வடை புராணம்

எவ்வளவு பணம் பொருள் அறிவு இருந்தாலும், உணவு என்பது மனிதனுக்கு அடிப்படைத் தேவை. நம் இந்திய உணவு வகைகளைப் போன்ற சமச்சீரான உணவு பழக்க வழக்கங்களை எந்த cuisineகளிலும் கண்டதில்லை.

வடை மாலை சாற்றுதல், விஷேஷங்களுக்கு வடை செய்யுதல், காலை/மாலை சிற்றுண்டிக்கு வேறேதும் இல்லை என்றால் வடை செய்வது சுலபமான மாற்றாக இருக்கிறது .... என்று வடை தென்னிதியர்களின் வாழ்வில் ஒரு அங்கம்தான் இல்லியோ... கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருஷ வரலாறு கொண்ட வடை.

கி.பி.920-ஆம் வருஷம் தேதியிடப்பட்ட கன்னட புத்தகமான சிவகோட்யச்சர்ய என்ற நூலில் இட்லி மற்றும் வடை பற்றிய குறிப்பு இருக்கிறது. அதன் பிறகான கி.பி.1130-ஆம் ஆண்டில் சம்ஸ்கிருத புத்தகமான மானசலோல என்ற புத்தகத்திலும் வடை தயாரித்தல் குறித்த குறிப்பு இருக்கிறது. இடைச்சங்க காலங்களான கி.பி.100-300-ஆம் ஆண்டுகளில் இட்லி-வடை முதற்கொண்டு மீன் வகைகள் வரை சமைத்து உண்டதை பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன.

மிக முக்கியமாக "தேமல பட்டுவா" என்ற சிங்களத் தமிழர் உருவாக்கிய உணவென்றும் நம்பப்படுகிறது.

வடை போச்சே என்ற வருத்தம் கொள்ளாமல் வடைகளைச் செய்து மனசார உண்டு களித்து, இந்த லிங்க்குகளில் இருக்கும் மற்ற சமையல் குறிப்புக்களையும் சமைத்துப் பார்க்கலாம். நல்ல நல்ல குறிப்புக்கள் உள்ளவை இந்த சமையல் வலைத்தளங்கள்.
முளைகட்டின சன்னா வடை
தவலை வடை
பருப்பு வடை
தயிர் வடை
மெது வடை
கார்த்திகை வடை
காராமணி வடை
உளுந்து வடை


7 comments:

எல் கே said...

vadai enakkuthan

ambi said...

வடை புராணம் நல்லா இருக்கு. நீங்க ரெஃப்ரன்ஸ் குடுத்து இருக்கற நூல்கள் எல்லாம் நெஜமாவே இருக்கா? :))

'திலகாஷ்ட மகிஷபந்தனம்" நூல் மாதிரி இல்லையே..? :p

அட்டகாசமா ஒரு வடை படம் போட்டு இருக்க கூடாதா? கண்ணால பாத்து பல மாசம் ஆச்சு. :))

பொன் மாலை பொழுது said...
This comment has been removed by the author.
பொன் மாலை பொழுது said...

// அட்டகாசமா ஒரு வடை படம் போட்டு இருக்க கூடாதா? கண்ணால பாத்து பல மாசம் ஆச்சு. :))//

-------------------------------Ambi.


உண்மையி அம்பியின் ஏக்கத்தை புரிந்து கொண்டு நம்ம கூகிள் ஆண்டவர் இமேஜஸ் பக்கம் போனா.............

அடி ஆத்தீ......................................ஒலகத்துல இருக்கிற அத்தனை வடையும் படமா இருக்கு !!!
http://www.google.co.in/images?hl=en&biw=1133&bih=752&tbs=isch:1&sa=1&q=vadai&aq=f&aqi=g2g-s1g1g-m6&aql=&oq=&gs_rfai=
போயி ஆச தீர பாருங்க!

Radhakrishnan said...

:) ஹூம். வாய்ப்பு தவறிபோனதுதன் மிச்சம்.

Vijay said...

அட்டா !!! வடை போச்சே !!!! சரி சரி, ரொம்ப லேட் போல....

//நம் இந்திய உணவு வகைகளைப் போன்ற சமச்சீரான உணவு பழக்க வழக்கங்களை எந்த cuisineகளிலும் கண்டதில்லை.//

ஆமா, எததனை cuisine செக் பண்ணி இருக்கீங்க.?

உங்க கிட்சன் பிளாக் பார்த்தா ஒன்லி இந்திய அய்டமா தான இருக்கு..:))

அம்பி,

'திலகாஷ்ட மகிஷபந்தனம்" மாதிரி இல்லன்னு நம்புவோம்.!!!

சாந்தி மாரியப்பன் said...

இங்கே வடைய தவறவிட்டாலும் இணைப்புகளுக்கு போயி சாப்ட்டுட்டு வர்றோம் :-)))

Post a Comment