சூரிய நமஸ்காரப் பதிகம் - இருபது சில்லறை கட்டடம்


வீதிவெளி யாகாச மீதிற் பிரகாசமாய் மெய்ஞான தீபச் சுடராய்
வெளியாகி ஒளியாகி விந்துசுழி முனைமீதில் விளையாடும் ஓங்காரமாய்
ஓதுமுத லைந்தெழுத் துபதேச மந்திரம் உரைக்கின்ற சற்குருவுமாய்
உருவாகி உயிராகி உயிருக்குள் அறிவாகி ஊடாடி நின்ற உணர்வாய்
ஆதிமுத லானவளரன் டபகி ரண்டங்கள் ஆயிரத் தெட்டுமாகி
அறுநூற்றிருபத்து நாலு புவனங்களும் ஆண்ட மயமான நிறமாம்
சோதிமய மானபரி பூரணவிலாசமிகு சூட்சும ரதமே றியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர சூரி நாராயண சுவாமியே !
உத்ரமிகும் அக்கினி சொரூப வடிவாகிய ஓங்கார ரூபமாகி
ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில் உதிக்கின்ற தெய்வமாகிச்
சகல புவனங்களும் தானாகி நின்றவொரு சச்சிதானந்த மயமாய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய சகல சூட்சும தாரியாய்
விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர் வேதாந்த முத்தி முதலாய்
வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன் வேதனே பர நாதனே
சுக்ரகெம் பீரபரி பூரண விலாசனே சுயம்புரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர சூரி நாராயண சுவாமியே !

1 comments:

Poorna said...

Sema Suuuuuper......

Post a Comment