கவி காளிதாஸ் போல செருமிக்கவும்

உன்னைத் தனிமையில் மட்டுமே
நினைத்துக் கொள்கிறேன்
தேடவேண்டாம் என்னை
உன்னை நினைத்து நினைத்து
சோகமெனும் பெருங்கடலில் மூழ்கி
புத்தக விமர்சனக் கூட்டத்தில் இருக்கிறேன்

அஃ அஃ அஃ அஃ (தேவதாஸ் போல இருமிக்கவும்)

கடல் வானம் விண்மீன்
நீர் உணவு துயில்
இதுவும் கடந்து போகும்
என்ன நான் சொல்றது?

அஃ அஃ அஃ அஃ (சின்னப்பதாஸ் போல முறுக்கிக்கவும்)

ரேஷன் கடை நெல்லா நீ
கிழங் கட்டைகள் சொல்லும் சொல்லா நீ
இதுகூட இல்லை என்றால்
கழுதைகள் தின்னும் புல்லா நீ

அஃ அஃ அஃ அஃ (காளிதாஸ் போல செருமிக்கவும்)


நண்பர்களே...
என்னைப் போலவே நீங்களும்
கவிதையெழுதி கவிதையெழுதி
புகழ் பெறலாம் புகழ் பெறலாம்
கவிதை சமைக்கலாம் வாருங்கள்
நிச்சயம் ஒரு முட்டை
இரண்டு தக்காளி
வீசப்படும் இன்று

அஹா... அஹா...அஹா... அஹா...அஹா... அஹா...

மனம் போன போக்கில்
போய்கொண்டே இருங்கள்
நிற்காதீர்கள் எங்கும்
பின்னாடி முன்னாடி யாரையும்
முன்னேற விடாதீர்கள்
முன்னாடி பின்னாடி இருந்தாலும்
முன்னாடி போய் விடுங்கள்
சந்தொன்று கிடைத்தாலும்
சரக்கென்றே போங்கள்
அப்படித்தான் ஓட்ட முடியும்
ஆட்டோ...

அஹா... அஹா...அஹா... அஹா...அஹா... அஹா...


கைத்தட்டணும்னு ஒவ்வோர் தரமும் சொல்லிக்கிட்டே இருக்கணுமாக்கும்... ம்ம்..

17 comments:

sakthi said...

கை தட்டறேன் பாஸ்

sakthi said...

கடல் வானம் விண்மீன்
நீர் உணவு துயில்
இதுவும் கடந்து போகும்
என்ன நான் சொல்றது?


சரிங்க மேடம்

sakthi said...

உன்னைத் தனிமையில் மட்டுமே
நினைத்துக் கொள்கிறேன்
தேடவேண்டாம் என்னை
உன்னை நினைத்து நினைத்து
சோகமெனும் பெருங்கடலில் மூழ்கி
புத்தக விமர்சனக் கூட்டத்தில் இருக்கிறேன்


கிழி கிழி

sakthi said...

நண்பர்களே...
என்னைப் போலவே நீங்களும்
கவிதையெழுதி கவிதையெழுதி
புகழ் பெறலாம் புகழ் பெறலாம்
கவிதை சமைக்கலாம் வாருங்கள்
நிச்சயம் ஒரு முட்டை
இரண்டு தக்காளி
வீசப்படும் இன்று

எதையும் தாங்கும் இதயம்
அதையும் தாங்கும்

sakthi said...

மனம் போன போக்கில்
போய்கொண்டே இருங்கள்
நிற்காதீர்கள் எங்கும்
பின்னாடி முன்னாடி யாரையும்
முன்னேற விடாதீர்கள்
முன்னாடி பின்னாடி இருந்தாலும்
முன்னாடி போய் விடுங்கள்
சந்தொன்று கிடைத்தாலும்
சரக்கென்றே போங்கள்
அப்படித்தான் ஓட்ட முடியும்
ஆட்டோ...

சரிங்க தல

sakthi said...

கைத்தட்டணும்னு ஒவ்வோர் தரமும் சொல்லிக்கிட்டே இருக்கணுமாக்கும்... ம்ம்.


விதூஷ் ரசிகர் மன்றம்
கோவை கிளை

Vidhoosh said...

ஒரே ரசிகர் மன்ற செயலாளர், மன்றத்தின் ஒரே உறுப்பினர் வீட்டுப்புறா சக்தி வாழ்க வாழ்க...

எல் கே said...

இன்னொரு உறுப்பினர் நான் இருக்கேன். எல்லா கவுஜைக்கும் கமென்ட் போடறேன். எப்படி மறக்கலாம்

சாந்தி மாரியப்பன் said...

இருமிக்கிட்டே கைத்தட்டணுமா.. கைத்தட்டிக்கிட்டே இருமணுமா. ஒண்ணுபோல வரமாட்டேங்குது..

சாந்தி மாரியப்பன் said...

தனித்தனியா செஞ்சா அது மன்றவிதிகளுக்கு எதிரானது.. விதின்னு வந்துட்டா நாங்கல்லாம் மீறுறதில்லை.

R. Gopi said...

ஸ்க்ரிப்ளிங் வித்யா ரேஞ்சுக்கு இல்லை. I think you lost touch and she is in full form. Better luck next time Vidoosh:))))))

Vidhoosh said...

நன்றி எல்.கே. ஆகா... சங்கத் தலைவரே நீங்கதாங்க... புறப்படுங்கள் சிங்கங்களே... அடுத்த முதல்வர் நான்தான்.. :))

அமைதி: :))) முடியற வரை முயற்சி பண்ணிகிட்டே இருங்க. விதி வலியது அமைச்சரே...

கோபி: அவங்க இலக்கியவாதிங்க.. நானெல்லாம் ஜூஜூபி ... பிசுகோத்து...

நசரேயன் said...

இப்போதைக்கு உள்ளேன் போட்டுக்குறேன் அப்புறம் வந்து கும்முறேன் ..

நசரேயன் said...

//உன்னைத் தனிமையில் மட்டுமே
நினைத்துக் கொள்கிறேன்//

மாநாடு போட்டா நினைக்க முடியும்

நசரேயன் said...

கடல் வானம் விண்மீன்
நீர் உணவு துயில்
விதுஷ் பக்கோடா கவுஜை
எழுத்தாயினி மொக்கையாயினி
இதுவும் கடந்து போகலைனா
பக்கோடாவை கொண்டு எறிவோம்

நசரேயன் said...

அடித்து விழுந்த பல்லா நீ
அடித்த ஆணியா நீ
பிடுங்காத ஆணியா நீ
அரைக்காத மாவா நீ
வேகாத கோழியா நீ
இதுகூட இல்லை என்றால்
பக்கோடாவை தின்னும் பேப்பரா நீ

நசரேயன் said...

//கைத்தட்டணும்னு ஒவ்வோர் தரமும் சொல்லிக்கிட்டே இருக்கணுமாக்கும்//

கல்ல கொடு எறியவும் சொல்ல வேண்டியதில்லை

Post a Comment