குடுமி புராணம்


டிஸ்கி: யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.. நோ அரசியல், நோ ஜாதீயம் ப்ளீஸ்.

============================
குடுமி பிடி சண்டை, சோழியன் குடுமி சும்மாடு ஆகுமான்னு சொல்லுவாளோல்யோ? அதுலேந்து நேக்கு ஒரே யோஜனை. இந்த குடுமி கிடுமி எல்லாம் ஏன் வச்சுக்கரான்னு? அப்படியும் இப்பிடியும் பல புஸ்தகங்களை பிரட்டி போட்டு பாத்தா குடுமிலேயே எத்தனை விதம். ஜுட்டு, குடுமி, சிகைன்னு பல பேர்ல இருந்தாலும் இதைப் போய் எதுக்கு வளத்துண்டுன்னு.. ஸ்ரமப்பட்டுண்டு.. என்னவோ போட மாதவா!

குடுமிலேயே நம்பூதிரி குடுமி, நாயர் குடுமி, தீக்ஷிதாள் குடுமி, கட்டுக் குடுமி, முன் குடுமி, பின் குடுமி-ன்னு எத்தனை எத்தனை விதமான ஹேர் ஸ்டைல் இருக்கு தெரியுமோ னோக்கு? ஆனானப்பட்ட கல்கி கூட தியாக பூமில பி.ஏ. குடுமியப் பத்தி அப்படி சிலாகிச்சிருப்பார். பொன்னியின் செல்வனில் வரும் ஆழ்வார்க்கடியானுடைய (குடுமி வைஷ்ணவன்) முன் குடுமி ராமேசுவரக் கடற்காற்றில் பறந்து கொண்டிருக்கும் காட்சியை கற்பனை பண்ணி பாக்காதவா யாராவது உண்டோ?

அப்ப்டியே குடுமியை லேசா கழட்டி விட்டுட்டா அந்நியன் ரெமோ மாதிரி பங்க்கு (funk) ஹேர் ஸ்டைல் ஆகிடும். இப்பல்லாம் ஆம்னாட்டிகளும் தலை வளத்துக்கறாளே! ஹரே கிருஷ்ணா. எதையும் பேசப் ப்டாது லோகத்துல.

சரி. அதை விடுங்கோ... நம்ம டாக்டர் எஸ்.ஜே.பி. (ஜெயபாரதி) சொல்லறார் பாருங்கோ.

லோகமே ஜெபரி சாஸருடைய கேண்டர்பரி டேல்ஸ் மாதிரி சமாசாரங்களை வச்சுண்டு அழுது வடிந்சூண்டுருந்தது. ஒருநாள் கார்த்தால லண்டன்ல வெஸ்ட் மின்ஸ்டர் அபி அப்டீங்கற ஒரு இடத்துல திடீர்னு ஒரு பொம்மனாட்டி "Arise, Sir Walter Raleigh!" அப்படீங்கறா. முதலாம் எலிசபெத் மகாராணியின் முன்னாடி  மண்டி போட்டுண்டு நைட் விருதை வாங்கிண்ட வால்டெர் ராலி எழுந்து நின்னார். பெரிய கவிஞர், மகாவீரர், போரியல் நிபுணர், ஆராய்ச்சியாளர், நாடுகள்
கண்டுபிடித்தவர், பிரிட்டானிய சாம்ராஜ்யத்தின் சிற்பிகளில் ஒருவர், முதலாம் எலிஸபெதின் அவைக்களத்தில் அதிக செல்வாக்கு உடையவர். ராணியின் செருப்பில் சகதி படக்கூடாதுன்னு  தன் மேலங்கியைச் சகதியில போட்டு, குனிஞ்சு, பணிஞ்சு, பவ்யமா ராணியை அடியெடுத்து வைக்கப் பண்ணவர்.  இவ்வளோருந்தும் அவர் பிரபல்யமானது நானூறு ஆண்டுகளுக்கப்பறம் வந்த சைக்கிள் வண்டியாலத்தான்.

அவாகிட்ட எலிசபெத் , "ஸர் ராலி! நமக்காகவும் நம் பிரிட்டானியாவுக்காகவும் நீர் பெரும்தொண்டு ஆற்றிவிட்டீர். புதிய பூமியில் நமக்காக ஒரு குடியேற்றத்தைத் தோற்றுவித்து அதற்கு நம்மைப் பெருமைப்படுத்தும் வண்ணம் வர்ஜீனியா என்று பெயரிட்டீர். எஸ்பானிய அர்மாடாவை மூழ்கடித்தீர். இன்னும் ஒன்று பாக்கியுள்ளது. அது நம் ஆங்கில மொழிக்கு நீர் செய்ய வேண்டிய கடமை. நம் மொழி வளம் குன்றி இருக்கிறது. நம் பரம்பரை விரோதிகளின் மொழியாகிய பிரெஞ்சும் இத்தாலியமும் எஸ்பானியமும் போர்த்துகீசியமும் வளர்ந்து வருகின்றன. ஆகவே நம் ஆங்கில மொழியைத் தகுந்த விற்பன்னர்களைக் கொண்டு, இலக்கியநயம் மிகுந்த, வளமிக்க மொழியாக்க ஏற்பாடு செய்யும். ஒரு காலத்தில் பிரித்தானியா எழுகடல்களையும் ஆட்சிபுரியப் போகிறாள். அப்போது ஆங்கிலம் உலகெங்கும் பரவும்; அந்த  பிரித்தானியப் பேரரசுக்கு உரிய வித்தை நாம் ஊன்றிவிட்டோம். ஆங்கிலம் உலகப் பொதுமொழியாகும் அடிப்படையையும் நாமே துவங்குவோம்". அப்படீங்கறா.

ஒடனே ஸர் ராலியும், " மகாராணி! அதையும் நான் யோசித்துத்தான் வைத்திருக்கிறேன். தற்சமயம் உலகில் மிக உன்னத மொழிகளாக விளங்குபவை இந்தியாவின் சமஸ்கிருதமும் தமிழும்தான் என்று  வெனிஸ் நகர அறிஞர்களும் அரபு ஞானிகளும் கூறுகின்றனர். ஆகவே நான் அடுத்த கப்பலிலேயே இந்தியா சென்று நல்ல இந்திய மொழி அறிஞரைக் கூட்டிவருகிறேன். கவலை வேண்டாம்." அப்டீன்னு சொல்லிட்டு இந்தியாக்கு வரார்.


கொஞ்ச நாள் கழிச்சு லண்டன் நகர்ல அரண்மனைல எலிசபெத் ராணி முன்னாடி ஸர் ராலியும்  ராலி அழைச்சுண்டு வந்த ஒல்லி தேகம், கூர்ப்பான நாசி, பஞ்சகச்சம் கட்டிண்டு, நீண்ட குடுமியும் வச்சுண்டு ஒருத்தர் நின்னுண்டுருந்தார்.அவர ராணிக்கு ஸர் ராலி அறிமுகபடுத்தினார்.

"மகாராணி! இவர்தான் இந்தியாவின் மிகச் சிறந்த மொழியறிஞர்;   தமிழ்நாட்டிலுள்ள "அஸ்திரபாடி" என்னும் ஊரிலிருந்து வந்திருக்கிறார். சமஸ்கிருதத்திலும் தன்னுடைய தாய்மொழி தமிழிலும் பெரும்புலவர். முத்தமிழில் இயல், இசை, நாடகம் என்னும் வகைகளில் இவர் நாடகம் என்னும் துறையில் சிறந்தவர். பெயர் சுப்பையர். சிறந்த குடுமி வைத்திருப்பதால் அவரை எல்லோரும் "குடுமி சுப்பையர்" என்று அழைப்பார்கள்."

அதற்கு மகாராணியார், "குடுமி சுப்பையர் அவர்களே! உம் வரவு நல்வரவாகுக. ரோமில் இருக்கும்போது ரோமர்களைப்போல் இரு என்று என் தந்தை எட்டாம் ஹென்ரி அடிக்கடி கூறுவார். அதற்கிணங்க நீர் நம் ஆங்கில மொழியை வளப்படுத்தும் வேளையில், நீரும் நம் ஆங்கிலேயரைப் போன்றே மாறவேண்டும். உமக்கென்று சர்வமானியமாக "அவன்" நதிதீரத்தில் ஒரு ஊரை தானம் செய்கிறோம். உம்முடைய பழைய ஊரின் பெயரான 'அஸ்திரபாடி' என்னும் பெயரையே அதற்கு வைத்துக்கொடுக்கிறோம். ஆகவே உம்முடைய உடைகளை நீர் மாற்றிக்கொள்ளும்.     ஆங்கிலேயர் பாணியில் மீசை,  குறுந்தாடி வைத்துக்கொள்ளும். ஸர் ராலி தன்னுடைய சிகையலங்காரக் கலைஞரிடம் கூட்டிச்செல்வார். அத்துடன் உம்முடைய குடுமியை நீர் வெட்டிவிட வேண்டும். ஆங்கிலேயர் பாணியில் நீர் சேக்கு (cropped-hair style) வெட்டிக்கொள்ளும். இன்றிலிருந்து உம்முடைய பெயர் "குடுமி சுப்பையர்" அல்ல.  சேக்கு சுப்பையர்"!" அப்படீன்னு அறிவிச்சுடறா ராணி.

இப்படியாகத்தனே குடுமி சுப்பையர், சேக்கு சுப்பையர் ஆக மாறி, தமக்கு சர்வமானியமாக அளிக்கப்பட்ட அஸ்திரபாடியில் இருந்துகொண்டு, "யூரோப்பகண்டே, பஸ்சிம பார்ஸ்வே, ஆங்க்லி தேசே, அவன் நதிதீரே, அஸ்திரபாடி க்ராமே....... சேக்குச்சுப்பையர் சர்மன் நாமதேயஸ்ய..... அமுக..... அமுக.....கரிஷ்யே",  என்று சொல்லி மிக ஆஜாரக்கிரமமாக பூஜை புனஸ்காரம், சந்தியாவந்தனம் ஆகியவற்றையும் செய்து, ஆங்கில மொழியில் மிகச் சிறந்த பல நாடகங்களைப் படைத்து, ஆங்கில மொழிக்கு உலகில் பெரும் பெருமையை ஏற்படுத்தினார்.
                   
நாளடைவில் அவருடைய சேக்குச் சுப்பையர்" என்னும் பெயர் மருவி மருவி ஆங்கிலமயமாகி "Shakespeare" என்றாகியது.  அவருடைய ஊரின் பெயராகிய அஸ்திரபாடி "Stratford" என்று மருவியது. இதைத்தான் "Anglizisation" என்று மொழி வல்லுனர்கள் குறிப்பிடுவார்கள்.

இப்போ தெரிஞ்சுதோ ஷேக்ஸ்பியர் வந்த கதை. எல்லாத்துக்கும் இந்தியாவும் இந்தியாவோட பாரம்பரியங்களும்தான் ஆணி வேர் தெரிஞ்சுக்கோங்கோ. இதெல்லாம் மாத்தி மாத்திப் பேசி பகவானோட ஷாபத்துக்கு ஆளாகாதீங்கோ. என்ன நான் போயிட்டு வரட்டுமா?



.

28 comments:

Raju said...

அடங்கப்பா..இது உலக ஆராய்ச்சிங்கோவ்.

Unknown said...

இப்படித்தான் பிரபஞ்சத்தில திருவள்ளூவர் மகான் ஜன்யமான இடத்துல மயிலாப்பூரா சித்த ஒட்டுனாப்ல Hamilton bridge காலப்போக்ல “அம்பட்டன் வாராவ்ி ஆயிடுத்ு.

ப்ரியமுடன் வசந்த் said...

//அத்துடன் உம்முடைய குடுமியை நீர் வெட்டிவிட வேண்டும். ஆங்கிலேயர் பாணியில் நீர் சேக்கு (cropped-hair style) வெட்டிக்கொள்ளும். இன்றிலிருந்து உம்முடைய பெயர் "குடுமி சுப்பையர்" அல்ல. சேக்கு சுப்பையர்"!" அப்படீன்னு அறிவிச்சுடறா ராணி.//

ஹ ஹ ஹா..

வித்யா காமெடி ரவுசு பண்றீங்களே...

:)))))))))))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

கல்யாணி சுரேஷ் said...

ஹா..ஹா... ஹா....... :))))))))) கலக்கிட்டீங்க வித்யா.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))

Paleo God said...

அந்த பல்டி இந்த பல்டி கேள்விபட்டிருக்கேன் இது அந்தர் பல்டிடா சாமி....^_^

வரலாறு முக்கியம் அமைச்சரே >>>> ரைட்டு <<<<< :)))))))))))))))

அண்ணாமலையான் said...

மாமி எழுதனத எழுதிட்டேள்,, நாங்களும் படிச்சுட்டோம்,,சந்தோஷம் போங்கோ,,(ஓட்டும் போட்டாச்சு)

கிருஷ்ண மூர்த்தி S said...

குடுமிக்கு இத்தனை ம(ர)வுசா?!

சூக்குமம் குடுமியில் அல்லது அது ஆடுவதில் கூட இல்லை! அதன் வேர்ப்பகுதிக்குக் கீழே என்ன இருக்கிறது, மூளையா இல்லை களிமண்ணா என்பது தான் தீர்மானிக்கிறது!

குடுமி கிடக்கட்டும்! ஜடை ஆடினது கூட நன்றாகத் தான் இருக்கிறது:-))

sathishsangkavi.blogspot.com said...

குடுமில இவ்வளவு விசயமா...........?

கமலேஷ் said...

குடுமிய வச்சு ஒரு ஆராய்ச்சியே பண்ணி இருக்கீங்க...
ரொம்ப intresting...
வாழ்த்துக்கள்...

இராகவன் நைஜிரியா said...

குடுமியில இவ்வளவு விஷயம் இருக்காங்க.

பா.ராஜாராம் said...

மாமி,
செத்த நில்லுங்கோ.இந்த கலக்கா கலக்குவீர்?

realy,fantastic vidhyaa!

நட்புடன் ஜமால் said...

நாளடைவில் அவருடைய சேக்குச் சுப்பையர்" என்னும் பெயர் மருவி மருவி ஆங்கிலமயமாகி "Shakespeare" என்றாகியது

----------

மாமி நன்னா கலக்கிட்டேள் போங்கோ

எங்கனயிருந்து இப்படி ஆராய்ச்சி பன்றேளோ ...

புலவன் புலிகேசி said...

இன்னாமா ஆராய்ச்சி பன்றீங்கோ...

தினேஷ் ராம் said...

ஆ..ஹா...

creativemani said...

குடுமிய (வச்சு) பின்னிட்டேள் போங்கோ... :)

Santhini said...

No chance ! Superb!

S.A. நவாஸுதீன் said...

செம பிடி பிடிச்சிருக்கீங்க குடுமியை. ஆராய்ச்சி பலமால்ல இருக்கு.

படமும் சூப்பர்.

Thenammai Lakshmanan said...

வோட் போட முடியலயே ஏன் விதூஷ்
நல்லா சிண்டைப் பிச்சுண்டேன் போங்கோ

Thenammai Lakshmanan said...

வோட் போட முடியலயே ஏன் விதூஷ்
நல்லா சிண்டைப் பிச்சுண்டேன் போங்கோ

Ragztar said...

பேஷ் பேஷ்! ரொம்ப நன்னா இருக்கே!

Sun said...

funny pic.. nice post,
http://sunishot.blogspot.com

இலங்கன் said...

ஹா.. ஹா.. கலக்கல்.

R.Gopi said...

//இப்பல்லாம் ஆம்னாட்டிகளும் தலை வளத்துக்கறாளே!//

//உம்முடைய குடுமியை நீர் வெட்டிவிட வேண்டும். ஆங்கிலேயர் பாணியில் நீர் சேக்கு (cropped-hair style) வெட்டிக்கொள்ளும். இன்றிலிருந்து உம்முடைய பெயர் "குடுமி சுப்பையர்" அல்ல. சேக்கு சுப்பையர்"!" அப்படீன்னு அறிவிச்சுடறா ராணி.//

//நாளடைவில் அவருடைய சேக்குச் சுப்பையர்" என்னும் பெயர் மருவி மருவி ஆங்கிலமயமாகி "Shakespeare" என்றாகியது. அவருடைய ஊரின் பெயராகிய அஸ்திரபாடி "Stratford" என்று மருவியது. இதைத்தான் "Anglizisation" என்று மொழி வல்லுனர்கள் குறிப்பிடுவார்கள்.//

*********

பலே வித்யா... வேற என்ன சொல்றது நான்...

பேஷ்... பேஷ்... நன்னா கலக்குங்கோ....

kamala said...

The picture is looking so cute. Nice and lovely post.

நசரேயன் said...

இருந்த கடைசி குடுமியும் கொட்டிபோச்சி எனக்கு

vasu balaji said...

:)))).செம

Post a Comment