாய்ப்பை நமக்கும் அடுத்தவருக்கும் உதவியாக இல்லை என்றாலும் உபத்திரவமாக இல்லாமல் நல்ல விதமாக பயன்படுத்துவோம் என்ற நம்பிக்கையுடன் வலைச்சரம் மூலம் சந்தித்த ஒவ்வொரு முகமறிந்த, முகமறியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி, அடுத்து வரும் வார வலைச்சர ஆசிரியருக்கும் வாழ்த்து சொல்லி, வலைச்சரத்தில் இருந்து விடை பெறுகிறேன்....

எல்லோரும் நலம் பெற்று இன்புற்று வாழ வேண்டும். நமஸ்காரங்கள்.
அன்புடன்
விதூஷ்.

7 comments:

எல் கே said...

டாட்டா

Vidhoosh said...

bye bye LK :)) # so early... at office?

வல்லிசிம்ஹன் said...

விதூஷ் நீங்கள் வலைச்சர ஆசிரியராக இருந்ததே இந்தப் பதிவை வைத்துத்தான் கண்டுபிடித்தேன். மிச்சப் பதிவுகளையும் படிக்கிறேன்.
நவராத்திரி சுற்றல்கள் இன்று தான் ஒரு வழியாக நிறைவடைந்தது. இனிப் பதிவுகளை நிதானமாக அசை போடலாம். வாழ்த்துகள் அம்மா.

பத்மா said...

உங்கள் வடை புராணத்திலிருந்தே நான் உங்களின் தவிர்க்க முடியாத விசிறியாக ஆகிவிட்டேன் .
வாழ்த்துக்கள்
பார்ப்போம்

துளசி கோபால் said...

அட..... அதுக்குள்ளே ஒரு வாரம் ஓடிப்போச்சா!!!!


அருமையான வாரமா இருந்ததுப்பா.

ஓட்டம் இன்று இரவுடன் முடிவடைகிறது நம்ம வீட்டில்.

விஜயதசமிக் கொண்டாட்டம்'ஆ' ரம்பம்:-)

சாந்தி மாரியப்பன் said...

நல்ல நிறைவான வாரமா இருந்திச்சு..

Vijay said...

நன்றி விதூஷ். எ வீக் தட் ஐ ரியலி எஞ்சாய்ட்.

Post a Comment