தனி
இருளென்றால் ரொம்பவே எனக்கு பயம்தான்
யாரோ வெளிச்சமென்றாலே
பயமென்றதும் சிலாகித்துச் சிரித்த நட்பிடம்
மின்சாரம் இல்லாத நேற்றிரவின்
புழுக்கத்தை புலம்பிய அதே நிமிடம்
புழுக்கம் துடைத்தான் கைவண்டி இழுப்பவன்.

உறக்கம் தொலைந்த இரவொன்றில்
நட்சத்திரங்களை எண்ணிய பொழுதில்,
நிலவின் வெளிச்சம் காட்டும்
அவரவர் நிலவும் நட்சத்திரங்களும்
யாரோ இருவரின் எதிர்காலம்.

விடியற்காலையின் சூரியன் மேல் விருப்பம்
கொண்ட என் நட்புக்கு தெரியுமா
மாலையில் சிவக்கும் வானின் அழகு?
தனிதான், நீ-நான்-அது-எதுவும் 
யாருக்காகவுமில்லை
இன்றைய நாடகத்திரைக்கு வேண்டியதெல்லாம்
ஒரு சிலரின் கைத்தட்டல்கள் மட்டுமே.

14 comments:

அண்ணாமலையான் said...

நான் தட்டிட்டேன்.. (உண்மையா..)

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு வித்யா.

Nundhaa said...

ஒரு கை ஓசை தான் கேட்கிறது :(

பின்னோக்கி said...

தேர்ந்தெடுத்த வார்த்தைகள் அருமை.

//ரொம்பவே எனக்கு பயம்தான்

ரொம்பவே பயம்தான் எனக்கு ??

சுகுணாதிவாகர் said...

/தனிதான், நீ-நான்-அது-எதுவும்
யாருக்காகவுமில்லை
இன்றைய நாடகத்திரைக்கு வேண்டியதெல்லாம்
ஒரு சிலரின் கைத்தட்டல்கள் மட்டுமே. /

இந்த வரிகள் அற்புதமாக இருக்கின்றன.

Sivaji Sankar said...

:))

நட்புடன் ஜமால் said...

வெறுமே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு போக முடியலை

ஆனா என்னா சொல்றதுன்னும் தெரியலை

கவிதை(கள்) said...

கவிதையும் படமும் அழகு

விஜய்

பலா பட்டறை said...

தனிதான், நீ-நான்-அது-எதுவும்//

நல்லா இருக்குங்க...

//யாருக்காகவுமில்லை
இன்றைய நாடகத்திரைக்கு வேண்டியதெல்லாம்
ஒரு சிலரின் கைத்தட்டல்கள் மட்டுமே//

சூப்பர். :)

தியாவின் பேனா said...

அருமையான இடுகை வாழ்த்துகள்
நல்ல கவிதை
தரமாக உள்ளது.
நல்ல நடை

Sangkavi said...

வித்யா கவிதையும் அழகு... படமும் அழகு......

Vidhoosh said...

எல்லோருக்கும் நன்றி.

அண்ணாமலையான்: கேட்டுச்சு கேட்டுச்சு :)

நவாஸ் - நன்றிங்க

நந்தா: :(

பின்னோக்கி: முதலில் அப்படித்தான் எழுதினேன். படிக்கும் போது "வறட்சி"யாக இருந்ததென்று இப்படி மாற்றினேன். (இப்போ மட்டும் எப்படி இருக்குன்னு நீங்க திட்றது கேட்கிறது)

ஜமால்: :) நன்றிங்க

சுகுணாதிவாகர்: (!) நன்றிங்க

சிவாஜி: கேலியாப் போச்சுங்க

கவிதைகள் விஜய்: நன்றிங்க

பலாபட்டறை: நன்றிங்க

தியாவின் பேனா: :) நன்றிங்க

சங்ககவி: நன்றிங்க.

ருத்ர வீணை said...

எப்படிங்க இப்படியெல்லம் யோசிக்கறீங்க..
சத்தியமா " முடியல "..

வெ.இராதாகிருஷ்ணன் said...

கடைசி வரிகள் கவிதையை அழகுபடுத்துகிறது

Post a Comment