பொம்மைக் குருவி

நீலக் கண்கள்
கொண்டதாக இருந்தது.
சாவி முடுக்கினால்
கால்கள் தத்தும்.

சிறிது தொலைவிலுள்ள
சுவர் இடிக்கும்போதெல்லாம்
பின்னும் முன்னுமாய்
நகர்ந்து நகர்ந்து
மீண்டும் மீண்டும்
இடித்துக் கொள்ளும்.

ஜன்னல் தானியம்
அப்படியே இருக்கும்

சிறகை
வலப்பக்கம் இழுத்ததும்
கீச்சுக் கீச்சென்று கத்தும்
இடப்புறம் இழுத்த போது
வலித்திருக்கலாம்.

பொம்மலாட்டக் கயிறிழுக்கப்பட்டு
இறகு விலகும் போதெல்லாம்
ஒலிக்கின்றன
கை வலிக்காமல்
ஒலியிலாத கைதட்டல்கள்.

2 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

super vidhoosh
ஒலியிலாத//sari seithu vidungal

விக்னேஷ்வரி said...

கவிதாயினி வித்யா, கவிதை நல்லாருக்கு.

Post a Comment