அலுவலகத்தில் டயரி எழுதுவதுண்டா
Posted by
Vidhoosh
on Saturday, January 1, 2011
Labels:
அனுபவம் பேசுகிறது
1999-ஆம் வருடம், ஒரு நிறுவனத்தில் finance department-டில் கிரெடிட் followup செய்யும் வேலை. இளரத்தம் தந்த வேகத்தில் work hard தத்துவத்தில் இருந்த நாட்கள் அவை. ஒரு சுபயோக சுபதினத்தில் என் வேலைக்கான கிரெடிட்டுகள் முழுதும் work smart புத்திசாலி ஒருவன் தட்டிச் சென்று என் வேலைக்கு உலை வைத்தான்.
தினமும் சொந்த டயரி எழுதும் பழக்கம் இருந்திருந்தாலும், அலுவலகத்தில் அப்படியொன்றை செய்யாமலே இருந்த நான், அன்று முதல், தினசரி அலுவலக வேலைகளை "டு டூ லிஸ்ட்" மற்றும் தினசரி செய்யும் வேலைகளை அலுவலக டயரியில் பென்சில் மூலம் எழுதி வைப்பதும் "வொர்க் டன்" ரிபோர்டுகள் immediate superior/department manager-ருக்கு ஈமெயில் மூலம் அனுப்புவதும் பழக்கமாகிப் போனது.
ஆரம்ப நாட்களில் இதை என் மானேஜர் / சுபீரியர் விரும்பவில்லை என்றாலும், தொடர்ந்து printout அல்லது கையால் எழுதியாவது கொடுத்துக் கொண்டே இருந்தேன். இது எனக்கு பெரிதும் உதவி இருக்கிறது. அதே போல, கொஞ்ச நாட்களில் திறமைகள் under utilise ஆவதும் குறைந்தது. வேலையில்லாமல் இருக்கும் நாட்களும் குறைந்தே போனது.
மீண்டும் அரசு வேலைக்கு வந்த பின், இந்த முறை சக பணியாளர்களால் பெரிதும் வெறுக்கப் பட்டது. வேலையே இல்லாமல் ஈயடிக்கும் நாட்கள் அதிகமாகி, டயரி முழுதும் வெள்ளை தாள்களாகவே இருக்கும் நாட்கள் அதிகமாகி, என்னை தின்று விடும் என்றாகி விட்ட நேரத்தில், அரசுப் பணிக்கு பை பை..
இந்த ஐடியா யாருக்காவது உதவும் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன். #work smart.
4 comments:
கமெண்ட் மாற்றி போட்டுட்டேன் பா
புத்தாண்டுவாழ்த்துக்கள் சகோதரி.
விதூஷ், நல்ல பழக்கம்..
நானும் நெடு நாள் கழித்து தான் தெரிந்து கொண்டேன்..
Post a Comment