பெண்ணாயிருத்தல்


அப்பாவும் கணவரும் அருமையாகப்
பார்த்துக் கொள்கிறார்கள்
வேண்டியதைச் சாப்பிடலாம்
விருப்பமானதை உடுத்தலாம்
அடுத்தவருக்கும் தான்
விரும்பியதைக் கொடுக்கலாம்
எவ்வளவு
இலகுவாயிருக்கிறது
பெண்ணாயிருத்தல்
கிணற்றுத் தவளை முப்பது மீட்டர்
ஏறி தினமும் மூன்று மீட்டர் சறுக்கும்
புதிருக்கு
என்னடி செய்வேன் இப்போது
என்று
எப்போதும் போல
என்னிடம்தான் கேட்கிறாள்
அவளுக்கு என்ன குறை?

7 comments:

நட்புடன் ஜமால் said...

அண்ணனையும்
மகனையும் கூட சேர்த்திருக்கலாம்

நல்ல புதிர் தான்

எல் கே said...

ஹ்ம்ம் விடை தெரியாத புதிர்

இன்றைய கவிதை said...

ஒன்று தெரியுமா விதூஷ்?

ஆணாயிருத்தலும், பெண்ணாயிருத்தலும் தவறில்லை! ஆயின்...சார்ந்திருப்பதுதான் பெரும் தவறு!

வயது ஆக ஆக, ஆண் பெண்ணைச் சார்ந்தே இருக்கிறான்...

இதுதான் நிகழ்வு...!

உங்கள் கவிதை அருமை!

-கேயார்

(Mis)Chief Editor said...

இது கவிதையா...இல்லை ஆதங்கமா?!

கொஞ்சம் லொள்ளுடன்,
பருப்பு ஆசிரியன்

(Mis)Chief Editor said...

கொஞ்சமா சுய விளம்பரம்...

http://katha-kelu.blogspot.com/2011/06/blog-post.html

ஹி! ஹி!

-பருப்பு ஆசிரியன்

மாலதி said...

//புதிருக்கு
என்னடி செய்வேன் இப்போது
என்று
எப்போதும் போல
என்னிடம்தான் கேட்கிறாள்
அவளுக்கு என்ன குறை?//தெரியாத புதிர்

Yaathoramani.blogspot.com said...

முப்பது மீட்டர் ஏறி மூன்று மீட்டர் சறுக்கும்
கிணற்றுத்தவளை....
மிகச் சரியான உவமை
சிந்தனையை தூண்டிச் செல்லும் தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment