கடவுளிடம் வேண்டிக்கொள்வதில்லை


என் படைப்பை வெளியிட்ட அதீதத்திற்கும் எடிட்டர்-ருக்கும் நன்றி.


கடவுளிடம் வேண்டிக்கொள்வதில்லை by விதூஷ்

இல்லையென்றால்
Pic Source: lava360.com
முற்றத்து வேப்பமரக் குருவிகளோடு விளையாட
நேற்று திடீரென இறந்த குழந்தையைக்
காப்பாற்றியிருப்பேன்
ஒருவேளை
அவன் விளையாடும் கூச்சல்கள் கேட்டு
என் முற்றம் மீது அசைந்து தவழக் கூடும்
எச்சிலொழுகக் கிடக்கும்
செரிபரல் பால்ஸிக்கான சப்ஜக்ட்
இருந்தாலும்
பிரார்த்தனையின் ஆற்றல்
தெரியவேயில்லை, அதனால்
விண்மீன்கள் விழக்கூடாதென்று
இப்போதெல்லாம்
கடவுளிடம் வேண்டிக்கொள்வதில்லை


pic source: http://www.lava360.com/artwork/photography/goddess-behind-the-mask-65-mysterious-eyes/

4 comments:

அமைதிச்சாரல் said...

ஜூப்பரு.. கவிதையும், அதீதத்தில் வெளியானதும் :-)

Anonymous said...

கவிதை நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

மனசை என்னவோ செய்தது..

Anonymous said...

My first visit here and found a beautiful poem that touched the heart.

Post a Comment