(ஜனவரி 4)
ஜனவரி 19 launch என்பதால், footprints-சென்டருக்கான வேலைகள் கொஞ்சம் அதிகமாகிப் போனது. அலுவலகம் போய்விட்டு சாயந்திரம் தான் அவற்றைப் பார்க்க முடிகிறது. நேற்று தர்ஷிணியை பார்க்க இரவு எட்டு மணி ஆகிடுச்சு. வீட்டுக்குள் நுழைந்ததும், மேடம் கோவமாய் உக்காந்திருந்தாங்க. அரை மணிநேரம் கொஞ்சி சமாதானம் பண்ணதும், பிஞ்சுக் கைகளால் பளார் பளார்னு அடி விழுந்தது.
பாஸ்கர் உடனே "ஏய்.. அம்மாவை போய் அடிக்கலாமா... தெரியாம பண்ணிட்டேன் சாரி சொல்லு" அப்டீன்னார்.
மேடம் முடியாது என்று தீர்மானமாய் அறிவித்தாள்.
"எப்படி கோவம் வரும்னு எனக்கே தெரியாது" என்று மிரட்டினார்.
"உங்களுக்கே தெரியாதுல்ல...அப்புறம் எப்படி கோச்சுப்பீங்க" என்று அசர அடித்தாள். ரெண்டு பேரும் சிரிசிரின்னு சிரிச்சுகிட்டே இருந்ததும் அவளுக்கு இன்னும் பிணக்கு ஜாஸ்தியானது. உடனே சாமி (போட்டோ) கிட்டே போயி "சாமி தெரியாம பண்ணிட்டேன்.. சாரி... இந்த அப்பா-அம்மா வீட்டிலே ஏன்தான் பொறந்தேனோ... " என்றாளே பார்க்கணும்..
=============== ================= =================
எட்டு முதல் பதினாறு வயதுடைய குழந்தைகளுக்கு பொலிடிகல் சயன்ஸ், பேசிக் சிவிக்ஸ், சிவில் ரைட்ஸ் மற்றும் அடிப்படை சட்ட அறிவு பயிற்றுவிக்க ஒரு ஆசிரியரோடு பேசிக் கொண்டிருந்தேன். எல்லாமே நல்லபடியாக முடிந்தது.
நான் கைகுலுக்கி விடைபெறும் போது, அவர் "நாளை என்னுடைய மேரேஜ் அனிவெர்சரி... அதனால், பயணம் முடித்து ஆறு நாட்கள் கழித்து தான் வருவேன்" என்றார்.
நானும் "ஹேப்பி அனிவெர்சரி.." என்றேன்.
"விஷ் யு தி சேம்" என்றாரே பார்க்கலாம்.. ஆதவனை போல பிரியாணி துன்னுட்டு அழுவறதா, பொங்கல் துன்னுட்டு சிரிக்கவான்னே தெரியல..
=============== ================= =================
என்னா... ஆதவன் யாருன்னே தெரியாதா?
=============== ================= =================
1 comments:
குட்டிம்மாவின் கமெண்ட் அருமை. இப்பல்லாம் பசங்ககிட்ட பேச முடியலைங்க.
Post a Comment