கேபிள் ஷங்கருக்கு ராயல்டி கிடைக்குமா

மீண்டும் ஒரு காதல் கதை - புத்தக விமர்சனச் சந்திப்பில் - பேச நினைத்தவை

போன வருஷம் பலா(ப்)பட்டறை ஷங்கர் லெமன் ட்ரீ-டக்கீலா பற்றி எழுதிய விமர்சனம் விமர்சனங்கள் மீதான என் அபிப்பிராயத்தையே தூள் தூளாக்கியது.

நானும் அடுத்த புத்தக விழாவுக்குள் எப்படியும் ஒரு புத்தகம் ரிலீஸ் பண்ணும் ஆர்வத்தை கொடுத்து விட்டது இந்த ரெவ்யூ. இப்படியொரு ரெவ்யூ ரைட்டர் கிடைத்து விட்டால் போதும். அடுத்த வருஷம் "தெரிந்தே தெரிந்தெடுத்தவை" என்ற என் signature கவிதை புத்தகம் வரும்போது குறைந்தது பதினைந்து புத்தகம் விற்றே விடும் என்ற நம்பிக்கை தோன்றச் செய்து என்னைக் கவிஞ்சராக ஆக செய்தவர்களில் பெரும் பங்கு ப.ப.ஷ வுக்கும் உண்டு.

கேபிள் ஷங்கருக்கு உடனே தொலைபேசி லெமன் ட்ரீ புத்தகம் வாங்க செலவழிச்ச அம்பது ரூவாயை திருப்பிக் கொடுங்கன்னு கேட்டேன். ஒரு விமர்சனம் எழுதுங்க, புத்தகத்தை திருப்பி வாங்கிகிட்டு அம்பது ரூவையைக் கொடுத்துடறேன்னு சொன்னார்.

ஆக்சுவலா புத்தகம் ரெவ்யூ எழுதணும்னா ஒன்று புத்தக ஆசிரியர் நண்பரா/உறவினரா இல்லே நம்மகிட்டேயிருந்து கடன் வாங்கினவரா இருக்கணும், இல்லையா நம்மையும் மீறி விமர்சித்தே ஆகவேண்டும் என்பது போல அருமையான புத்தகமா இருக்கணும்.

இது ரெண்டுமே இல்லாத ரெண்டும் கெட்டான் ரகமாய், அந்த அம்பது ரூவாய் வீணாப் போயிடுமேன்னு லெமன் ட்ரீக்கு ஒரு விமர்சனம் எழுதிக் கொண்டிருந்தேன். அதை படிச்சு, லெமன் ட்ரீ புத்தகத்தை படிச்ச என் கணவர் பாஸ்கர் "இன்னுமா இந்த மில்ஸ் அண்ட் பூன்-ரக புத்தகமெல்லாம் படிக்கிறே"ன்னு கேட்ட ஒரே ஒரு கேள்வி என் இலக்கிய/சாகித்ய அகாடெமி விருதுக் கனவுகளை எல்லாம் புறம் நகர்த்தி சிரிப்பா சிரிச்சுது.

"சங்கர் ஒரு சினிமா வியாபாரி, கமெர்ஷியல் எழுத்தாளர். அவரிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும். இது ஒரு R-i-P (Read in Private) ரகப் புத்தகம்" என்று செவாலியே சிவாஜி ரேஞ்சுக்கு லுக்கு கொடுத்து ஒருவழியாய் என் இலக்கிய கவுரதையை மீட்டு எடுத்தேன்.

இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எம்பொண்ணு "அப்போ நீயும் கவிதை எழுதாதே" என்று கடைசி எச்சரிக்கை போன்ற குரலில் கூறிவிட்டு இருவருமாக கிளம்பி போயிட்டாங்க. கைப்புள்ளையாகி எழுதுவதை அப்படியே நிறுத்திக் கொண்டு விடும் அளவுக்கு ரோஷம் இருந்தால் எப்படி சாகித்ய அகாடெமி விருதெல்லாம் வாங்கிக் குவிப்பது?

இப்போ மீண்டும் ஒரு காதல் கதை... நமக்கெல்லாம் இருக்கும் வீர விழுப்புண் வரலாறுக்கு, ஒரே ஒரு காதல்தான் இருக்குன்னு சொல்லிக்கும் அளவுக்கு கோழைத்தனம் இல்லை. குறைந்தது பதிவுலக சம்பிரதாயப்படி இருக்கோ இல்லியோ "பத்து" லிஸ்ட் தயார் பண்ணவேண்டிய கடமை உணர்ச்சி எல்லாருக்குமே உண்டு.

நீலாம்பரி போன்றதொரு அதட்டல் காதலிகளாக கேபிள் சங்கரின் ஆசை நாயகிகள் எல்லாரும் சராசரிக்கும் மீறிய மொராலிட்டி கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். கதாநாயகர்கள் எல்லாருமே பகவான் கிருஷ்ணனைப் போன்றவர்கள். நமக்கெல்லாம் adult கிருஷ்ணன் என்றாலே மாயாவி, ஸ்திரீலோலனாகவும், தந்திரம் படைத்தவன் என்று பல குணங்கள் படைத்தவனாகவேத் தெரிகிறது. ஆனால் கிருஷ்ணன் எப்பேர்ப்பட்ட காரக்டர்.

கம்சன் தேவகிக்கு கல்யாணம் பண்ணிவச்சு அனுப்பும் போது "யே முட்டாளே"ன்னு அசரீரி கேட்கிறது. மத்த ஜனங்கள் எல்லாருமே திரும்பிப் பாக்காம நடக்கிறாங்க. கம்சன் மட்டும் என்னவோ அவனைத்தான் கூப்பிட்டாப் போலத் திரும்பிப் பார்கிறான். ஆக, கண்ணன் பிறப்பதற்கும் முன்னேயே அவனுக்கு எதிரி தோன்றி விட்டான். பிறந்ததே ஜெயில்ல. தாய்ப்பால் குடிக்கும் முன்னரே தந்தை-தாயைப் பிரிந்து வேறிடம் உயிர் பிழைக்க அண்டியவன். ராஜ வம்சத்தில் பிறக்கும் யோகம் இருந்தாலும், பிழைக்க அண்டிய இடத்தில் மட்டும் நாமெல்லாம் ட்ராயிங்க்ல பாக்கரா மாதிரி எல்லாம், முத்தும் பவளமும் சூடிக் கொண்டு லக்சூரியஸ் ஆக இருந்தானா.. அதுவும் இல்லை. மாடு மேய்ச்சு பிழைத்தான். போறாத குறைக்கு பெண்கள் தொல்லை வேறு.

சங்கரின் கதைகளில் இப்படிப்பட்ட பல கதாநாயகர்கள் "ஆண் பாவமா.. பாவம் ஆண்களா" என்றே பிரிச்சுப் பார்க்க முடியாத மாதிரி வருவார்கள். ஆனால், மேலோட்டமாய் பார்க்கும் போது சந்தர்ப்பவாதிகளாக காட்சி அளிப்பார்கள். இவரது நிதர்சனக் கதைகள் மீது எனக்கு கொஞ்சம் அலாதி பிரியம் உண்டு. அரசர்களுக்கு எல்லாம் வரலாற்று குறிப்புக்களும், கல்வெட்டுக்களும் இருக்கிறது மாதிரி, நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு நிதர்சனக் கதைகள்.

அந்த வகையில், இந்தக் கதைகள் எனக்கும் ரொம்ப பிடிச்சது.
அஞ்ஞானம் மிகுந்த குண்டம்மா பாட்டி
எமோஷனல் அத்யாச்சர் ரக மீசை
ஆண்ஆதிக்க சிந்தனை கொண்ட பொதுபுத்தி

பேருதான் குண்டம்மா பாட்டி எனும் போதே, இதே மாதிரி நம்ம வீட்டிலும் கண்டிப்பாய் ஒரு கொள்ளுப்பாட்டி இருந்திருப்பாங்க என்றே தோன்றியது. அந்த சுப்பாணி மாதிரியும். "சுப்பாணி இப்ப்டிச் சொல்லிட்டானேடா பிச்சப்பா"ன்னு கேட்கும் போது, என் பாட்டி வேண்டுமானால் கண்ணீர் விட்டு அழுதிருப்பாங்க. இது போன்ற பெண்கள் இப்போது இல்லை என்பதால் குண்டம்மா பாட்டியின் வரலாறு முக்கியத்துவம் பெற்றதாகிறது.

மீசை.. ஒரு அற்புதமான குறும்படத்திற்கான கதை. வசனம் அதிகம் இல்லாமல் மௌனமான உடல்மொழியோடு கதை, சிம்ப்ளி சூபர்ப். அப்பா.. சின்ன வயசில் அவர் கையைப் பிடித்துக் கொண்டு எத்தனை தூரம் நடந்திருப்போம். இப்போது அவர் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறேன் என்றால், அவர் "எனக்கொண்ணும் அவ்ளோ வயசாகலை" என்று விறைப்பாய் நடப்பார். நானும் சிரித்துக் கொண்டே பின்னால் போவேன். அப்பா-க்கள் அமைதியாக நம் வாழ்வில் ஏற்படுத்து மாற்றங்கள், மிகவும் அதிசயமானவை. அந்த வகையில் மீசை -கதை பிரமிப்பான வாழ்க்கைக் குறிப்பு.

பொது புத்தி -- பெண் எப்போதும் perfect என்பது கட்டுடைக்கப்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் 'இயம்'போல அதையே பற்றிக் கொண்டிருப்பதில் பிரயோஜனம் ஏதும் இல்லை. இன்றைய சூழலில் ஆண் பெண் இருவருக்குமே சம அளவு வாய்ப்புக்களும், ஆபத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இரு பாலாருமே go getter -ஆக இருக்க வேண்டிய கட்டாயம் எந்தவொரு துறையிலும் இருக்கிறது. இதில் நூற்றில் ஒரு பெண், காமம் என்றவொரு weakness-சை ஆண்களிடம் பயன்படுத்தியும் அல்லது பயன்படுத்தப்பட்டும் என்பதாக ஒருபக்கம் அவர்கள் விரும்பியதை அடையும் ஓட்டப் பந்தயத்தில் இலக்கை நோக்கி ஓடுகிறார்கள், இரண்டு பெண்கள் "நான் பெண். அதனால் நான் பரிதாபத்துக்கு உரியவள்" என்ற எண்ணத்தோடு வளைய வருகிறார்கள். மீதி இருக்கும் 97 பெண்களும் கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தியும் ஒவ்வொரு தடைகளையும் முட்டி மோதி சமூக மரியாதையோடு முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள். சிலர் இந்த ஓட்டத்தில் குடும்பத்து priority -களுக்கு முக்கியத்துவம் அளித்து career அல்லது ஆபீஸ் வேலையை விட்டுவிட்டு ஒதுங்கவும், பெரும்பாலும் அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குள் இருக்கும் பெண்களே அதிகபட்சக் காரணமாக இருக்கிறார்கள் என்பதயும் மறுக்க முடியாது.

இந்தக் கதையில், அடிபட்ட பெண் சாட்சி சொல்ல முடியாத நிலையில், சமூகத்தில் பலவேறு அந்தஸ்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான ரியாக்ஷனை கொடுப்பது போன்ற வசனங்களும், அவளுக்கு உதவ ஒரு பெண் கூட வரவில்லை என்பதை குறிப்பிடாமலேயே குறிப்பிட்டும், இந்த விபத்தில் அதிக காயம் இல்லை என்றாலும், அந்த கதை நாயகனுக்கு தர்ம அடி கொடுத்து ரத்தக் காயம் பண்ணியவர்களும் கடைசில் அந்த மனுஷனை அம்போன்னு விட்டுப் போவதையும் அப்படியே நடக்கிறது போலவே தோன்றும் விவரணைகள். பாதி சொல்லியும் சொல்லாமலும் என்று, மீண்டும் ஒரு குறும்படத்துக்கான கதை.

கடைசியாக, அடுத்த நிதர்சனக் கதைகளில் ஒன்றாக "ராயல்டி" என்ற கதையொன்றும் இருக்கும் என்றே நம்புகிறேன். அதில் டிவி சீரியல் டைரக்டர்கள் மற்றும் எழுத்தாளர்களில் கலைச்சேவை கலைத்தொண்டாக மாற்றப் படும் நிதர்சனமும், அந்த டிவி டைரக்டர்களும் எழுத்தாளர்களும் செய்யும் இலவச சேவைக்கு ஒரு சமர்ப்பணமாக வரும் என்றே எதிர்பார்க்கிறேன்.

கடனா கொடுத்தாத்தானே கஷ்டம், அன்பளிப்பாவே கொடுத்துருங்களேன், என்ன நாஞ் சொல்றது கேபிள் அங்கிள்?

5 comments:

Anonymous said...

உங்கள் எழுத்து நடை என்னை மிக கவர்கிறது. உங்களின் முந்தைய பகிர்வும் முடிவும் இன்னும் கவர்கிறது. சுட சுட கேபிள் அவர்களின் புத்தக விமர்சனம் படித்தேன். நன்றி.

Vidhoosh said...

thanks BBJ :)

Jackiesekar said...

ஏன்ம்மா என்கிட்ட 50ரூபா கேட்டா கொடுத்துடபோறேன்... இதுக்கு போயி...

பட் ரொம்ப நல்லா அழகா சுருக்குன்னு வலிக்காம எழுதிஇருக்கிங்க...

Sundar சுந்தர் said...

லேசா காலாற நடக்கற மாதிரி... காற்றில் வரும் வார்த்தைகளோடு, கண்ணில் தெரியும் காட்சிகளோடு நினைப்பை பறக்க விட்டு பார்க்கிற மாதிரி...நல்லா அனுபவிச்சி எழுதியிருக்கே.

shortfilmindia.com said...

ஜாக்கி மொதல்ல 50 ரூபா கொடுத்து புக்கு வாங்கு அப்புறம் நீ அங்க கொடுக்கலாம்..:))

நன்றி விதூஷ்.. முழு புத்தகத்தின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

Post a Comment