ஆகஸ்ட் சந்திப்புக்கள்

நாள்: 4-8-2011 (வியாழக்கிழமை)
வீட்டுப்புறா சக்தியின் சென்னை வருகை மற்றும் நீண்ட நாட்களாக சென்னை நண்பர்கள் சந்திக்காமல் இருப்பதையும் முன்னிட்டு சின்னக் குழுவாகச்  சந்திக்கலாம் என்று நினைத்து ஆகஸ்ட் நாலாம் தேதி சமயம் இருந்தால் பெண் பதிவர்கள்/பஸ்ஸர்கள் சந்தித்துப் பேசலாம் என்று நினைத்திருந்தோம். கடற்கரைச் சந்திப்புக்கள் பெரும்பாலும் பெண்களுக்கு தோதாக அமைவதில்லை என்பதாலும், ழ கஃபே சௌகரியமான இடம் என்பதாலும் அங்கேயே சந்திக்கலாம் என்று ஆனது. நாங்களும் வருகிறோம் என்று நண்பர்களும் நண்பிகளும் சொல்ல சொல்ல சின்ன விழாவாகவே மாறியது அன்றைய தினம்.

கருவேப்பிலை சூப், வாழைப்பூ வடை, சுண்டல், வெஜ் டிக்கா, சான்ட்விச், சர்பத், காபி, குலாப் ஜாமுன் வித் ஐஸ் கிரீம் என்று அமர்க்களமாக இருந்தது. அன்றைய தினச் செலவுகளை பகிர்ந்து கொண்ட ஈஸ்வரி ரகு, வித்யா, ரம்யா, ராஜி, மணிஜி, ஓ.ஆர்.பி ராஜா, வாசு ஆகியோருக்கு நன்றி.


தேனம்மை லக்ஷ்மணன் இங்கே விரிவாக எழுதி இருக்கார். 


போட்டோக்கள் 1, 2



======================

நாள்: 10-8-2011 (புதன்கிழமை)

சீனியர் பதிவர் டுபுக்கு அவர்களை வரவை முன்னிட்டு நிகழ்ந்த கடற்கரை சந்திப்பு மற்றும் நண்பர் அப்துல்லா  ஏற்பாடு செய்திருந்த இப்தார் விருந்து போட்டோக்கள்: 1 



======================
நாள்: 20-8-2011 (சனிக்கிழமை)

சனிக்கிழமை மாலை சென்னையில் பதிவுலக நண்பர்களை சந்திக்கும் எண்ணத்தோடும் ”வலசை” பற்றி நம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவும் கார்த்திகை பாண்டியன் வந்திருந்தார், நல்லதொரு வாய்ப்பாக இருக்குமென மீண்டும் ழ-வில் சந்தித்தோம்.


இதுவும் மிகவும் மகிழ்வான தருணமாக அமைந்தது.


வலசை குறித்து தனியாக எழுதுகிறேன்.


இந்தச் சந்திப்பில் ஒரு டிஸ்கவரி .. எனக்கு!... அது கேபிள் சங்கரின் குரல்வளம். கிருஷ்ணா காட்டேஜ் என்று "காவியத் திங்கள்" கொடுமைகளில் டோப்பா வைத்துக் கொண்டு அன்னாருக்கு யாரோ கொடுத்த கொடூர டப்பிங் குரல்தான் எங்க அங்கிள் குரல் என்றே நம்பிக் கொண்டு, நானும் விரைவில் பாடகி ஆகிடலாம் என்று ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தேன். அப்துல்லா மற்றும் சங்கரின் பாடல்கள் இங்கே. நிஜமாவே நல்ல வாய்ஸ், அங்கிளுக்கு.


அங்கிள்
அப்துல்லா


குட்டி டின்னுக்கு இப்பிடி ஒரு சோகம்? :-))
மற்ற போட்டோக்கள்

 அதுக்கப்புறம் வேறு கலாட்டாவா இருந்திருக்கு. நாங்கதான் லேட்டாகிடுச்சுன்னு கிளம்பிட்டோம். :-)

வந்திருந்த நண்பர்கள்: 
கார்த்திகைப்பாண்டியன், MM அப்துல்லா, கேபிள் சங்கர், அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, மயில்ராவணன், உருப்படாதது நரேன், கிருஷ்ணப்பிரபு, ராம்ஜி யாகூ, ஸ்டாலின் பெலிக்ஸ், சாறு சங்கர், பபாஷா, குட்டி டின், ராஜ்குமார் சின்னசாமி, ரோமியோ, விதூஷ், மதார், வித்யாஷங்கர், லக்கிலுக், அதிஷா, அருணையடி, வடகரைவேலன், எல் கே, கே ஆர் பி செந்தில், ஓஆர்பி ராஜா, அ.மு. செய்யது

=======================
நாள்: 21.8.2011 (ஞாயிறு)


விஜி வராங்கன்னு கேள்வி. ரம்யா வீட்டில் சந்திக்கலாம்னு பேசி வைத்திருந்தோம். கடைசியில் விஜியை சந்திக்க முடியாமல் போச்சு.

கார்த்திகை பாண்டியன் வேறு ஞாயிறு அன்று பத்மஜா, ராஜசுந்தரராஜன் சார், மற்றும் காமராஜ் சார் எல்லாரும் டிஸ்கவரி வராங்கன்னு சொல்லிட்டு இருந்தார். என் ஆதர்சங்கள், சந்திக்க விருப்பம். புத்தகக் கடை என்று வேறு தயக்கம் இருந்தது. வாய்ப்பை தவற விடக்கூடாது என்று கிளம்பி விட்டேன். வேளச்சேரியில் கா.பா வுக்கு லிப்ட் கொடுத்து, விடு ஜூட். மேவி-யும் வந்திருந்தார்.

அருமையான சந்திப்பாகவே அமைந்தது.


ராஜா சந்திரசேகர் அவர்களையும் சந்தித்தோம். போட்டோக்கள் வேடியப்பன் பேஸ்புக்கில்-இருக்கு.

3 comments:

அமுதா கிருஷ்ணா said...

இப்படி சந்திப்புக்கள் இருக்கிறது என்று பதிவில் முன்பே சொல்லி இருந்தால் நாங்களும் வந்து இருப்போம்.அடுத்த முறை சொல்லுங்கள்.

நேசமித்ரன் said...

நன்றி விதூஷ் , வலசை குறித்த விரிவான பார்வையை எதிர்நோக்கி ...

:)

Vediyappan M said...

விதுஸ் அக்காவுக்கு நன்றிகள்! இன்று பத்ஜா அவர்கள் மேலும் சில பிரதிகள் வலசை வாங்கினார்கள். வலை விற்பனை வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது.

Post a Comment