ஊஞ்சல் - 11.7.2011


ஊஞ்சல்:
பஸ்ஸில் பிரயாணிப்பது பிடித்திருப்பதாலும், ஜன்னலோர சீட்டு கிடைச்சு இடி மன்ன ரவுடீஸ் தொல்லை இல்லாம, காத்தாட நிம்மதியா கருத்தொருமித்த, ஓரளவுக்கு ஒரே மாதிரியான ரசனையுள்ள நண்பர்களின் நேர்மையான விமர்சனங்களோடு பிரயாணம் நன்றாகவே போய் கொண்டிருக்கிறது. ஜி+ இன்னும் பிடிபடலை. பஸ்ஸில் விண்டோ ஸ்பேஸ் அதிகம் இருப்பதும் காரணம். மேலும் ஜி+சில் இந்த மூன்று column டிசைன் எனக்கு பிடிக்கலை.

எத்தனையோ எழுத வேண்டி இருக்கு என்றாலும், பஸ் சட்டென்று சமயம் வாய்க்கும் போது கும்மிவிட தோதாய் இருக்கு. ப்ளாக் பக்கம் அவ்வளவாக வருவதில்லை. வந்தாலும் ரீடரில் படிக்கிறதோடு சரி என்று ஒதுங்கிவிட்டேன். :) சில நண்பர்களோடு தொடர்பு விட்டுப் போனதென்றாலும் இதிலும் ஒரு நிம்மதிதான்.

பக்கோடா:

எவ்வளவோ பல்பு வாங்கி இருந்தாலும் சில பல்புகளுக்கு ஈடு இணையே கிடையாது என்றாகி outstanding பல்ப் ஆகி விடுகிறது. நேற்று ஞாயிறு என்பதால் "வாம்மா ஊர் சுத்தப் போலாம்"னு கூப்பிட்டாள். சத்யமில் குங்க்ஃபூ பாண்டா டிக்கெட் கிடைக்கவில்லை, சரின்னு எக்மோர் போயிட்டு அங்கேர்ந்து தாம்பரம் டு பீச், பீச் டு ஃபோர்ட், ஃபோர்ட் டு திருவான்மியூர், திருவான்மியூர் டு மயிலாப்பூர் என்று மெட்ரோ பிரயாணம். வழியில் ஐநூறு ரூபாய்க்கு பீப்பாசிகள், கிளிப், டாங்க்ளர் பொய்க்கா முத்து தோடுகள், டோரா கர்சீப்புகள், என்று சகல பர்சேசும் அவள் ஆசை தீர ஆனது. அம்மாக்கு இன்னிக்கு ஆஃபீசு லீவு, அதுனால இவ்ளோதான் பணம் இருக்கு என்று சொன்னதால் அதோடு நின்றது. ரயில் பிரயாணம் எனக்கும் பிடிக்கும் என்பதால் செமையாய் என்ஜாய் பண்ணினோம். இரவு மயிலாப்பூர் சரவணாவில் சாப்பிட்டுவிட்டு மெட்ரோ-விலேயே வேளச்சேரி, அப்புறம் ஆட்டோ என்று வீடு வந்தோம். ரொம்ப டயர்ட்.

மோரில் வெந்தயம் - உப்பு போட்டு குடித்துவிட்டு, கொஞ்ச நேரம் டீ-வி பார்க்கிறேன் என்றாள், சரின்னு ச்சோட்டா பீம் வைத்தேன், நடுநடுவே விளம்பர இடைவேளையில் ஓம் ஷாந்தி ஓம் மற்றும் ரப் நே பனா தி ஜோடி இரண்டு படமும் மறுபடி பார்க்கலாம்னு பார்த்தேன். செம கடி. ஷாரூக்கானை அபிமன்யூ ராய்-யாக ஃபௌஜி-ன்னு ஒரு ஹிந்தி சீரியலில் ஆரம்பகாலத்தில் கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருப்போம். கழுதை தேய்ந்து கட்டெறும்பா ஆனா மாதிரி புகழின் உச்சம் மனுஷனை எந்தளவு சறுக்க வைக்கும்னு வீர்-சறா-வுக்கு அப்புறம் எந்த படமும் எனக்கு பிடிக்கவே இல்லை.

அதை விடுங்கள், இப்படியே ஒன்பதரை மணி ஆகி விட்டது. தர்ஷிணி தூங்கணும் வா-ன்னு கூபிட்டுகிட்டே இருந்தேன், மாடிக்கு போய் கொஞ்சம் விளையாடிட்டு வரேன்னு ஒரே அடம் பண்ண ஆரம்பிச்சா, முதுகில் ஒண்ணு குடுத்ததும் (லைட்டாத்தான்) கொஞ்சம் அழுதுகொண்டே பெட்ரூமுக்குப் போனாள். நானும் போய் படுத்துக் கொண்டேன். அன்று ஹெரிடேஜ் ஃபிரெஷ்சில் say thanks and please -ன்னு ஒரு புத்தகம் வாங்கி இருந்தோம். அதை படிச்சு காட்டுன்னு கேட்டாள். கொஞ்சம் படிக்க ஆரம்பித்து மூன்று நான்கு பக்கங்கள் தாண்டியதும் தூங்க ஆரம்பிச்சு வாய் தான்பாட்டுக்கு ஏதோ "கரடி ரயில் டில்லி" எல்லாம் சொல்ல ஆரம்பிச்சது. என்ன தூங்கற என்று "பட்-பட்"டென்று அடி விழுந்தது, எழுந்தேன்.

"அம்மாவை போய் அடிக்கிறாயே" என்றேன். "நீ மட்டும் அப்ப என்ன அடிச்சியே?" என்றாள். "நீ தப்பு பண்ணே-அடிச்சேன்" என்றேன். "நீ என்னை அடிச்செயில்ல, அடிக்கிறது தப்புத்தான?" என்றாள்... # சுவாமிமலை முருகனே நேரில் வந்த எஃபக்டு


தேநீர்:
photo: thanks to loti.com
வ்யூ மாஸ்டர் (view master) என்றொன்று பழனியில் இருந்த போது (ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயின்றது கார்த்திக் ஸ்கூலில்) அப்பா வாங்கிக் கொடுத்தது, இதோ படத்தில் இருக்கிறது போன்ற ஒன்றேதான். நேற்று பொண்ணுக்கு மெட்ரோ-வில் பச்சை கலர் பிளாஸ்டிக்கில் ஆறே ஆறு படம் வைத்து "கேமெரா" என்று விற்றதை வாங்கிக் கொடுத்த போது வ்யூ மாஸ்டர் நினைவுக்கு வந்தது. அம்மாக்கு போன் பண்ணி இருக்கான்னு கேட்டேன். பார்க்கணும் என்றார். அடுத்த வாரம் போய் தேடி எடுக்கணும். வ்யூ மாஸ்டர் (அந்த கருப்பு பைனாகுலர் டைப்பில் இருப்பது) வாங்கிக் கொண்டால், இந்த ஃபிலிம் ரீல்கள் ரவுண்ட் கார்ட் போர்ட் அட்டையில் ஒட்டி தீமாடிக் ஆக கிடைக்கும். இந்திய நடனங்கள், ஏழு அதிசயக் கட்டிடங்கள், கிராமங்கள், தலைவர்கள், ம்யூசியங்கள், மிருகங்கள், பறவைகள், கொடிகள் என்று விதவிதமாய் பார்க்கலாம்.

இப்போது கிடைக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்.

மழை: ஏதும் பெய்யவில்லை.

2 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஓம் ஷாந்தி ஓம்... பரவால்லை.

'ரப் நே பனா தி ஜோடி' எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. ஏன்னு தெரியலை :-)))))))

pudugaithendral said...

வரவர ஷாருக் படம் பாக்கும் மனசே இல்லை.

Post a Comment