1. எல்லோர் உணர்வுகளையும் மதிப்பேன்: அதாவது, பதினொரு பேருக்கு அனுப்ப வேண்டிய ஈமெயில்களையெல்லாம் ஒண்ணாந்தேதி அன்னிக்கு அனுப்புவேன்
2. என்னனு தெரியல... ரெசொளுஷன் (resolution) அப்படீன்னா என்னன்னு கண்டுபிடிப்பேன்
3. தூக்கம் வந்தா தூங்கிடுவேன். அதுக்குன்னு இனிமே சாக்லேட் சாப்பிடமாட்டேன்
4. இன்டர்நெட்டில் ரொம்ப நேரம் செலவு பண்ண மாட்டேன்
5. எல்லோரையும் வாழ வைப்பேன். அதாவதுங்க, கூகிள் பயன்பாட்டை குறைச்சுகிட்டு கூகுளில் bing-கைத் தேடிக் கண்டுபிடிப்பேன்.
6. தாத்தா நிஜமாவே ரிடையர் ஆகலைன்னா பெரியண்ணாவுக்கே வோட்டு போடுவேன். வேற வழி. இல்லன்னா "விக்"கினாலும் பரவால்லைன்னு பார்வார்டு பிளாக்குக்கு வோட்டு போடுவேன்
7. மண்ணு சாப்பிட மாட்டேன்: இனிமே யாராவது கதை கவிதை போட்டி வச்சா பழைய மண்ணெல்லாம் துப்பி, வாய் முழுசும் காலியான பின்னாடித்தான் அடுத்த மண்ணின் மைந்தி ஆவேன். பட்டறைக்கெல்லாம் போக மாட்டேன்.
8. ஆபீசுக்கு லீவு போட ஒரே தாத்தாவைக் கொல்ல மாட்டேன்.
9. முடிஞ்சா கொஞ்ச நேரம் பேசாம இருப்பேன்
10. கவிதை, கட்டுரை, கதை போன்றவற்றை கொஞ்சநாள் நிறுத்திட்டு ஆயிரம் கேள்வி, நூறு வடை பெறுதல் போன்ற தொடர் பதிவுகளை உருவாக்கி பதிவுலகையே அலறடிப்பேன் (அதுக்கான முதல் முயற்சிதான் இது) ஒன்னு இல்லன்னா இன்னொன்னு ...
பத்த வச்சிட்டே பரட்டை இதைத் தொடர அன்புடன் அழைப்பது. நேரமிருந்தா பதிவிடுங்க மக்காஸ் மற்றும் சகாஸ்.
25 comments:
சொல்லிட்டீங்கல்ல பத்த வச்சிடுவோம்...
//தூக்கம் வந்தா தூங்கிடுவேன். அதுக்குன்னு இனிமே சாக்லேட் சாப்பிடமாட்டேன்//
//கூகுளில் bing-கைத் தேடிக் கண்டுபிடிப்பேன்.//
//ஆபீசுக்கு லீவு போட ஒரே தாத்தாவைக் கொல்ல மாட்டேன்.//
//முடிஞ்சா கொஞ்ச நேரம் பேசாம இருப்பேன்//
ஹஹாஹா...
எல்லாத்தையும் பண்ணிடீன்கன்னா அடுத்த வருஷத்துக்கு?? கொஞ்சம் மிச்சம் வைங்க..
நல்லாத்தான்யா பத்த வைக்கிறாய்ங்க.
இந்த தொடர் பிப்ரவரி மாசம் வரைக்கும் போகாம இருந்தா சந்தோஷம்தான்.
பத்தவைக்கிற பரட்டைகளின் பட்டியலில் என்னை முதலிடத்தில் வைத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவிப்பதா?
அல்லது அங்கேயாவது முதலிடம் கிடைத்ததே என்று குதித்துக் கும்மாளமிடுவதா?
வயசாகிப்போச்சு, மூச்சு வாங்கும்!
இருந்தாலும் இந்த பத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை, இப்படியெல்லாம் எனக்கு முதல் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தே,
2008 டிசம்பரில் எழுதிய பதிவு, உடனடியாக, சுடச்சுட!
http://consenttobenothing.blogspot.com/2008/12/may-highest-good-be-yours.html
@ ராஜு!
எதை, எப்படித் தீர்மானிப்பது என்ற தேடல் வெறும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கை முழுதுமே தொடர்ந்து கொண்டிருப்பது தான்!
கவலைப்படாமல் தொடருங்கள்!
ஆகா ஆகா ஆகா
சரி சரி ...
4. இன்டர்நெட்டில் ரொம்ப நேரம் செலவு பண்ண மாட்டேன்]]
நடக்குற கதையா இது.
இல்லன்னா "விக்"கினாலும் பரவால்லைன்னு பார்வார்டு பிளாக்குக்கு வோட்டு போடுவேன்]]
அது யாரோட ப்ளாக்குங்க
லின்க் குடுக்கலாமுல்ல - நாங்களும் ஓட்டு போடுவோம்ல :P
அம்மாடியோவ்.... சுமோ' ங்களுக்கு நடுவுல சுண்டெலி
(நாந்தேன்:((......... )
ஆயிரம் கேள்வி, நூறு வடை பெறுதல் போன்ற தொடர் பதிவுகளை உருவாக்கி பதிவுலகையே அலறடிப்பேன்]]
ஏன் இந்த “வேட்டைக்காரன்” வெறி
//முடிஞ்சா கொஞ்ச நேரம் பேசாம இருப்பேன்//
நல்ல முடிவு. உங்களுக்கும், மத்தவங்களுக்கும்.:)
//ரெசொளுஷன் (resolution) அப்படீன்னா என்னன்னு கண்டுபிடிப்பேன் //
கண்டுபிடிங்க.. கண்டுபிடிங்க.:)
//10. கவிதை, கட்டுரை, கதை போன்றவற்றை கொஞ்சநாள் நிறுத்திட்டு ஆயிரம் கேள்வி, நூறு வடை பெறுதல் போன்ற தொடர் பதிவுகளை உருவாக்கி பதிவுலகையே அலறடிப்பேன் (அதுக்கான முதல் முயற்சிதான் இது) ஒன்னு இல்லன்னா இன்னொன்னு ...//
ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. பினிசிங் சரியில்லையே.:)
மனதில் தோன்றியதை மறைக்காமல் சொன்னதுக்கு வாழ்த்துகள்.
சகா........
நாங்களும் பத்தவைப்பமுள்ள............
/முடிஞ்சா கொஞ்ச நேரம் பேசாம இருப்பேன்/
முடிஞ்சாத்தானே?!
அதுக்குள்ளே அக்பர் வந்து,நல்ல முடிவு.உங்களுக்கும்,மத்தவங்களுக்கும்.:) அப்படீன்னெல்லாம் சந்தோஷப்படுகிறார்!
ஆத்தாடி... :-))))
2. என்னனு தெரியல... ரெசொளுஷன் (resolution) அப்படீன்னா என்னன்னு கண்டுபிடிப்பேன்
அநேகமா என்னோட 10-ம் இதுவாதான் இருக்கும்.
///8. ஆபீசுக்கு லீவு போட ஒரே தாத்தாவைக் கொல்ல மாட்டேன்.///
அப்போ இந்த வருஷம் யாரு?
ஐடியா நல்லாத்தான் இருக்கு. போட்டுருவோம்.
சிரிச்சு சிரிச்சு படிச்சிக்கிட்டு இருந்தா கீழே என் பெயரையும் போட்டிருக்கீங்களே மேடம்..
நான் சிகரட்ட கூட பத்த வைச்சதில்லையே.. :)
//பார்வார்டு பிளாக்குக்கு
இப்படி ஒரு கட்சி இருக்குறத நியாபகம் வெச்சுருக்குற 2வது ஆள் நீங்கதான். முதல் ஆள் விக் இல்லை. அவரு படத்துல நடிக்க ஆரம்பிச்சுட்டாரு. முதல் ஆள் யாருன்னு கண்டுபிடிங்க
தொடர் பதிவு முடியலையா !!!!!!!!!!!!!!!
நசரேயன் said...
தொடர் பதிவு முடியலையா !!!!!!!!!!!!!!!
பம் பம் பம் ஆரம்பம்னு இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு! அதுக்குள்ளேயே முடியலையான்னு கேக்கறீங்க!
முடியலையா :-))
விதூஷ்!
என்னுடைய பங்கை நிறைவேற்றியாகி விட்டது!
தொடர்பதிவு எழுத மாட்டேன்னு ஒரு தீர்மானம் கொண்டு வரணுமப்பா!
எழுதிடுவோம்!
கலக்கல் resolutions :)
பத்த வச்சுடீங்களே பரட்டைக்கா!..
:-)))
இனி,கொழுந்து விட்டு ஏறியும்..
இது அதுன்னு சொல்ல முடியாது.பத்தும் சும்மா பத்துது..
நம்ம பங்குக்கும் கொழுத்தி போடணுமே..செஞ்சுருவோம்.
நன்றி வித்யா..
நடக்கட்டும்.... நடக்கட்டும்....
வாழ்த்துக்கள்...
வருகை தந்த எல்லோருக்கும் நன்றி. பத்த வைக்கப் போகும் பத்தரை மாத்து தங்கங்களுக்கு நன்றியோ நன்றி. :))
கி.மூ. மூத்தவர்கள் என்றும் முதலில் அதான்.
அப்படீல்லாம் பேசாம இருந்துடுவேன்னு நம்பிக்கை வைக்க வேண்டாம் அக்பர்.
ஜமால்: :)) இதுதான் சரியான காமெடி... இதோ லிங்க். போயி மறக்காம ஒட்டு போடுங்க. forwardbloc.heightsofcomedy.blogspot.com
ராஜு: 2011 வருஷம் வரும் பிப்ரவரியத்தான சொல்லறீங்க. முடிஞ்சிடலாம்னுதான் நினைக்கிறேன்.
நன்றி அமுதா.
ரோஸ்விக் : :))
நவாஸ்: நன்றி. resolution பற்றிய பதிவு விரைவில்.
மணிகண்டன்: எழுதிடுங்க.
பின்னோக்கி: கடவுள் முரளி வாழ்க....
நசரேயா: அங்க போய் இங்க போய் உங்களுக்கும் வரும்'
வால்: :))
யாத்ரா: நன்றி
நன்றி ராஜாராம்
கமலேஷ்: :) நன்றிங்க
Post a Comment