ஓடுகிற நாயும் துரத்துகிற நாயும்

 ஓடுகிற நாயும் துரத்துகிற நாயும் - விதூஷ் 




நீங்கள் எப்போதாவது நாய்களை கவனமாகப் பார்த்ததுண்டா? நாய்களில் மூன்று வகை உண்டு. ஒரு செல்லப் பிராணி, இன்னொன்று வளர்ப்பு நாய், மற்றொன்று தெரு நாய். முதல் வகை செல்லப் பிராணிகள். ஐந்து நட்சத்திர வீடுகளில் வசிக்கும் வரம் பெற்றவை. வெல்வெட் படுக்கையில் உட்கார்ந்து, பட்டுப் படுக்கையில் தூங்கும். எஜமானி மடியில் செல்லம் கொஞ்சித் தவழும். இளவரசர்களையும் இளவரசிகளையும் கூட சாய்த்து அடிக்கும் வசதிகள் கிடைக்கப் பெற்றவை. இது போன்ற நாய்களை யார் பார்த்தாலும் பல பிறவிகளின் புண்ணியத்தின் பலனாகச் செல்ல நாயின் வாழ்வை அடைந்ததாக உணர்வான். இரண்டாவது வகை வளர்ப்பு நாய்கள், வீடுகளைக் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவை. ஒருவகையில், அவர்கள் தினசரி கூலியாள் மாதிரி. ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கிடைக்கும். இதைவிட மலிவான கூலியாள் கிடைக்காததால், நாய்க்கும் எஜமானர்களின் தேவைக்கேற்ப மரியாதையும் கிடைக்கும்.

கடைசியான வகையறா தெருநாய்கள் தான் ரொம்ப முக்கியமானது. தெருநாய்கள் கும்பலாக வாழ்கின்றன. திடீரென்று வாலை ஆட்டிக் கொண்டு ஓடத் தொடங்கும். அவை மனிதனைப் பற்களால் கடிக்கின்றன. மனிதன் அவர்களுக்கு பயப்படுகிறான். இதுபோன்ற 4-6 கொடூர நாய்கள் வாழத் தொடங்கும் தெருவில், மாலைக்குப் பிறகு அந்தத் தெருவில் யாரும் செல்லத் துணிவதில்லை. யாராவது சென்றால், அவரைப் பார்த்து குரைக்கின்றன. அவற்றின் குரைப்பால், தெருவில் நுழைந்தவர் திரும்பி ஓடிச் செல்ல நேர்கிறது. தெருநாய்களின் ஆதரவால்தான் ரேபிஸ் ஊசி வியாபாரம் நடக்கிறது. அவர்கள் மாதந்தோறும் யாரையாவது கடித்துக் கொண்டே இருக்கின்றன. நாய் கடித்தால் ரேபிஸ் என்ற நோயை உண்டாக்குகிறது என்பது உலகம் அறிந்ததே. தெருவில் வெறியோடு திரியும் இந்த தெருநாய்களால் தான் நாய்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

தெருநாய் எந்த அர்த்தமும் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும். சாலைக்கு அந்தப் பக்கம் மெதுவாக நடந்து போய் கொண்டிருக்கும். சில நேரம் தேமே என்று படுத்துக் கொண்டிருக்கும். திடீரென்று என்ன நினைக்குமோ என்னவோ, திடு திடுவென்று வேகமாய் ஓடி வந்து 'த்தப்படி த்தப்படி' என்று மூச்சிரைக்க சாலையைக் கடந்து இந்தப் பக்கம் ஓரமாய் படுத்துக் கொள்ளும். அதற்கு அங்கேயே படுத்துக் கிடந்தால் என்ன? எதற்கு இப்படி ஓடி வரணும்? 

சேருமிடத்தின் முகவரியோ, பாதைகள் பற்றிய அறிவோ இல்லை. விதி எங்கு அழைத்துச் சென்றதோ, அங்கே சென்று கொண்டு இருக்கும். தெருநாய்க்கு நடக்க வழி இல்லை, சிவனே என்று உட்காரும் பழக்கமுமில்லை. அதன் வாழ்க்கையின் எந்த தத்துவத்தையும் கொண்டிருக்கிறது என்று தெரியாது. அதை வைத்துக் கொண்டு எதையும் முடிவு செய்ய முடியாது. அது எப்படி இருக்கும் என்று எதையும் எதிர்பார்க்க முடியாது. 

மாறாக, செல்ல நாய்களைப் பாருங்கள்! வீட்டை விட்டு வெளியே வரும்போது, குளித்துவிட்டு, தலைமுடியைக் கோதி வாரி விட்டு என்று, இப்படித்தான் ஸ்டைலாக சாலையில் நடக்கின்றன! சில நாய்கள் ஜட்டி கூட போட்டிருக்கின்றன. இதோ பார், செல்ல நாய் ஒன்று வருவது தூரத்தில் தெரிகிறது. கழுத்தில் பட்டை, ஓனர் கையில் பிடித்து வைத்திருக்கும் செயின் மட்டுமே அவைகளின் அடையாளம் என்பதல்ல. உண்மையில் நாகரீகம் என்றால் அதை வளர்ப்பு நாய்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாகரீகத்தின் பெயரையும் சுவடுகளையும் துடைத்தழிக்க தெருநாய்கள் சபதம் எடுத்தது போலாகும்.

தெருநாய்கள் இருந்தாலே எல்லா இடங்களிலும் ஒரு பிரச்சனை. கிராமம் என்ன, நகரம் என்ன, தெருவென்ன, சாலை என்ன ! நீங்கள் எங்கு சென்றாலும் அது தனியாகத் தெரியும். ஒரு நல்ல குணமுள்ள மனிதர் ஒருவர் மகிழ்ச்சியான மனநிலையில் எங்கோ செல்கிறார். இவரைப் போன்றவர்களைக் கண்டால் தெருநாய்களுக்குப் பொறுக்காது, அவர் தெனாலி ரக பயமெண்டால் பயம் அடையும் வரைக்கும் துரத்திச் செல்லும். திடீர் என்று நின்று கொண்டு குப்பையை கிளறும்.

பொதுவாக தெருநாய்கள் கூட்டமாக காணப்படும். நான்கைந்து தெருநாய்கள் ஒன்று கூடினால் போதும். ஒன்றாகவே நடக்க ஆரம்பிக்கின்றன. அவை எதற்கும் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவற்றின் உலகம் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. எங்கு திரும்பினாலும் நாய்கள் நாய்கள். நாய்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. ஏழு-எட்டு நாய்கள் கொண்ட பெரிய அளவிலான குழுக்களும் இருக்கின்றன. ஆனால் எந்த நாய் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தது என்று தெரிவதில்லை. தொலைவில் இருந்து அதை அறிய முடியாது, நெருங்கிப் போனால் ஆபத்து. சில நேரங்களில் மனிதர்களை வேறுபடுத்திப் பார்ப்பது போல் நாயையும் நாயையும் வேறுபடுத்துவது மிகவும் கடினம். தூரத்தில் இருக்கும் இரண்டு அல்லது நான்கு நாய்களை வேறுபடுத்திப் பார்ப்பது என்பது மிகவும் கடினமான பணி. 

சில தெருநாய்கள் நிற்கக் கூட நேரமில்லாமல் அதிகமாக அலைந்து திரிகின்றன. அவற்றைப் பார்க்கும்போது விளையாட்டுத்தனமான சுபாவத்துடன் நடமாடுவதைக் காணலாம். அவற்றைப் பார்க்கும்போது, யாரைக் கண்டாலும் வாயைத் திறந்து, கோரைப் பற்கள் வெளிப்பட ஆரம்பித்து விடும், துரத்தப் படும் மனிதன் தன் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்று ஓடுவான். ஆனால் ஒரு தெரு நாயின் வேகம் ஒரு மனிதனின் வேகத்தை விட வேகமாக இருக்கும். அது கடிக்காமல் விடாது. தெருநாய்கள் எப்போதும் அலைந்து திரிவதில்லை. சில நாய்கள் பாவம், மிகவும் எளிமையானவை, குழந்தைகள் கூட கற்களால் அடித்து விளையாடுகிறார்கள். மக்கள் சில தெருநாய்களுக்கு அன்பினால் உணவளிக்கின்றனர். சிலர் பிஸ்கட் ஊட்டுகிறார்கள். மக்கள் தங்கள் நம்பிக்கையின்படி தெருநாய்களை விரும்புகிறார்கள், ஆனால் ஒரு தெரு நாயை தூக்கி தங்கள் வீட்டிற்கு கொண்டு செல்லும் தைரியம் யாருக்கும் இல்லை. அவர் பதினைந்து நிமிடங்களுக்கு தெரு நாயைப் நேசிப்பார்கள், மீதமுள்ள இருபத்தி மூன்றே முக்கால் மணி நேரம் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் படி விட்டுவிடுவார்கள்.

நாய் வளர்க்கப்படும் வீட்டின் வாயிலில் நுழைவதை எந்த மனிதனும் விரும்புவதில்லை என்றாலும், வளர்ப்பு நாய் கண்ணியமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நாய் விருந்தினரை வரவேற்க உரிமையாளர் முன் நிற்கிறது. இருந்தாலும் எங்களுடைய நாய் கடிக்காது என்று உரிமையாளர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நாய் ஒரு நாய். அதற்கு தெரியாது யாரைக் கடிக்கலாம், யாரைக் கடிக்கக் கூடாது என்று. கடித்தால் என்ன செய்ய முடியும்? உரிமையாளரைக் கடிக்காது என்பதால் அது யாரையும் கடிக்காது என்று அர்த்தமல்ல. வீட்டு நாய் விருந்தினரைக் கடித்தால் கூட, நம் நாய் கடித்தால் கவலைப்பட ஒன்றுமில்லை, ஊசி போட்டிருக்கு என்று உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் வலியை யார் தாங்குவது. 

தெருவில் திரியும் நாயாக இருந்தாலும் சரி, செல்லப் பிராணியாக இருந்தாலும் சரி, தெருவுக்கும், வீட்டுக்கும் தான்தான் காவலாளி என்பது நாய்களுக்கு மரபணு ரீதியாக பதிந்து இருக்கிறது போலிருக்கிறது. ஒரு அந்நியன் இரவில் தெருவில் வர முயற்சித்தால், அவரை நாய் ஒரு தவறான நபர் என்று உணர்ந்தால், அவரைப் பார்த்துக் குரைத்துத் துரத்தி விரட்டலாம். அவரைக் கடிக்காமல் இருக்கலாம். நாயின் குரைப்பு தானே முக்கியம். ஆனால் கண்டிப்பாக குரைப்பதோடு அந்த நாய்கள் நிறுத்திக் கொள்வதில்லை, குரைக்கிற நாய் கடிக்காது என்பதெல்லாம் பொய்யாக்கி வள் வள் என்று குரைப்பதோடு வலிக்கும் படி கடித்து வேறு வைக்கிறதுகள்.

நாய் இரண்டு விதமாக குரைக்கிறது. முதலில், ஒரு செங்கல்லால் அடித்தால், ஒரு விதமாய் குரைக்கும். ஸ்கூட்டரோ, மோட்டார் சைக்கிளோ, காரோ அதன் காலில் ஏறி விட்டிருந்தால் ஒருவிதமான குரைக்கிறது. ஆனால் திருடனைப் பார்த்து நாய் குரைக்கும் போது, விசுவாசமும் நன்றியுணர்வும் கலந்த ஒரு உன்னதமான உயர்ந்த பண்புகளின் கலவையை அதில் காணக் கிடைக்கிறது.

நாயைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைக் கேளுங்கள். ஒருமுறை ஒரு நண்பர் தனது சொந்தக்காரரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டின் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைந்து உள் வாயிலை அடைந்தவுடன், சாலையில் இருந்து ஒரு தெருநாயும் அவரைப் பின்தொடர்ந்து வந்தது. மாண்புமிகு நண்பர் மணியை அடிக்கச் சென்றவுடன், நாய் அவருக்கு முன்னால் நின்று கூர்மையாக வெறியோடு அவரைப் பார்த்தது. இப்போது அது நிச்சயமாகத் தன்னைக் கடிக்கும் என்று நண்பருக்குப் புரிய ஆரம்பித்தது! அந்த நண்பர் பயத்தில் மட்டும் கொஞ்சம் சத்தமாய் கீச்சுக் குரலில் அலறினார். ஆனால் நல்லகாலம், தற்செயலாக அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார். நாயை வெளியே துரத்திவிட்டு, பிரதான வாயிலை மூடிய பிறகு வந்தவரிடம், இந்த நாய் எப்படியெல்லாம் இதுவரை பலரைக் கடித்து வைத்திருக்கிறது என்று விளக்க ஆரம்பித்தார். அதோடு விடாமல் அவர் "அது எங்கள் செல்லப் பிராணியல்ல, ஆனால் கொஞ்ச நாளுக்கு நாங்கள் அதற்கு சோறு ஊட்டினோம். இதன் காரணமாக அது பாதி வளர்ப்பு நாய் போல ஆகி விட்டது. அதன் பிறகு அது எங்கள் விசுவாசியாக மாறியது, எங்கள் உதவியைத் திருப்பித் தர அது தானாகவே எங்கள் வீட்டைக் காக்கத் தொடங்கியது. இப்போது யார் வந்தாலும் அவரைக் கடிக்கிறது. அதன் கடிக்கும் பழக்கத்தால் இப்போது யாருமே எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. நாங்கள் இதனால் இப்போது அதற்கு சோறு ஊட்டுவதைக் கூட நிறுத்திவிட்டோம், ஆனால் அது இன்றுவரை நமது கடந்த கால உதவியை மறக்கவில்லை, நாம் வேண்டாம் என்றாலும் நம்மைக் காத்து வருகிறது. என்ன செய்வது?" என்று கேட்டார்.

நம் பெரிய பிரச்சனை என்னவென்றால் செல்ல நாய்களை எப்படியாவது தவிர்த்து விடலாம். ஆனால் தெருநாய்களை எப்படி தவிர்ப்பது? ஒரு மனிதன் தெருவில் செல்வதை நிறுத்த வேண்டுமா அல்லது தெருவில் செல்லவேக் கூடாதா?

தெருநாய்கள் அதிகம் காணப்படும் தெருக்கள் வழியாக பல நேரங்களில் மக்கள் இரண்டு அல்லது நான்கு பேர் கொண்ட குழுக்களாக செல்கின்றனர். ஆனால் இதுவும் பிரச்சினைக்கு தீர்வாகாது. சில நேரங்களில் ஒரு தெருநாய் இரண்டு அல்லது மூன்று பேரை ஒன்றாகப் பார்க்கும்போது, அது இன்னும் மகிழ்ச்சியாக ஆகிறது, இன்று மக்கள் மொத்தமாக கடிபட போகிறார்கள் என்று நினைக்கிறதோ என்னவோ? குதூகலமாக ஒரே நேரத்தில் இரண்டு-மூன்று பேரை ஒன்றாகக் கடிக்கிறது.

ஒவ்வொரு நாய்க்கும் அதன் சொந்த குணம், அதன் சொந்தப் பல், மற்றும் அதன் சொந்த வால் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு நாய்க்கும் அதன் தனிப்பட்ட ஆளுமை உள்ளது. சிலதுக்கு வாலில் பெரிய கரும்புள்ளி இருக்கும். சிலவற்றின் முகத்திலும் இருக்கும். ஆனால் ஒன்றையொன்று வேறுபடுத்திப் பார்க்க முடியாது. காலையில் ஒரு குழுவில் இருந்து கொண்டு வெறியோடு பார்க்கும் நாய் மதிய நேரத்தில் மற்றொரு குழுவில் சேர்ந்து கொண்டு நம்மைப் பார்த்துக் குறைப்பதைக் காணலாம். பின்னர் மாலையில், மூன்றாவது குழுவில் நம்மைப் பார்த்து வாலை ஆட்டுவதைக் காணலாம். 

நாயின் வால் எப்போதும் வளைந்திருக்கும். ஆனால் நாயின் வால் நேராக மாறினால், நாய்க்கு பைத்தியம் என்று புரிந்து கொள்ள வேண்டும். கௌரவர்களை வென்ற பிறகு யுதிஷ்டிரன் ஒரு நாயை தத்தெடுத்ததாக கூறப்படுகிறது. உண்மையில், யுதிஷ்டிரர் தனது விடாமுயற்சி, உண்மை மற்றும் அன்பின் உதவியுடன் நாயின் வாலை நிமிர்த்த முயன்றார். ஆனால் நாய் உண்மையான நாயாகவே இருந்தது. யுதிஷ்டிரனால் கடைசி வரை நாயின் வாலை நிமிர்த்த முடியவில்லை. பின்னர் நாயின் வாலை நேராக்க, யுதிஷ்டிரன் நாயை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றான்; ஆனால் வால் வளைந்தே தான் இருந்தது. ஒரு வேளை தர்மச் சக்கரத்தின் சுழற்சியால் யுதிஷ்டிரனின் தவமும், உண்மையும், அன்பும் வளையலாம், ஒரு நாய் கடைசி வரை உண்மையான நாயாகவே வளையாத வாலோடு இருக்கிறது. நேராக இருப்பதற்கு பெயர் நாய் வால் இல்லை.

நேராக இருந்தாலும் சரி, வளைவாக இருந்தாலும் சரி. என் தெருவின் நாய்கள் கூட்டாக குரைக்கும் போது, மிகவும் கலைநயத்துடன் வாலை சுருட்டிக்கொண்டு, தெருவில் குரைப்பதை முழு தெருவாசிகளும் அந்தந்த ஜன்னல்களில் இருந்து இந்த நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்ப்பது வாடிக்கைதான். ஒருமுறை ஒரு நாயை மற்றொரு, மூன்றாவது, நான்காவது நாய் பின்தொடர்ந்தது. பின்னால் இருந்த நாயும் மிக வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பின்னால் இருந்த நாய் முன்னால் இருந்த நாயைத் தாண்டிக் கொண்டு ஓடியது. ஏன் ஓடுகிறது? எங்கே ஓடுகிறது? நாய்க்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. திடீரென்று மின்கம்பங்கள் அவற்றின் கண்களுக்குத் தென்படும். அப்போது அந்த நாய்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஈரமான மின்கம்பங்களைப் பார்த்து, அவை ஏற்கனவே அந்த தெருவின் எதிர் கோஷ்டியை சேர்ந்த நாய்களால் திறந்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வரும். இரு கோஷ்டி நாய்களுக்கும் இடையே கடும் சண்டை மூளும். இப்படிப்பட்ட சண்டை, சில நேரம் அதே கோஷ்டிக்குள், வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து சில சமயம் என்று இதுபோன்ற சண்டை அடிக்கடி வெடிக்கும்.

இந்த கொடூரமான தெருநாய்களை எப்படி நடத்துவது? இந்த நாய்களிடமிருந்து மனிதர்களை எவ்வாறு பாதுகாப்பது? சிலர் இந்த தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கும் அளவுக்கு பாதிக்கப் பட்டுள்ளார்கள். ஆனால் இந்த வழி வன்முறையானது. எனவே அனைவரும் ஒத்துக் கொள்வதில்லை. இன்னொரு வழி நாய்களுக்குக் கருத்தடை செய்வது. நகராட்சி அதிகாரிகள் விரும்பினால், நாய்களை நாய் வண்டியில் பிடித்துக் கொண்டு சென்று, கருத்தடை செய்து, விலங்கு மீட்பு மையங்களில் விட்டு விடலாம். வாழும் சில வருடங்கள் வரை, மரியாதையாக வைத்து, உணவு முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அது இயற்கையான மரணம் அடையும். ஆனால் அவற்றால் எந்த மனிதனையும் கடிக்க முடியாது. இதன் மூலம் தெருநாய்கள் பிரச்னை முற்றிலும் தீர்க்கப்படும். துரதிர்ஷ்டவசமாக, இன்னும் நடைமுறையில் தெரு நாய்களைப் பிடிக்கும் எந்தத் திட்டமும் ஒழுங்காக செயல்படுத்தப்படவில்லை. அதனால்தான் இந்த மூர்க்க நாய்கள் மனிதர்களைக் கடித்து தங்கள் சாம்ராஜ்யத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தெருநாய்கள் தெருக்களில் சுற்றித் திரிகின்றன. கண்ணியமான மனிதர்கள் தங்கள் வீடுகளில் பூட்டிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.


=========

0 comments:

Post a Comment