எண்ணெய் மீதமுள்ள அகல்


வெற்றிடம் நிரப்பும் காற்று
வீசும்போதெல்லாம்
நதியலைகளில் சலனிக்கும்
உடைந்துவிட்ட ஓடம்
ஊமையின் குரலில் கீதம்
ப்ப்பென்று ஒலிக்கும்
காட்டுப்பூ மலரும் சிதைகூளம்
கறுப்புச் சால்வைக்குள் ஒளிந்தபடி
ஓடும் இரவுச் சாலையின்
வெளிச்சம் நோக்கிய பயணம்
கல்லுக்குள் நதித்துளி கொண்டு
பிளவுற்ற கரிசல்மண்
எண்ணெய் மீதமுள்ள அகலுள்
ஒரு தீக்குச்சிக்கென
காத்திருக்கும் திரி

8 comments:

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Nundhaa said...

ஒரு சில வரிகள் மட்டும் தனி ஆவர்த்தனமாக என்னைக் கவர்கின்றன

அமைதிச்சாரல் said...

ஜூப்ப்பரு கவிதை:-)

Vidhoosh said...

நன்றி ரத்தினவேல் ஐயா.

தாங்க்ஸ் நந்தா. ரொம்ப நாளாச்சு. வேறே பேர்லே எழுதறீங்களோ..

நன்றி அமைதி. :)

பாச மலர் / Paasa Malar said...

அழகான வார்த்தைகளில் செதுக்கப்பட்ட கவிதை..

Vidhoosh said...

thanks Pasamalar. :)

குடந்தை அன்புமணி said...

தங்களின் இந்த இடுகையை http://vidhoosh.blogspot.com/2010/07/blog-post_09.html
விரைவில் வெளிவரவிருக்கும் பதிவர் தென்றல் மாதஇதழில் பயன்படுத்திக் கொள்ளலாமா? தங்கள் விருப்பத்தை எனது மெயிலில் தெரிவிக்க வேண்டுகிறேன். விவரங்களுக்கு பாருங்கள். thagavalmalar.blogspot.com தொடர்புக்கு... thambaramanbu@gmail.com

Vidhoosh said...

with pleasure, Anbumani. How are you? Long time?

Post a Comment