டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் (சவால் சிறுகதை)


சவால் சிறுகதை

தலைப்புக்கு நன்றி பா.ரா. அண்ணே.

========== =========== ============= =============== ===========
இன்றைய எழுத்தாளர் கூட்டத்தில் கொஞ்சம் சாமானியன் போலவே தென்பட வேண்டும் என்ற முயற்சி முடியும் தருவாயில் கொஞ்சம் அதிகமாகவே அலங்காரம் செய்து கொண்டது போன்றதொரு தோற்றத்தைக் கொடுத்தது.

என்ன வேண்டி கிடக்கிறது? எழுத்தும் இலக்கியமும்? தலை சிறந்த இலக்கியம் என்று போற்றப் படுபவை எதுவும் எளிதில் புரிபடுவதில்லை. முதல் பக்கத்தைத் தாண்டவே ஒரு தனிப்பட்ட அணுகுமுறை வேண்டியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு பக்கமாக குறைந்தது நானூறு பக்கங்கள் நிரம்பியிருக்கும் இலக்கியங்கள், எப்படியும் கஷ்டப் பட்டுதான் படிக்க வேண்டி இருக்கிறது. அது லத்தீனிய மொழியில் இருந்தால் என்னால் படிக்க முடியாது. ஏனென்றால் எனக்கு லத்தீன் படிக்க தெரியாது. தமிழிலோ ஆங்கிலத்திலோ இருந்தால் மட்டும் என்ன பெரிய வித்தியாசமாகி விடப் போகிறது. என்-மட்டில் இம்மாதிரி கூட்டங்களில் யாராவது எடக்கு முடக்காய் பேசும் போது பயமுறுத்தி அவர்களை எழுந்து போக வைக்க உதவும்.

என் உயரத்துக்கும் அழகுக்கும் சிவப்புத் தோலுக்கும், வாய்ப்பு கிடைத்திருந்தால் சினிமாவில் நடிக்க வேண்டியவன். இந்த எழுத்தாளர்கள் மத்தியில் வந்து மாட்டிக்கொண்டு திண்டாடுகிறேன். ஒரு சினிமா-ஹீரோவுக்கு எழுதவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை, ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு நடிக்கவும்தானே வேண்டியிருக்கிறது.

என் மனவோட்டம் முகம் வழியே தெரிந்து விடக் கூடாதே என்று மெல்லியதாய் ஒரு புன்னகையையும் அணிந்து கொண்டேன். இப்போது கொஞ்சம் இலகுவாய் இருப்பது போல இருந்தது.

"குரு.ஊ.. கலக்கறீங்க... போங்க", "என்ன சூப்பரா இருக்கீங்க இன்னிக்கு" என்றெல்லாம் கூட்டத்தில் வழி நெடுக கேட்ட என்முகம் தெரிந்தவர்களுக்கு எல்லாம் "சும்மாதான் இப்படி" என்று சொல்லிக் கொண்டே நகர்ந்து தனியாக ஓரத்தில் உட்கார்ந்து கொண்டேன். என்றும் இல்லாதபடியாக அறிமுகம் இல்லாத நபர்கள் வணக்கம் சொன்னால் கூட வணக்கம் வைத்துக் கொண்டிருந்தேன். என்னை சாமானியனாக, அவர்களில் ஒருவனாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இருந்தேன். ஆனாலும் உள்ளுக்குள் திடும் திடும் என்று இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. கையில் இருந்த தடிமனான இலக்கிய புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டேன். இப்போது தலை குனிந்து கொண்டு இருக்கும் வசதியும், படிக்கிறான் என்று தொந்தரவு செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையிலும், அந்த காலத்து விஜயகுமார் போட்டிருப்பது போன்ற அகல ஃபிரேம் கண்ணாடியை கழற்றி சட்டை பையில் வைத்துக் கொண்டேன். ஜோல்னா பையை மடியில் சுருட்டி வைத்துக் கொண்டேன்.

"சார்.. நீங்கள்லாம் இங்க உட்காரலாமா? நீங்க அப்படி மேடையில் போய் உட்காருங்க சார்" என்று இடது பக்கமாய் கை காட்டினார் ஒருவர். கொஞ்சம் திடுக்கிட்டேன். ஏன் இலக்கியவாதிகள் என்றால் இடதுசாரிகளாகவே இருக்கவேண்டுமோ என்று நினைத்துக் கொண்டே வலது பக்கமாய் சென்றமர்ந்தேன். வகையாக மாட்டிக் கொண்டேன் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். சும்மாவேனும் புன்னகைப்பதும், எப்போதும் பிசியாக வேலையிருப்பது போலவே காட்டிக் கொள்வது ரொம்பவே கடினமான ஒன்றாகவே இருந்தது, ஏதோ மேடை நாடகத்து நடிகன் போல. ஆனால் தனிமையில் என்னிடமே நடித்துக் கொண்டிருக்கவும் முடியாமல் இருக்கிறேன். சமீபத்திய புத்தகத்தோடு முப்பது புத்தகங்கள் வெளி வந்து விற்றுத் தீர்த்து, மேடை மேல் இடமும் வாங்கி கொடுத்து விட்டன.

டிரென்டு மாறிக் கொண்டேதான் இருக்கிறது. எழுத்தாளர்களும்தான். எங்குமே மாறாதது ஒன்றுதான், உள்ளரசியல் செய்தாவது இருப்பை காட்டிக் கொண்டே இருப்பது எளிதாகவும் இருக்கிறது.

ஒரு சின்ன நோட் பேட் ஒன்றை எடுத்தேன்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

என்றெல்லாம் எழுதினேன்.

ஒரு க்ரைம் கதை எழுதித்தர வேண்டுமாம். இந்த வரிகளுக்கு மேல் எதுவும் தோன்றவில்லை. வரும் சனிக்கிழமை அன்று சலூனுக்குப் போய் மழுங்க மழுங்க மொட்டை அடித்துக் கொண்டாலாவது ஏதும் யோசனை வருகிறதா என்று முயற்சிக்க வேண்டும். அவனவன் புதுப்புது ஃபாரின் லொகேஷன்களுக்குப் போய் கதை எழுதுகிறான்கள், பாட்டு எழுதுகிறான்கள், நமக்கு வாய்த்தது இதுதான் போல எழவு. ராயல்டிக்கு லோல்பட்டுக் கொண்டு கடைவாசலில் நிற்க வைப்பான்கள். இந்த முப்பது புத்தகத்துக்கும் மொத்தமாய் வருஷத்துக்கு ஆறாயிரம் வந்தாலே பெரிய அமெளண்டு என்றிருக்கும் எழுத்தாளன் கெளரதையில், ரெட்டைச் சம்பளக்காரப் பட்டமும் வேறு சேர்ந்து கொண்டு ஆலாய் பறக்கிறது.

இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் ஜிப்பா போட்டுக் கொள்வதில்லை போல இருக்கிறது. எல்லோருமே ஜீன்ஸ், டீசர்டுதான். எப்போதாவது பெண் எழுத்தாளர்கள் ஜிப்பா போட்டுக் கொள்கிறார்கள். கடுமையான இலக்கியம் எழுதுபவர் என்றால் லக்னோ எம்பிராய்டரி போட்ட வெள்ளை சட்டை அணிந்திருக்கிறார். அவர்களிடம் கொஞ்சம் பொறுத்துத்தான் பேச வேண்டும். அவருக்கு பேச்சு வழக்கில் மதராஸப்பட்டின இலக்கியமும் சரள மொழியாக வருமாம்.

பயந்தது போலவே "வணக்கம். நல்லா இருக்கீங்களா?" என்றபடியே பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

"சார். நீங்க எவ்வளவு பெரியவர். எனக்கு வணக்கம் சொல்லிக்கிட்டு" என்றபடி கொஞ்சம் தள்ளியே அமர்ந்து கொண்டேன்.

"இளம் எழுத்தாளர்களுக்கான தளமாக புதுசா ஒரு வெப்சைட் ஆரம்பித்திருக்கிறேன். அதில் முழுதும் உங்களைப் போன்றவர்களின் புத்தகங்களைத்தான் விற்கப் போகிறேன். போக, வருஷம் ஒரு முறை வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு இளைஞராக இருந்தால் உங்களை ஒரு இலக்கணமாக கொள்ள வேண்டும் என்று உங்கள் பெயரிலேயே ஒரு இலக்கியப் போட்டி நடத்தி உங்களுக்கு விளம்பரமும் தருகிறேன். இந்த இணையதளத்தை நடத்துவது பெரிய செலவு ஒன்றும் இல்லை. போட்டி நடத்துவது என்பது தான்... நன்கொடையாக வருஷம் எட்டாயிரம் ரூபாய் கொடுத்து விட்டால் போதும். உங்களைப் போன்றவர்களுக்கு வெறும் பீர் குடிக்கும் செலவுதான் இது இல்லையா?" என்றார்.

தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது எனக்கு. கண்கலங்கியதை மறைத்துக் கொண்டு "வெப்சைட் பேரு என்னன்னு சொன்னீங்க சார்" .

35 comments:

Vidhoosh said...

இது பகடி இல்லை. நிஜமாகவே சினிமாவுக்கு முயற்சித்து எழுத்தாளரான ஒரு ஹிந்தி எழுத்தாளரை சந்திக்க நேர்ந்தது. அவரது தர்ம சங்கடமான சூழல்தான் இது. எழுத்தினால் வரவென்று பெரியதாக எதுவும் இல்லாவிட்டாலும், centre of attraction ஆக தம்மை வைத்துக் கொள்ள அவர் செய்வதையெல்லாம் எழுதி இருந்தேன். கொஞ்சம் குறைத்தே வெளியிட்டு இருக்கேன். பா.ராஜாராமின் "ஆண்டிமடம்" கவிதை வந்த போதே ஆங்கிலத்தில் எழுதியது - நீளமான கதை. தமிழில் தயங்கிக் கொண்டேதான் வெளியிட்டு இருக்கிறேன்... :)

பனித்துளி சங்கர் said...

/////இப்போதெல்லாம் எந்த எழுத்தாளனும் ஜிப்பா போடுவதில்லை போல இருக்கிறது. டிரென்டு மாறிக் கொண்டேதான் இருக்கிறது. எழுத்தாளர்களும்தான். எங்குமே மாறாதது ஒன்றுதான், உள்ளரசியல் செய்தாவது இருப்பை காட்டிக் கொண்டே இருப்பது எளிதாகவும் இருக்கிறது.
/////

சரியாக சொல்லி இருக்கிறீர்கள் . அருமை . தலைப்பே வித்தியாசமாக அமைந்திருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

கவி அழகன் said...

சுப்பர்

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

sakthi said...

என்ன வேண்டி கிடக்கிறது? எழுத்தும் இலக்கியமும்? தலை சிறந்த இலக்கியம் என்று போற்றப் படுபவை எதுவும் எளிதில் புரிபடுவதில்லை. முதல் பக்கத்தைத் தாண்டவே ஒரு தனிப்பட்ட அணுகுமுறை வேண்டியிருக்கிறது

ஏன் இப்படி போட்டு உடைக்கறீங்க???

sakthi said...

வாழ்த்துக்கள்!!! விதூஷ்

R. Gopi said...

என்ன இப்படிப் பண்ணிட்டீங்க? இன்னைக்குதான் ஆறாவது கதைய எழுதிக் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருந்தேன். இதப் படிச்சதும் மறுபடி டென்ஷன். இன்னொரு கதை மறுபடி ரெடி பண்ணிட வேண்டியதுதான்.

சுரேகா.. said...

அட...இப்படியும் கொடுக்கப்பட்ட வரிகளைப்பயன்படுத்தலாமா? :) கதையும், விஷயமும் அருமை!

Vijay said...

ஹெட்டிங் பார்த்த ஒடனே பிளாக் பேர மாத்ததான் போறீங்களோண்ணு நினைச்சேன். :))

Vijay said...

//அது லத்தீனிய மொழியில் இருந்தால் என்னால் படிக்க முடியாது. ஏனென்றால் எனக்கு லத்தீன் படிக்க தெரியாது.//

என்னா கண்டுபுடிப்புடா சாமி :))

Vijay said...

//தலை சிறந்த இலக்கியம் என்று போற்றப் படுபவை எதுவும் எளிதில் புரிபடுவதில்லை.//

சேம் பிளட்? ஆமா.....ஒய் சோ?

Vijay said...

//அது லத்தீனிய மொழியில் இருந்தால் என்னால் படிக்க முடியாது. ஏனென்றால் எனக்கு லத்தீன் படிக்க தெரியாது.தமிழிலோ ஆங்கிலத்திலோ இருந்தால் மட்டும் என்ன பெரிய வித்தியாசமாகி விடப் போகிறது.//

அது... அது....ம்ம்ம்... உங்க நேர்மைய நான் பாராட்டுறேன்.:))

Vijay said...

//என் மனவோட்டம் முகம் வழியே தெரிந்து விடக் கூடாதே என்று மெல்லியதாய் ஒரு புன்னகையையும் அணிந்து கொண்டேன்.//

லலிதா ஜுவல்லரீஸ்?...:))

Vijay said...

//"சார்.. நீங்கள்லாம் இங்க உட்காரலாமா? நீங்க அப்படி மேடையில் போய் உட்காருங்க சார்" என்று இடது பக்கமாய் கை காட்டினார் ஒருவர்.//

அவருக்கு ஒக்கார சீட் இல்லனா நமமளை எழுப்பி உட்டா எப்புடீ?

Vijay said...

//என் உயரத்துக்கும் அழகுக்கும் சிவப்புத் தோலுக்கும், வாய்ப்பு கிடைத்திருந்தால் சினிமாவில் நடிக்க வேண்டியவன்.//

எந்திரன் பாக்கலயாமா? ரஜினி சாரா பாத்துட்டுமா இப்புடி ஒரு எண்ணம்.? :))

Vidhya Chandrasekaran said...

நடக்கட்டும்...

Vidhoosh said...

விஜய்: என்னதான் இருந்தாலும் நான் ஒரு காலத்தில் எறும்பு ராஜகோபால் பதிவில் இட்ட கும்மி அளவுக்கு உங்களால் முடியாது # it's a challenge man. # கொம்பு சீவி வுடுதல்

Vijay said...

//ஒரு சின்ன நோட் பேட் ஒன்றை எடுத்தேன்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

என்றெல்லாம் எழுதினேன்.//

கண்டின்யூனிட்டி கேளுங்க..

”எழுதுன அப்புறம் எனக்கே புரியல...என்னாடா இதுன்னு.. சரி வுடு.. பேசாம இத வச்சி ஒரு போட்டி எற்பாடு பண்ணிற வேண்டியது தான். நமக்கு புரியலனா என்ன இப்போ? மண்டபத்துல யாருக்குனா புரிஞ்சி அவங்க எழுதிற மாட்டாங்களான்னு அப்பிடியே பாக்கட்டுல வச்சிக்கிட்டேன்.”

இதுதானே எழுதணும்ன்னு நெனச்சீங்க விதூஷ்?

பரிசில் கவனிக்க....:)) (நாராயணா... நாராயணா)

Vidhoosh said...

///(நாராயணா... நாராயணா)//

நீங்க யாருன்னு இப்ப தெரிஞ்சு போச்சுடா எட்டப்பா..

Vijay said...

//விஜய்: என்னதான் இருந்தாலும் நான் ஒரு காலத்தில் எறும்பு ராஜகோபால் பதிவில் இட்ட கும்மி அளவுக்கு உங்களால் முடியாது # it's a challenge man. # கொம்பு சீவி வுடுதல்//

இது வேறயா? என்னா உள் அரசியல்டா எப்பா....

Vijay said...

//நீங்க யாருன்னு இப்ப தெரிஞ்சு போச்சுடா எட்டப்பா..//

ஆமா... நான் யாரு? (பிரண்ட்ஸ் படத்துல சார்லி மயக்கம் தெளிஞ்சி எழுந்த ஒடனே கேப்பாறே... அந்த எபக்ட்ல படிக்கவும்.. :))

Vijay said...

சரி கடமை அழைப்பதினாலும்... நேரமின்மை காரணமாகவும், இத்தோடு என் சிற்றுரையை முடித்துக் கொள்ளுகிறேன். யாரும் கல்லு மழை பொழியலாம் என்ற பயத்தால் விலகியதாய் கருதவேண்டாம்.. :))

Vijay said...

செய்து கொண்டு இருக்கும் பெரும் கட்மையில் சிறி...ய இடைவெளி கிடைத்ததாலும்.....(சரி சரி...கொஞ்சம் லேட்டா புரிஞ்சதாலும்... ஓகே வா?)

//நீங்க யாருன்னு இப்ப தெரிஞ்சு போச்சுடா எட்டப்பா..//

என்னாதூஊஊஊ.... எட்டப்ப்னாஆஆஆ.....? ஆகா அப்போ நீங்க அப்பிடிதான் நெனச்சீங்க்ளா? நாந்தான் போட்டு வாங்கிட்டனா?

இருக்க்ட்டும்.... இருக்க்ட்டும்...

தாமிராவும் கவனிக்க...(நாராயணா???) பாருங்க விதூஷ் ஒன் டைம்தான் சொல்லி இருக்கேன்...:))

ambi said...

ம்ம், ஏதோ பழைய பாக்கிய செட்டில் பண்ணின மாதிரி இருக்கே! (எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா?) :))

நசரேயன் said...

விதுஷ் கதை என்னன்னு சொல்லுங்க ?

மரா said...

// என்ன வேண்டி கிடக்கிறது? எழுத்தும் இலக்கியமும்? தலை சிறந்த இலக்கியம் என்று போற்றப் படுபவை எதுவும் எளிதில் புரிபடுவதில்லை. முதல் பக்கத்தைத் தாண்டவே ஒரு தனிப்பட்ட அணுகுமுறை வேண்டியிருக்கிறது
//

எல்லாம் எல்லார்க்கும் புரியாது :)

Vidhya Chandrasekaran said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_07.html

தேசாந்திரி-பழமை விரும்பி said...

டெக்கினிக்கலா ஏய்ம் பண்றானே ?!
வாழ்த்துக்கள் !

ஸ்ரீ.... said...

வலைச்சரத்தில் அடுத்து உங்களின் அறிமுகங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். வெல்க ஸ்ரீவித்யா!

ஸ்ரீ....

thiyaa said...

வாழ்த்துக்கள் !

☀நான் ஆதவன்☀ said...

:) நல்லாயிருக்குங்க விதூஷ்.

விதிமுறைகள் சேர்த்தது ஒட்டவே இல்லை. சவால் சிறுகதைக்குன்னு இல்லாமன்னு சாதாரணமா படிச்சா க்ளாஸா இருக்கு :)

Vidhoosh said...

Thanks, Yadhavan, Nesan, Sakthi, Gopi Ramamoorthy, Sureka, Vijay, Ambi, Nasar, Vidhya C, Sami MARAA, Desandhri-Pazamai Virumbi, Sree, Diya, and Aadhavan.

Aadhavan, Oh.. are the same in Buzz.. :))

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

Radhakrishnan said...

மிகவும் அருமையான கதை விதூஷ். நிச்சயம் பரிசுக்குரிய கதை தான். :)

Sundar சுந்தர் said...

ரொம்ப நல்லா வித்தியாசமா இருக்கு. (போட்டி என்ன என்று பார்க்காமல் படித்தேன்).

Post a Comment