இந்த முறை நிறையா போட்டோ...
எங்க கிராமத்து வீடு - முன்னால் எம்பொண்ணு.
கண் கூசும் காவேரி மணல் வெளி
கோவிலில் கிடைத்த பழைய போட்டோ. 1985-யில் கடைசியாக நடந்த கோவில் கும்பாபிஷேகத்தின் போது எடுத்தது. இந்த போட்டோவில் நான் இல்லை.
திரௌபதி கோவில் முகப்பில் ரஜினி:
குழந்தைத்தனம் தொலையாத வெள்ளந்தியானக் குழந்தைகள்.
தாயம்மா சரோஜா (பல் செட்டு மற்றும் தன் பேரனுடன்)
பக்கோடா
தர்ஷிணியின் கிருஷ்ணர் மறு அவதாரம் எடுத்தே விட்டார். வர்ணம் பூசும் வேலை முடிந்திருந்தாலும், கேமராவிலிருந்து கம்ப்யூட்டர்-ருக்கு போட்டோக்கள் மாற்ற நேரம் இல்லாமல் கிடந்தது.
உடையும் முன்
உடைந்த பின்: கழுத்தில் எம்சீலால் ஒட்டி, வெள்ளை பெயின்ட் அடித்து கண் மட்டும் திறந்திருந்தேன்.
இப்போது: வர்ணம் எல்லாம் எழுதிய பின். "கிருஷ்ணன் நீலமாத்தான்" இருப்பார் என்று தர்ஷிணி தீர்மானித்ததால்.
"ஏன் கேக்கற"
"இவ்வளோ அழகா டிரஸ் பண்ணிருக்கியே கிருஷ்ணனுக்கு.... "
"உனக்கும் தான் அழகா டிரஸ் பண்ணுவேன்..."
"அப்போ இந்த மாதிரி நகை கிரீடம் எல்லாம் எங்க.. எனக்குத்தான அம்மா நீ.. "
: (
மழை
ஆல்காட் பள்ளி பொருளாதார ரீதியில் ஏழ்மையான மாணவர்களுக்கு முற்றிலும் இலவசக் கல்வி அளித்து வருகிறது. எல்லாப் பாடங்களும் இப்பள்ளியில் தமிழிலேயே கற்றுத் தரப் படுகிறது. உங்களுக்குத் தெரிந்த 'பண முடை' காரணங்களுக்காக படிப்பை நிறுத்தி இருக்கும் மாணவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிக்கலாம். மாசம் நூறு ரூபாய் என்ற கணக்கில், நமக்கும் வலிக்காமல், வருஷத்துக்கு ஒரு முறை இது போன்ற பள்ளிகளுக்கும் நன்கொடை அளிக்கலாமே. யோசிங்க சகாஸ்.
.
16 comments:
போட்டோக்களுடன் ஊஞ்சல் ஆட்டம் அருமை...
கிருஷ்ணர் ரொம்ப அழகா இருக்கார்.. :)
புகைப்படங்கள் எனக்கும் பழைய நினைவை மீட்டுகிறது
நன்றி.
1985 போட்டோ சூப்பர்
காவிரிக் கரை புகைப் படங்கள் அருமை.
கிருஷ்ணர் பொம்மையை சரி செய்தது மிக அழகு.
படங்கள் அழகு.
ஆல்காட் பள்ளி குறித்த விவரங்கள் பகிர்ந்துகொண்டது சிறப்பு.
நீலவண்ணக் கண்ணன் அழகு.
புகைப்படங்கள் அனைத்தும் அழகு.......
//கண் கூசும் காவேரி மணல் வெளி//
மணலே இருக்கிற மாதிரி தெரியலையே, ஒரே புதரால்ல இருக்கு, எங்க ஆறும் இப்போ இப்படிதான் இருக்கு
கைவசம் இந்த தொழிலும் இருக்குன்னு சொல்லுங்க...
//இப்போது: வர்ணம் எல்லாம் எழுதிய பின். "கிருஷ்ணன் நீலமாத்தான்" இருப்பார் என்று தர்ஷிணி தீர்மானித்ததால்.//
//நீ என்ன யசோதாவா"
"ஏன் கேக்கற"
"இவ்வளோ அழகா டிரஸ் பண்ணிருக்கியே கிருஷ்ணனுக்கு.... "
"உனக்கும் தான் அழகா டிரஸ் பண்ணுவேன்..."
"அப்போ இந்த மாதிரி நகை கிரீடம் எல்லாம் எங்க.. எனக்குத்தான அம்மா நீ.. "//
சூப்பர் பாஸ்!
மிராசுதாரா நீங்க?...
எங்க ஊர்ல எல்லாம் மிராசு வீடுதான் இப்படி இருக்கும்.
என்ன..காம்பவுண்டுசுவரும்,
சுவரில் ரெண்டு கோழியும் நிற்கும்..இன்றோ நாளையோ குழம்பில் மணக்க...
//"நீ என்ன யசோதாவா"
"ஏன் கேக்கற"
"இவ்வளோ அழகா டிரஸ் பண்ணிருக்கியே கிருஷ்ணனுக்கு.... "
"உனக்கும் தான் அழகா டிரஸ் பண்ணுவேன்..."
"அப்போ இந்த மாதிரி நகை கிரீடம் எல்லாம் எங்க.. எனக்குத்தான அம்மா நீ.. "
: (//
என்ன பதில் சொல்ல போறீங்க இந்த நியாயமான கேள்விக்கு? தர்ஷினிக்கு support ஆ நாங்களும் இருக்கோம்ல!
//ஆல்காட் பள்ளி பொருளாதார ரீதியில் ஏழ்மையான மாணவர்களுக்கு முற்றிலும் இலவசக் கல்வி அளித்து வருகிறது. எல்லாப் பாடங்களும் இப்பள்ளியில் தமிழிலேயே கற்றுத் தரப் படுகிறது. உங்களுக்குத் தெரிந்த 'பண முடை' காரணங்களுக்காக படிப்பை நிறுத்தி இருக்கும் மாணவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிக்கலாம். மாசம் நூறு ரூபாய் என்ற கணக்கில், நமக்கும் வலிக்காமல், வருஷத்துக்கு ஒரு முறை இது போன்ற பள்ளிகளுக்கும் நன்கொடை அளிக்கலாமே. யோசிங்க சகாஸ்.//
கண்டிப்பா முயற்சி பண்றேன் வித்யா.
பதிவு வித்தியாசமா கலக்கலா இருந்தது..
கிருஷ்ணர் அருமை!
தங்கள் மகளின் கேள்வியும் அருமை!
தங்களின் 'பெப்பே'வும் அருமைங்க!
-கேயார்
காவேரி மனல்வெளி மிக அருமைங்க
காவேரியின் அருகேயிருந்து வளர்ந்தவன் அதன் அழிவையும் பார்த்து கொண்டே
கிருஷ்ணர் ரொம்ப அழகு!
எல்லோருக்கும் நன்றி நண்பர்களே.
நன்றி மணிகண்டன்
நன்றி மண் குதிரை
நன்றி பின்னோக்கி
நன்றி ராகவன் நைஜீரியா
நன்றி அசோக்
நன்றி நவாஸ்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி சங்ககவி
நன்றி சங்கர் :(
நன்றி அப்துல்லா
நன்றி அண்ணாமலையான் : :))
நன்றி ராஜாராம் - ஒரு தராசு தார் கூட இல்லீங்க. :)) கோழியா -அபச்சாரம்.
நன்றி கல்யாணி சுரேஷ்: ம்ம். ஞாயம் எல்லாம் நல்லாதானிருக்கு நல்லா.. :))
நன்றி ரிஷபன்
நன்றி கே.ஆர். :)
நன்றி ஜமால் : :( என்ன செய்வது...ஒன்னும் புரியல. உள்ளூரில் பேசின போது, ஊர்க்காரங்க எல்லாம் காவேரி நடுவில் ஆழமாக்க முயற்சித்த போது, மணல் திருட்டு வழக்கு போட்டாங்களாம் :(
நன்றி சுந்தர்
Post a Comment