ஊஞ்சல் 11.12.2009

முதலில் மஹாகவி பாரதியாருக்கு என் வணக்கங்கள். (இன்று அவருக்குப் பிறந்த நாள்)

ஊஞ்சல்

பதிவுலகம் வந்ததால் எனக்கு கிடைத்த முகமறியா நட்புக்களும், நேரில் சந்தித்த நல்ல மனிதர்களான உஷா, உமசக்தி, வால் அருண், நர்சிம் இன்னும் கதைப் பட்டறையில் அவசர கதியில் ஹலோ மட்டும் சொல்லிவிட்டு போன அக்னி பார்வை மற்றும் பலர் (மன்னிக்க பெயர்களைக் குறிக்கத் தவறி விட்டேன்).

பதிவுலகில் நான் எழுதிய திருக்காட்டுப்பள்ளி பதிவால் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்த அறுந்த வால்கள் எல்லாம் மீண்டும் ஒன்று திரண்டு, வாலறுந்த கும்பலாக மாறப்போகும் தினம் 12.12.2009. என்னோடு எல்.கே.ஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை திருக்காட்டுப்பள்ளியில் பயின்ற கும்பலோடு நாளை சந்திப்பு.

தேநீர்

மீண்டும் ஒரு முறை தமிழ் பதிவுலகம் நட்புக்குத்  தோள் கொடுத்து ஒருவருக்கொருவர் பெருமை சேர்த்துள்ளது.

எழுத்துக்களுக்கு முகம் கொடுத்து, அருமையான எழுத்தாளர்களுக்குஅகநாழிகை வாசுவின் புதிய பதிப்பகத்தின் வெளியீடான "அகநாழிகை" சிற்றிதழ் பற்றி எல்லோருக்கும் தெரிந்ததே. இன்று அவர் தம் முதல் புத்தக வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்துகிறார்.

நாள் : டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி

இட‌ம் : டிஸ்கவரி புக் பேலஸ்,

6, மகாவீர் வணிக வளாகம், முனுசாமி சாலை,  கே.கே.நகர் (மேற்கு), பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்), சென்னை - 78.

பா. ராஜாராமின் கருவேல நிழல்கள், நர்சிம்மின் அய்யனார் கம்மா, உயிரோடை லாவண்யா, உமா சக்தி,  TKB காந்தி, என்.விநாயகமுருகன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தலைப் பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு, வெளியில் கையை பிசைந்து கொண்டு நிற்கும் கணவர்கள் போல, நர்சிம்மையும், பா. ராஜாராமையும் நினைக்கையில் ரொம்பவே சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

"இதோ இதான்" என்று அவர்கள் குரலில் தெறிக்கும் மகிழ்ச்சியையும், கண்களில் வழியும் பெருமையையும் மனதாரக் கண்டு ரசிக்கவும்,  நானும் அவர்கள் கண்களைப் பார்த்து அந்த மகிழ்ச்சியில் சிறிது திளைத்து வரலாம் என்று இருக்கிறேன்.

பக்கோடா

எம்பொண்ணு தர்ஷிணி ரொம்ப அடம் பண்ணி என் அம்மாவிடமிருந்து பறித்துக் கொண்டு வந்த  இரண்டடி உயரமுள்ள மண்ணாலான கிருஷ்ணன் சிலைக்கு லிப்ஸ்டிக் முதல் நெயில் பாலிஷ், பவுடர் என்று எல்லா அலங்காரமும் தினசரி நடக்கும். நேற்று சாயந்திரம் துணி மடிக்கும் போது தவறுதலாய் என் கை பட்டு கீழே விழுந்து உடைந்து விட்டது. கிருஷ்ணனின் தலை மட்டும் தனித் துண்டாகி விட்டது.

சத்தம் கேட்டு ஓடி வந்தவளுக்கு ஒரே அழுகை. "ஐயோ கிருஷ்ணா!" என்று துண்டான தலையை எடுத்துக் கொண்டு அழுதபடியே என்னைப் பார்த்து "நீ என்ன சிவனா... இப்படி பண்ணிட்டியே??" என்றாள்.

கிர்ர்ர்ர் :(  நான் என்னன்னு பதில் சொல்ல?

(எம்.சீலால் பொம்மையை ஒட்டி புதிய பெயின்ட் அடித்து காய வைத்திருக்கேன்)

மழை

சாரல் சமூக சேவை குழுவினர் டிசம்பர் மாசத்தில் ஞாயிறுகளில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் உள்ள இளஞ்சிறுவர் சீர்திருத்த மையத்தில் (Government observation home for the juveniles) உள்ள குழந்தைகளுக்கு யோகா, படம் வரைதல், எல்லா வகை பள்ளிப் பாடங்கள், பொது அறிவு போன்றவற்றை "புதிய பாதை" என்ற ப்ராஜெக்ட்டின் கீழ் ஒரு புதிய முயற்சியாகச் செய்கிறார்கள்.

நாட்கள்- டிசம்பர் 20, 27, ஜனவரி 3, 10, 17 (ஞாயிறு)

நேரம் : காலை 9 முதல் -மாலை 5 வரை
இடம்: செங்கல்பட்டு சிறைச்சாலை

இக்குழுவினர் ஞாயிரன்று காலை 8 மணிக்கு  நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் ஒன்று கூடி செங்கல்பட்டுக்கு இணைந்து செல்கிறார்கள்.  தொடர்பு கொள்ள 9884014555(M.Maniventhan) இவரை அழைக்கலாம்.




.

20 comments:

பின்னோக்கி said...

//தலைப் பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு, வெளியில் கையை பிசைந்து கொண்டு நிற்கும் கணவர்கள் போல

உவமை..அருமை

கல்யாணி சுரேஷ் said...

அந்த ஐவருக்கும் என்னோட வாழ்த்துகள்.

// "ஐயோ கிருஷ்ணா!" என்று துண்டான தலையை எடுத்துக் கொண்டு அழுதபடியே என்னைப் பார்த்து "நீ என்ன சிவனா... இப்படி பண்ணிட்டியே??" என்றாள்//

தர்ஷிணியை சமாதானப் படுத்துங்கப்பா.

பூங்குன்றன்.வே said...

ஊஞ்சல்-இந்த வார ஊஞ்சல் இனிமை.

Paleo God said...

மஹாகவி பாரதியாருக்கு என் வணக்கங்கள்

// "நீ என்ன சிவனா... இப்படி பண்ணிட்டியே??" என்றாள்//

SO CUTE :-)

சிவாஜி சங்கர் said...

மஹாகவிக்கு வணக்கங்கள்..

பா. ரா, நர்சிம், உயிரோடை லாவண்யா, உமா சக்தி, TKB காந்தி, என்.விநாயகமுருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

குழந்தைக்கு புது பொம்மை வாங்கி கொடுங்க..

நட்புடன் ஜமால் said...

நன்கு தாலாட்டியது ஊஞ்சல்

------------

அகநாழிகை நூலில் இடம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

மகாகவிக்கு வணக்கங்கள்.

ஐவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

கிருஷ்ணர் மறுஅவதாரம் எடுத்து குழந்தை கைக்கு சென்றாரா:)?

சாரல் நல்ல பகிர்வு.

anujanya said...

தகவல்களுடன் சுவாரஸ்யமான இடுகை. திருக்காட்டுப்பள்ளி? பொன்னியின் செல்வனில் வருமே. அந்த இடமா? என்ஜாய் மாடி.

இது மாதிரி நிறைய எழுதுங்கள் வித்யா.

அனுஜன்யா

creativemani said...

நல்லா எழுதியிருக்கீங்க மேடம்...

Vidhoosh said...

பின்னோக்கி, கல்யாணி சுரேஷ், பூங்குன்றன், பலாபட்டறை, சிவாஜி சங்கர், ஜமால், ராமலக்ஷ்மி, அனுஜன்யா, மணிகண்டன் எல்லோருக்கும் நன்றிங்க.

புத்தக விழாவுக்கு கிளம்பும் அவசரத்தில் பதில் எழுதுகிறேன். மீதி திங்களன்று பேசலாம். நன்றி சகாஸ்.

--வித்யா

வால்பையன் said...

சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

மிக சுவாரஸ்யமான ஒரு என்சைக்ளொ பீடியாவாய் ஆகலாம் என்றும் தோன்றும் சில வலைப்பூக்களை தொகுத்தால்

பக்கோடா பக்கங்களும் அதில் அடங்கும்

இன்றைய கவிதை said...

வழக்கம்போல், மொறு மொறு, பகோடா!
சென்னை மழைக்கு இதமாய் இருந்திருக்குமே!
இங்கு, பெங்களுரூ குளிருக்கும் கூட!

-கேயார்

Anonymous said...

என்ன வித்யா, வழக்கமா குழந்தைகள் தான் பொம்மைய உடைப்பாங்க.

Sundar சுந்தர் said...

பக்கோடா அருமை!
பள்ளி தோழர்களுடனான சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துக்கள். தர்ஷிணி - ஸ்வீட். பொம்மை ரிப்பேர் - பொருத்தமான அம்மா!

S.A. நவாஸுதீன் said...

சந்திப்பு நல்லபடியா நடக்க வாழ்த்துக்கள்

இந்த வாரம் ஊஞ்சல் அருமை விதயா.

"உழவன்" "Uzhavan" said...

//. என்னோடு எல்.கே.ஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை திருக்காட்டுப்பள்ளியில் பயின்ற கும்பலோடு நாளை சந்திப்பு.//
 
மகிழ்ச்சி.. இந்த அனுபவத்தையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளவும் :-)

கமலேஷ் said...

//தலைப் பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு, வெளியில் கையை பிசைந்து கொண்டு நிற்கும் கணவர்கள் போல

உவமை..அருமை

// "நீ என்ன சிவனா... இப்படி பண்ணிட்டியே??" என்றாள்//

மிக அழகா ரசித்து படிக்கும் படி வெளிபடுத்றீங்க உணர்ச்சிகளை..
ரொம்ப புடிச்சிருக்கு உங்க எழுத்துக்களை...

Vidhoosh said...

நன்றி வால் அருண்;
நன்றி நேசன்
நன்றி கேயார். பக்கோடா சுவைத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி.
நன்றி நசரேயன்
சின்ன அம்மிணி: :( அந்தக் கதையை தனியா எழுதுறேன். அதே பொம்மை தான் வேணும்னு ஒரே அடம். தேடினேன் கிடக்கவே இல்லை.மறு அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கார் கிருஷ்ணர்.

சுந்தர்: :)) என்ன செய்யறது.

நவாஸ்; நன்றிங்க

உழவன்: அருமையான கிராமம்ங்க எங்களது. தொலைத்து விட்டோம் :(

கமலேஷ்: நன்றிங்க

அகநாழிகை said...

இன்றுதான் வாசிக்கிறேன். பகிர்தலுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

- பொன்.வாசுதேவன்

Post a Comment