என் அம்மாவின் மரணம் சற்றும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்தது. அம்மாவுக்கு டிமென்ஷியா இருந்தாலும், வேறெந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார். கொரோனா சமயம். டெத் சர்ட்டிஃபிகேட் வாங்குவதற்கு படாத பாடு பட்டு அலைந்தேன்.
கடைசியில் அவரை கௌரவமாய் அவரது வீட்டில் இருந்து அனுப்பி வைத்தேன். அம்மா 2020 செப்டம்பர் மாதம் முதல் தேதி காலை 7 மணிக்கு காலமானார். அன்று காலை என் கூட பணி புரியும் பள்ளி ஆசிரியை ஒருவரோடு பேசும் போது என்னையும் அறியாமல் ஒரு சிறு கேவல் எழும்பி ஒரு ஐந்து நிமிடம் அழுதிருப்பேன். பக்கத்தில் தம்பி "இப்போ என்ன செய்யறது" என்று கேட்டதும் எல்லாம் அப்படியே freeze ஆகி விட்டது. அப்புறம் எவ்வளவோ முயன்றாலும் சரியாகல்லை. இது என்னை physically ரொம்ப ரொம்ப பாதிச்சது. அடிக்கடி தலை சுற்றி கீழே விழுதல், VERTIGO, non clinical physical symptoms, படியில் இறங்கவே யார் கையாயாவது பிடித்துக் கொண்டு இருந்தேன். சாப்பிடவே பிடிக்காமல் போனது. கடைசியில் ANGINAவில் கொண்டு போய் விட்டது. இதெல்லாம் எனக்கு தெரிந்தே நடந்தது. நான் என் தோழியான ஒரு psychiatrist இடம் பேசினேன். அவர் அறிவுரையின் பேரில் அம்மாவின் புடவை தலைகாணி ஆனது. கார் சீட்டில் குஷன் ஆனது. கடந்த ஆறு மாதமாக மீண்டு வந்து இருக்கிறேன். இந்த emotional blocks எதுவும் இல்லாமல். Healing process கொஞ்சம் complicated ஆனது. நம்மால் முடிந்த அளவு self awareness பெற்று இருப்பது மட்டுமே.
Emotional blocks அல்லது unhealed emotional pain என்னவெல்லாம் செய்யும்?
தீர்க்கப்படாத உணர்வு என்பது போதுமான அளவு கவனிக்கப்படாத அல்லது தீர்க்கப்படாத நீடித்த எதிர்மறை உணர்ச்சி, துயரம் அல்லது அதிர்ச்சியைக் குறிக்கிறது. கடந்தகால அதிர்ச்சிகரமான அனுபவங்கள், இழப்பு, உறவுச் சிக்கல்கள் அல்லது தீர்க்கப்படாதச் சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உருவாகலாம். தீர்க்கப்படாத உணர்வு வெவ்வேறு வழிகளில் வெளிப்படும். ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகப் பாதிக்கலாம்.
தொடர்ச்சியான எதிர்மறை உணர்ச்சிகள்: பெரும்பாலும் சோகம், கோபம், பயம் அல்லது அவமானம் போன்ற தொடர்ச்சியான எதிர்மறை உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. இந்த உணர்ச்சிகள் தொடர்ந்து வெளிப்படும். சில நிகழ்வுகள், நினைவுகள் அல்லது அடிப்படை வலி தொடர்பான நினைவூட்டல்களால் எதிர்மறை உணர்ச்சிகள் தூண்டப்படலாம்.
அன்றாட வாழ்வில் குறுக்கீடு: வேலை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு உட்பட அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தலையிடலாம். இதனால் சிலருக்கு கெட்ட பழக்கங்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றால் பாதிக்கப் படலாம்.
உடல் அறிகுறிகள்: தலைவலி, தசை இறுக்கம், பதற்றம், சோர்வு அல்லது பசியின்மை அல்லது தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற உடல் அறிகுறிகளிலும் வெளிப்படும். இந்த உடல் அறிகுறிகள் மனம்-உடல் இணைப்பு & ஒட்டுமொத்த நல்வாழ்வில் துயரத்தின் தாக்கத்தின் விளைவாக எழலாம்.
இதை எப்படி சமாளிப்பது? விட்டில் பூச்சி போல, வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் துயரத்தின் வலியை இன்னொரு வலியால் நீக்க முடியுமா? அதை எப்படி சரி செய்வது? Healthy coping mechanism என்பது என்ன? என் coping strategies சரியானதுதானா என்று எப்படி தெரிந்து கொள்ள?
Next பார்க்கலாம்.
துயரத்தின் தாக்கத்தின் விளைவாக எழும் வலியை இன்னொரு வலியால் குறைக்க முடியுமா? இதை எப்படிச் சமாளிப்பது? விட்டில் பூச்சி போல, வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் ஒன்றால் ஏற்பட்ட வலியை இன்னொரு வலியால் நீக்க முடியுமா? அதை எப்படிச் சரி செய்வது? Healthy coping mechanism என்பது என்ன? என் coping strategies சரியானதுதானா என்று எப்படி தெரிந்து கொள்ள?
உடல் வலி மற்றும் உளவியல் வலிகள் அடிக்கடி ஒன்றுக்கொன்று intersect ஆகலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நாள்பட்ட உடல் வலி உளரீதியான துன்பம் மற்றும் பாதிப்புக்களுக்கு வழிவகுக்கும். அதே போலவே ஆறாத துயரம், மன அழுத்தம் அல்லது பதட்டம் போன்ற உளவியல் காரணிகள் உடல் வலியை அதிகரிக்கலாம். வலி உணர்தல் மனிதருக்கு மனிதர் வேறுபடும். கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகள் போன்றவற்றாலும் மாறுபடலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம். வயது காரணமாக வலியின் தீவிரம் உணரப்படலாம்.
சமீபத்தில் கால் வழுக்கி கீழே விழுந்ததில் எனக்கு முதுகில் tissue tear ஆகி பயங்கர வலி, ஒரு மாதம் பிசியோவால் சரியானது. ஆனால் இதில் கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. விழுந்ததில் முழங்கையில் ஒன்றரை இன்ச் நீளத்துக்கு சதை கிழிந்து விட்டது. ஆனால் அது எனக்கு டாக்டர் பார்த்து பிளாஸ்டர் போடும் வரை தெரியவே இல்லை. ரத்தம் வந்தது கூட தெரியவில்லை. அதைவிட அதிக வலி முதுகில் இருந்ததால் கவனம் அங்கேயே தான் இருந்தது.
சுருக்கமாக, வலி உடல் மற்றும் உளவியல் கூறுகளை உள்ளடக்கியது. உடல் வலி திசு சேதத்தின் விளைவாக உணர்திறன் அனுபவத்துடன் தொடர்புடையது. உளவியல் வலி உணர்ச்சி துயரத்தை உள்ளடக்கியது, பல்வேறு உளவியல் காரணிகளால் எழலாம்.
பச்சை குத்திக்கொள்வது போன்றவை தற்காலிகமாக உங்கள் கவனத்தை திசைதிருப்பலாம், வலியிலிருந்து உங்கள் கவனத்தை மாற்றலாம். ஆனால் அது வலியை நேரடியாக குணப்படுத்தவோ குறைக்கவோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பச்சை குத்தல்கள் போன்றவை முதலில் உடல் அல்லது உளவியல் வலிக்கான தீர்வு என்பதை விட சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகும். பச்சை குத்துதல் செயல்முறையின் போது ஏற்படும் வலி பொதுவாக தற்காலிகமானது. சிலருக்கு பச்சை குத்திக்கொள்வது வினோதமான அதிகாரமளிக்கும் அனுபவமாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்கள். இது அவர்களின் தீவிரமான உணர்வுகளால் கொந்தளிக்கும் மன நிலையில் இருந்து வெளிவர மறைமுகமாக பங்களிக்கும். இருப்பினும், ஒருவர் உடல் அல்லது உளவியல் வலியை அனுபவித்து அதிலிருந்து விடுபட முடியாமல் இருந்தால், தகுந்த சிகிச்சையின் மூலம் ஆதரவை வழங்கக்கூடிய தகுதி வாய்ந்த நிபுணர்களிடம் இருந்து தகுந்த மருத்துவ அல்லது உளவியல் உதவியைப் பெறுவது நல்லது.
உணர்ச்சி வலியை மற்றொரு வகையான வலியால் தீர்க்க முயல்வது சரியான அணுகுமுறை அல்ல. உணர்ச்சி வலி பொதுவாக அதிர்ச்சி, இழப்பு அல்லது துன்பகரமான வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற உளவியல் காரணிகளிலிருந்து எழுகிறது. உடல் வலி சில சமயங்களில் உணர்ச்சி வலியிலிருந்து நம் கவனத்தை தற்காலிகமாக திசை திருப்பலாம். அடிப்படை காரணங்களை நிவர்த்தி செய்யாது ஒருவரால் வலியில் இருந்து மீள இயலாது.
உணர்ச்சி வலியைச் சமாளிப்பதற்காக உடல் வலியை ஏற்படுத்தும் நடத்தைகைளில் ஈடுபடுவது தீங்கு விளைவிக்கும். கூடுதல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உணர்ச்சி வலியை ஆரோக்கியமான ஆக்கபூர்வமான முறையில் நிவர்த்தி செய்வது முக்கியம். நண்பர்கள், குடும்பத்தினர் ஆதரவைப் பெறுதல், மனநல நிபுணர்களிடமிருந்து சிகிச்சைக்கான ஆலோசனை பெறுதல், தன் நலம் பேணும் நுட்பங்களைப் பயிற்சி செய்தல், மன அழுத்தத்தைக் குறைக்கும் தசை-தளர்வு பயிற்சிகள், கலை சிகிச்சை போன்ற உத்திகளை பின்பற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.
வலிக்கு பங்களிக்கும் உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் அனுபவங்களின் காரணிகளைப் புரிந்துகொள்வது முதலில் மிக மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதும் உணர்ச்சி வலியை திறம்பட சமாளிக்க தகுந்த ஆதரவைப் பெறுவது முக்கியம்.
உளவியல் ரீதியான வலியை ஆரோக்கியமான முறையில் சமாளிப்பது நல்வாழ்விற்கும் வலியை நிரந்தரமாக குணப்படுத்துவதற்கும் அவசியம். வலியில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவியாக இருக்கும் சில உத்திகள் இங்கே:
1. ஆதரவைத் தேடுங்கள்: நம்பகமான நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களை அணுகவும். நம் உணர்வுகளையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ளும் அனுதாபம் கொண்ட ஒருவருடன் பகிர்ந்து கொள்வது ஆறுதலை அளிக்கும்.
2. சிகிச்சை / ஆலோசனை: ஒரு சிகிச்சையாளர் / ஆலோசகரிடம் இருந்து மருத்துவரீதியான உதவியை நாடவும். அவர்கள் நமக்கு வழிகாட்டுதல், சரியான ஆதரவு, சிகிச்சை நுணுக்கங்களை வழங்க முடியும், இது உளவியல் வலியை சரியான திசையில் செயலாக்க உதவும்.
3. தன் நலப் பயிற்சி: சுய-வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுதல், உடற்பயிற்சி, போதுமான தூக்கம், சீரான உணவைப் பராமரித்தல், தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்தல் (பிராணாயாமம், தியானம் போன்றவை), இயற்கைச் சூழலில், பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் ஆகியவை இதில் அடங்கும்.
4. எழுத்து: நம் எண்ணங்கள், உணர்வுகளை ஜர்னலிங் செய்வது, எழுதுவது ஒரு வினோதமான சிகிச்சை முறையாக இருக்கலாம். உணர்ச்சிகளை பாதுகாப்பான தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தவும் செயலாக்குவதையும் இலகுவாக்குகிறது. இவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் பிரச்சினைக்களுக்கானத் தீர்வுகளை நோக்கி நம் மனம் நகரும்.
5. பிரார்த்தனை / தியானம்: தியானப் பயிற்சிகளை வழக்கமாக்கிக் கொள்வது. இந்த நுட்பங்கள் தற்போதைய தருணத்தைப் பற்றிய விழிப்புணர்வை வளர்க்கவும், மன அழுத்தத்தை நேர்மறையாக நிர்வகிக்கவும், அமைதியான உணர்வை வளர்க்கவும் உதவும். நம்மையும் அறியாமல் நம்பிக்கையுணர்வை வளர்க்கும்.
6. நேர்மறையான செயல்களில் ஈடுபடுதல்: பொழுதுபோக்குகளைத் தொடர்வது, அன்பானவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, ஆக்கப்பூர்வமான காரியங்களில் பங்கேற்பது போன்ற மகிழ்ச்சியைத் தரும் செயல்களில் ஈடுபடுவது நம் கவனத்தை மாற்றவும், நிறைவான உணர்வை வழங்கவும் உதவும்.
7. எல்லைகளை அமைக்கவும்: உளவியல் வலிக்கு பங்களிக்கும் உறவுகள் மற்றும் சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வர ஆரோக்கியமான எல்லைகளை அமைக்கவும். தேவைப்படும்போது "இல்லை" என்று சொல்லக் கற்றுக்கொள்வது முக்கியம்.
8. ஆதரவுக் குழுக்கள்: இதே போன்ற அனுபவங்களைச் சந்தித்த மற்றவர்களுடன் இணையக்கூடிய ஆதரவுக் குழுவில் சேர்வதும், மற்றவர்களின் கதைகளைப் பகிர்வதும் கேட்பதும் "நாம் தனியாக இல்லை" என்ற உணர்வை அளிக்கும். Stigmaவிலிருந்து விடுபட உதவும்.
மனநலம் பயின்று, மற்றவர்களுக்கு உதவும் நிலையில் இருந்தாலும், ஒரு physician/medico நோய்வாய்ப்படும் சாத்தியங்கள் எவ்வளவு அதிகமோ, அதே போல, மனம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியானது தான். நமக்கு மனம் சரியாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் போதே, நாம் தீர்வை நோக்கி நகர ஆரம்பித்து விட்டோம் என்பதை உணர்வது மிகவும் அவசியம்.
ஒவ்வொருவரின் பயணமும் தனித்துவமானது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகைகளில் ஏதோ ஒன்றோடு போராடிக்கொண்டிருக்கிறோம். நமக்குச் சரியான, நமக்கேற்றச் சமாளிக்கும் உத்திகளைக் கண்டறிவது முக்கியம். வலியோடு வாழ வேண்டிய அவசியம் இல்லை.
அது உடல் வலியாக இருந்தால் தகுந்த டாக்டரிடம் ஆலோசனை பெற்று physiotherapy மூலம் சரி செய்து கொள்ளுங்கள். மனவலியாக இருந்தால் psychotherapy மூலம் சரி செய்து கொள்ளுங்கள். Awareness about the problem, being proactive with the diagnosis, acceptance to treat the problem are the keys to faster healing and recovery.
Overstimulation and Avoidance: ஓய்வெடுப்பதற்கு ஒருவருக்கு தனிப்பட்ட மன ஊக்கம் இருக்க வேண்டும். இப்படி நான் சொல்வது "என்னடா இது" என்று தோன்றலாம். ஆனால் ஓய்வெடுப்பது சிலருக்கு சங்கடமாக இருக்கும். அவர்கள் ஓய்வாக இருக்கும்போது எழும் அடிப்படை உணர்ச்சிகள் மற்றும் கவலைகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தங்களை பிஸியாக வைத்திருக்கலாம்.
Coping Mechanisms: விரும்பத்தகாத எண்ணங்கள், உணர்ச்சிகள், கடினமான வாழ்க்கைச் சூழ்நிலைகள் போன்ற உளச் சிக்கல்களில் இருந்து தங்களைத் திசைதிருப்ப சிலர் ஓயாமல் வேலை செய்து கொண்டே இருப்பது, தனது schedulesசை tight ஆக பிஸியாக வைத்திருப்பது போன்றவற்றை சமாளிக்கும் வழிமுறையாகப் பயன்படுத்தலாம். ஓய்வெடுப்பது அவர்கள் தவிர்க்க முயற்சிக்கும் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளச் செய்யலாம்.
Simple ஆன உதாரணம் ஒன்று. பரபரப்பான நகரத்தின் ஒரு மழைநாளில் ஒருவர் வீடு திரும்பப் படும் அல்லல்கள் இயல்பாகவே ஒருவரது கோபத்தை தூண்டி இருக்கும். பொதுவாக ஒரு சாதாரண மனிதருக்கு இப்படி கோபம் வருவது இயல்புதான். அந்தக் கோபத்தை நாம் எப்படி cope up செய்கிறோம் என்பதில் இருக்கிறது நமது self awareness.. எப்படி நம் மனதை, உடலின் limitationsசை புரிந்து கொள்வது? நம்மில் பெரும்பாலானவர்கள் கீழ்கண்ட வகைகளில் ஒருவராக இருக்கலாம்.
கோபத்தை யார் மேல் காட்டுவது என்று தெரியவில்லை என்றால்?
கோபத்தை வெளிக்காட்டும் நபராக இல்லாதிருந்தால்?
எல்லோருக்கும் இதே பிரச்சினைதானே என்று நினைப்பவராக இருந்தால்?
அவங்க எல்லாம் எப்படி சீட் கிடைத்து ஜாலியா உக்காந்து வராங்க பாரு.. நானும் இருக்கேனே... எனக்கு மட்டும் எப்போவும் இப்படித்தான் என்று புலம்புபவராக இருந்தால்?
இந்த 45 நிமிஷத்தில் எவ்வளவு வேலை செய்து முடித்திருக்கலாம்... இப்படி கால் வலிக்க நின்று வீணாகி விட்டதே? வீட்டுக்கு போய் கால் வலியோடு வேலை செய்ய முடியாது.. இன்று முழுதும் வேஸ்ட் ஆகி விட்டதே என்று frustrate ஆகி வருந்துபவராக இருந்தால்?
ஒரு மழையை கூட சமாளிக்க முடியாத கையாலாகாத ஒருவராக இருக்கிறேனே என்று frustrate ஆகி வருந்துபவராக இருந்தால்?
இதில் நீங்கள் யாராக இருந்தாலும், கீழிருக்கும் healthy coping strategyக்களில் ஏதாவது ஒன்றை consider செய்யலாம். மழையில் மாட்டிக்கொண்டு இருப்பது நிச்சயம் எரிச்சலாகவும், stressful ஆகவும்தான் இருக்கும். நமக்கு கோபமாக இருக்கிறது, எரிச்சலாக இருக்கிறது, stressed ஆக இருக்கிறோம் என்பதை ஒரு முறை நாமே சொல்லிக்கொண்டு, "இதெல்லாம் சகஜம்தானடா உனக்கு" என்று சமாதானம் சொல்லிக்கொள்ள வேண்டும். அப்போது மனம் கொஞ்சம் அமைதியாகும். காத்திருந்த அந்த 45 நிமிடங்களை வலியில்லாமல் சுவாரசியமான அனுபவமாக ஆக்கலாம். எப்படி?
1. அருகிலிருக்கும் டீக்கடையில் ஆற அமர டீ குடிக்கலாம் (no பஜ்ஜி ok!). மழையை ரசிக்கும் மனநிலை உருவாகும்.
2. உங்களைப் போன்றே மழையில் சிக்கிக் கொண்டு நிற்கும் சக மனிதர்களோடு உரையாடலாம். இப்படிப்பட்ட சிக்கலான சமயங்கள் positive connections ஏற்படுத்திக்கொள்ள நிறைய உதவும்.
3. எங்காவது பாதுகாப்பாக அமர்ந்து (cafe போன்ற இடங்களில்) நீண்ட நாளாக பேச நேரம் கிடைக்காமல் இருந்த உறவுகள்/நண்பர்களுக்கு phone செய்து பேசலாம்.போது
1993யில் சிதம்பரத்தில் அண்ணாமலை யூனிவர்சிட்டியில் 15 நாள் contact classes attend செய்து விட்டு, இரவுக்குள் வீடு திரும்ப, ஆறு மணிக்கு திருச்சிக்கு பஸ்ஸில் ஏறினேன். சரியான மழை, காற்று. பஸ்ஸின் கூரை பிய்த்துக் கொண்டு போனது. விருத்தாச்சலம் அருகில், பஸ் நடு ரோட்டில் நின்று விட்டது. மணி ஒன்பதாகி விட்டிருந்தது. நான் தனியாள். அப்போது 19 வயதுதான். மொபைல் போன் எல்லாம் அப்போது கிடையாது. பயமாக வேறு இருந்தது. அதே contact classசில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் (girls & boys) அங்கங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களோடு பேசிக் கொண்டு இருந்தேன். எல்லாருமே லால்குடி, திருவெள்ளறை என்று திருச்சி மெயின் தாண்டி போக வேண்டியவர்கள்தான். அங்கேயே ஒருவருக்கொருவர் துணையாக இருந்து பேசிக்கொண்டு இருந்தோம். விடியற்காலை இரண்டு மணிக்கு ஒரு பஸ் வந்தது, சீட் எல்லாம் கிடைக்கவில்லை. பஸ் தரையில் உட்கார்ந்து கொண்டு பயணம். ஆனால் இன்றும் நாங்கள் எல்லோரும் நண்பர்களாக இருக்கிறோம். அந்த அனுபவம் எனக்கு மிகப்பெரிய confidence தரும் நிகழ்வாக இருந்தது.
0 comments:
Post a Comment