மரபியல் மாற்றப்பட்டது


ஆந்தைகளும் கருடன்களும்
செல்வந்தர்களுக்கு.
சாணக்கியன் கூற்றில்
காகங்களும் சண்டாளர்களே.
அந்தரவெளிகளின் வெறுமையை
அதுவும்தான் இரசிக்கிறது
அதுவும்தான் பழுப்பும் கருப்புமென
இரண்டே வண்ணங்களில் இருக்கிறது
அப்படியென்ன தேடித் திரிகிறதோ
தெரியவில்லை
ஒன்றுமில்லாத ஒன்றை
ஒன்றாகக் காட்டுவதில்
அதற்கும் திறமுண்டு
கூர்ந்து கவனியுங்கள்,
உங்களுக்கேனும் தெரிகிறதா?
கவிதைக்கும் குருவிக்குமான ஏதேனும்?
நொடிக்கொருமுறை தாவிச் செல்லும்
குருவியாலும் பறக்கவியலும்
ஏதுமற்றதைக் குறித்து.
மரபற்றழிந்தது அன்னம்.

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

வித்யாசமான சிந்தனை..

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.

Post a Comment