தமிழ்மண தரவரிசைப் பட்டியலில் 70வது இடத்தில் பக்கோடா பேப்பர்களும் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. வெற்று அரசியல் reference-சுகளால் "விதூஷ்" என்று கூகிளில் search செய்யப்பட்டு, வம்பு அறியும் ஆவலோடு அதிகரித்த ஹிட்-க்களால் தரப்பட்ட "தரம்" என்பதை நன்கு அறிவேன்.
இது traffic அடிப்படையில் மட்டுமே கணிக்கப்பட்டிருக்கும். அதனால், traffic அதிகரிக்க என்ன வேண்டுமானாலும் அன்றைய ஹிட் பரபரப்பிற்குச் செய்யும் கேலிக்கூத்து போக்கு பதிவர்களிடையே அதிகமாகும். தரமாய் எழுதுவது ஒருவேளை குறையலாம்.
எப்படியும் நமர்த்துப் போன பக்கோடா ருசிக்காது, அதை வீணாக்காமல் மறுநாளைக்கு வடைகறியாகவோ, பருப்புருண்டை குழம்பாகவோ மாற்றி leftover சமையல் செய்து கொள்ளும் சாமர்த்தியம் போல இப்படியொரு அடையாள அங்கீகாரம் பக்கோடாவுக்குத் தேவையாக இருக்காது. மொருமொரு வென்று சாப்பிட்டுக் கொண்டு அன்றன்றைக்கு புதியதாக சமைத்து சாப்பிடுவதாக இருப்பதே விருப்பம்.
ஹிட்டுக்களால் ஆன தரவரிசை race-சில் ஆர்வமில்லாத ஒரே காரணத்தால் தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் ஆகிய திரட்டிகளில் இருந்து விலகுகிறேன். வேறெந்தத் திரட்டியிலும் இணையவில்லை.
எப்போதும் போல தினமும் கடுகெண்ணையில் பொறித்த பக்கோடா, கூகிளே கடையை மூடும் வரை, பல ரகமாய் வந்து கொண்டே இருக்கும். தனிப்பட்டக் காரணங்களால் சக பதிவர்களுக்கு மறுமொழிகள் இடுவதை பெருமளவில் குறைத்துக் கொள்ள நேர்ந்தது. ரீடர் மூலம் படிப்பதும், பிடித்திருந்தால், தனி ஈமெயில் மூலம் என் கருத்துக்களைப் பகிர்கிறேன். இனியும் தொடரும்.
10 comments:
ரைட்டு..
பஸ்ஸில் அலம்பல் செய்வதை நிறுத்திவிட்டு உருப்படியாக தினமும் பதிவுகளை எழுதினால் டாப்புக்கு மிக விரைவில் வந்துவிடலாம்..!
பெரிய்ய்ய்ய்ய எலக்கியவாதிகளெல்லாம் திரட்டிகளில் இணையமாட்டாங்களாமே;)))
திரட்டில இருந்தாலும் இல்லைன்னாலும் நாங்க தினம் தினம் சாகறதை யாராலும் தடுக்க முடியாது போலயே;))
எனி்வேஸ் ஹேவ் ஃபன்.
நல்ல முடிவு.
நல்லதுங்க..
ஏன் இப்படி?
good ;-)
//கடுகெண்ணையில் பொறித்த பக்கோடா, கூகிளே கடையை மூடும் வரை, பல ரகமாய்//
அதுவே சுவை. வாழ்த்துக்கள்.
:((((
Jaleela Kamal said...
//நானும் இப்ப தான் பா பார்த்தேன்.
கேலி கிண்டல் கூத்து ஒன்றுக்கு உதவாத பதிவுகளுக்கு தான் அங்கு மவுசு ஜாஸ்தியா இருக்கு.//
-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்
உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
January 4, 2011 6:01 PM
Post a Comment