முட்டாள் தாத்தாவும் மூடப் பாட்டியும் - 2

முந்தைய பதிவை இங்கே காணலாம்.

எதையும் தேங்காய் உடைச்சாமாதிரி பளிச்சுன்னு நேரிடையாய் ஏனோ சொல்லாததால், இன்றும் பல நல்லப் பழக்கங்கள் பின்பற்றப் படாமல் இருக்கிறது.

காக்கை கரைந்தால் விருந்தினர் வருகை எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் பயணத்திற்கு போகுமுன் மயில் கரைந்தால் அபசகுனம் என்று சொல்வதில் என்ன இருக்கக் கூடும்? மழை வருமோ?

அதே போல வீட்டில் இருக்கிறவர்களுக்கு முதலில் உணவிட்டு விட்டு பின்தான் வீட்டில் வேலை செய்பவர்களுக்குத் தர வேண்டும், கணவரை இழந்த பெண்கள் முன்னால் வந்தால் அபசகுனம், பிள்ளை இல்லாதவர் குழந்தையைத் தூக்கினால் குழந்தைக்கு ஆயுசு குறையும் என்பதில் எல்லாம் சக மனிதரை மனிதராக மதிக்காத, அவர்கள் ஏதோ ஒரு வகையில் இழந்திருக்கும் சில மகிழ்ச்சிகளை மீண்டும் பெற்று விடக்கூடாது என்ற அஹம்பாவம் தவிர வேறெந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

நடை முறைக்கு ஒத்துவரும், பிற மனிதரைத் துன்புறுத்தாத,ஆனால் தனிப்பட்ட ஒருவருக்கு நன்மைகள் அளிக்கக் கூடிய சில 'மூட' பழக்கங்களை காரணம் அறிந்து பின்பற்றுவதில் தவறேதும் இல்லைதானே?

=================================

6. சமையலில் துவரம் பருப்பு வேக விடும்போது மஞ்சள் பொடி போட வேண்டும்.

மஞ்சள் பொடியின் மருத்துவ குணத்தின் நலன் தினசரி சமையலில் சேரவேண்டும் என்பதற்காகக் கூறி இருக்கலாம். இல்லையென்றால் அபசகுனம் என்றெல்லாம் எதுவும் இல்லை.

7. அதிகாலைகளில் துளசி மாடம் அல்லது கோவிலைப் பிரதட்சிணம் செய்வது, அங்கப் பிரதட்சிணம் செய்வது, நின்ற இடத்திலேயே ஸ்தானப் பிரதட்சிணம்/ஆத்மப் பிரதட்சிணம் செய்வது ஏன்? பௌர்ணமி அன்று கிரி வலம் / மலையைப் பிரதட்சிணம் செய்வது ஏன்?

பொதுவாக நடைப் பயிற்சி, elevated steps-களில் ஏறுதல் எல்லாம் இதயத்திற்கு நல்லது. இதை தினசரிப் பயிற்சியாக எப்படி ஆக்குவது? இறைவனோடு இணைத்ததால் பின்பற்றப் பட்டது. இரவில், பௌர்ணமி நிலவில் (நடப்பதால்) பிரதட்சிணம் (circumambulation) செய்வதால் / சுற்றுவதால் இனப்பெருக்க உறுப்புக்கள் வலிமை பெறுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப் பட்டுள்ளது. பொதுவாக இடமிருந்து வலமாகப் பிரதட்சிணம் செய்வார்கள். எங்கே வேண்டுமானாலும் சுற்றலாமே? ஏன் இறைவன் இருக்கும் கர்ப்பக்ருஹத்தை சுற்றி வரவேண்டும்?

ஒரு நடுப்புள்ளி இல்லாமல் வட்டம் வரைய முடியாது. நடக்கும் போது மனம் / வாய்  வேறு சிந்தனைகளோ அல்லது பேச்சுக்களில் ஈடுபடாமல் இருக்க, இறைவனை தியானித்துக் கொண்டே பன்னிரண்டு முறை சுற்றி வருமாறும் பணித்துள்ளனர். இப்படி சாதாரணமாக பன்னிரண்டு முறை சுற்றும் போது ஏறத்தாழ நாம் இருநூறு அடிகள் வைத்திருப்போம். பெரும்பாலும் கோவிலை சுத்தமாகவும், கோவில்களில் (ஸ்தல விருட்சம்) மரங்களும் துளசியும் நிறைந்தே இருக்கும். இதனால் உடலுக்குத் தேவையான நடையும், நல்ல காற்று மற்றும் மனதுக்கு தேவையான தியானப் பயிற்சி மற்றும் அமைதியான சூழல் மன அமைதியையும் அளிக்கிறது. இதை தவிர, எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகாலை எழுந்திருக்கும் பழக்கமும் வருகிறது.

இன்றும் காலை நடைப் பயிற்சியில், அந்த அதிகாலை அமைதியைக் கிழித்துக் கொண்டு சில குரல்கள் பேசிக் கொண்டு நடக்கிறார்கள். நடக்கும் போது பேசுவது உடல் நலத்திற்கும், குரலுக்கும் கேடு விளைவிக்கும்.

8. கோபுர தரிசனம் கோடி புண்ணியமா?

சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களால் கழுத்தை மேல் நோக்கி  தூக்கிப் பார்க்க முடியாது. தலை சுற்றும். அதே போல காலைச் சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முடியாதவர்கள் கண் நோய் நிச்சயம் இருக்கும்.

காலையில் சிறிது நேரம் நடைப் பயிற்சியும், கைகளை binacular போன்று வைத்துக் கொண்டு சூரியனைப் பார்த்து வந்தால் கண்ணுக்கும் உடலுக்கும் நல்லது. நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் இல்லையா?

9. மாலை நான்கு மணிக்கு மேல் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை கூட்டிச் செல்லக் கூடாது. தோஷம் படும். (அல்லது) சூரிய கிரகணத்தில் கர்பிணிகளும் குழந்தைகளும் வெளியே வரக் கூடாது.

மாலை கூடு திரும்பும் பறவைகள் காற்றில் தன் எச்சங்களை விடும். இதன் துகள்கள் காற்றில் கலந்து விஷமாகிறது. ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இன்னும் நோய் எதிர்ப்பு சக்தியோ அல்லது தாங்கும் சக்தியோ குறைவாகவே இருக்கிறது. இந்த பறவை எச்சங்களை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் உடல் நலக் குறைவு ஏற்படும்.
அதே போல, சூரிய வெளிச்சம் பகலில் முழுமையாக மறையும் போது பூமியில் இருந்து பல விஷ நுண்ணுயிர்கள் வெளி வருகின்றன. இவை காற்றில் கலந்து தூசி போல உண்டாகும். நோயெதிர்ப்பு சக்தி கர்ப்ப காலத்தில் குறைந்திருக்கும். அதே போலத்தான் குழந்தைகளுக்கும்.

10. நல்ல நாளில் (வெள்ளி / செய்வாய் / பண்டிகை தினங்கள்) நகம் / முடி வெட்டக் கூடாது. அதே போல படுக்கையில் அமர்ந்து உண்ணக்கூடாது. நகம்/முடி வெட்டக் கூடாது. (மஹாலக்ஷ்மி போய் விடுவாள்!!)

நகம் மற்றும் முடி மூலம் நோய்கள் சீக்கிரம் பரவும். உணவில் விழுந்து விட்டால் ?? நிச்சயம் சாப்பிடும் போது அருவருப்பை உண்டாக்கும். உணவும் வீணாகும். படுக்கையில் விழுந்தாலும் பார்த்தாலே அசிங்கமாய் இருக்கும். இது தவிர இன்று போல் நகம் வெட்ட நெயில் கட்டர் எல்லாம் கிடையாது முன்பு. கத்தி தான். தவறுதலாய் கையை கிழித்து விட்டால் மற்ற வேலைகள் நின்று விடும். பண்டிகை தினங்களில் அதிக வேலை இருக்கும், பொறுமையாக நகம் வெட்ட முடியாது.

11. பச்சை மாவிலை கட்டுவது ஏன்? (பிளாஸ்டிக் தோரணம் இல்லை)

பறிக்கப் பட்ட மாவிலையில் இருந்து அதி வேகமாக ஆக்சிஜன் வெளியேறுகிறது. ஏறத்தாழ இலை வாடும் வரை ஆக்சிஜன் வெளியேறிக் கொண்டே இருக்கிறதாம். இதனால் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுகிறார்கள்.

12. வீட்டில் பறவை கூடு (குருவி) கட்டினால் நல்லது. கூட்டைக் கலைச்சால் தப்பு.

பறவைகள் முட்டையிடும் காலங்களில்தான் பெரும்பாலும் கூடு கட்டுகின்றன. பாதுகாப்பு என்று பறவைகள் நம்பும் இடத்தில்தான் கூடு கட்டுகின்றன. கூட்டைக் கலைக்கும் போது அவைகளுக்குப் போக்கிடம் இல்லாமல் போகலாம்.

13. ஒத்தை பிராமணன் குறுக்கே வந்தால், வந்த திசையில் பிரயாணம் செய்யக் கூடாது?

"ஒத்தை (ஒற்றை) பிராமணன்" என்பவன் மரணம் சம்பவித்த வீட்டில் தானே சமைத்து உண்பவன். இவன் தனியாக வந்து தனியாகவே சமைத்து உண்டு தனியாகவே போய் விடுவான். எல்லோரும் இப்படித்தான் என்று உணர்த்த பின்பற்றப் படும் பழக்கம் இது. வேதம் பயிலும் மாணவர்கள் படிக்கும் போது பிரமச்சரிய விரதத்தை மீறினால் (பெண்களோடு உறவு கொண்டு விட்டால்) அவன் ஒற்றை பிராமணனாகிறான். இது குருகுல காலங்களில் உண்டானது. மேலும் போகும் வழியில் மரணம் சம்பவித்த வீடு இருக்கிறது என்பதால் வேறு திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்க சொல்லப் பட்டது இது.

இப்போது யாருமே பிராமணன் கிடையாது. மேலும் இப்போது மனிதனின் பிணத்தையே கண்டு கொள்ளாமல் தாண்டிச் செல்லும் அளவுக்கு மனப் பக்குவமும் நமக்கெல்லாம் வந்து விட்டது. ஆகையால் இதைப் பற்றி கவலைப்படவேண்டாம்.

14. விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள்?
 

பிரிந்திருக்கும் உறவுகளை "அவர்களா இருக்குமோ" என்று நினைக்கவும் விக்கல் உதவுகிறது.


நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் (335)

பிராணன் பிரிவதற்கு முன்னால் கடைசி விக்கல் வருமாம். அந்த விக்கல் வருவதற்குள், செய்யவேண்டிய அறச்செயல்களையும், நன்றி செலுத்த வேண்டியவைகளையும் செய்து முடித்து விட வேண்டும், என்கிறது இக்குறள்.

விக்கல் வருங்கால் விடாய்தீர்த் துலகிடைநீ
சிக்கலெனுஞ் சிக்கல் திறலோனே- (திருவருட்பா)

உரை: நீர்வேட்கை யெழும்போது விக்கல் தோன்றுவது உடம்பின் இயல்பாதலால், தாகத்தால் விக்கல் தோன்றும் போது தண்ணீர் அருந்தி விடாதே.  தீர்த்துக்கொண்டு உலகவாழ்க்கைத் தொல்லையில் சிக்கிக் கொள்ளாதே என்று தன் பெயர்க் குறிப்பால் அறிவுறுத்தும் சிக்கல் நகரில் எழுந்தருளும் பெருமானே என உரைக்கின்றார் திருஞானசம்பந்தர். சிக்கல் நாகைப்பட்டினத்துக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

விக்கல் மாறிலி….
என் நினைவோ முடிவிலி..
உன் விக்கலின் காரணி
இல்லையென் நட்பினி. (Author unknown)


உன் விக்கலுக்கு காரணம் என் நினைவு என்று கூறினால் , நீ விக்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான் என்று அர்த்தம் !!!

இல்லையென்றாலும், வில்லங்கமாக "நான்தான் இங்கிருக்கேனே? யார் உன்னை நினைத்தார்?" என்று செல்ல சண்டை போடவும் செய்யலாம்.

தர்க்கமிட்டுற வாடி யீளைநொய்
கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
சிச்சிசிச்சியெ னால்வர் கூறிடவுழல்வேனோ  (திருப்புகழ்)

தர்க்கவாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (சில காலத்துக்குப் பின்னர்) கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று ஊளை நாய் போல் இழிவு பட்டு சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரிவேனோ? என்று வருந்துகிறார் அருணகிரிநாதர்.

 இதெல்லாம் யார் எப்போது விக்குகிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. யார் விக்கினாலும் கொஞ்சம் நெல்லிக்காயும், தேனும், தண்ணீரும்  கொடுங்கள்.

(இன்னும் வரும்)
.

16 comments:

S.A. நவாஸுதீன் said...

///சக மனிதரை மனிதராக மதிக்காத, அவர்கள் ஏதோ ஒரு வகையில் இழந்திருக்கும் சில மகிழ்ச்சிகளை மீண்டும் பெற்று விடக்கூடாது என்ற அஹம்பாவம் தவிர வேறெந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.///

இங்கே தேங்காய் உடைச்சமாதிரி பளிச்சுன்னு சொல்லிட்டீங்க

S.A. நவாஸுதீன் said...

//நடக்கும் போது பேசுவது உடல் நலத்திற்கும், குரலுக்கும் கேடு விளைவிக்கும்.

Talk When you Walk (ஐடியா) விளம்பரம் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் தோனும் இது.

வால்பையன் said...

//இப்போது யாருமே பிராமணன் கிடையாது.//

அப்ப பூணூல் போட்டவங்கல்லாம், அண்ட்ராயர் கழண்டு விழாம இருக்க போட்ருக்காங்களா?

கல்யாணி சுரேஷ் said...

//பறிக்கப் பட்ட மாவிலையில் இருந்து அதி வேகமாக ஆக்சிஜன் வெளியேறுகிறது. ஏறத்தாழ இலை வாடும் வரை ஆக்சிஜன் வெளியேறிக் கொண்டே இருக்கிறதாம். இதனால் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுகிறார்கள்.//

இதுவரையில் அறிந்திராத தகவல். உபயோகமான பதிவு. நன்றி விதூஷ்.

ரிஷபன் said...

இதெல்லாம் யார் எப்போது விக்குகிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. யார் விக்கினாலும் கொஞ்சம் நெல்லிக்காயும், தேனும், தண்ணீரும் கொடுங்கள்.

சீரியஸ் மேட்டர சுவாரசியமா சொல்ல முடியுது உங்களால..

நசரேயன் said...

//விக்கல் மாறிலி….
என் நினைவோ முடிவிலி..
உன் விக்கலின் காரணி
இல்லையென் நட்பினி. (Author unknown)//

சத்தியமா நான் தான் எழுதினேன், காப்புரிமை வாங்கி வைக்க மறந்துட்டேன்.

இன்றைய கவிதை said...

என்ன விதூஷ்?!

ஒரே மேட்டரைப் போட்டு
'மேட்டரை' முடிச்சிட்டீங்களே?!

தொடருங்க!

-கேயார்

Vidhoosh said...

நன்றி நவாஸ்: ஐடியா விளம்பரம் வியாபார உத்திக்கு (வஞ்சம்) இன்னொரு அத்தாட்சி.

நன்றி வால்: பூணூல் போட்டால் மட்டும் பிராமணன் இல்லை. தாடி வச்சால் மட்டும் பெரியாரும் இல்லை.

நன்றி கல்யாணி சுரேஷ்

நன்றி ரிஷபன்

நன்றி கவிஞரே (நசரேயா);) குசும்பு மட்டும் தீராதுங்க.

கேயார் - நன்றிங்க. என்ன??

-வித்யா

வால்பையன் said...

//தாடி வச்சால் மட்டும் பெரியாரும் இல்லை.//

மீசை இல்லாமல் தாடி வைப்பது ஒரு அடையாளம் தான் தெரியுமோ!?

பொட்டு வைப்பது
கையில் கயிறு கட்டுவது
எப்படி வரிசையாக சொல்லிகிட்டே போகலாம்!

இந்துக்களின் (மீட)பழக்கம் கணக்கிட முடியாது!

அன்புடன்-மணிகண்டன் said...

முதல் முறை வருகிறேன் என்று நினைக்கிறேன்..
அற்புதமான பதிவு...
இனி அவசியம் தொடர்ந்து வருவேன்...

வால்பையன் said..
//அப்ப பூணூல் போட்டவங்கல்லாம், அண்ட்ராயர் கழண்டு விழாம இருக்க போட்ருக்காங்களா?//

அந்த காலத்துல இருந்து இன்னிவரைக்கும் பூணூல் போட்டவங்ககிட்ட மட்டுமே உங்க வாலை ஆட்டமுடிகிறது...

வால்பையன் said...

//அந்த காலத்துல இருந்து இன்னிவரைக்கும் பூணூல் போட்டவங்ககிட்ட மட்டுமே உங்க வாலை ஆட்டமுடிகிறது... //

அடுத்த பின்னூட்டத்தில் மீசையை செரச்சு விட்டுறுக்கேன் பாருங்க மணிகண்டன்!

என் வால் எல்லா பக்கமும் நுழையும்!

Vidhoosh said...

வால்: நிதானமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். ஜாதீயம் அல்லது யாரையும் இழிவு படுத்தும் நோக்கோ இந்த பதிவில் இல்லை. Please mind your language.

-Vidhya

வால்பையன் said...

//வால்: நிதானமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். ஜாதீயம் அல்லது யாரையும் இழிவு படுத்தும் நோக்கோ இந்த பதிவில் இல்லை.//

எந்த மனிதரையும் இழிவு படுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை!

நீங்கள் சொன்னது போல் தான்!
பூனூலும், தாடி வைத்தலும் மூட நம்பிக்கைகள்!

மறுக்கமுடியுமா?

Nundhaa said...

ம்

பலா பட்டறை said...

நல்ல விஷயங்கள் எல்லாமே பூடகமாகத்தான் இருக்கிறது... தேடிக்கண்டுபிடித்து தொலையாமல் இரு என்று விட்டு விட்டார்களோ என்னமோ...?? ரொம்பவும் ஆழமாய் விழயங்கள் தொடுகிறீர்கள்... என்னை கவர்ந்த ஆச்சர்யங்களில் நீங்களும் ஒருவர்.. பதிவுக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

மாலை கூடு திரும்பும் பறவைகள் காற்றில் தன் எச்சங்களை விடும். இதன் துகள்கள் காற்றில் கலந்து விஷமாகிறது]]

மறந்து விட்ட தகவல்.

பதிவு நன்று.

Post a Comment