சுயம்

Pic Source: http://aboutmeinfo.wordpress.com/

வேறொருவரின் இசைக்கு
நடனமாடும்
என்னுடல் மொழியை இரசிப்பது யார்
இசைக்கேற்ற நடனமே தேவை
என் உடைக்குள் ஆயுதங்களும்
ஒளிந்திருப்பதைக்
கவனித்திருப்பார்களெனில்
மொழி
வேறாக இருந்திருக்கலாம்.
என்னையே பின்பற்றிக்
கொண்டிருக்கிறேன் நான்.


(Previously on Buzz)

0 comments:

Post a Comment