மூன்று முடிச்சுகள் [தொடர் பதிவு]

நன்றி கோபி

பதிவெழுத மேட்டர் இல்லாத நேரத்தில் இந்த வாய்ப்பு பாலைவனச் சோலை அப்படி இப்படி.... (இது போதுமா. இல்லை எங்க ஸ்டைல்ல கொஞ்சம் பேசவா.. பேசவா.. சோடா ப்ளீஸ்.)

தொடர்பதிவு எழுத அழைத்த கோபிக்கு மிக்க நன்றி.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
எதையாவது படிப்பது, எழுதுவது, மொழிபெயர்ப்பது
தர்ஷிணியோடு இருக்கும் நேரங்கள்
இது ரெண்டுமே இல்லாத தனிமையில் சினிமா பார்ப்பது, பயணத்தில் ஜன்னல் சீட்டு பயணம், அண்ட் சோ ஆன்

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
எதையாவது ஆர்வமாய் செய்து கொண்டிருக்கும் போது வரும் இடையூறுகள்
சத்தம்
தனிமை

3) பயப்படும் மூன்று விஷயங்கள்
நிலைக்கண்ணாடி காட்டும் நான் ;)
கண்மூடித்தனமாய் அன்பு வைத்திருக்கும் நபர்கள் செய்துவிட்ட பச்சை துரோகங்கள் எனக்கு தந்து விட்ட பற்றற்ற மனநிலை
ஒரு துர்மரணம் நிரந்தரமாய் தந்துவிட்ட மரண பயம்

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
லத்தீன் மற்றும் இன்னும் பல மொழிகள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
கண்ணுக்கு முன் வெள்ளை வெள்ளையாய் சில நேரம் கோடுகள் (புழுமாதிரி) பறக்கும் - அது என்ன?

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
ஹேன்ட்பேக்
பேனா ஸ்டான்ட், அதுக்கடியில் என் டயரி
கம்ப்யூட்டர் மற்றும் கிறுக்கல் நோட்டு

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
எனக்கு இவங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான்
தர்ஷிணி
குசும்பன்
தர்ஷிணி & குசும்பன்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
Time stops at Shamli மற்றும் PreKG ஆக்டிவிடி புக் மாறி மாறி ரெண்டு நாளாய் படிக்கிறேன்.
வாஷிங் மெஷின் இன்ஸ்டால் பண்ண வந்த "பையன்" என்னோட படிச்சவன், அவனோட கொஞ்சம் அரட்டை
பாஸ்தா செய்து பார்த்து ஃப்ளாப் ஆன வாணலியை தேய்த்து வைத்த அப்புறம் சும்மாதான் இருக்கேன், அதனால் ப்ளாகறேன்.

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
சாகித்ய அகாடெமிக்கு என்ட்ரி கொடுக்கவாவது தகுதியாய் ஒன்றை எழுதுவது
நல்ல நல்ல சம்ஸ்கிருத சாகித்யங்கள் இருப்பவற்றை இயன்றவரை தமிழில் மாற்றி இணையத்தில் ஏற்றுவது
நான் குட்டியாய் இருந்த போது போட்டுக் கொண்ட பழைய ஜீன்ஸ்சை மறுபடி போட்டுக்கொள்வது

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
தெரியவில்லை, செய்வது முயற்சி மட்டுமே, அதன் முடிவு கைலாசநாதர் காலடியில் அர்க்கிய சமர்ப்பணம்.. சமையலைப் போலவே எல்லாமும்.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
நாராச சத்தங்கள்
புறம் பேசும் வாய்ச்சொற்கள்
அழுகை / விசும்பல்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
photography
carpentry
பற்றற்ற துறவுநிலை

12) பிடிச்ச மூன்று உணவு வகை?
பட்டர்-ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்
வத்தல் குழம்பு சாத்துக்கு வெள்ளரி ராய்த்தா
தயிர் சாதம் வித் மிளகு குழம்பு

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
தினமும் கர்ம ஸ்ரத்தையாய் முணுமுணுப்பது: சுப்ரமணிய புஜங்கம்

சும்மா மனசுக்குள் / ஸ்கூட்டர் ஓட்டும் போது வாய்விட்டு ரெண்டு நாளாய்:-
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
யே இஷ்கு ஹாயே (ஜப் வீ மெட் - ஹிந்தி)
dem bones dem bones - rhymes

14) பிடித்த மூன்று படங்கள்?
இது அப்பப்போ மாறிக்கும். இப்போதைக்கு:-
என்னால் மறக்கவே முடியாமல், ஏதோ கொஞ்சம் சேன்ஜ் வேணும்னு நினைக்கும் போதெல்லாம் அலுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கும் சினிமாக்கள்
Dhobi Ghat
Fashion
பாமா விஜயம்

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
materialistic கேள்வி என்றால் அப்படியேதும் இல்லை. இது அவசியம் வேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு வேண்டவே வேண்டாம் என்றும் ஒதுக்கவும் முடியும் என்னால். கொஞ்சம் குரூர புத்தி.
ஆனால் தர்ஷிணி இல்லாத நிமிஷங்களை என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை, அவள் என் வாழ்கையில் வராமல் இருந்திருந்தால் ஒருவேளை நான் aimless ஆகியிருப்பேனோன்னு தோணும்.

உயிர் இருக்கும் ஒவ்வொருத்தருக்கும் அவசியம் : பஞ்சபூதங்கள் - உணவு - மனநலன்

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
யாருக்கு ஆசையா இருக்கோ எல்லாரும் எழுதுங்க. இது ஜாலியான விளையாட்டு. come on.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அட்டகாசமான பகிர்வு., பாராட்டுக்கள்.

Gopi Ramamoorthy said...

கலக்கிட்டீங்க:-)

ஹுஸைனம்மா said...

பதில்கள் அருமை.

//கண்ணுக்கு முன் வெள்ளை வெள்ளையாய் சில நேரம் கோடுகள் (புழுமாதிரி) பறக்கும் - அது என்ன?//

எனக்கும் இப்படி இருக்கும். ஒரு வார இதழில் இந்த கே&ப படிக்க்ற வரை ரொம்ப டவுட்டாவே இருந்துது.


Answered by Dr VL Shyam, MD (Ay), M Phil is a certified ayurvedic consultant

I am in my early forties. Of late I have begun noticing black spots (floaters) in front of my eyes. I experienced this a few years ago and at the time it was not so pronounced. Please advise.
- R.M., by email

Are you referring to the floating black spots in your vision? (not black spots in the white part of the eye.) An eye floater is an appropriate name for these small dark shapes that look like dots, marks and strands that appear before your eyes, because they float through your field of vision. Seeing occasional black spots is quite normal. Floaters, or black spots in vision, are generally a sign of ageing. The little spots are shadows caused by strands of the vitreous, the gel-like filling in our eyes. The vitreous shrinks over time and condenses, producing strings. These strings start to cast shadows that you see as black spots. Although for most people it is a natural occurrence, for others it could signal infection, haemorrhage, inflammation, and eye injury or retinal tears. If you suddenly start to see a lot of eye floaters, consult an ophthalmologist. Have your blood glucose levels checked, keep your blood pressure within range, and get an expert eye examination.

ரிஷபன் said...

ரசனையாய் மனசு பூர்வமாய் பதில்கள்.. படிக்கும்போதே அதை உணர்கிற மாதிரி..

Post a Comment