மொசாத் உளவாளிகள்

(தெரிந்து கொள்ளவேண்டியவைகள் என்று குறிக்கப்பட்ட எனது பல்வேறு குறிப்புக்களில் இருந்து )

உலகம் முழுவதிலுமிருந்து இரகசியச் செய்திகளைச் சேகரிப்பதும், தேசத்திற்கு வெளியே தங்கி இருந்து எதிரிகளின் சின்னச் சின்ன அசைவுகளையும் கண்காணிப்பதே உளவாளிகள் (அல்லது) ரகசிய ஏஜண்டுகளின் வேலை. அப்படிப்பட்ட ஒரு ஏஜென்சிதான் Mossad. இந்த Mossad agents உலகத்திலேயே அதி பயங்கரமானவர்களாகவும் புத்திசாலிகளாகவும் கருதப்படுகின்றனர்.

"ஒரு முறை இவர்களது ஹிட் லிஸ்டில் வந்து விட்டால் தப்பிப்பது என்பதே சாத்தியம் இல்லை" என்று இந்த ஏஜன்சி பற்றி நம்புகிறார்கள். இராணுவ உளவாளிகள் மற்றும் மற்ற பாதுகாப்பு உளவாளிகளுக்கும் இடையே செயல்படுமாறு இருக்கும்படியாக, இப்படிப்பட்ட ஒரு உளவு ஏஜென்சியின் தேவை இருப்பதை இஸ்ரேல்-லின் பிரதம மந்திரி திரு.டேவிட் பென் குரியோன் உணர்ந்தார். திரு.ரூவான் ஷிலோக் தலைமையில் மொசாத் 13-டிசம்பர் 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

யஹூதீக்களின் மரணத்திற்கு பின் அதற்காக பழிவாங்கிய படலத்திற்கு பிறகு இந்த ஏஜன்சி பற்றிய செய்திகள் பிரபலமானது. இரண்டாம் உலக உத்தத்தின் பொது, யகூதீக்க்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நாஜி அதிகாரிகள்தான் காரணம். அப்பேர்ப்பட்டத் துணிகரமான பாதகர்களுக்கே அச்சத்தைக் கொடுத்து வந்தது மொசாத். மற்ற உளவு ஏஜென்ட்டுகள் போன்றில்லாமல் வேற்று நாடுகளில் இருந்து வெறும் உளவுச் செய்திகளை சேகரிப்பது மட்டுமாக எல்லைப்படாமல், இவர்களது செயல்பாடுகள், பரந்துவிரிந்திருந்தன. பல நாடுகளின் உதவியோடு, பலநாடுகளில் அடைக்கலம் புகுந்து நாஜி அதிகாரிகளைக் கொன்று குவித்தனர். யஹூதீக்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் மட்டுமே குறிவைத்து கொல்லப் பட்டனர்.

மொசாத் தீவிரமாக குறி வைத்தது யுத்தக் குற்றவாளியான அடோல்ப் ஏக்மேன்-னைத்தான். மொசாத் எஜண்டுக்கள் ஐந்து பேர் கொண்ட குழு, அர்ஜென்டினாவில் ரிகார்டோ கிளெமென்ட் என்ற பெயரில் அர்ஜென்டினாவில் இருந்து 1960 மே மாதம் ஏக்மேனை கடத்தி வந்து, இஸ்ரேலில் ஒரு இரகசிய இடத்தில், நாஜி தொப்பி அணிவித்து, அவர்தான் என்று உறுதிப் படுத்திக் கொண்டு, அங்கிருந்து, டெல் அவிவ் அழைத்து வரப்பட்டு, விசாரணை நடத்தி தண்டித்தனர். தன் ஏகாதிபத்தியத்துக்கு விரோதமானது என்று அர்ஜென்டினா இந்தச் செயலை எதிர்த்தது. யுனைட்டட் நேஷன்ஸ் செக்யூரிட்டி கவுன்சில் இம்மாதிரி நடப்பது தன் சர்வதேச பொதுநல விவகாரங்களின் கொள்கைகளுக்கு விரோதமானது என்றும் எழுத்துபூர்வமாய் அறிவித்தது. இச்செய்கையினால் பாதுகாப்பும் நம்பிக்கையும் சீர்கெட்டுப் போனதென்றும், அமைதியான சூழலையும் சீர்குலைக்கும்படியாக இருக்கிறதென்றும் அறிவித்தது.

எக்மேன் மற்றும் அவரது கூட்டாளிகளின் செய்த குற்றங்கள் அனைத்துக்குமே தகுந்த தண்டனை பெற வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சபையும் சர்வதேச நீதிமன்றமும் தெரிவித்துள்ளன.

அமெரிக்க தூதரக அதிகாரிகள் உளவாளிகளாக பணியாற்றுகிறார்கள் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் எதிர்ப்பை தாக்குபிடிக்க முடியாமல் இஸ்ரேல், அதன் தலைவர்களை கொல்லும் பொறுப்பை இந்த மொசாத் உளவாளிகளிடம் வழங்கியது. ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் மப்ஹூஹை துபாய் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் பொது மப்ஹூஹை கொலை செய்து, அதை இயற்கை மரணம் போன்று தோன்றச் செய்துவிட்டு தடயமில்லாமல் தப்பிவிட்டனர். ஆனால் துபாய் போலீஸ் கண்டுபிடித்து வெளியிட்டு விட்டது.

(சமயம் கிடைக்கும் போது இன்னும் விரிவாகப் பகிர்கிறேன்)

4 comments:

நேசமித்ரன் said...

இதை வைத்து ஒரு புனைகதை எழுதும் ஆசை வருகிறது . நீங்களே எழுதலாம் ப்ளோ அழகு

வித்யா said...

மொசாட்ஸ் பற்றின புத்தகமொன்றைப் படித்த நினைவிருக்கிறது. பெயர் ஞாபகமில்லை. உலகிலேயே விறுவிறுப்பான ஹைஜாக் முறியடிப்பான ஆப்ரேஷன் எண்டபியின் வெற்றிக்கு முழுக்காரணமும் மொசாட்டின் திட்டமிடல் தான்.

ஒரு விளம்பரம்

http://vidhyascribbles.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

மாசிலா said...

"மொசாத் உளவாளிகள்" பற்றி மேலும் தெரிந்துகொள்ள பதிவர் : கலையரசனின் : ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள் படிக்கவும்.

நன்றி.

LK said...

விதூஷ், டோண்டு சார் பதிவுகளை தேடுங்கள், அவர் விரிவா எழுதி இருக்கர்

Post a Comment