'க்ளக்'கென்று மூழ்கிய கல்


கடல்நீரைக் கையாலளந்து
கொட்டும்போது
மீண்டு திரும்பும்
தங்க அலைகளுக்கான
எண்ணிக்கை மறந்ததை விட
அழகாயிருந்தது
அள்ளிச் சேமித்த சதுப்பு நீர்

இன்னும் அழகாயிருந்தது
நான் குவித்து வைத்த
மணல் கலைத்துக் கலைத்து
எட்டிப் பார்த்த நண்டுகள்

நீருக்குள் இருக்கும் நீரும்
நீருக்கு மேலிருப்பதும் என
வட்டவட்டமாய்க் கலைந்து
தோன்றும் பிம்பத்தை விட
அழகாயிருந்தது
'க்ளக்'கென்று மூழ்கிய கல்

5 comments:

R. Gopi said...

எந்த தைரியத்துல கவிதைன்னு லேபல் வெச்சிருக்கீங்க:)

கே. பி. ஜனா... said...

எல்லாவற்றையும் விட அழகாயிருந்தது கவிதை!

சாந்தி மாரியப்பன் said...

நல்லாயிருக்குங்க..

நசரேயன் said...

//எந்த தைரியத்துல கவிதைன்னு லேபல்
வெச்சிருக்கீங்க:)//

கேட்க ஆள் இல்லைனா ?

உயிரோடை said...

க்ளக்கென்று மனதில் இருங்குது கவிதை வித்யா

Post a Comment