பழுப்பேறிய கவிதை


புழுதியும் பழுப்புமாய் கிடக்கும்
புத்தகங்களைப் போலவே,
அமைதியாய், தனியாய்,
அழுந்திக் கிடக்கும்
நினைவுகளைக்  கிளறிச்செல்லும்
மீள் வாசித்த பழைய கவிதையொன்று.

என்றேனும் வெளிவரத் துடிக்கும்  
பழுப்பேறிய பக்கங்களுக்கு
உயிரூட்டிக் கொண்டே
அப்படியேதான் கிடக்கின்றன
பழையதாகிப் போகும்
பக்கங்களைப் போல இல்லை,
பக்கங்களில் பதிந்துவிட்ட வார்த்தைகள்.

6 comments:

தினேஷ்குமார் said...

ரொம்ப நல்லாருக்கு கவிதை ...

எல் கே said...

உங்க கவிதை எனக்கு புரிஞ்சிடுச்சி.....

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு வித்யா

Vidhoosh said...

நன்றி தினேஷ்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி எல்.கே.
நன்றி லாவ்ஸ்.

இன்றைய கவிதை said...

திராட்சை ரசம் போல் உங்கள் கவிதை பழுப்பேறினாலும் சுவைக்கூடிக்கொண்டேயிருக்கும்...
நல்லாயிருந்தது

நன்றி
விதூஷ்

உமா மோகன் said...

uthirum ilaiku pazhuppu pachai kavalai illai. nam pakkam vanthathaal pakkathirkuthaan....

Post a Comment