வேண்டும் வாழ்க்கை மீதான நம்பிக்கை

நாம் இன்னும் ஒரு வருடத்தைக் கடந்து விட்டோம். வெஸ்டேர்ன் ப்ளாக் ரைனோசரஸ்,  போலார் ஐஸ் காப்  (the worst i consider that happened during 2009), போன்ற இயற்கை பேரழிவும்,  லேமன் ப்ரதர்ஸ், வூல்வோர்த்ஸ், சத்யம் ராஜு, போன்றவையால் பொருளாதாரம் காணாமற் போனதுமாக அதிகபட்ச இழப்புக்களையும் 2009 கொடுத்துச் சென்றது. அழகு இலங்கைத் தமிழின் நம்பிக்கை நட்சத்திரம் மறைந்து போனது.

முதலீடுகள் மீதான இலாபங்கள் நெகடிவ்வில் வேகமாக போய்கொண்டிருக்க, குறைந்தது வருமானமாவது மிஞ்சியதே என்ற ஆறுதல் கூட பெற முடியாத வேலை இழப்பு என்ற பேரிடியும், எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற தலை மேல் கத்தியும், நம் இளைய சமுதாயத்தை பிரட்டிப் போட்ட வருடம். இதை எழுதும் போதே வேலை இழப்பால் தற்கொலை செய்து கொண்டவர்களையும், குடும்பத்தையே கொன்று தானும் மரித்துப் போன நிகழ்வுகள் என் கண்களைக் கலங்கச் செய்கிறது. சீட்டுக் கட்டுகள்ஒன்றன் பின் ஒன்றாக சரிவது போல சட சட வென்று பிப்ரவரி 09 முதல் வரிசையாய் அடி மேல் அடி வாங்கிய உலகப் பொருளாதாரம், வேலை இழப்பு எத்தனை பேரை பிணமாக்கியதோ? எத்தனை பேரை உயிருடன் பிணமாக மன நோயாளியாக்கிப் பார்த்ததோ? அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

இவை எல்லாவற்றையும் விட 2009-இல் நாம் இழந்தது அரும்பெரும் சொத்தான "வாழ்க்கை மீதான நம்பிக்கை". எங்கே போனது?

எப்படிப் பட்ட பயங்கர இரவுகளையும், விடியாத பகல் பொழுதுகளையும்  காட்டிச் சென்ற நாட்களைக் கொண்ட வருடம் 2009. ஒருவாறு இதோ முடிகிறது.

இனி வரும் நாட்கள் நம் இளைஞர்களுக்கும், தன் வாழ்நாள் முழுதும் ஈட்டிய பொருளை எல்லாம் முதலீடாக்கி வைத்திருக்கும் மூத்தவர்களுக்கும், வேலை இழந்த மகன்களை/மகள்களை  கொண்ட பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வருடமாகவும், அனைவரும் குறைந்த பட்ச மகிழ்ச்சியாவது கொண்டு, புன்னகை பூக்கும் வருடமாக அமைய வேண்டும் என்றே நாளை முழுதும் பிரார்த்தனை செய்வோம்.

முடிந்தால் இப்பதிவைப் படிக்கும் நீங்கள் அனைவரும் எங்கிருந்தாலும் ஒரு நிமிடம் இந்தப் பிரார்த்தனையைச் செய்யுங்கள். உங்களுக்கு இறைவன் மீதான நம்பிக்கை இல்லாவிட்டாலும், வாழ்க்கை மீதான நம்பிக்கையை நம் சக மனிதர்கள் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் இப்புத்தாண்டு புன்னகையாய் மலரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


.

17 comments:

T.V.Radhakrishnan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Sivaji Sankar said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

அண்ணாமலையான் said...

உங்கள் அன்பு வாழ்த்துக்களை பெற்றேன்.. நன்றி..
உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இராஜ ப்ரியன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் .......

பாலகுமார் said...

புதிதாய் மலரட்டும் புத்தாண்டு. வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

தலைப்பு மிக சரி.

பிரார்த்தனை நித்தமுண்டு சகோதரி...

S.A. நவாஸுதீன் said...

எல்லோருக்கும் அன்பும், மனிதநேயமும், சகிப்புத்தன்மையும், உழைப்பும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு வாழ்வு சிறக்கட்டும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் விதயா

Sangkavi said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பலா பட்டறை said...

நானும் வேண்டிக்கொள்கிறேன்...

எல்லோரும் நலமே வாழ.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.:))

வால்பையன் said...

என்னுடய வாழ்த்துக்களும்!

புதுகைத் தென்றல் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் அனைவரின் சார்பில் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நசரேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

முகிலன் said...

வரும் வருடம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்

Nundhaa said...

Happy Happy Happy New Year :)

இன்றைய கவிதை said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

Post a Comment