வனங்கள்

ச்சை கொண்டைகளில் சிவப்பும் மஞ்சளுமாய் பூச்சூடி தலையாட்டி அழைத்தபடியே நின்று கொண்டிருந்தன சில மரங்கள். இத்தனை அழகிகள் சுற்றி இருந்தாலும், தூரமே நின்று கொண்டே இவள் ஒருவளது அழைப்பை மட்டும் ரசித்துப் பார்த்துக் கொண்டே மலையரசன், தன் நதிக்கரங்கள் நீட்டி இவளின் வேர் விரல்களைப் பற்றி காதல் வளர்த்துக் கொண்டிருந்தான். இவளின் காதலோ ஒற்றையடிப் பாதையாய் நீண்டு கொண்டே இருந்தது. பாதையின் எல்லையில் சிறிதும் பெரிதுமாய் குடிசை வீடுகளைக் கொண்ட கிராமம். இரவின் மழையைக் காலைச் சூரியன் கூரைவழியே தொட்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

ழை முற்றிலும் நின்று கூரை மழை தூறல் சிந்திக் கொண்டிருந்தது. கோழிகள் கூட சோம்பலாய்தான் கமறிக் கொண்டிருந்தன. சலக் சலக் என்று வாசல் தெளிக்கும் ஓசையும், கிணுகிணுவென பால் வண்டிக்காரரின் மணி சத்தமும் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. சிம்னி விளக்குகள் இருந்த சுவர் மாடங்கள் கருப்பேரி கிடந்தன. அந்த ஆறரை மணி பேருந்து வந்தால்தான் இங்கு வாழ்க்கையின் பரபரப்பு ஆரம்பிக்கும். இன்னும் பனி மூட்டமாகத்தான் இருந்தது.

ரியாய் ஆறேகாலுக்கு முகப்பு விளக்கின் ஒளி மங்கலாய் ஒளிர்ந்து கொண்டு சகதியைக் கிளப்பி பேருந்து நின்றது. கைலியைக் மடித்துக் கட்டிக் கொண்டும் விரிந்த கூந்தல்களை அள்ளி முடிந்து கொண்டும், டவுசரை தூக்கி அரைஞாண்கயிற்றில் சொருகியபடியுமாய் ஆண் பெண் நண்டு சிண்டுகளென எல்லோரும் பேருந்தை நோக்கி ஓடி வந்தார்கள். ஒவ்வொருவராய் இறங்கிக் கொண்டிருந்தனர். அரிசி பருப்பு முதல் பச்சை மிளகாய் வரையான எல்லாமே பேருந்தில் இருந்து இறங்கிக் கொண்டே இருந்தன. "டீச்சரம்மா... அவரு வந்துருவாரா இன்னைகாச்சும்?" என்று இன்றும் கேட்டுக் கொண்டே பூக்கூடையை எடுக்கச் சென்றாள் அகல்விழி.

ங்கநாயகியின் கண்கள் இறங்குபவர்கள் மீதெல்லாம் மோதி மோதி திரும்பிக் கொண்டிருந்தன. அவர் மட்டும் வரவில்லை? பேருந்தும் புள்ளியாய் மறைந்து கொண்டிருந்தது. கடலில் அலை என்று ஓய்ந்திருக்கிறது?



--தொடரும்



.

9 comments:

நேசமித்ரன் said...

கதை நன்றாக துவங்குகிறது

புத்தாண்டு வாழ்த்துகள்

நந்தாகுமாரன் said...

முதல் பத்தியையும் கடைசி பத்தியையும் நீக்கியிருந்தால் கச்சிதமான ஆரம்பம் எனச் சொல்லியிருப்பேன் ...

நசரேயன் said...

ம்ம்

அண்ணாமலையான் said...

ஓஹோ கதை விடுறீங்களா?

Thenammai Lakshmanan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் விதூஷ் நலமே பொலிக

Sundar சுந்தர் said...

நல்ல ஆரம்பம்....மழைக்காலமும் சின்ன ஊரும்.....மேல சொல்லு.

புலவன் புலிகேசி said...

நல்ல ஆரம்பம்...புத்தாண்டு வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

ஆகா. தொடருங்கள் வித்யா.

இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.

கல்யாணி சுரேஷ் said...

தொடர் கதையா? தொடர்க.

Post a Comment